"ஹலோ தலைவரே, கொரோனா பேரிடர் நேரத்திலும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது டெல்டா விவசாயிகளுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கு.''”

"முதல்வரே நேரில் சென்று திறந்துவைத்தார். நீர்ப்பாசன அமைச்சரான துரைமுருகனும், உதயநிதி ஸ்டாலினும் கூட கலந்துக்கிட்டாங்களே.. அதோடு கடைமடை வரை நீர் பாயும் வகையில் நடக்கும் தூர்வாரும் பணிகளையும் ஸ்டாலின் ஆய்வு செய்தாரே.''’

stalin

"ஆமாங்க தலைவரே, அதோடு எடப்பாடி அரசின் மராமத்துப் பணிகள் குறித்து தீர விசா ரிக்கணும்னு அங்கேயே அமைச்சர் துரைமுருக னிடம் ஸ்டாலின் சொல்ல, அவரிடம் லேசாகத் தயக்கம் தெரிஞ்சிருக்கு. இருந்தும், அதிகாரிகளை அழைத்து, ஊழல் விபரங்கள் முழுதையும் திரட் டும்படி ஸ்டாலின் கறார் உத்தரவு போட்டிருக்கார். இந்தத் தகவல், எடப்பாடியின் காதுக்குப் போக, மிரண்டுபோன அவர், டெல்லியிடம் உதவி கேட்டிருக்கார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரை சென்னைக்கு அவசர கதியில் அனுப்பி வைத்திருக்கிறார். அவரிடம், தனது கணக்கு வழக்குகள் அனைத்தையும் சரி பண்ணித் தரும்படி எடப்பாடி கேட்டிருக்காராம். ஆடிட்டர் டீம் எடப்பாடிக்காக இரவு, பகலாக வேலை செய்கிறதாம்.''”

Advertisment

"ம்...''”

rav

"தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர், கோட்டைக்கு தடபுடலா வர் றாங்க. அங்கிருக்கும் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை வைத்தபடி இருக்கிறார்கள். அதில் சில சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதை அதிகாரிகள் சுட்டிகாட்டினால், சி.எம்.மிடம் பேசிக்கிறோம்னு சொல்றாங்களாம். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போய், அவரிடமிருந்து கறாரான உத்தரவைப் பெறணும்னு அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க.''”

Advertisment

"பெண்களும் அர்ச்சகராகலாம்ன்னு அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக அறிவிச்சிருக்காரே?''”

"அறநிலையத்துறைக்கு அமைச்சரானதிலிருந்தே சேகர்பாபு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுவருகிறார். அந்த வரிசையில் அவர் இப்ப, பெண்களும் அர்ச்சகராகலாம்ன்னு அறிவிச்சிருப்பது, படித்த பெண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கு. ஏற்கனவே 34 ஆதிதிராவிடர்கள் உட்பட பல சமூகத்தையும் சேர்ந்த 207 பேர் அர்ச்சகர்களுக்கான பயிற்சியைப் பெற்று, அதற்கான தேர்விலும் வெற்றி பெற்றார்கள். ஆனா, போன ஆட்சியில் 2 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டி ருக்காங்க. அமைச்சர் சேகர்பாபுவோ, மற்றவர் களுக்கும் 100 நாட்களில் பணி நியமனம் கிடைக்கும்னு அறிவித்திருப்பதோடு, பெண்களும் அர்ச்சகர்களாய் ஆக்கப்படுவார்கள்னு அதிரடி காட்டியிருக்கார்.”இதுவும் அடுத்த கட்ட புரட்சியா அமையப்போகுது.''”

"முற்போக்குத் திட்டங்களுக்கு வழக்கமா ஆகமத்தைக் காட்டி முட்டுக்கட்டை போடுவதற்கு ஒரு குரூப் ரெடியாகியிருக்குமே?''”

ra

"அது ஒரு பக்கம் நடந்தாலும் அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமல்லாது, கனிமொழி உள்ளிட்ட பெண் பிரமுகர்களும் வாழ்த்தியிருக்காங்க. தி.மு.கவிலும் அதன் தோழமைக் கட்சிகளிலும் இருக்கும் மகளிர் அணியினர், அர்ச்சகராகும் முயற்சியில் இறங்குவது பற்றி ஆலோ சிக்கிறாங்களாம்.''”

"முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் டெல்லி விசிட்டினால் நல்லபடியான மாற்றம் ஏதாவது நிகழுமா?''”

"16-ந் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின் மறுநாள் அங்கு, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் ஏழுபேர் விடுதலை, தடுப்பூசித் தட்டுப்பாடு, புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட்டிலிருந்து விதிவிலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் வலியுறுத்த இருக்கிறாராம். நேரமிருந்தால், மத்திய அரசில் பணிபுரியும் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டிருக்காராம். மேலும், டெல்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க. அலுவலகமான அறிவாலயத்தின் பணிகளையும் பார்வையிடுறாரு. மோடி-ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு, ஒன்றிய அரசின் பார்வையில் நல்ல மாற்றம் ஏற்படலாம்னு பல தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுது.''”

"சோனியா காந்தியை ஸ்டாலின் சந்திக்கணும்னு காங்கிரஸ் தரப்பு ஆர்வமா எதிர்பார்க்குதே?''”

