தமிழக அமைச்சரவை யில் அண்மையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, தனக்கு வழங்கப்பட்டிருந்த கூட்டுறவுத்துறை மீது தொடர்ந்து ஆதங்கத்திலேயே இருந்த அமைச்சர் ஐ,பெரிய சாமிக்கு, அவர் வைத்திருந்த துறைக்கு மாற்றாக ஊரக வளர்ச்சித்துறையை ஒதுக்கி அவரை ஸ்டாலின் குளிர்வித் தார்.
கூட்டுறவுத்துறை தன் தகுதிக்கு ஏற்றது இல்லை என்ற அதிருப்தியால், அறிவாலயம் பக்கமே எட்டிப்பார்க்காமல் ஊடலைக் கடைப்பிடித்தவர் ஐ.பெரியசாமி என்பது குறிப் பிடத்தக்கது.
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த ஐ.பி.யின் ஆதரவாளர்களின் கருத்தைக் கேட்டபோது...’"கூட்டுறவுத் துறையின் பொறுப்பு கொடுக்கப் பட்டதில் அமைச்சர் ஐ.பி. அதிருப்தி அடைந்திருந்தாலும், தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறையை முதன்மை யான துறையாகக் கொண்டுவருவேன் என்று வைராக்கியம் எடுத்துக் கொண்டு, சகல வகையிலும் துறையின் வளர்ச்சிக்காக உழைத்தார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கூட்டுறவு வங்கிகளில் வைத்திருந்த ஐந்து பவுன் அளவி லான நகைக் கடனையும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவ சாயக் கடன்களையும் தள்ளுபடி செய்து, மக்களைக் கவர்ந்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் துறை ரீதி யான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளை யும் உடனுக் குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார். அதில் மதுரை, தேனி, கரூர் உள்பட சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மக்களின் குறைகளைச் சரிவர கண்டுகொள்ளவில்லை என்ற தகவல் வந்தபோது, அவர்களைக் கடுமையாக எச்சரித்தார். இந்த நிலையில்தான் இவருக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இனி அந்தத் துறையிலும் அமைச்சரின் முத்திரை வெற்றிகரமாகப் பதியும்''’என்றார்கள் மகிழ்வோடு.
புதிய துறையில் அமைச்சரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
ஊரகவளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்ட மறுநாளே அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலகத்தில் தனது துறையின் திட்டங்கள் குறித்து விவாதிக்க, முதன்மைச் செயலாளர் அமுதா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதில் பேசிய ஐ.பி. “"தமிழக முதல்வர் கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் முழுமையாக மக்களுக்கு, சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும் அளவிற்கு அதிகாரிகள் செயல்பட வேண்டும்''’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
துறையின் முதன்மைச் செயலாளரான அமுதா, துறை புதிய வேகம் பெற்றிருப்பதாக சக அதிகாரிகளிடம் சொல்லி மகிழ்கிறாராம்.