ll

உண்மைகள் சுடும்!

க்கீரன் வாசகர்களுக்கு, அன்பு வணக்கம்!

பல ஆண்டுகளாக நானும் நக்கீரன் வாசகன்தான். படித்த பள்ளியிலேயே ஆசிரியராக வருவது போல, நான் படித்துத் தெரிந்த நக்கீரன் இதழிலேயே ஒரு தொடர்கட்டுரை எழுதுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

Advertisment

அந்த வாய்ப்பை வழங்கிய அன்பிற்குரிய மதிப்பிற்குரிய திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு தொடர் என்றால் படிக்கின்ற வாசகனுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். புதிதாக தெரிந்துகொள்வதற்கு பல செய்திகள் இருக்கவேண்டும். அதை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கவேண்டும். விமர்சனம் செய்பவர்களும் இருக்க வேண்டும். ஏன்... சில நேரங்களில் எதிர்ப்பு கள் கூட இருக்கவேண்டும். அப்படி வளர்ந்து ஆலமரமாக இருப்பதுதான் நமது நக்கீரன் இதழும். நான் எழுதப்போகும் இந்தத் தொடரில் இவை அத்தனையும் இருக்கும் என்று எதிர்பார்க் கிறேன்.

இது என்னுடைய திரையுலகப் பயணமாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கும். ஆனால் அதில் உண் மைகள் இருக்கும். கசப் பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை எழுத நினைக்கவில்லை. நக்கீரன் வாசகர்களுக்கு அது இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற் காகவே பேனாவை எடுத்திருக்கிறேன்.

Advertisment

பேனாவின் வலிமை சிலருக்குத் தெரிவ தில்லை. தெரிந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி... இல்லாவிட்டாலும் சரி... "வாள் முனையை விட பேனா முனை வலிமையானது' என்பதுதான் உண்மை. அந்தப் பேனாவால் சாதனை படைத்தவர்களை இந்த நேரத்தில் வணங்கி மகிழ்கிறேன். என் பேனாவுக்கு வலிமையூட்டி யவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ll

திரைப்படங்களுக்கு என்னை எழுத வைத்தவர் புரட்சிக் கலைஞர்.

என் எழுத்தை ரசித்தவர் டாக்டர் கலைஞர்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று மக்களால் புகழப் படுபவர். "கேப்டன்' என்று கொண்டாடப்படுபவர். "எழுச்சிக் கலைஞர்' என்று தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் பெருமையாக அழைக்கப் பட்டவர்.

அவருக்கு எத்த னை பட்டங்கள் கொடுத்தாலும் அதற் குத் தகுதியானவர். என்னை உடன்பிறந்த சகோதரன் போலவே நினைத்தவர். அவ ருக்கும் எனக்குமான நெருக்கமான நட்பு, அவர் என்மீது வைத்தி ருந்த பாசம், இந்தத் தொடரில் சற்று தூக்க லாகவே இருக்கும்.

அவருடைய அசுர வளர்ச்சி, அரசியலை நோக்கிய அவரது பயணம், அதற்கான காரணங்கள் இவை யெல்லாம் படிப்பவர் களுக்குச் சுவையான தாக இருக்கும். ஒருவகையில் நான் இந்தத் தொடரை எழுதுவதற்கு மூலகாரணமே அவர்தான்.

நான் எப்பொழுதுமே என்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கா தவன். அது தவறு என்று இப்பொழுது உணர் கிறேன். இந்தத் தொடரில் சில இடங்களில் அது தெரியக்கூடும்.

ll

வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை, நமது உழைப்பை, அர்ப்பணிப்பை, கிடைத்த பாராட்டுகளை, பெருமையை, விருது களை, வெற்றியை வெளிக்காட்டாமல் இருப்பதும் ஒரு தவறுதான். அந்தத் தவறை நான் நிறைய செய்திருக்கிறேன். அந்தத் தவறுகளையெல்லாம் இந்தத் தொடரில் சரிசெய்யப் போகிறேன். தற்புகழ்ச்சி என்று நினைப்பவர்கள் தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன் என்று முன்னதாகவே கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அந்தப் பெருமைகளையெல்லாம் சொன்னால்தானே அது கிடைப்பதற்கு காரணமானவர்களையும் சொல்ல முடியும். நீதிமன்றத்தில் சொல்வதுபோல "நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று உறுதியளித்து இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன்.

