விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்ததால் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தேசியக் கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் ஒரே அணியில் இருப்பதால், தாரகை கத்பர்ட் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை யுடன் காணப்படுகிறார். தொகுதியில் பெருபான்மையாகக் காணப்படும் கிறிஸ்தவ நாடார் வாக்குகளை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி மூலமாகவும், அடுத்ததாக இருக்கும் நாயர் சமூக வாக்குகளை கம்யூனிஸ்ட் கூட் டணி மூலமாக அள்ளிவிடலா மென்ற காங். வேட்பாளர் தார கையின் கணக்கு சரியாகவே இருக் கிறது.

vv

நாயர் சமூக வாக்குகளை நம்பி, அச் சமூகத்தை சேர்ந்த நந்தினியை கள மிறக்கிய போதும், கூட்டணி பலமில் லாமல் பா.ஜ.க. ஆமை வேகத்தில் செயல்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசுமாவென்ற எதிர்பார்ப்பிலிருக்கிறார் நந்தினி. அ.தி.மு.க. வேட்பாளர் ராணியின் ஒரே பலம் இரட்டை இலை தான். சொந்தக் கட்சியினரும், தே.மு.தி.க.வினரும் விலகியே யிருப்பதால், ராணிக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட சூழல். நாகர்கோவிலிலிருந்து தொகுதி மாறி நிறுத்தப்பட்டிருப்பதால், அங்குள்ள நாடார் சமூக வாக்குகள் எதிராக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஜெமினி, "மடியிலும் ஒன்றுமில்லை, கைகளிலும் ஒன்றுமில்லை. மக்களின் பிரச்சனையைத்தான் சுமந்துகொண்டு உங்கள் முன்னால் நிற்கிறேன்'' என்று சென்டிமென்டாகவெல்லாம் பேசிப் பார்த்தாலும், அதனால் வாக்குகள் தேறாதென்றே தெரிகிறது. மற்ற கட்சிகளுக்கு விழாத வாக்குகள் கிடைக்கும்பட்சத்தில் ஆறுதல் அடைய வேண்டியதுதான். எனவே விளவங்கோட்டில் பா.ஜ.க.வை காங்கிரஸ் பழி தீர்ப்பது உறுதி!

Advertisment