ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய மூன்று ஊர்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. இம்மூன்று அலுவல கங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 300 கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்கள், சொத்துக்களை விற்பது, வாங்கு வது, திருமண, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெறுவது என அனைத்துக்கும் மேற்படி பதிவு அலுவலகங்களையே நம்பியிருக்கிறார் கள். இதி-ருக்கும் சிக்கல் குறித்து, தமிழக விவசாய சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஸ்டா-ன் மணி கூறுகையில், "மேற்படி மூன்று சார்பதி வாளர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டி லுள்ள கிராமங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங் களைப் பதிவு செய்வதிலும், பெறுவதிலும் இம்மாவட்ட அதிகாரிகள் மக்களை அலைக்கழித்து வருகிறார்கள். இங்கு நடை பெறும் முறைகேடுகள் குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டுமானால் கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டப் பதிவாளர் களுக்கு அனுப்ப வேண்டும். காரணம், திருநாவ லூர் சார்பதிவாளர் அலுவலகம், கடலூர் மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டிலும். உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம், விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டிலும், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகம் ,விழுப்புரம் மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டிலு மாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

kk

Advertisment

மேற்படி பதிவாளர் அலுவலகங்களின் மீது புகாரளித்து, அதற்கான விசாரணைக்கு கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. 2019ஆம் ஆண்டு கள்ளக் குறிச்சி மாவட்டம் உதயமானது. கள்ளக்குறிச்சியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஏற்கனவே உள்ளது. எனவே மேற்படி மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களை கள்ளக் குறிச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும். சார்பதிவாளர் அலுவலக பிரச்சனைகள் உட்பட பல்வேறு தேவைகள், கோரிக்கைகளுக்காக மாவட்ட தலை நகரமான கள்ளக்குறிச்சிக்கு சென்று முடிப்பதோடு, மேலும் சில வேலைகளையும் முடித்துவருவது சுலபம். கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய மாவட்ட பதிவாளர் அலுவல கங்களுக்கு செல்ல வேண்டிய நிலையும், அலைச்சலும், செலவும் மிச்சமாகும். மேற்படி மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ளதால், அவற்றை கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

kkஇதுகுறித்த கோரிக்கைகளை மாநில பதிவுத்துறை இயக்குநருக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை. எனவே மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனக்கோரி, மூன்று சார்பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள கிராம மக்களைத் திரட்டி பெரும்போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.

Advertisment

இதுகுறித்து திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏழுமலை, "ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தி-ருந்து 2019-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட தலைநகரமாக கள்ளக் குறிச்சி உதயமானது. அதன்பிறகு பல்வேறு அலுவல கங்கள் விழுப்புரத்தி-ருந்து பிரிக்கப்பட்டு கள்ளக் குறிச்சி நகரத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய மூன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே விரைவில் அவை இணைக்கப்பட வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து பதிவுத்துறை துணைத்தலைவர் (டி.ஐ.ஜி.) அலுவலகம் கடலூரில் உள்ளது. அதையும் பிரித்து கள்ளக்குறிச்சியில் புதிதாக ஒரு மண் டல சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப் பட வேண்டும். அதேபோல், கடலூர் மாவட் டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய மூன்று இடங்களில் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய மூன்று ஊர்களில் புதிதாக மாவட்ட சார்பதி வாளர் அலுவலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் பொதுமக்க ளின் பணிச்சுமை, செலவு, காலவிரயம் மிச்சமாகும். புகார்கள்மீதான விசாரணைகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இது குறித்து தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்.

தமிழக அரசு சுமார் 300 கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் பிரிக்கப்படும் புதிய மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும் பகுதியில், ஒருங்கிணைந்த அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களும் அமைக்கப்படுகின்றன. இது மக்களின் சிரமத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட தலைமைப் பதிவாளர் அலுவலகம், மாவட்டத் தலைநகரமான கள்ளக் குறிச்சியில் அமைக்கப்பட வேண்டும். மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய சட்டங்களையும், விதிமுறை களையும் வகுத்து செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அதேபோல் புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரத்தில் ஒருங் கிணைந்த சார் பதிவு மண்டல அலுவலகம், மாவட்ட அலுவலகங்கள் துவக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.