சென்னை, வேப்பேரியில் இயங்கும் புகழ்பெற்ற செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் பள்ளிகள், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி (பாலி டெக்னிக்), ஐ.டி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அறக்கட்டளையின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசனை கடந்த எடப்பாடி தலைமையிலான அரசு நியமித்தது. அறக்கட்டளையின் உறுப்பினர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், கல்வித்துறை சார்பில் பேராசிரியர் நா.வீரப்பன் நியமிக்கப்பட்டார். இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், நா.வீரப்பன் மற்றும் குபேந்திர குணபாலன் ஆகிய இரண்டு அறங் காவலர்கள் கடந்த அக்டோபர் 29-ந் தேதி நீக்கப் பட்டிருக்கிறார்கள். இதனை எதிர்த்துத் தொடரப் பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், கலையரசனுக்கு எதிரான குற்றச்சாட் டுகளுடன் தற்போது இந்த விவகாரம் முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதால், தமிழக உயர் கல்வித் துறையில் திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ள பேராசிரியர் நா.வீரப்பனிடம் இது குறித்து நாம் விசாரித்தபோது,”"அனைத்து சமூகத்தினரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காகத் துவக் கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை. ஆனால், இதன் தலைவராக அ.தி.மு.க. ஆதரவாளரான கலையரசன் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலிருந்தே தவறுகள் நிறைய நடக்கின்றன.
குறிப்பாக, அறக் கட்டளையின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், அவற்றை முறையாக ஆராய்ந்து, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என நானும் மற்றொரு அறங்காவலரான குபேந்திர குணபாலனும் கலையரசனிடம் வலியுறுத்தினோம். அதனை அவர் ஏற்கவில்லை. மாறாக, மாநில குறைதீர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற பணியாளர் நாகேஷ்வரி என்பவரோடு சேர்ந்து, முத்திரை யிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களை பிரித்து தன்னிச்சையாக நியமிக்க திட்டமிடுகிறார் கலையரசன்.
அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் விவாதிக்காமல் பணி நியமனம் நடத்த திட்ட மிடுவது உயர்நீதிமன்ற ஸ்கீம் ஜட்ஜ்மெண்டுக்கும், அறக்கட்டளையின் சட்ட விதிகளுக்கும் எதிரானது. மேலும், அறங்காவலர் குழுமக் கூட்டத்தின் ஒப்புதலையும், ஏற்பளிப்பையும் அக்டோபர் 29 வரை பெறவில்லை. இந்த நியமனங்களின் பின்னணியில் பல லட்சங்கள் விளையாடி யுள்ளன.
அதேபோல, மாணவர் விடுதியில் ஏற்கனவே போர்வெல் இருந்தும் புதிதாக ஒரு போர்வெல்லை போட்டார் கலையரசன். ஒரு அடி 400 ரூபாய்க்கு போட வேண்டிய போர் பைப்பிற்கு 450 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மொத்த செலவாக 2,50,000 ரூபாய் கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், இதற்கான செலவு 1,50,000-தான். இந்த போர்வெல்லை அமைக்க எந்த நடைமுறைகளையும் கலையரசன் பின்பற்ற வில்லை. அறக்கட்டளையின் நிர்வாக செலவுக்காக வருஷம்தோறும் தமிழக அரசு கொடுக்கும் 2 கோடி ரூபாயிலும் ஏகப்பட்ட முறைகேடுகள்.
பணி நியமனங்கள் தொடங்கி பல ஊழல்கள் அறக்கட்டளை நிர் வாகத்தில் நடந்து வரு கின்றன. இந்த அறக் கட்டளை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. வாரியமோ கலையர சனின் ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை.
கலையரசனின் ஊழல்களுக்கு ஒத்துப் போகாததாலும், கேள்விகள் கேட்டதாலும் எங்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலாளரிடம் தவறான தகவல்களை தந்து அறக்கட்டளையின் உறுப்பினர் பதவியிலிருந்து எங்களை நீக்க வைத்திருக்கிறார் கலையரசன். நீக்கத்திற்கு எந்த காரணமும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. தற்போது காலியாக உள்ள அறங்காவல் இடங்களுக்கு தி.மு.க.வுக்கு எதிரான தவறான நபர்களை நியமிக்க காய்களை நகர்த்தி வருகிறார் கலையரசன். அதனால், அ.தி.மு.க. விசுவாசியான கலையரசனின் ஊழல்களை, முதல்வரை சந்தித்து புகார் கொடுத்துள்ளேன். நிச்சயம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்''’என்கிறார் வீரப்பன்.
நீக்கப்பட்ட மற்றொரு உறுப்பினரான குபேந்திர குணபாலனிடம் விசாரித்தபோது, ’"அறக்கட்டளைக்கு சொந்தமான தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் அமைக்க பொறியாளர் முத்துக்குமரனிடம் எஸ்டிமேட் கேட்கப்பட்டது. அவரும் 4,56,330 ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தார். இது அதிகம் என்பதால் மறு எஸ்டிமேட் கோரப்பட்டது.
அதன்படி கோரப்பட்ட டெண்டரில் எல்-1 பார்ட்டியாக சத்தியநாதன் 3,73,789 ரூபாய் கோட் பண்ணினார். இதுவும் அதிகம் என்பதால் மீண்டும் விலைப்புள்ளி கோரப்பட்ட நிலையில், 2,65,000 ரூபாய்க்கு கட்டித்தர ஒருவர் முன்வந்தார். அவரிடம் நானும் உறுப்பினர்கள் வீரப்பன், ராமலிங்கம் ஆகியோர் இணைந்து நெகோசி யேஷன் செய்து 2,50,000-க்கு ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் கட்டித்தர பேசி முடித்தோம். அதற்கான ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. அதன்படி அவரிடம் வேலையை ஒப்படைக்காத கலையரசன், தனக்கு வேண்டப்பட்ட தனசேகரன் என்பவரிடம் ஒப்படைத்தார். இதற்காக கொடுக்கப்பட்ட தொகை 4,56,330 ரூபாய். துவக்கத்தில் போடப்பட்ட எஸ்டிமேட் தொகையையே கொடுத்துள்ளனர். இந்த தொகை மிக அதிகம் என்பதால்தான் மறு எஸ்டிமேட்டே போடப் பட்டது.
அதன்படி 2,50,000-க்கு செய்து தர ஒருவர் முன்வந்தும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 330 ரூபாய் அதிகமாக கொடுத்துள்ள னர். இப்படி நிறைய முறைகேடுகள் நடந்து வருகிறது. கலையரசனின் ஊழல்களுக்கு நாங்கள் இடைஞ்சலாக இருந்ததால் நீக்கப்பட்டிருக் கிறோம்''’என்கிறார்.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் கலையரசானிடம் பேசியபோது,’"அவர்கள் இருவரையும் நான் நீக்கவில்லை. தமிழக அரசுதான் நீக்கியது. நான் நீதிபதியாக இருந்தவன். நான் தவறு செய்வேனா? தவறு செய்கிறவனாக இருந்தால் அறக்கட்டளையின் தலைவராக என்னை அரசாங்கம் நியமிக்குமா? அதனால், அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. பாதிக்கப்பட்டி ருப்பதால் இல்லாத பொய்களைச் சொல்கிறார்கள். மற்றபடி என் தலைமையில் நிர்வாகம் ஆரோக்கியமாக இருக்கிறது''‘என்பதோடு முடித்துக்கொண்டார்.