புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்திலுள்ள குடிநீர்த் தொட்டியில் அசிங்கத்தைக் கலந்த சமூக விரோதியைக் கண்டறிவதற்கான விசாரணைமீது அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், முதற் கட்டமாக 85 பேரிடம் விசாரணை செய்ததில் 7 பேருக்கு சம்மன் அனுப்பி, காவல் நிலையத்தில் வீடியோபதிவுடன் விசாரணை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நாளில் அப்பகுதியில் சுற்றிய இளைஞர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் குறிப்பிட்ட நபர்களையே சுற்றிவந்தாலும், அதுகுறித்த விவரங்களை வெளியிட போலீசாருக்கு தடை வருவதால் ரகசியம் காப்பதாக புகார் சொல்கிறார்கள்.

ff

இன்னொருபுறம், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுவதால், விசாரணைக்குழுவை மாற்ற வேண்டுமென்று சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டனர். இந்நிலையில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த முனைவர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரன் ஆகியோர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியை ஆய்வுசெய்தனர். செய்தியாளர் களிடம் பேசுகையில், ""பாதிக்கப்பட்ட மக்கள், விசாரணைக்குழு அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தோம். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. மனிதக்கழிவு கலந்தது வன்கொடுமை, தீண்டாமையின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. விசாரணை சரியாகத்தான் செல்கிறது'' என்றார்கள். இந்த விவகாரத்தில் போலிக் குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது என்று சி.பி.எம்., வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சமூகநீதி கண்காணிப்புத் துணைக் குழுவிடம் மனு கொடுத்தனர்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு பதில் அளிக்கும்போது, குற்றவாளிகள் கட்டாயம் கைதுசெய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இந்நிலை யில்தான் வேங்கைவயல் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளனர். வேங்கைவயல் கிராமத்திற்கு புதிய குடிநீர் தண்ணீர்த் தொட்டி கட்டும் பணியும் தொடங்கி நடந்துவருகிறது. போலீசார் தரப்பில், ""அனைவரது செல்போன் சிக்னல், சி.டி.ஆர். சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்தது. சிலர் வழக்கமாகப் பயன்படுத்திய செல்போன்களைக் கொடுக்காமல் புதிய செல்போன்களை விசாரணையில் கொடுக்கிறார்கள். இதுபற்றி கேள்வி எழுப்பும்போது தான் விசாரணை ஒரு பக்கமாகச் செல்வதாகக் கூறுகிறார்கள்'' என்றனர்.

Advertisment

dd

இதுகுறித்து சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறுகையில், ""பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்கள் மீதே குற்றம்சாட்டுவதுபோல் விசாரணை சென்றதால் தான் விசாரணைக்குழு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி னோம். உண்மைக் குற்ற வாளியைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டு மென்றே போராடு கிறோம். ஆனால் ஒரு தரப்பினரை மட்டுமே ஆசை வார்த்தைகளைக் கூறி ஒத்துக்கொள்ள வைக்கிறார்களாம். அத னால்தான் விசாரணைக் குழுவை மாற்றும்படி போராடினோம். தற் போது டி.ஜி.பி. விசா ரணைக் குழுவை மாற்றியிருப்பதால் இனிமேல் சரியாக இருக்குமென்று நம்புகிறோம்.

விசாரணைக்குழு எந்த அடிப்படையில் விசாரணை செய்கிறார்களென்றே தெரியவில்லை. இதில் ஒருவரின் நண்பன் ஏற்கனவே பக்கத்து ஊரி லுள்ள கிணற்றில் மலம் கழித்ததாகப் பிரச்சனையானது. அந்த நபரின் நண்பன் என்ற அடிப் படையில் வேங்கைவயலில் ஒருவரிடம் தொடர் விசாரணை நடந்திருக்கிறது.

Advertisment

ee

ஒருவன் தவறு செய்திருந்தால் அவனது நண்பனும் அதே தவறு செய்வா னென்ற மனநிலையில் போலீஸ் விசாரணை செல்கிறது. இனி சி.பி. சி.ஐ.டி. நன்முறையில் விசாரிக்குமென நம்பு கிறோம்.

போலீசார் யாரிடமெல்லாம் விசாரணை செய்தார் களோ அவர்களது செல்போன்களை கேட்டு வாங்கி இருக்கிறார்கள்.

செல்போன் களைக் கொடுக்கவில்லையெனப் புகார் சொல்லப்படுவது புதிதாக உள்ளது. யாருடைய செல்போன் வேண்டுமென்று சொன்னால் நாங்களே வாங்கிக் கொடுக்கிறோம். புதிய தண்ணீர்த் தொட்டிக்கான பணி தொடங்கி உள்ளது. ஆனால் அந்த தண்ணீர் தொட்டி வேண்டாம் என்று நாங்கள் மட்டுமல்ல, சமூக நீதி கண்காணிப்புக் குழுவும் சொல்கிறது. பொதுத் தண்ணீர்த் தொட்டியி லிருந்தே தண்ணீர் கொடுக்கட்டும். அதுவே சமூக நீதியாக இருக்கும்'' என்றார்.

dd