உண்மைகள் சிலருக்கு சுடலாம். அதற்காக உண்மைகளை மறைத்து எழுத முடியாது. "அது உண்மையில்லை' என்று சிலர் மறுக்கலாம்... அப்படி மறுப்பவர்களை தடுக்கவும் முடியாது.

நான் எழுதப்போவதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவை. அப்பொழுதைய என்னுடைய கருத்துக்களையும், உணர்வுகளையும் இன்றைக்கு என பொருத்திப் பார்த்து யாரும் விமர்சிக்க வேண்டாம்.

நான் எழுதுவதில் வருடம், மாதம், தேதி, இடம், ஆட்கள் பெயரில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவை யெல்லாம் நினைவுக்கு கொண்டுவந்து எழுதுவதால் அந்தத் தவறுகள் நேரலாம். ஆனால் செய்திகளும், சம்பவங்களும் தவறானதாக இருக்காது.

நான் யோசிக்கத் தயாராகிவிட்டேன். நீங்கள் வாசிக்கத் தயாராக இருங்கள்!

உங்கள் பேராதரவை நாடும்

லியாகத் அலிகான்

திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா

____________

அறியப்படாத பக்கங்கள்!

திரைப்பட இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, சின்னத்திரை நடிகர் லிஅத்துடன் அரசியல்வாதி... என பன்முகத் தன்மையுடன் திகழுபவர் லியாகத் அலிகான்.

விஜயகாந்த்தின் பல சூப்பர்ஹிட் படங்களின் பொறி பறக்கிற வசனங்களுக்குச் சொந்தக்காரர். விஜயகாந்த்தின் நெருங்கிய சகோதரத்துவ நண்பர்.

தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் ஒன்றான "அண்ணா விருது', "கலைமாமணி' விருது உட்பட பல விருதுகள் பெற்ற படைப்பாளி லியாகத் அலிகான், சினிமா மற்றும் அரசியல் சமூக பிரபலங்களுடனான தனது அனு பவங்களை நேரடி சாட்சியமாக பதிவு செய்யவிருக்கிறார்.

கருப்பு + சிவப்பு = புரட்சி என்ற தலைப்பில் லியாகத் அலிகான் எழுதும் இந்தத் தொடரில் வாச கர்களுக்கு "அறிந்த பிரபலங்களைப் பற்றிய அறியப்படாத பக்கங்களை அறிந்துகொள்ளும் அனுபவம் கிடைக்கும்' என நம்புகிறோம்.

-நக்கீரன் கோபால்

ஆசிரியர்

___________

உலகிற்கு கீழடியை காட்சிப்படுத்திய முதல்வர்!

stalin

வ்வொரு மண்டலவாரியாக "கள ஆய்வில் முதலமைச்சர்'’என்ற ஒரு புதுமையான திட்டத்தை அறிவித்து இரண்டு மண்டலங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மூன்றாவது மண்டல ஆய்விற்காக ஞாயிற்றுக்கிழமையன்று மதுரை வந்தடைந்தார். மாலையில் கீழடி -அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கீழடி அருங்காட்சி யகத்தை திறந்துவைத்தார். 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடியில் 18.43 கோடி ரூபாய் செலவில் செட்டிநாட்டு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தில் மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர்மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப் படையில் தனித்தனிக் கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுழன்றுகாணும் வகையில் சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல், சங்ககால கப்பலின் மாதிரி, அகழாய்வில் அரிதாகக் கண்டெடுக் கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய் வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள், அதிமுக்கியமான தொல்பொருட்களை முப்பரிமாண வடிவில் கண்டுகளிக்கும் வகையிலும், பொது மக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்தன.

-நா.ஆதித்யா