அரியலூரில் இருந்து கீழராயபுரம் செல்லும் சாலை, ஓரகாட்டுப் பகுதியில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை, எரிந்தும் எரியாத நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று கிடந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக இரும்பிலிக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் வந்து பார்த்தபோது, எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் கை கால்கள் கட்டப்பட்டிருந்தது அவர்களைத் திடுக்கிட வைத்தது. பிரேதப் பரிசோதனைக்காக இளைஞரின் சடலத்தை அரிய லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சடலம் கிடந்த இடத் தினருகே போலீசார் ஆய்வு செய்தபோது, மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரசு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று காட்டுப் பகுதியில் இயங்கி வருகிறது. அந்த கடைக்கு வந்த நண்பர்கள் மது குடித்துவிட்டு, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொலை செய்து போட்டு விட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர். மேலும், வேறு எங்கேயாவது கொலை செய்துவிட்டு, கொல்லப்பட்டவரை இங்கே வைத்து எரித்திருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூன்று நாட்களுக்குள் வீ.கைகாட்டி கிராமத்தின் அருகில் உள்ள புதுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்திலிருந்து, இறந்து கிடந்த வாலிபர் அதே புதுப்பாளையத்தைச் சேர்ந்த வல்லரசு என்கிற சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டன், காமராஜ் இருவரும் சுரேஷ்குமாரின் நெருங்கிய நண்பர்கள்.
திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலையில், மண கதி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் காவலாளியாக சுரேஷ்குமார் வேலை செய்து வந்துள்ளார். அவ்வப்போது, நண்பர் கள் மணிகண்டன், காமராஜுடன் டாஸ்மாக் கில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று ஜாலியாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.
அப்படி சில நாட்களுக்கு முன்பு மது குடிக்கும்போது, போதை மயக்கத்தில் கிடந்த காமராஜின் செல்போனை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டார் சுரேஷ்குமார். போதை தெளிந்த காமராஜ், செல்போனை தேடிய போது கிடைக்கவில்லை. சுரேஷ்குமார் தனது போனை எடுத்துக்கொண்டதாகக் கூறி அவ ரிடம் செல்போனை திருப்பித் தருமாறு கூறி யுள்ளார். செல்போனை தான் எடுக்கவில்லை என்று மறுத்துள்ளார் சுரேஷ்குமார். ஆனால் அவரிடம் தான் செல்போன் இருக்கிறது என் பதை உறுதியாக நம்பிய காமராஜும், மணி கண்டனும், அதனைத் தந்துவிடும்படி அடிக்கடி சுரேஷ்குமாரிடம் கேட்டுவந்துள்ளனர்.
பலமுறை கேட்டும் சுரேஷ்குமார் செல் போனை தராததால் கோபமடைந்த காம ராஜும் மணிகண்டனும், அதை வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ளாமல், சம்பவத்தன்று சுங்கச்சாவடியில் காவல் பணி முடிந்து வீட்டுக் குக் கிளம்பிக்கொண்டிருந்த சுரேஷ்குமாரை, மது அருந்துவதற்காக அழைத்துள்ளனர். சரியென்று தலையாட்டிய சுரேஷ்குமார், அவர்களுடன் ஒரே வாகனத்தில் ஆனந்தவாடி பகுதி டாஸ்மாக் கடைக்குச் சென்று மது பாட்டிலை வாங்கிக்கொண்டு சென்னிவனம் காட்டுப்பகுதிக்குச் சென்று மூவருமாக மது அருந்தியுள்ளனர். போதை அதிகமான நிலையில், தனது செல்போனை சுரேஷ்குமார் திருடியதாகக் குற்றம்சாட்டிய காமராஜ், அந்த செல்போனை தரும்படி சுரேஷ்குமாரிடம் மீண்டும் கேட்டுள்ளார்.
சுரேஷ்குமாரோ, செல்போனை திருட வில்லையெனப் பிடிவாதமாக சாதித்துள்ளார். இதனால் மூவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதை மயக்கமும், ஆத்திர மும் புத்தியை மழுங்கடிக்கச் செய்ய, காமராஜ், மணிகண்டன் இருவரும் சேர்ந்து சுரேஷ்குமா ரின் கழுத்தில் லுங்கியைப் போட்டு இறுக்கி, இழுத்துச்சென்று அப்பகுதியிலிருந்த காட்டுக் கொட்டகையில் தலைகீழாக தொங்கவிட்டு துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர். சுரேஷ் குமார் இறந்ததை உறுதிசெய்ததும் தங்கள் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் போட்டு, வண்டியில் இருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, சுரேஷ்குமாரின் செல்போனை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். எரிக்கப்பட்ட இளைஞரின் சடலத்தையும், மது பாட்டில் தடயங்களையும் வைத்து, மூன்றே நாட்களில் கொலையாளி களைக் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செந்துறை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஒரு செல்போனுக்காக தனது நண்பனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களின் மதுப்பழக்கம்... திருட்டு... கொலை வரை சென்றுள்ளது.