ரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாடத் துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.

rr

தமிழக பதிவுத்துறையின் மொத்த வருமானத் தில் 45 சதவீதம் ஈட்டித்தருவது சென்னையாக இருக்கும் சூழ்நிலையில், மனைகளுக்கான தேவை அதிகரித்துவிட்டது. இத்தேவையை அறிந்த நில மோசடிக் கும்பல், பதிவுத்துறை உதவியாளர்களை மிரட்டி மோசடியாகப் பதிவு செய்து வருகிறது.

Advertisment

அடையார் எல்.பி. ரோட்டில், 300 கோடி சந்தை மதிப்புள்ள நிலத்தை 18 கோடிக்கு பதிவு செய்ய காசாகிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம் சொல்ல, அதற்கு அப்போதைய உதவியாளர் வீரகுமார் மறுத்துள்ளார். காசாகிராண்ட் பங்கு தாரர்களில் ஒருவர் கூடுதல் ஐ.ஜி. நல்லசிவத்தின் தம்பி என்பதால், ஜ.ஜி. மூலமாக அழுத்தம் கொடுத்துப் பார்த்தும் வீரகுமார் பதிவு செய்யவில்லையாம்.

இச்சூழலில் நடந்த கூத்து என்னவென்றால், கூடுதல் ஐ.ஜி.க்கு வீரகுமார் யாரென்றே தெரியாத நிலையில், வீரகுமார் அவரருகே இருக்கும்போதே எதிர்த்தரப்பிடம் தொலைபேசியில், "நீங்கள் வீரகுமார் மீது பாலியல் புகார் கொடுங்கள்'' எனச் சொல்ல, அருகாமையிலிருந்த வீரகுமார் ஆத்திரம டைந்து, "நான்தான் வீரகுமார் சார். ஏன் இப்படி பேசறீங்க?'' என கொந்தளித்துள்ளார். உடனே ஐ.ஜி., "உங்களை யார் உள்ளேவிட்டது... வெளியே போங்க'' என விரட்டியுள்ளார். இதன்பிறகு 2023, ஜூன் மாதம் முதல் வாரத்தில் வீரகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல கோயம் பேடு மார்க்கெட் பகுதியிலுள்ள அரசு நிலத்தை ஒரு அரசியல் பிரமுகருக்கு பதியச்சொல்லி கூடுதல் ஐ.ஜி. சிபாரிசு செய்யவே, அதற்கு அப்போதுள்ள சார்பதிவாளர் புனிதா மறுத்துள்ளார். இதையடுத்து புனிதா மாற்றப்பட்டு, உதவியாளரான ரஞ்சித் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கோடம்பாக் கத்தில் புலியூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 43 கிரவுண்ட் இடத்துக்கு கோயம்பேட்டில் பத்திரப்பதிவு செய்யாமல், சைதாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு, சர்வே எண் 55/3-ல் உள்ள 800 சதுர அடி நிலத்தோடு சேர்த்து அப்போதைய பதிவாளர் உமா மூலமாக பதிவு செய்துள்ளனர். அதேபோல அம்பத்தூர் அத்திப்பட்டு கிராம ஏரியை மூடி, மனைகளை உருவாக்கிவரு கிறார்கள். அதுகுறித்து விசாரிக்கை யில், சர்வே எண்:326, பட்டா லேண்ட் என்று அதிகாரிகள் பொய்யாக மழுப்பினார்கள்.

