"அறம்'’பட இயக்குனர் கோபிநயினார் இயக்கத் தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “"கருப்பர் நகரம்'” படத்தின் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளி யிட்டிருந்தார். இப்படத்தின் தயாரிப் பாளர், ஏற்கனவே இயக்குனர் கோபி நயினாரை படத்திலிருந்து வெளியேறுவதற்கு என்.ஓ.சி. பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியிருக்க, "படத் தில் இயக்குநர் பெயரை எப்படிப் பயன் படுத்தலாம்?' என சர்ச்சை கிளம்பியுள்ளது.

"அறம்' படத்தைத் தொடர்ந்து "மனுஷி' எனும் படத்தை இயக்கியுள்ளார் கோபி நயினார். இந்தப் படமும் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், அடுத்த படமாக "கருப்பர் நகரம்' எனும் படத்தை இயக்கிவந்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் 2021-ஆம் ஆண்டு வரையிலும் பணத் தட்டுப்பாட்டால் எடுக்கமுடியாமல் கிடப்பிலே கிடந்தது. இந்தப் பட தயாரிப்பளாரான கங்காதர் விஜய் தொடங்கி, அனிஷ், ஷாய் வரையிலும் கிடப்பில் கிடந்தது. அதன்பிறகு ஷாய்க்கு கடன் கொடுத்த ரமேஷ், "நீ படம் செய்வதைப் போல தெரிய வில்லை. தயவுசெய்து நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு''’என ஷாயிடம் கேட்டுள்ளாராம். வேறு வழியில்லாமல் ஷாய் வாங்கிய கடனுக்காக "இந்தப் படத்தை நீயே எடுத்துக்கொள்' என கொடுத்துள்ளார்.

ss

Advertisment

இந்த சூழ்நிலையில் ரமேஷ், இயக்குனர் கோபி நயினாரிடம் சென்று "இனி இந்தப் படத்தை தானே எடுக்கப்போவதாகவும், இந்த படத்திற்கு தான் மட்டுமே தயாரிப்பாளர்' எனக் கூறியுள்ளார். நொந்துபோன இயக்குனர் ஆளாளுக்கு இப்படி வருவதும் படத்தைப் பாதியிலே விட்டுச்செல்வதுமாய் இருந்ததைக் கண்டு, வேறு படமும் எடுக்க முடியாமல் தவித்துவந்துள்ளார்.

இயக்குனர் கோபியிடம் ரமேஷ், “"இருந்த பணத்தையும் ஷாய்க்கு செட்டில் செய்யக் கொடுத்துவிட்டேன். இந்த படம் எடுத்தால் தான் என்னால் இதிலிருந்து மீண்டெழவே முடியும். எப்படியாவது எனக்கு இந்த படத்தை எடுத்துக் கொடு' என கேட்டுக் கொண்டதால், ரமேஷின் சூழ்நிலை கருதி இயக்குநரும் இந்தப் படத்தை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

Advertisment

பின் ரமேஷ் நண்பரான நாகவெங்கடேஷ் பைனான்ஸுக்கு பணம் வாங்கிக்கொடுப்பதாக உள்ளே நுழைந்தார். நாகா, "தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளியை அறிமுகப்படுத்தி வைத்த காரணத்திற்காக படம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து இயக்குனர் போடவேண்டிய அனைத்து ஷெட்யூல்களையும் இவரே போட்டுக் கொடுக்கவே, ஆத்திரமடைந்த இயக்குனர், “"இங்கு யார் இயக்குனர் நீயா? நானா?''’என்ற கேள்வியை எழுப்பியதோடு, “"இதுபோன்று இருந்தால் நீங்களே படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையேல் என்னை எடுக்கவிடுங்கள். எனக்கென்று ஒரு பெயர் உள்ளது. அதைக் கெடுத்துக்கொள்ள என்னால் முடியாது''”என கூறியுள்ளாராம்.

அதன்பிறகு "தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி, “"நீங்க படம் எடுங்க. யாருடைய தலையீடும் இருக்காது''’என்று சொல்லியிருக்கிறார். பிறகு 22 நாள் படம் ஷூட் டிங் எடுக்கப்பட்டது. இதற்கிடையில் வழக்கம்போல் பணச் சிக்கலால் படப்பிடிப்பு நடை பெறவில்லை. இயக்கு நர் கோபிநயினார் சொன்னபடி படம் எடுத்துத் தரவில்லை என இயக்குனர் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி கவுன் சிலுக்கு பேச்சுவார்த் தைக்கு அழைத் துள்ளனர். ஆர்.கே. செல்வமணி, கதி ரேசன் போன்ற சிலர் இயக்குநரை அழைத்து விவரம் கேட்கவே, அதற்கு இயக்குனர், “"நான் தயாராக இருக்கிறேன். இவர்கள்தான் இது நாள் வரையிலும் ஷூட்டிங்குக்கான எந்த வேலையும் செய்யவில்லை. நான் என்ன செய்யமுடியும்?''’என கேள்வி எழுப்பியுள்ளாராம்.

ss

"சரி, இனி மீதமுள்ள படத்தை 1 கோடியில் முடித்துவிடு''’என பேசியுள்ளனர்.

