தமிழுடன் இணையும் மலையாளம்!

cc

கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ எனத் தனது தரமான படைப்புகள் மூலம், வெகு விரைவாகவே தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர், அடுத்தாக மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நிவின் பாலி, ராம் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற செய்தி, ராம் ரசிகர்கள் மத்தியிலும், நிவின் பாலியின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் படப் பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது தனுஷ்கோடியில் தொடங்கியுள்ளது.

லிஃப்டாகும் ஹீரோ!

kavin

Advertisment

சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு லேட்டஸ்டாக ப்ரொமோஷன் ஆனவர் நடிகர் கவின். சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கவின், பிக்பாஸுக்கு பிறகு சினிமாத்துறைக்கு வந்தார். இவரது நடிப்பில் அண்மை யில் ஓடிடி-யில் வெளியான 'லிப்ட்' படம் பாஸிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இவர் அடுத்ததாக நடிகை வாணி போஜனுடன் ஜோடி சேர்ந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

விருது ஜோடி!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் இணைந்து, 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்கள். இவர்கள் தயாரிப்பில் தயாராகியுள்ள "கூழாங்கல்'’ திரைப் படம் சர்வதேச பட விழாக்களில் பல் வேறு விருதுகளை வென்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, "காத்து வாக்குல ரெண்டு காதல்'’என்ற கமர்ஷியல் படத்தையும் இந்த ஜோடி தயாரித்து வருகிறது.

Advertisment

மகன் "கிக்' அப்பா "திக்'

காந்தி ஜெயந்தி அன்று மும்பையிலிருந்து கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் ரேவ் பார்ட்டி ஒன்று நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், அந்த சொகுசுக் கப்பலைச் சுற்றி வளைத்து, கப்பலுக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்ததில், கப்பலில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இது தொடர்பாக எட்டு பேர் கைதும் செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர் எனத் தகவல் பரவியதும், இந்த ரெய்டு தொடர்பான தகவல்கள் காட்டுத் தீயாகப் பரவ ஆரம்பித்தன.

ff

முதலில் ஆர்யன்கானிடம் விசாரணை மட்டுமே செய்து வருவதாகக் கூறிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, 20 மணிநேர விசாரணைக்குப் பின், ஆர்யன்கானும் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது. இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்திலும், ஷாரூக்கான் ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, கைது செய்யப் பட்ட ஆர்யன்கானின் வாட்ஸ்அப்பில் போதைப் பொருள் பரிமாற்றங்கள் தொடர்பான மெசேஜ்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளிவர, விஷயம் மேலும் பூதாகரமானது. இதன் காரண மாக ஸ்பெயினில் இருந்த ஷாரூக்கான், தனது வேலை களைப் பாதியில் விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். இந்த வழக்கில் ஆர்யன்கான் மீது எந்த குற்றமும் இல்லை என அவரது தரப்பு தெரிவித்தாலும், அவரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் சல்மான்கான் போன்ற பிரபலங் கள் ஷாரூக்கானை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் தொடர்புகொண்டும் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும், ஆர்யன்கானை வழக்கிலிருந்து முழுமையாக வெளியே கொண்டுவர ஷாரூக்கான் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.