புதுச்சேரி ஆலங்குப்பத் தைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்கிற தனியார் தொலைக்காட்சி நிருபரை, 02-04-2022 அன்று, கஞ்சா வழக்கில் ஆரோவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர், பழி வாங்குவதற்காகத்தான் தனது கணவரைக் கைது செய்திருப்பதாக அவரது மனைவி நந்தினி, தமிழக முதல்வரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/journalist_3.jpg)
அதுகுறித்து ஜீவரத்தி னம் மனைவி நந்தினியிடம் பேசினோம். “"என் கணவர் ஜீவ ரத்தினம், தனியார் தொலைக் காட்சியில் மரக்காணம் நிருபராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, எங்கள் ஆலங்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ரஞ்சித் என்கிற அமாவாசை என்பவர், அடிக்கடி டூவீலரில் சந்தேகப்படும்படியாக எங்கள் பகுதியில் சுற்றியதால் சந்தேகமடைந்த என் கணவர், பாண்டிச்சேரி எஸ்.டி.எப். சிறப்பு தனிப் படைக்கு தகவல் சொன்னார். போலீசார் அமாவாசையை விசாரித்ததில், அவர் தமிழகப் பகுதியில் டூவீலரை திருடியது தெரியவந்து, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசுவிடம் அவரை ஒப்படைத்துள்ளனர். டூ வீலர் திருட்டு வழக்கில் ஒரு மாதம் கழித்துதான் அமாவாசையைக் கைது செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/journalist1_0.jpg)
அந்த அமாவாசை, ஆரோவில் போலீசுக்கு மாமூல் கொடுத்து வருவதால் அவன்மீது புகாரளித்த என் கணவரைப் பழிவாங்க நினைத்த இன்ஸ்பெக்டர், கடந்த 2-ஆம் தேதி, என் கணவர் மீது கஞ்சா கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்தார். சுகர் பேஷண்டான என் கணவருக்கு, சுகர் அதிகமாக இருந்ததால், திண்டிவனம் சிறைச்சாலையில் அனுமதிக்க முடியாதென்று மறுத்தனர். தற்போது முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சையில் என் கணவர் இருக்கிறார். தமிழக முதல்வர்தான் என் கணவருக்கு நீதி பெற்றுத் தரவேண் டும்''” என்றார் ஆற்றாமையுடன்.
இதுகுறித்து நாம் மேலும் விசாரித்ததில், ஒரு தனியார் சொகுசு ரிசார்ட் டில் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 க்ரைம் பிராஞ்ச் போலீசார் சுமார் 6 மாத காலத்துக்கு வாடகை கொடுக்காமல் ரெகுலராக தங்கியது குறித்து அப்போது கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.யாக இருந்த அருண் காதுக்கு எட்ட, அன்பரசை அதட்டிய பிறகே ரிசார்ட்டை காலி செய்திருக்கிறார்கள். இது டி.எஸ்.பி. வரை சென்றதற்கு நிருபர் ஜீவரத்தினம்தான் காரணம் என்று முடிவெடுத்த அன்பரசு, அதற்குப் பழிவாங்கத்தான் பொய்யாகக் கஞ்சா வழக்கு போட வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இன்ஸ்பெக் டர் அன்பரசுவிடம் பேசினோம். “"ஜீவரத்தினம் மீது 2015-லிருந்தே பல்வேறு வழக்குகள் உள்ளன. நான் இந்த ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்பாகவே ஜீவரத்தினம் மீது டூவீலர் திருட்டு வழக்கும், எஸ்.சி.-எஸ்.டி வழக்கும் இருக்கிறது. எனக்கு அவர்மீது எந்த முன்விரோதமும் இல்லை. என்னை களங்கப் படுத்தவே அவதூறு பரப்புகிறார்கள்'' “என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/journalist-t.jpg)