லஞ்சம் வாங்கிய ஊராட்சித் தலைவர் களைப் பொறி வைத்துப் பிடித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறையான விஜிலன்ஸ்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்ஜிஆர். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. நெசவுத் தொழில் செய்து வரு கின்றனர்.
2021ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதற்கான ஒன்றிய அர சின் நிதியைப் பெற்று, அதோடு, சொந்த பணத் தையும் போட்டு தங்கள் இடத்தில் வீடு கட்டிய இந்தத் தம்பதிகள், 2022 நவம்பர் மாதம் குடி புகுந்தனர்.
இந்த நிலையில் புதிய வீட்டிற்கு வரி செலுத்த ஊராட்சிமன்ற அலுவலகத் துக்கு கடந்த மாதம் எம்ஜிஆர் சென்றார். அவரிடம், ஊராட்சிமன்றத் தலைவர் வேண்டாமணியின் கணவ ரான மணி, "பிரதமர் வீடு கட்டும் ஸ்கீம்ல இருந்து உனக்குப் பணம் வந்துடுச்சில்ல. தலைவருக்குத் தரவேண்டிய கமிஷனான ரூபாய் 30 ஆயிரத்தை ஏன் இன்னும் தரவில்லை. அந்தப் பணத்தைக் கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது போட்டுத் தருவோம்'' என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் கடுப்பான எம்ஜிஆர், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. வேல்முருகனை சந்தித்து, இதுகுறித்துப் புகார் கொடுக்க... மே 4ஆம் தேதி, தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்த தலைவர் வேண்டாமணி, அவரது கணவர் மணி ஆகியோரிடம் போய், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த பணத்தைத் தந்துள்ளார் எம்.ஜி.ஆர்.
பணம் கைமாறியதும் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி டீம் பணத்தோடு சேர்மன் தம்பதியினரை அதிரடியாகக் கைது செய்தது.
இதேபோல் இன்னொரு சம்பவமும் அரங்கேறியது.
போளூர் ஒன்றியம் எடப்பிறை கிராமத் தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு இவர் இடம் தந்ததால், இவருக்கு டேங்க் ஆபரேட்டர் பணி யைத் தந்தனர். இந்த நிலையில், 2022 டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் கோவிந்தசாமி. அவரது 42 வயதான மனைவி பராசக்தி தற்காலிகமாக அந்த டேங்க் ஆபரேட் டர் வேலையைச் செய்துவந்தார். "அந்தப் பணியை தனக்கே நிரந்தரமாக்கி தந்தால் அதில் கிடைக்கும் சம்பளம் தனது நான்கு பெண் பிள் ளைகளை வளர்க்க உதவும்' எனக் கேட்டுள்ளார். "கவர்மெண்ட் வேலைன்னா சும்மாவா, 5 லட்சம் தந்தால் அந்த வேலையில் உன்னை நிரந்தரம் செய்ய றேன்'' என்று கூறியிருக்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் ஜீவாமூர்த்தி.
"சாப்பாட்டுக்கே கஷ்டப்படறேன்' என்று அவர் சொல்லியும், "பணம் தந்தால்தான் வேலை நிரந்தரம்' என்று கறாராக சொன்ன ஜீவா மூர்த்தி, அதற்கு அட்வான்ஸாக 25 ஆயிரம் ரூபாய் கேட் டிருக்கிறார். மேலும் அவர், அதே ஊரைச்சேர்ந்த இன்னும் இருவரிடமும் பணம் வாங்கிக்கொண்டு அதே டேங்க் ஆப்ரேட்டர் வேலையை தற்காலிகமாகச் செய்யச் சொன்னதோடு, "5 லட்ச ரூபாய் பணத்தை யார் முதலில் தருகிறீர்களோ அவர் களுக்கே வேலை நிரந்தரம்' என்று சொல்லிவிட் டார். இதில் விரக்தியடைந்த பராசக்தி, சிலரின் ஆலோசனைப்படி ஊராட்சித் தலைவி தன்னிடம் பணம் கேட்டு செல்போனில் பேசியதை அப்படியே பதிவு செய்துகொண்டு விஜிலென்ஸ் அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்தார்.
விஜிலன்ஸ் சொன்னபடி, மார்ச் 31ஆம் தேதி "பணம் தயாராகிவிட்டது' என தலைவி ஜீவா மூர்த்தியைத் தொடர்புகொண்டு கூறியுள்ளார் பராசக்தி.
"நான் போளூர் பி.டி.ஓ அலுவலகத்தில் மீட்டிங்ல இருக்கேன். அங்க பணத்தோடு வந்து விடு'’ என்று ஜீவா சொல்ல... அங்கே சென்றார் பராசக்தி. அங்கே ஊராட்சிமன்றத் தலைவிகளுக் கான திட்ட விளக்கக் கூட்டம் நடந்துகொண்டி ருந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஜீவா, பாதியிலேயே வெளியே வந்து பராசக்தியிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே போனார். அடுத்த 5 நிமிடத்தில் கூட்ட அரங்கத்துக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையி லான விஜிலன்ஸ் டீம், ஜீவாமூர்த்தியை சுற்றி வளைத்து அவரிடமிருந்த ரசாயனம் தடவிய பணத்தைப் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர். இதனால் ஊராட்சி மன்றத் தலைவர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி, அடுத்தடுத்து ஊராட்சிமன்றத் தலைவர்களை விஜிலென்ஸ் போலீஸார் கைது செய்தது குறித்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது...
"வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட் டம் உட்பட எல்லாவற்றிலும் அதிகாரிகள் 3 சதவீத கமிஷன் கேட்கறாங்க. இதனை பயனாளிகளிட மிருந்து எங்களையே வாங்கித் தரச் சொல்லி நெருக்கடி தர்றாங்க'' என்றார்கள் ஆதங்கமாய்.
கைது செய்யப்பட்ட இரண்டு ஊராட்சிமன் றத் தலைவர்களும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். போளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள அ.தி.மு.க. மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம், அ,தி.மு.க.வினர் சென்று, "ஆளும்கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊழல் செய்கிறார் கள். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவங்களை மட்டும் குறிவைத்துக் கைது செய்கிறார்கள்” என்று முறையிட்டனர். எனவே இந்த கைது நடவடிக்கை களைக் கண்டித்து, பழிவாங்கும் நடவடிக்கை என்ற பெயரில் போராட்டம் நடத்தலாமா?'' என ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
இந்த கைது நடவடிக்கை ஊராட்சித் தலைவர்கள் தரப்பை ஒட்டுமொத்தமாய் அதிர வைத்திருக்கிறது.