"சோனியாவையோ ராகுலையோ சந்திக்கும் ப்ரோகிராம் எதுவும் ஸ்டாலின் தரப்பில் உறுதி செய்யப்படலை. ஒருவேளை சந்திப்பு நடக்குமானால், தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்குள் கலகக்குரல் எழுப்பிவரும் குலாம் நபி ஆசாத்துக்கு சோனியா மூலம் வாங்கிவிட்டால், அவரை எளிதில் சமாதானம் செய்துவிடலாம்ன்னு காங்கிரஸ் தரப்பு நினைக்கிது. அதேசமயம், காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பது உறுதியானால் அந்த இடத்தை பிடிக்க கே.எஸ்.அழகிரி முயற்சிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.''”

"தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் போஸ்ட் ஒன்று காலியாக இருக்குதே?''”

ss

"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரசில் வசந்தகுமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், ஜெயக் குமார், மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார் ஆகிய 5 பேர் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் வசந்தகுமார் இறந்ததால், 4 பேர் மட்டுமே இப்போது செயல் தலைவர்களாகத் தொடர்கிறார் கள். காலியாக உள்ள அந்த ஒரு செயல் தலைவர் பதவியை நிரப்பிடணும்னு மேலிடத்திடம் இளம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முண்டியடிக்கிறாங்க. இதற்கிடையே, செயல் தலைவர்களாக உள்ள விஷ்ணுபிரசாத்தும், ஜெயக்குமாரும், எம்.பி. யானதால், அவர்களின் செயல் தலைவர் பதவிகளை, இளைஞர்களுக்கு வழங்கணும்கிற கோரிக்கையும் இப்ப வலுத்துக்கிட்டு இருக்குது.''”

"கொரோனா நிவாரண பொருள் பர்சேஸ் தொடர்பாக சர்ச்சைகள் கிளம்புதே?''”

"சிவில் சப்ளை கார்ப்பரேசனுக்குத் தேவையான பருப்பு உள்ளிட்ட பொருட்களை, ஊழல் புகாருக்கு ஆளான கிறிஸ்டி ஃபுட் நிறுவனத் திடமே தி.மு.க அரசு கொடுத்திருக்கிறது. அதேபோல் ரேசனில் பொதுமக்களுக்கு இம்மாதம் வழங்கப்பட்டு வருகிற கொரோனா நிவாரண மளிகைப் பொருட்கள் அடங்கிய கிஃப்ட் பேக்கை, அருணாச்சலா என்கிற கேரள நிறுவனத்திடம் தமிழக அரசு டெண்டர் மூலம் பர்சேஸ் செய்திருக்கு. 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய இந்த கிஃப்ட் பேக்கை, தலா 419 ரூபாய் வீதம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் இதே பொருட்களை, அரசின் அமுதம் அங்காடியில் வாங்கினால், வெறும் 337 ரூபாய்தான் ஆகுதாம். ஒரு பேக்கிற்கு 82 ரூபாய் அதிகம் கொடுத்து எதற்காக பர்சேஸ் செய்யணும்ங்கிற கேள்வி எழுந்திருக்கு. இதற்கான பதிலை அரசுத் தரப்பிடமிருந்து சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்குறாங்க.''”

"அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 16-ந் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, சசிகலாவுக்கு ஆதரவான மூவ்களை ஓ.பி.எஸ். எடுத்து வருவதால், அ.தி.மு.க.வில் ஒரு பெரும் சூறாவளி விரைவில் வீசலாம்ங்கிற எதிர்பார்ப்பு அங்கே நிலவுது. ஓ.பி.எஸ்.சும், அவர் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் சசிகலா ஜோதியில் முழுசா ஐக்கியம் ஆயிட்டாங்களாம். அதனால் எதன் மூலம் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடறதுன்னு காத்துக்கிட்டிருக்குதாம் ஓ.பி.எஸ் தரப்பு. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா, எடப்பாடிக்கு பதிலாக மாஜி சபாநாயகர் தனபாலை உட்காரவைக்கணும்னு ஓ.பி.எஸ். கொடி பிடிச்சதுக்குக் காரணமே சசிகலாதான்னு சொல்லப்படுது. இப்ப அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கொறடா வைத்திலிங்கமா? விஜயபாஸ்கரா?ங்கிற சர்ச்சையும் கிளம்பியிருக்கு. இந்த நிலையில், அ.தி.மு.க. பிரமுகர்களை சசிகலாவே போனில் பேசி பர்ச்சேஸ் செய்துக்கிட்டு இருக்காராம்.''”

sasi

"நானும் இது தொடர்பான ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். ரிலீஸ் ஆன சசிகலா எப்படி எல்லா சித்துவேலைகளைச் செய்வார்ன்னு முன்கூட்டியே அவதானிச்ச எடப்பாடி, சசிகலாவின் சிறைவாசம் தொடர்பாக வழக்கை சரியாகக் கிளறிவிட்டாராம். அதாவது, கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை கொடுத்துவிட்டு, ஷாப்பிங் போகும் அளவுக்கு சசிகலா, அங்கே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தொடர்பாக, முன்னாள் சிறைத்துறை அதிகாரி ரூபா கிளப்பிய புகாரின் அடிப்படையிலான வழக்கு, அங்கே நடந்துக்கிட்டு இருக்கு. அதை விரைவில் விசாரித்து, தீர்ப்பை அறிவிக்கணும்னு எடப்பாடி தரப்பு ஒரு வழக்கைப் போட்டுச்சு. இப்ப, அந்த வழக்கை 2 மாதத்திற்குள் விசாரிச்சித் தீர்ப்பளிக்கணும்னு கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பளிச் சிருக்குது. அதனால் ஆகஸ்ட் இறுதிக்குள், தங்கள் தரப்புக்குத் தொல்லை கொடுக்காமல், அவர் மீண்டும் சிறைக்குப் போய்டுவார்னு எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் இருக்கு.''”