Advertisment

2018 முதல் தற்போது வரை ஒட்டுமொத்த தமிழ்நாடு பத்திரப் பதிவுக்கும் சாஃப்ட்வேர் கண்ட் ரோலை கூடுதல் ஐ.ஜி. நல்ல சிவன் தான் கண்காணிக்கிறார். ஒரு வரு டத்திற்கு 66 நாட்கள் முகூர்த்தநாள் வருகிறது. அப்படி அந்த நாட்களில் ஏ கிரேட் என்று 100க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு பதிவு நடக்கும். அப்படியான ஏ கிரேட் லெவலிலுள்ள 150 அலுவலகங்களில், கூடுதலாக பதிவு செய்யும் பொதுமக்களுக்கு டோக்கன்கள் தேவைப்படும். இந்நிலையில் அதை உருவாக்குவதற்கான அனுமதியை கூடுதல் ஐ.ஜி.தான் வழங்குகிறார். இதற்கென ஒரு டோக்கனுக்கு இவ்வளவு என்ற கணக்கில் ஐ.ஜி.யின் ஓட்டுநர் சுரேஷ்தான் வசூலித்துவருகிறார் என்பது தெரியவருகிறது.

தமிழகம் முழுவதுமுள்ள அலுவலகங்களில் ஆவணப் பதி வேற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்தல், பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யும்போது அவர்களின் கைரேகையை மாற்றி யமைப்பது, முத்திரைத் தீர்வை பதிவுக்கட்டண வருவாயைக் கண் காணிப்பது, சொத்து ஆவணங்கள் டிஜிட்டலைஸ் செய்யப்படு வதை கண்காணிப்பது, வழிகாட்டி பதிவேட்டில் சந்தை மதிப்பை கூட்டுவது, குறைப்பது, நில மோசடி புகார்களை விசாரித்து தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் ஐ.ஜி. பொறுப்பின் கண்காணிப்பில் வருகின்றன. அப்படியிருக்கும்போது இத்தனை குற்றங்கள் நடக்கின்றன எனும்போது இவற்றுக்கெல்லாம் பொறுப்பாக கூடுதல் ஐ.ஜி.தான் இருந்தாகவேண்டும்.

இதுகுறித்து ஐ.ஜி. நல்லசிவனிடம் கருத்துக் கேட்டபோது கூற மறுத்துவிட்டார்.

கீழிருப்பவர்கள் செய்யும், செய்யாமல் போகும் கெட்டது, நல்லது அனைத்தும் பொறுப்பில் இருக்கும் துறை அமைச்சர் தலையில்தான் விழும். அதைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.

"இப்படியான மோசடிகளைத் தடுக்க வேண்டுமென்றால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நில மோசடிகளுக்கு எதிராக இருக்கும் கடுமையான சட்டங்களைப்போல் தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும்' என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

அமைச்சர் கவனிப்பாரா...?

_________________________

2019, ஜூலை 27-30 நக்கீரன் இதழில், "சிலை கடத்தல்! யார் அந்த அமைச்சர்கள்? போட்டுக்கொடுத்த பொன் மாணிக்கவேல்'”கட்டுரையில், தனியார் சேனல் ஒன்றில் இந்த சிலைக்கடத்தலுடன் தொடர்புடைய இரு அமைச்சர்கள் பெயர்கள் வெளியானதாகவும், இதுகுறித்து அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி, அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அழைத்து விவாதித்தாகவும் இடம்பெற்ற செய்தியை சி.வி. சண்முகம் மறுத்துள்ளார்.

இந்திய பாரம்பரியத்தின் அடையாளமும், இந்தியப் பெருமையின் சின்னங்களுமான சிலைகள் கடத்தப் படுவது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியான இழப்பு மட்டுமல்ல! நம் பெருமிதத்தையும் களவு கொடுப்ப தாகும். அதனை எம்முயற்சியை மேற்கொண்டேனும் தடுக்கவேண்டும் என்பதே நக்கீரன் எண்ணமாகும். இதனால் சிலைக் கடத்தல் செய்திகளையும் அதில் தொடர்புடையவர்களைக் குறித்தும் நக்கீரன் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது.

சிலை கடத்தல் தொடர்பாக நக்கீரனில் வெளியிட்ட செய்திகள் மூலம் எந்த வகையிலும் முன் னாள் அமைச்சரான சி.வி. சண்முகத்தின் புகழுக்கோ, பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் நக்கீரனுக்கு இல்லை. சி.வி. சண்முகத்தின் மறுப்பை பதிவு செய்வதுடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது நக்கீரன்.

(ஆர்.)