(53) பெரியார் திடல்: தமிழர்களின் அறிவாலயம்!
தந்தை ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள் நிர்மாணித் தது... அறிவொளி பரப்பிடும் அற்புதத் திடல்.... இன்று "பெரியார் திடல்' என உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
டாக்டர் கலைஞர் அவர் களை "விடுதலை' பத்திரிகை மிகக்கடுமையாக, கொள்கை சார்ந்து விமர்சித்து வந்த போது... கலைஞருக்கும், அய்யா வீரமணி அவர் களுக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தி, மீண்டும் அவர் களிடையே நட்பை, கொள்கை நேசத்தை ஏற்படுத்தும் பொறுப் பை கலைஞர் என்னிடம் கொடுத்ததை நான் மிகுந்த பெருமையோடு எண்ணிப் பூரிக்கின்றேன்.
"கலைமாமணி', "குணக்கலைக் குன்று', "கலைச்செல்வம்', "வாழ்நாள் சாதனையாளர்' லிஇப்படி பலப் பல கௌரவப் பட்டங் களை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் என் உயிராகவும், என் கடுமையான களப் பணிக்காக வும் பெரியார் திடலில் வழங்கப்பட்ட "இனமான இயக்குனர்' பட்டத்தையே என் அளப்பரிய சாதனையாக மதிக்கிறேன். அந்தப் பட்டம் வழங்கப்பட்ட நாளை நினைத்துப் பார்க்கிறேன். தமிழினத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள், என்னோடு சென்னை பச்சையப்பனில் படித்து அமைச்சர்களாயிருந்த தமிழ்க்குடிமகன், துரைமுருகன், உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் மேடையை அலங்கரித்தனர். புதுமுக வகுப்பை (ட.ம.ஈ.) காஞ்சி பச்சையப்பனில் படித்தவன் நான். சென்னை பச்சையப்பனில் இ.ஈர்ம். முடித்து, சினிமாவில் மிகப் பிரபலமானபோது, காஞ்சி பச்சையப்பன் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு விழாவிற்கு, என்னை ஈஐஒஊஎ ஏமஊநபஆக அழைத்து கௌரவப்படுத்தினர். அதனைத்தான் அதுநாள்வரை நான் என் சாதனையாக எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தேன். ஆனால் பெரியார் திடலில் "இனமான இயக்குனர்' பட்டம் வழங்கப்பட்ட பின்னால், நான் இதைவிட வேறு எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.
ஏன்?
தமிழர்களின் உண்மையான அறிவாலயம் பெரியார் திடல்தான். இங்கே உருவான பிரபலங்கள் பட்டியலைப் போட்டு பாருங்கள். வேறு எங்கேயும் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்க முடியாது. இங்குள்ள கருஞ்சட்டை தோழர்களுக்கு ஈடாக, உலகின் எந்தப் பாகத்திலும் எவரும் இருக்க முடியாது.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், "வரு கின்றவர்கள் யார்?' என்ற கேள்வியை எழுப்பாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்தக் கட்டண மும் வசூலிக்காமல், பகுத்தறிவையும், சுயமரியாதை யையும் பெண்ணுரிமையையும், மொழிப்பற்றையும், இன்னும் ஏராளமான மனித உரிமைகளையும் கற்றுத்தரும் இடமொன்று சென்னையில் இருக்கிற தென்றால்.... அதுதான் பெரியார் திடல். இங்கே கற்ற எவருமே சோடை போனதே இல்லை. பலரின் அறிவு இங்கே பட்டை தீட்டப்பட்டிருக்கிறது. நான் அறிந்த அறுபது வருட அனுபவத்தில் இந்த ஒரே இடத்தில் மட்டும்தான், கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டதில்லை; கூட்டணிகள் கிடையாது; ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை; பதவிகளுக்கு போட்டி இல்லை. அதனால்தான் தற்போது உலகமே ஆச்சரியத்துடனும், ஆர்வத்துட னும் தந்தை பெரியாரின் கொள்கைகளை போற்றிப் புகழ ஆரம்பித்துள்ளது.
