மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், பிப்ரவரி 1, 2024 அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் வரலாற்றிலேயே 58 நிமிடங்களில் வாசித்துமுடிக்கப்பட்ட பட்ஜெட் இதுதான். பட்ஜெட் உரை மட்டும் சுருக்கமாக இல்லை… பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மைகளும் குறைவாகவே உள்ளன என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இடைக்கால பட்ஜெட் என்பதால், சலுகைகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது பா.ஜ.க.வின் பட்ஜெட்.

பெரிய பெரிய வாக்குறுதிகள் சொல்லப்பட்டிருக் கிறதே தவிர, நிஜத்தில் அதை அடைவதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, திட்டங்களோ இல்லை. ஏழைகள், விவசாயிகள் பயன்பெறும் உணவு, உரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் உணவு மான்யத்தில் 7 ஆயிரம் கோடியும், உர மானியத்தில் 25 ஆயிரம் கோடியும் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி உச்சவரம்பு மாற்றப்படவில்லை.

nirmala

Advertisment

பட்ஜெட்டில் கவர்ச்சிகரமாக அறிவிக்கப் பட்ட சோலார் பேனல், இலவச மின்சாரம் 300 யூனிட் என்பது தெளிவற்றதாகவே உள்ளது. அரசு சோலார் பேனலை இலவசமாக வழங்கப்போகிறதா, அல்லது 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்போகிறதா? பேனல் பொருத்தினால் மின்சாரம் கிடைக்கும் எனச் சொல்வதற்கு அரசு எதற்கு?

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கீடு குறித்த எந்த அறிவிப்பும் இந்த ஆண்டும் இல்லை. மெட்ரோ ரயில், வந்தே பாரத் திட்டங்கள் இந்தியாவின் முக்கிய நகரங் களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றிருக்கிறார். ஆனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் திட்டங் களுக்கான நிதியையே இன்னும் அமைச்சரவை ஒப்புதல் தராமலே வைத்திருக்கிறது.

சாதாரண ரயில் பெட்டிகள் 40,000-ஐ வந்தே பாரத் தரத்துக்கு மாற்றப்படும் என்றொரு அறிவிப்பு. பெட்டிகள் தரம் உயர்த்தப்படுவதல்ல… இங்கே விஷயம். அவை தரம் உயர்த்தப்பட்ட பின் முந்தைய கட்டணம் வசூலிக்கப்படுமா, அல்லது வந்தே பாரத் ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதேயாகும். எக்ஸ்பிரஸ் ரயில்களின் தோற்றத்தை மாற்றி, அவற்றை நடப்பிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்கான முன்னெடுப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

இந்த பத்தாண்டுகளில் அந்நிய நேரடி முத லீடு 569 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார் நிதியமைச்சர். மாறாக, அந்நிய முத லீடுகள் இந்தியாவில் படிப்படியாக சரிந்துவருவ தாகவே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்ற னர். அதை மறைக்கும்விதமாகவே நிதியமைச்சரின் உரை அமைந்துள்ளது.

முழுக்க மோடிக்கு பெயர்சேர்க்கும் வண்ணம், பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் என பெயர்சூட்டப்பட்டிருந்தாலும் 50% மானியம் மாநில அரசுகள் வழங்குவதாகும். இந்தத் திட்டத் தின்கீழ் 3 கோடி இலக்கே இன்னும் எட்டப்பட வில்லை. பல பயனாளிகளுக்கு இன்னும் முதல் தவணை பணத்துக்குப் பின் நிதி வழங்கப்பட வில்லையென புகார்கள் எழுந்துள்ளன. இதில், வரும் ஐந்தாண்டில் இன்னும் 2 கோடி வீடுகள் என்பது தேர்தலை மனதில்வைத்து அறிவிக்கப் பட்ட விளம்பரம் மட்டுமே என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டைவிட பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.500 கோடி அதிகரிக்கப் பட்டபோதிலும் பல்கலைக்கழக மானியக் குழுக்கான நிதி 3,909 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி.களுக்கும் கடந்தாண்டைவிட குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமே 2015-ல் கார்ப்ப ரேட் வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. நடப்பிலுள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30%-ருந்து 22%மாகக் குறைத்ததுடன், புதிய நிறுவனங்களுக்கு அதனை 15%மாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் தங்களுடையது ஏழைகளின் அரசல்ல,…கார்ப்பரேட்டுகளின் அரசு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது.

ffதுறைமுகக் கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுமென நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே நாடுமுழுவதும் அரசின் வசமிருந்த துறைமுகங்கள், அதானிக்கும் மற்றவர்களுக்கும் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசு செலவில் தனியார் துறைமுகங் களை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கவேண்டிய தேவையென்ன என்ற கேள்வியெழுந்துள்ளது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்த 10 ஆண்டுகளில் மோடி அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப் பட்டுள்ளன. 2014-ல் 4.6 சதவிகிதமாக இருந்த விவசாய வளர்ச்சி 1.8 சதவிகிதமாக சரிந்துவிட்டது. அன்று 8 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி. இன்று 5.6 சதவிகிதமாக ஏன் சரிந்தது? கடந்த 45 ஆண்டு களில் இல்லாத வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது. நிதியமைச்சரோ, சாமானிய மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக சொல்வது பொய் மட்டுமே''’என்றுள்ளார்.

சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பட்ஜெட் குறித்து கேட்டபோது... "இந்த இடைக்கால பட்ஜெட்டில் எந்தவிதமான புதிய அறிவிப்புகளோ, திட்டங்களோ இல்லை. அப்படி அறிவித்திருந்தாலும்கூட அவை எதையும் இவர்கள் நிறைவேற்றப்போவதில்லை. கடந்த காலத்தில் அறிவித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை, வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக் கும் பென்ஷன் கொடுப்போம்னு சொன்னதையே அவங்க அமல்படுத்தலை.

நிறைய பொய் சொல்லியிருக்காங்க. 43 கோடி இளைஞர்களுக்கு முத்ரா லோன் கொடுத்ததா சொல்றாங்க. 140 கோடி மக்களை குடும்பமா கணக்கிட்டா சராசரியா 30 கோடி குடும்பம்னு சொல்லலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தர் ஒருமுறை வாங்கியிருக்கலாம்னு பார்த்தாலே 43 கோடி வரலை. ஒண்ணு அந்தத் திட்டத்துல மோசடி இருக்கணும். இல்லைன்னா அவங்க சொன்னது பொய்யா இருக்கணும்.

வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2%மாகக் குறைஞ்சதா சொல்றாங்க. அதன்படி பார்த்தால், உலகத்திலேயே வேலையின்மை குறைவாக உள்ள நாடுகள்ல முன்வரிசையில இந்தியா இருக்கணும். கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்துக்கு போன வருஷம் 60,000 கோடிதான் நிதி கொடுத்திருந்தாங்க. 11 கோடிப் பேரை இந்தத் திட்டத்துல இருந்து நிறுத்திட்டாங்க. சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எக்கனாமி எடுத்த சர்வே படி, 2011-12-ல வேலைசெய்யத் தகுதியுள்ளவர்களில் 52% பேர் வேலையில இருந்திருக்காங்க, 2016-17-ல் இது 42%, 2021-22-ல அது 37.08 சதவிகிதமா இறங்கிடுச்சு.

பல பொதுத்துறை நிறுவனங்கள் சாகடிக்கப்படுது. புது நியமனங்கள் கிடையாது. புதுசா பொதுத்துறை நிறுவனங்கள் வரலை. அரசு வேலைவாய்ப்புகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கு. இத்தனையும் இருக்க வேலையின்மை 3.2 சதவிகிதம் என்றால் எப்படி நம்புவது?

25 கோடி பேரை ஏழ்மையின் பல்வேறு பரிமாணத்திலிருந்து மீட்டிருப்பதாகச் சொல் கிறார்கள். அப்படியெனில் கீழ்மட்டத்திலிருப்ப வர்களின் வருமானம் உயர்ந்திருக்கவேண்டும். குஜராத்தில் 3-ல் ஒரு பகுதி வறுமையில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுது. 2016-17-க்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அடிமட்டத்திலிருப்பவர்களின் சராசரி ஆண்டு வருமானம் 50 சதவிகிதம் குறைஞ்சிருக்கு, அடித்தட்டு நடுத்தரவர்க்கத்தின் வருமானம் 30%மும், நடுத்தர வர்க்கத்தின் வருமானம் 10%மும் குறைஞ்சிருக்கு. மேல்மட்ட நடுத்தர வர்க்கத்தின் வருமானம் 7% உயர்ந்திருக்கு, மேல்மட்டத்தின் வருமானம் 40% உயர்ந்திருக்கு என்கிறது. 25 கோடிப் பேரை மீட்டெடுத் திருந்தால் அவர்களது வருமானம் உயர்ந் திருக்கவேண்டாமா?

சமூக நீதிக் கோட்பாட்டை நாங்கள்தான் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறோம். பழங் குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை இந்திய ஜனாதிபதியாகக் கொண்டுவந்திருக் கிறோம் என்கிறார்கள். அவரை வைத்துக் கொண்டே குக்கி பழங்குடி இனத்தவரை அழிக்கிறார்கள். கடந்த வருடம் மே மாதம் மணிப்பூரில் தொடங்கிய கலவரம் இன்னும் முடியவில்லை. 70,000 பேர் அகதிகளாக முகாம்களில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கான ஸ்காலர்ஷிப்புகள், பெல்லோஷிப்புகள், உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதான் நீங்கள் சமூக நீதிக் கோட்பாட்டுக்குச் செய்யும் சிறப்பா?

2014-ல் மோடி அரசு வந்தபோது இந்தியா வின் கடன்தொகை 52 லட்சம் கோடி. தற்போது இந்தியாவின் கடன்தொகை 205 லட்சம் கோடி. வெளிநாடுகளில் வாங்கிய கடன்தொகை 4 மடங்காக உயர்ந்திருக்கிறது. இது இடைக்கால பட்ஜெட் என்பதைவிட தொடர்ச்சியாக பா.ஜ.க. போட்டுவரும் ஏமாற்று பட்ஜெட் என்பதே சரி'' என்றார்.

தேர்தல் நேர பட்ஜெட் இப்படித் தானே இருக்கும்!

dd