தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, சேலம், தர்மபுரியில் அடுத்தடுத்து வி.ஏ.ஓ.க்கள் குறி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் சாதி வன்கொடுமைக் காரணியும் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் வி.ஏ.ஓ. வினோத் குமாரையும், கனிமக் கொள்ளையர்கள் இருவர் வெட்டிக்கொல்ல முயற்சி செய்துள்ள னர். இதே போல், தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அருகே உள்ள மெணசி வி.ஏ.ஓ. இளங்கோவை, மே 1 அன்று, டிராக்டரை ஏற்றிக்கொல்ல முயற்சித்த சம்பவமும் நடந்துள்ளது.

vao

வி.ஏ.ஓ. வினோத்குமார் கூறுகையில், "மானத்தாள் கிரா மத்தில் வி.ஏ.ஓ.வாக பொறுப் பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆச்சு. அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட தாக கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியே சித்து ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜே.சி.பி., டிராக்டர் வாகனங் களைப் பறிமுதல் செய்து தொளசம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தேன். அந்த சித்துராஜ், ஏப்ரல் 28ஆம் தேதி என்னை வழிமறித்து, "உன்னையெல்லாம் தூத்துக்குடியில் செஞ்ச மாதிரி போட்டுத் தள்ளினாத் தான் சரிப் பட்டு வருவ'ன்னு சொல்லி என்னை மிரட் டியதோடு, வீச்சரி வாளை வைத்து என்னை வெட்ட முயன்றார். சுதா ரித்துக்கொண்டு எனது பைக்கில் தப்பித்து, தொளசம்பட்டி காவல்நிலையத் தில் தஞ்சம் புகுந்த தால், மயிரிழையில் உயிர் தப்பினேன்' என் றார். தொடர் தாக்குதல் களை எதிர்த்து, வி.ஏ.ஓ.க்கள் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியதால், இவ்விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து, சித்துராஜ், அவருடைய ஓட்டுநர் விஜி ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.

இந்த பரபரப்பு சற்று ஓய்ந்த நிலையில், மெணசி வி.ஏ.ஓ. இளங்கோ மீதான கொலை முயற்சி சம்பவமும் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "மே 1ஆம் தேதி இரவு, மெணசி யைச் சேர்ந்த முனிராஜ் மகன் ராகவன், தம்பிதுரை உள்ளிட்ட 5 பேர், ஜே.சி.பி. மற்றும் டிராக் டர் மூலமாக கள்ளத் தனமாக உளி கற் களை வெட்டிக் கடத்துவதாக எனக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அன்று இரவு 11 மணியளவில் குண்டலமடுவு என்ற இடத்தில் வைத்து ராகவனுக்குச் சொந்தமான டிராக்டர் வண்டியை தடுத்து நிறுத்தினேன். அப்போது என் மீது டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயன்றனர். நான் விலகிச் சென்றதால் உயிர் தப்பினேன். டிராக்டர் வாகனம், பாப்பி ரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது'' என்றார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்த பிறகும், யாரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றி, ஆய்வாளர் லதாவிடம் கேட்டபோது, "வழக்கு விசாரணையில் இருக்கிறது. குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்,'' எனப் பட்டும் படாமலும் சொன்னார்.

Advertisment

vas

இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் இருவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் கள். "நான் புகாரளித்த பிறகு, நான் பட்டியல் சமூகத்தின ருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து அரசுப்பணிகளைச் செய்து கொடுப்பதாகக் கூறி, என்னைக் கண்டித்து சித்து ராஜ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டிருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன'' என்கிறார் மானத்தாள் வி.ஏ.ஓ. வினோத்குமார். மெணசி வி.ஏ.ஓ. இளங்கோவோ, தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் திட்டமிட்டே என்னைக் கொல்ல முயன்றுள்ளனர் என்றும், ராகவன் தரப்பினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறார். கனிமவளக் கொள்ளைக்கு மெணசி பஞ்சாயத்து தலைவர் அன்பரசு, பூதநத்தம் பஞ்சாயத்துத் தலைவர் அருணாச்சலம் ஆகிய இருவரும் உடந்தையாக இருப்பதாக இளங்கோ தெரிவித்துள்ளார்.

Advertisment

இவ்விரு பஞ்சாயத்துத் தலைவர்களும் அரூர் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து, வி.ஏ.ஓ. இளங்கோவை வேறு கிராமத்திற்கு மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்த தாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க அரூர் கோட்டாட்சியர், மெணசி பஞ்சாயத்து தலைவர் ஆகியோ ரை அலைபேசியில் பலமுறை அழைத்தும் அவர்கள் லைனுக்கு வரவில்லை.

பூதநத்தம் பஞ்சாயத்து தலைவர் அருணாச்சலத்திடம் கேட்டபோது, "சார்... வி.ஏ.ஓ. இளங்கோ, உள்ளூரில் கணவனை இழந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார். 20 நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவருடைய மகன், இளங்கோவை தாக்கி இருக்கிறார். இப்படிப்பட்டவர் வி.ஏ.ஓ.வாக இருக்கக் கூடாதுன்னுதான் மாற்றச்சொல்லி நாங்க அரூர் கோட்டாட்சியரிடம் வாய்மொழியாகப் புகாரளித்தோம். நாங்கள் இளங்கோவை குற்றசாட்டுவதால் பதிலுக்கு எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்'' என்றார். இந்நிலை யில் வி.ஏ.ஓ. இளங்கோ, மோட்டாங்குறிச்சிக்கு மாற்றப் பட்டுள்ளார். "மோட்டாங்குறிச்சி கிராமத்திற்கு இடமாற்றம் என்பதே ஒரு தண்டனை போன்றதுதான். சாதி ரீதியாக ரொம்பவே சென் சிடிவான ஊர் இது'' என் கிறார்கள்.

வி.ஏ.ஓ.க் கள் சங்க சேலம் மாவட் டத் தலைவர் மோகன்ராஜ், வி.ஏ.ஓ. முன் னேற்ற சங்கத் தின் முன்னாள் மாநிலச் செய லாளர் பரமசிவம் ஆகியோரிடம் பேசினோம். "மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் வி.ஏ.ஓ.க்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். அந்தந்த கிராமத்திலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான வி.ஏ.ஓ.க்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்'' என்றனர். வி.ஏ.ஓ.க்களைப் பாதுகாப்பது அரசின் கடமை!