பார்ப்பனீயப் பிடியிலிருந்த பாமரர்களை மீட்பதும் பெரியாரின் கொள்கைதான். சமநீதியை சமூகத்தில் நிலைநாட்டியதும் பெரியாரின் கொள்கைதான். இந்தத் திடலை பிரபலமாக்கியது பெரியாரல்ல... அவரை எதிர்த்தவர்களே அவரை போஸ்டர்கள் மூலமாகவும், அவரது சிலைகளை சிதைத்தும் அவரை பிரபலமாக்கினர். முக்கியமான விஷயம்... பெரியார் திடலில் முட்டாள்களுக்கு வேலையே இல்லை. அறிவாளிகளுக்கும், தீவிர கொள்கைப் பற்றாளர்களுக்கும், கடுமையான உழைப்பாளிகளுக்கும் மட்டுமே இடமுண்டு. 1964லிஆம் ஆண்டு ஒரு நாடக நாயகனாக திடல் மேடையில் ஏறிய நான் இன்றுவரை பெரியார் திடலின் மாணவனாகவே வாழ்ந்து வருகிறேன்.
ஏவி.எம். ஸ்டுடியோ நிறுவனத்தில் ஒரு பிரச்சனை எழுந்தபோது, கலைஞரை அவரது ஆலிவர் ரோடு வீட்டில் சந்திக்கச் சென்றோம். பேசி முடித்து, கிளம்பும்போது... "குகா' எனக் கூப்பிட் டார் கலைஞர்.
அருகில் சென்றேன்.
"என்னண்ணே?''
"என்ன... உங்காளு இப்படிப் பண்ணிக்கிட்டி ருக்கார்?''
"நீங்களும் எங்க ஆளுதான்'' என்று சொல்லிவிட்டு, கலைஞர் என்ன சொல்லவருகிறார் எனவும் குறிப்பால் உணர்ந்துகொண்டேன்.
"ஒங்க ஆளு' என கலைஞர் என்னிடம் குறிப்பிட்டது, அய்யா வீரமணியை. "விடுதலை' பத்திரிகையில் கலைஞரை விமர்சித்து எழுத, "முரசொலி'யில் பதிலுக்கு எழுதிகொண்டிருந்தார் கலைஞர். இப்படி பத்திரிகைகள் வாயிலாக ஒரு தொடர்போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
"அன்று என்ன நடந்தது?' என்பதை கலைஞர் விபரமாகச் சொன்னார்...
ஒரு கல்யாண மேடையில் மணமக்களின் அருகே நான் (கலைஞர்) அமர்ந்திருக்க, மண மக்களுக்காக ஒரு கோயிலில் அர்ச்சனை பண்ணின வெத்தலை பாக்கு பழங்களோடு, ஒரு சாமி படத்தையும் வைத்து மணமக்களிடம் கொடுத்த ஒரு உறவினர்; அருகே அமர்ந்திருந்த கலைஞரிட மும் அதைப்போன்ற இன்னொரு தட்டை கொடுத்தாராம். பண்பாடு கருதி, மங்களகரமான ஒரு நிகழ்வு நடக்கும்போது... வேண்டாமென்று சொல்லாமல் அதனை வாங்கி, பின்னால் நின்ற இன்னொருவரிடம் நான் குடுத்துட்டேன்... இது தப்பா? அதை விடாமல் எழுதுறாரு உங்காளு'' லிஇப்படி குழந்தையைப் போல் கலைஞர் சொன்ன தை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.
நான் சில வினாடிகள் "இவர் இதை ஏன் என்னிடம் சொல்கிறார்.. அதிலும் அவரை உங்க ஆளுன்னு சொல்றாரே?' என சிந்தித்தேன்.
"அண்ணே.. நான் வேணும்னா கவிஞர் மேத்தாவையும் அழைச்சிக்கிட்டுப் போய் அய்யாகிட்ட பேசிப் பார்க்கட்டுமா?'' எனக் கேட்டேன்... அவரும் சம்மதித்தார்.
முதலில் அவ ரிடம், பின்னர் இவரிடம். அப்படி மாறி, மாறி மூன்று தடவைக்கு மேல் அங்கேயும் இங்கேயும் போய் பேசி; இருவரையும் சமாதானப்படுத்தி, இரு தரப்பும் மாறி, மாறி விமர் சித்து எழுதுவதை நிறுத்த ஒப்புக்கொள்ள வைத்து சமரசப்படுத்தினோம்.
என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத மாபெரும் நிகழ்வு.