"அது எப்படி முடியும். 22 நாள் ஷூட்டிங் 2ணீ கோடியில் முடித்துவிட்டு, மீதமுள்ள மூன்று பாடல், மூன்று பைட் சீன், 5 புட்பால் மேட்ச், சிறை கிளைமேக்ஸ் என பல காட்சிகளை எப்படி 1 கோடியில் முடிக்கமுடியும்'' என்று இயக்குநர் கேட்டிருக்கிறார்.

"ஒன்று இவர்கள் சொல்லும் தொகையில் படத்தை எடுத்துக் கொடுப்பது, இல்லையேல் நீயே இந்தப் படத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டில் ஒன்றைச் சொல்''” என ஆர்.கே. செல்வமணி தரப்பில் கேட்டதும், கோபிநயினார் "இந்தப் படத்தை நானே எடுத் துக்கொள்கிறேன்''’எனக் கூறியுள்ளாராம்.

அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் எடுக்கப்பட்ட படத்திற்கான செலவு செய்த கணக்கை இயக்குனர் கேட்டுள்ளார். ஒரு வெள்ளைத்தாளில் இவர்களே கணக்கை எழுதிக் கொடுத்துள்ளனர். இதை ஏற்க மறுத்த இயக்குனர், "நீங்கள் முறைப்படி கொடுங்கள். வெறும் வெள்ளைத்தாள் கணக்கு செல்லுபடியாகாது. இல்லையேல் நான் லீகலாக நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என்றிருக்கிறார்.

இதையடுத்து, "இல்லை இந்தப் படத்தை நாங்களே எடுத்துக்கொள்கிறோம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றவர்கள், இரண்டு மாதகாலம் எந்தப் பதிலும் சொல்லாமல் விஷயத்தைக் கிடப்பில் போட்டுள்ளனர்.

இப்படி தயாரிப்பாளர் தரப்பிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாத நிலையில், இயக்குனர் கோபி, செல்வமணியிடம் புகாராகச் சொல்லவே, "நீங்க இதற்காக காத்துக்கிடக்க வேண்டாம் வேறு படம் பண்ணுங்க'' என்று சொல்லியிருக்கிறார்.

இயக்குனர் கோபிநயினாரும் "காலனி' எனும் படத்தை நடிகை ராதாவை வைத்துத் தொடங்கியுள்ளார். இந்த விசயம் தெரியவந்த ரமேஷ், நாகா, முரளி மூவரும் திரைத்துறை கவுன்சிலுக்கு அழைத்து, "என்னுடைய படத்தை முடிக்காமல் காலனி படத்தை எடுக்கவிடமாட்டோம்' என மிரட்டி யுள்ளனர். அதற்கு இயக்குனர், "இப்போதும் இந்த படத்தை எடுத்துத் தர தயாராக உள்ளேன். நீங்க ரெடியா?''’என்று கேட்டதற்கு...

நாகா, "அந்தப் பேச்சே வேண்டாம், அதை நாங்களே பார்த் துக்கொள்கிறோம். நீ இந்த படத்திலிருந்து விலகுறதா மட்டும் என்.ஓ.சி. கொடுத்துட்டுக் கிளம்பு''’எனச் சொல்லியுள்ளனர்.

இயக்குனர் கோபிநயினார் மன உளைச்சலோடு, "நீங்கள் செய்யும் அநீதி உங்களுக்கே தெரியலையா?''’என்று மனக்குமுறலோடு என்.ஓ.சி. கொடுத்து வெளியேறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான் கோபிநயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வரியா ராஜேஷ் நடிக்கும் “"கருப்பர் நகரம்'’என தலைப்பிடப் பட்டுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். "மிரட்டி என்.ஓ.சி. பெற்றுக்கொண்ட இவர்கள் தற்போது இயக்குனர் கோபிநயினார் பெயரை எப்படி போடமுடியும்?' என்கிற சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

இவர்கள் சில இயக்குனர்களிடம் சென்று இந்தக் கதையை முடித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு எந்த இயக்குனரும் முன்வராத சூழ்நிலையில், வேறுவழியில்லாமல் இவர் பெயரை போட்டு மறைமுகமாக மீண்டும் இவரை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள். அது தவிர வும் ஆரம்பத்தில் கோபி "கருப்பர் நகரம்' தலைப்பு வைத்தபோது, இந்த தலைப்பு என்னுடையது, இவர் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் "ஃபோர் பிரதர்ஸ்' ’பாலு என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு நிலுவையிலே இருந்தது. கோபிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவரே "அந்த தலைப்பை நீங்களே எடுத்துக்கொள் ளுங்கள்' எனச் சொன்ன பிறகே "கருப்பர் நகரம்' படம் தொடங்கப்பட்டது.

இந்த டைட்டில் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தாலும், கோபி நயினார் பேரை பயன்படுத்தி னால்தான் படத்தின் டைட்டிலுக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு நினைப்பதாலும் படத்தில் கோபி நயினார் பெயரைப் போட்டதாகவும், திரைத்துறை கவுன்சில் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகிறார்கள்.