ஒன்பது மாவட்டங்களுக் கான உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது தி.மு.க. மாவட்ட சேர்மன், வைஸ் சேர்மன், 74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவருக் கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடை பெறவுள்ளது. 90 சதவிகிதம் போட்டியே இல்லாத நிலையில், சில ஒன்றியங்களில் தி.மு.க. நிர்வாகிகளே, பெரும் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க.வுக்கு சாதகமாக தி.மு.க. கவுன்சிலர்களை வாக்களிக்க வைத்து ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைக்க முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தி.மு.க. தலைவரும், முதலமைச்சரு மான ஸ்டாலினிடம் புகாராகச் சென்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 வார்டு கள் உள்ளன. இதில் ஆளும்கட்சியான தி.மு.க. 11, அ.தி.மு.க. 4, பா.ம.க. 2, சுயேட்சை 1. சேர்மன் தேர்தலில் வெற்றிக்கு தேவையான இடங்களைவிட கூடுத லாகவே தி.மு.க.விடம் உள்ளன. இந்த ஒன்றி யத்தின் சேர்மன் பதவி பெண்களுக்கானது. சேர்மன் பதவியில் தனது மருமகள் காயத்திரியை நிறுத்தி வெற்றி பெறவைக்க முயற்சி செய்கிறார் மாவட்ட செயலாள ரும், எம்.எல்.ஏ.வுமான தேவராஜ். இதற்குத்தான் ஆலங்காயம் தி.மு.க. நிர்வாகி களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனால், ஆலங்காயம் சேர்மன் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற தி.மு.க. கவுன்சிலர்கள் மூலம் காய் நகர்த்துகிறார்கள் சிலர். இவர்களுக்கு பின்னால் பொதுச்செயலாளர் துரை முருகன் மகன் கதிர்ஆனந்த் உள்ளார் என, தலைமை வரை புகார் அனுப்பியுள்ளார் தேவராஜ்.
ஆலங்காயம் சேர்மன் பதவிக்கான போட்டியில் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான ஆலங்காயம் கட்சி நிர்வாகி பாரி, கவுன்சிலரான தனது மனைவி சங்கீதாவை சேர்மனாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். தேவராஜ் எதிர்ப்பாளர்கள் பாரியுடன் கைகோர்த்தனர். கவுன்சிலர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறேன், அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார் களென பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சொன்னார். தேவராஜால் பாதிக்கப்பட்ட நிர்வாகி களும், அவரது மருமகள் சேர்மனாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைச் சர் துரைமுருகனோ, "என் பேச்சை தேவராஜ் கேட்கமாட்டார், அவர் மா.செ.ங்கறதால் அவர்தான் பட்டியல் தரணும். அதனால் அவர்கிட்டயே கேளுங்க' என்று சொல்லியிருக்கிறார்.
தனது மருமகளுக்கு போட்டியாக வருவதைக் கேட்டு தேவராஜ் கோபமாகி கடுமையாக பேசி யிருக்கார். தான் கட்சியினருக்கு செய்த உள்ளடி, மருமகளை சேர்மனாக்கும் விவகாரத்தை மறைத்து, உட்கட்சி எதிர்ப்புகளை சமாளிக்க ஸ்டாலினிடம் பொய்யாக புகார் சொன்னதாக கூறுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட சேர்மன் பதவி முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமாருக்கென வாக்குறுதி தந்திருந்தார் தேவராஜ். இப்போது அவரிடம் மாவட்ட கவுன்சிலர்களை லகரங்களில் கவனிக்கச் சொல்ல, தன்னிடம் பணமில்லை எனக் கூறியுள்ளார் சூர்யகுமார். "நான் 2 கோடி செலவு செய்கிறேன் என்னை சேர்மனாக்குங்கள்' என மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் குணசேகரன் முன்வந்து கேட்டுள்ளார்.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் மாவட்ட கவுன்சிலருக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆலங்காயம் மேற்கு ஒ.செ. ஞானவேலன் மனைவி ப்ரியதர்ஷினியை மாவட்ட சேர்மனாக்க முயற்சி செய்கிறார். இவர்களை தொடர்ந்து "கட்சியில் நான் சீனியர், 2011 தேர்தலில் வீரமணியை எதிர்த்து போட்டியிட்டு உட்கட்சி துரோகத்தால் தோல்வியை சந்திச்சேன். நான் இப்போ மாவட்ட கவுன்சிலரா ஜெயிச்சியிருக்கேன், மாவட்ட மகளிரணி செயலாளராகயிருக்கேன். என்னை மாவட்ட சேர்மனாக்குங்க' என தேவராஜிடம் கேட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான கவிதா தண்டபாணி. "எனக்கு மாவட்ட சேர்மன் பதவி இல்லன்னா, என் தங்கச்சி ஸ்ரீதேவி (ஒ.செ. ஒட்டப்பட்டி காந்தி மனைவி), ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் கவுன்சில ராகியிருக்கா, அவளுக்கு ஒன்றிய சேர்மன் பதவியை தாங்க' என டிமாண்ட் செய்துள்ளார். ஜோலார்பேட்டை சேர்மன் பதவிக்கு கவுன்சிலர் ஒ.செ. உமா மற்றும் ஒ.செ. சதீஷ் தனது மனைவிக்கு சேர்மன் சீட் கேட்கறாங்களே என்றுள்ளார். "இதுவும் இல்ல, அதுவும் இல்லன்னா என்ன அர்த்தம்' என சண்டை போட்டவர், விவகாரத்தை துரைமுருகனிடம் கொண்டு போயுள்ளார்.
கந்திலி ஒன்றியத்தில் 22 கவுன்சிலர்கள். தி.மு.க. 10, அ.தி.மு.க. 8, பா.ஜ.க. 1, சுயேட்சைகள் 3 கவுன்சிலர்கள் உள்ளனர். சேர்மன் பதவியை பிடிக்க தி.மு.க.வுக்கு இன்னும் 2 கவுன்சிலர்கள் தேவை. அ.தி.மு.க.வில் முன்னாள் சேர்மன் லீலா சுப்பிரமணி அ.தி.மு.க., சுயேட்சை, பா.ஜ.க. கவுன்சிலர்கள் 12 பேரோடு டூர் போய்விட்டார். அந்த ஒன்றியத்தை விட்டுவிடக் கூடாது என கவிதா, திருப்பதி என்பவரை சேர்மன் வேட்பாளராக்க முடிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர்களிடம் ஹெவியாக பேரம் பேசுகிறது தி.மு.க. டீம்.
"மாவட்ட சேர்மனுக்கு 1 முதல் 1.5 கோடி, துணை சேர்மனுக்கு 50 லட்சம், ஒன்றிய சேர்மனுக்கு 25 டூ 30 லட்சம், வைஸ் சேர்மனுக்கு 10 லட்சம் தலைமைக்கு தரவேண்டும் அப்போது தான் பட்டியலில் பெயர் வரும் என சில மாவட் டங்களில் வசூல் வேட்டை நடந்துள்ளது' என் கிறார்கள் விவரம் அறிந்த கட்சி முக்கியஸ்தர்கள்.