அதேபோல் ஈழத் தமிழருக்காக கவிஞர் மேத்தா, சுப.வீரபாண்டியன், நான் மூவரும் சேர்ந்து, மேலும் பலரையும் இணைத்து நடத்திய எல் லாப் போராட்டங்களுக்கும் ஆதரவும், ஆள்பலமும் தந்து உதவியாக இருந்தது, எப் போதும் அய்யா வீரமணி யும், தாய்க் கழகமும் தான். பெரியார் திடலிலே எத்த னை கூட்டங்களை நடத்தி இருப்போம் என்ற எண் ணிக்கையே மறந்து போச்சு. அந்தளவுக்கு திடலின் தொண்டர்களும், தலைவர் களும் ஈழப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தனர். போராளிகளும்.. அதன் தலைவர்களும் பெரியார் திடலை பெரிதும் நம்பினார் கள். ஒரு தடவை பெசண்ட் நகரில் தங்கியிருந்த வீட்டில்; தமிழக காவல்துறைக்கு எதிராக போராளிகளின் தலைவர் உண்ணா நோன்பு போராட்டம் நடத்தியபோது... போராளி களுக்கு பெரும் உதவியாக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் டெல்லி போயிருந்தார். இதையறிந்த நான் என் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பெசண்ட் நகர் போய் தலைவரை உண்ணா நோன்பை கைவிடும்படி வற்புறுத்தினேன். அந்தச்சமயம் அய்யா வீரமணி அவர்கள் வந்து பேசி, ஜூஸ் கொடுத்து உண்ணாநோன்பை முடித்து வைத்தார்.
கலி. பூங்குன்றன், ராஜேந்திரன், பேராசிரியை அருள்மொழி போன்ற பலர் முழுக்க முழுக்க ஈழப் போராட்டத்துக்கு முழு நேர ஆதரவு கொடுத்து உதவியது மறக்க முடியாத விஷயமாகும். இத்தனை மாநாடுகள், கணக்கற்ற கூட்டங்கள், கலை நிகழ்ச்சி கள், இசைலி பாடல்கள், அவர்களின் பத்திரிகை தந்த ஒத்துழைப்பு... லிஇப் படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாபெரும் சபை களில், பெரும் மாநாடு களில் தைரியமாக கருத்துகளை அச்சமின்றி பேச எனக்குக் கற்றுத் தந்த இடம் பெரியார் திடல்தான். என் சொந்த அறிவை; எல்லா துறை களிலும் கற்றுக்கொண்டு, தெளிவான நிலையில் இருந்துகொண்டுதான் அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்கிற மாபெரும் உண்மையை என்னுள் விதைத்தது பெரியார் திடல்தான். இந்த மேடையில் ஒரு கண்டனக் கூட்டத்தில் நான் எரிமலையாக வெடித்த போது... எழுந்த கைதட்டல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. எனக்குப் பின்னால் பேசிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள் அதை இப்படிச் சொன்னார். "தம்பி குகநாதன் முறுக்கேறிய தங்கக்கம்பி என்பதனை நான் அறிவேன். ஆனால் அது மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்' என்றார்.
பெரியார் திடலின் சேவை, தமிழர்களின் தன்மானம் காத்திட இன்னும் பல நூறாண்டுகள் தொடர்ந்தே ஆகவேண்டும் என்பது ஆணித்தர மான உண்மை.
(திரை விரியும்)
அவசியமில்லாத ஆட்டுத் தாடிக்கு... அநாவசியமான கேள்விகள் எதுக்கு?
"ஆட்டுக்குத் தாடியும்; நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். "எதுக்கு தமிழ்நாடு என போராடி பெயர் வைத்தார்கள்? இதொன்றும் தனி நாடல்லவே... தமிழகம் என மாற்றலாமே?' என்பது புரியாதவர்களின் எடக்கு வாதம். "நாடு அதைநாடு, நாடாவிட்டால் ஏதுவீடு?' என்பது பரபரப்பான திரைப்படப் பாடல் வரிகள். இந்தப்பாடல் வரியில் இரண்டாவ தாக வரும் நாடு என்ற சொல்லுக்கு அர்த் தம் என்ன? அதற்கு அர்த்தத்தை கற்றுக் கொண்டு இந்த "தமிழ்நாடு'வுக்கு பொருத் திப் பார். தமிழர்களே! உங்கள் உயிருக்கு நிகரான தமிழை நாடுங்கள். அந்த மொழிக் குள்ளே... உங்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் அத்தனை சுதந்திரமும் இருக்கின்றது. அதனால்தான் பேரறிஞர் அண்ணா தனது கடைசிக் கட்டுரையில்... "மொழிவழி வாழுங் கள் தமிழர்களே' என எழுதியுள்ளார்.
-வி.செ.குகநாதன்