ர்நாடக மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் (War room) ஒரு முஸ்லிம் மருத்துவரை எப்படி நியமிக்கலாம் என்று பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் செய்த ரகளை நாடு முழுவதும் ஊடகங்கள் வழியே பரவியது.

Advertisment

முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் உயர் அதிகாரப் பொறுப்புகளில் மட்டுமல்ல, சாதாரணப் பணிகளில் கூட வைத்துவிடக் கூடாது என்பது பா.ஜ.க. தரப்பின் சர்வதேசச் சிந்தனை. இவர்கள் கையில் ஒன்றிய ஆட்சி இருப்பதால், நாடு முழுவதும் இந்த வெறுப்பரசியலை, கொரோனா கிருமியைப் போலப் பரப்பியுள்ளனர்.

Advertisment

cm

இந்நிலையில், தமிழகத்தில் அவர்களின் அடிமை அ.தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். தமிழகத்தை மதவெறிக் கலவரக் காடாக்கிவிட ‘வீரவேல் வெற்றிவேல்’ என்று மோடியின் கூட்டத்தில் கூச்சலிட்டவர்கள் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்'' என்று கூறி பதவியேற்றதும் முடங்கிப் போய்விட்டார்கள்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக மாண்புமிகு அப்பாவு அவர்களை மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தினார். அப்பாவு, கிறிஸ்தவர். அடுத்த அதிரடியாக தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞராக அசன் முகமது ஜின்னாவை நியமனம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கலைஞர் ஆட்சியில் அரசு வழக்குரைஞராக இருந்தபோது, கொடுங்குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தித் தண்டனை பெற்றுத்தந்த துணிச்சல்மிக்கவர் ஜின்னா.

Advertisment

தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் தலைவராக திராவிட இயக்கப் பொருளியல் மேதை ஜெயரஞ்சனை நியமித்து, ஆரியமாலர்களை அதிரவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்குழுவின் உறுப்பினராக, சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் உலகப்புகழ் பெற்ற சூழலியல் அறிஞருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயிலை நியமித்துள்ளார்.

சிறுபான்மைச் சமுதாயத்தினர் அதிகார மையத்தின் எந்த ஒரு மூலையிலும் இருந்துவிடக் கூடாது என்ற ஒன்றிய அரசின் கொள்கையை ஓங்கி மிதித்துவிட்டு, ஒரு மூலையில் அல்ல, தமிழக அரசுக்கு மூளையாகவும் இதயமாகவும், சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அமரவைத்து அழகு பார்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியா முழுமைக்கும் எடுத்துரைத்துள்ளார்.

கொரோனா பரவலும் வெறுப்பரசியலும் விரைவில் ஒழிய வேண்டும். தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கை இந்தியா முழுமைக்கும் பரவவேண்டும்.