(7) நீங்கதான் விளையாடணும்...!

"சோத்துக் கட்சி' கதையை பார்த்திபன் சொல்ல ஆரம்பித்தார்.

"சார், உங்களோட அஸிஸ்டெண்ட்ஸ் கரு.பழனியப்பனும், பூபதி பாண்டியனும் வரட்டும்'' என்றேன்.

"அவர்களுக்கு ஏற்கனவே கதை தெரியும். நீங்க கேளுங்க'' "சரி... சொல்லுங்க சார்'' சொன்னார்.

Advertisment

சொன்ன பிறகு சிறு அமைதி!

"எப்படி இருக்கு சார்?'' கேட்டார்.

"சார், எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. கதை சொன்னவுடனே கருத்து சொல்லமாட்டேன். என் மனசுக்குள் அசை போட்டுட்டு, அப்புறமாத்தான் சொல்லுவேன். நான் பிறகு சொல்றேன் சார்.''

Advertisment

"ஓ.கே. நோ ப்ராப்ளம்... அப்புறமா சொல்லுங்க... எதுவா இருந்தாலும்.''

அவர் முடிக்கும் முன், "ஓபனா சொல்வேன் சார்'' என்றேன்.

அந்த கெஸ்ட்ஹவுஸில் எனக்கு ஒதுக்கப் பட்ட அறையில் வந்து அமர்ந்தேன்.

கரு.பழனியப்பனும், பூபதி பாண்டியனும் வந்தார்கள்.

"சார்... கதை கேட்டுட்டீங்களா?''

"கேட்டாச்சு.''

"எப்படி இருக்கு சார்...?''

"நான் சொல்றது இருக்கட்டும்... உங்களுக்கு ஏற்கனவே கதை தெரியும்னு உங்க டைரக்டர் சொன்னாரு. நீங்க சொல்லுங்க... உங்களுக்கு கதை புடிச்சிருக்கா?''

"புடிக்கல சார்...'', "நல்லா இல்ல சார்...'' -என்று கரு.பழனியப்பனும், பூபதி பாண்டியனும் சொன்னார்கள்.

"இதை உங்க டைரக்டர்கிட்ட சொன்னீங்களா?''ன்னு கேட்டேன்.

ரெண்டுபேருமே "இல்ல'ன்னு சொல்லிட்டு, "உங்களுக்குப் புடிச்சிருக்கா?''ன்னு என்கிட்ட கேட்டாங்க.

"புடிச்சிருக்கு...''

"நல்லா இருக்குன்னா சொல்றீங்க?''

"ஆமா, நல்லா இருக்கு.''

"நாங்க நல்லா இல்லேன்னு சொல்றோம். நீங்க நல்லா இருக்குன்னு எப்படிச் சொல்றீங்க?''

"ஒருத்தருக்கு நல்லா இருக்குற மாதிரி தெரியறது இன்னொருத்தருக்கு நல்லா இல்லாதது மாதிரி தெரியும். அது, அவங்க அவங்களோட ரசனை தம்பி.''

இருவரும் என்னைப் பார்த்தார்கள்.

"உங்களுக்குப் புடிச்சது எனக்கு புடிக்கணும்கிற அவசியம் இல்ல. எனக்கு புடிச்சது, உங்களுக்குப் புடிக்கணும்கிற அவசியம் இல்ல. நூறுநாள் வெள்ளிவிழா தாண்டி ஓடற படங்களைக் கூட நல்லா இல்லேன்னு சொல்றவங்க இருக்காங்க. ஒரு மொக்கப் படத்தக்கூட நல்லாத் தானே இருக்கு, ஏன் ஓடலேன்னு கேக்குறவங்களும் இருக்காங்க. அது அவங்க, அவங்க ரசனை மட்டுமில்ல... அவங்களோட உரிமையும்கூட. இது சினிமாவுக்கு மட்டும் பொருந்துற விஷயம் இல்ல... எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்''

ll

"நீங்க சொல்றது சரிங்க சார். நல்லா இல்லேன்னா அதை விட்டுட்டு வேற கதைய படமா எடுக்கலாம்ல.''

"நல்லா இல்லே, நல்லா இருக்குங்கிறத யார் முடிவு பண்றது? சினிமாவுல யார் டிசைடிங் அதாரிட்டியோ அவங்க எடுக்கிறது தான் முடிவு. சில கம்பெனிகள்ல தயாரிப்பாளர் எடுக்கிறதுதான் முடிவு. சில இடங்கள்ல இயக்குநர் எடுக்குறதுதான் முடிவு. சில இடங் கள்ல ஹீரோ எடுக்கிறதுதான் முடிவா இருக்கும். வேற வழியில்ல. நாம அதை ஏத்துக்கிட்டுத்தான் ஒர்க் பண்ணணும்'' என்றேன்.

"கதை நல்லா இல்லேன்னா எப்படி சார் ஆர்வமா வேலை செய்ய முடியும்?'' -இது கரு.பழனியப்பன் கேள்வி.

"அப்ப ஊருக்குப் போயிரலாமா?'' என்று நான் கேட்டதுமே இருவரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள்.

"அதுக்கா நாம வந்திருக் கோம். குறிப்பா நீங்க வந்திருக் கீங்க. நீங்க உதவி இயக்குநர் கள். வருங்கால இயக்குநர் கள். "நல்லா இல்லே'ன்னு நினைக்கிற கதையை, நல்ல கதையா மாத்த ணும்னு நெனைக்கணும். எதோ ஒரு ஐடியா புடிச்சுப் போய்த்தான உங்க டைரக்டர் இத படமாக்க லாம்னு முடிவு பண்ணியிருப்பாரு.''

"ஆமா சார்...'' -இது பூபதி பாண்டியன் பதில்.

"இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவருக்குத்தான முடிவெடுக்கிற ரைட்ஸ் இருக்கு''

"ஆமா சார்!'' இது கரு.பழனியப்பன்.

"அப்ப இந்தக் கதைய நல்ல கதையா மாத்தறது எப்படின்னு யோசிங்க. உங்க டைரக்டர்கிட்ட கேள்வி கேளுங்க. அவருக்கு ஆலோசனை சொல்லுங்க...'' என்றேன்.

நான் சொன்னது நியாயம் என்பதுபோல் அவர்கள் முகத்தில் ஒரு ரியாக்ஷன்.

"தம்பி... ஒரு நல்ல கதையை திறமையில்லாத ஆளுங்க கெடுத்திருவாங்க. ஒரு சுமாரான கதையை திறமையான ஆளுங்க, சூப்பரான கதையா மாத்திருவாங்க. நீங்க ரெண்டுபேருமே திறமைசாலிங்க. ரெண்டே நாள்ல உங்க புத்திசாலித்தனத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்று கூறினேன்.

lss

(எங்களுக்குள் நடந்த இந்த உரையாடலை நானே மறந்துவிட்டேன். இந்தத் தொடர் எழுதுறதப் பத்தி தம்பி கரு.பழனியப்பனுக்கு போன் செய்து பேசியபோது, அவர் நினைவுபடுத்தினார்)

இருவரும் மகிழ்ச்சியோடு சமாதான மானார்கள். அதற்குப் பிறகு கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் என் அறையில் இருந்தபொழுது கரு.பழனியப்பனும், பூபதி பாண்டியனும் வந்தார்கள்.

"சார் ரொம்ப நன்றி சார்...''

"எதுக்கு?''

"எங்க ரெண்டுபேரை பத்தியும் எங்க டைரக்டர்கிட்ட ரொம்ப பெருமையா சொன்னீங்களாம். ரெண்டுபேரு கிட்டேயும் ரொம்ப டேலன்ட் இருக்கு, உங்களுக்கு அறிவுபூர்வமான அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் அமைஞ்சிருக்காங்க. பியூச்சர்ல ரொம்ப நல்லா வருவாங்கன்னு சொன்னீங்களாம். எங்க டைரக்டர் சொன்னாரு...'' என்றார்கள்.

"நான் ஒன்றும் மிகையா சொல்லல. உண்மையைத்தான சொன்னேன். ரெண்டுபேர் கிட்டேயும் திறமை இருக்கு, பெருசா வருவீங் கன்னு நம்பிக்கை... அதைத்தான சொன்னேன். தப்பா ஒண்ணும் சொல்லலியே?'' என்றேன்.

"டைரக்டர்கிட்ட அஸிஸ்டெண்ட் டைரக்டர் களப் பத்தி குறை சொல்றவங்கதான் சார் அதிகம். நீங்க இவ்வளவு மனம் திறந்து பாராட்டியிருக் கீங்க'' என்றார்கள். மற்றவர்களின் திறமையை மனம் திறந்து பாராட்டுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதை அனுபவித்தால்தான் தெரியும்.

சாதனை படைத்தவர்கள், திறமையுள்ள இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவிப்பது நிச்சயம் அவர்களையும் சாதனையாளர்களாக மாற்றும். எந்தவித ஈகோவும் இல்லாமல் நிறைய புதிய இயக்குநர்களுக்கு நான் எழுதியிருக்கிறேன். வெற்றிக்கு நானும் ஒரு காரணமாக இருந்து, அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து உண்மையான மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

சோத்துக் கட்சிக்கு வருவோம்.

கதை விவாதம் ஐந்தாறு நாட்கள் நடந்தது.

சென்னை திரும்பும்போது பார்த்திபன் என்னிடம் சொன்னார்.

"சோத்துக்கட்சி படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதுறீங்க?''

"என்ன சார் சொல்றீங்க?'' என்றேன்.

"சோத்துக் கட்சி படத்துக்கு வசனம் லியாகத் அலிகான்'' என்றார்.

"சார்... விளையாடாதீங்க சார்...''

"நான் விளையாடல. நீங்கதான் வசனத்துல விளையாடணும்...'' என்றார்.

"ஒவ்வொரு படத்துலயும் வசனத்துல விளையாடுன நீங்கதான் எழுதணும். நீங்களே ஒரு சிறந்த வசனகர்த்தா. உங்க படத்துக்கெல்லாம் நீங்கதான் எழுதியிருக்கீங்க... அதை மாத்தாதீங்க'' என்றேன்.

"நீங்கதான் எழுதணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். இனிமே என்ன எழுதணும்னு மட்டும் யோசிங்க. வாங்க வண்டியில ஏறுங்க'' என்றார். நால்வரும் காரில் ஏறினோம். காரில் ஏறியதிலிருந்து நான் பேசவே இல்லை.

கொஞ்சநேரம் கழித்து பார்த்திபன் கேட்டார்.

"என்ன பேசாம வர்றீங்க... இப்பவே மனசுக்குள்ளயே டயலாக் எழுத ஆரம்பிச்சுட் டீங்களா?'' என்று சிரித்தார்.

"சோத்துக் கட்சி' படத்தின் பூஜை பிரமாத மாக நடந்தது. ஆனால் படம் தொடங்கப்பட வில்லை. எனக்கு காரணம் தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. இப்பொழுது இந்த தொடர் பற்றி தம்பி கரு.பழனியப்பனிடம் பேசியபோது இதையும் கேட்டேன்.

"ஏன் சோத்துக் கட்சி படத்த ஆரம்பிக்கல''

அதற்கு பழனியப்பன் சொன்ன பதில்...

(வளரும்...)