புல்டோஸரை உருவாக்கிய அமெரிக்க விவசாயிகளான ஜேம்ஸ் கம்மிங்ஸும் ஜே. ஏர்ல் மெக்லியோட்டும் அது ஒரு அரசியல் குறியீடாக, ஆயுதமாக உருவாகுமென கனவில்கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள். பா.ஜ.க.வின் புதிய அரசியல் அடையாளமாய் வேகமாக உருவெடுத்து வருகிறது புல்டோஸர். உத்திரப்பிரதேச அரசியலில் உருவெடுத்த இந்த அரசியல், வேகமாக டெல்லி, மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் என பா.ஜ.க. ஆட்சிசெய்யும் மாநிலங்களிலெல்லாம் பரவி அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

ff

புல்டோசர் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த வார்த்தை அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்துள்ளது. புல்டோஸ் என்பதற்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி வற்புறுத்துவது அல்லது கட்டுப்படுத் துவது என்பது பொருள். 1876 அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் பங்கேற்க முயன்ற கறுப்பினத்தவர்கள் அடி, சவுக்கடி மூலம் அச்சுறுத்தப்பட்டனர். அந்த பழைய அரசியலின் நவீனமயமாக்கப்பட்ட வெர்ஷன்தான் பா.ஜ.க.வின் புல்டோஸர் அரசியல். சிறுபான்மையினர், எதிர்க்கட்சியினர், எதிரிகள் எல்லோரையும் பயமுறுத்தி பேச்சற்றவர்களாக மாற்ற புல்டோஸர் அரசியலை வளர்த்தெடுக்க ஆரம்பித்துள்ளது.

2022 சட்டமன்றத் தேர்தலில், தன்னை குற்றவாளிகளுக்கு எதிரானவராகவும் அகிலேஷை குற்றவாளிக்கு ஆதரவானவராகவும் முன்வைத்து தொடர்ச்சியாக தாக்குதல் பாணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் யோகி. தேர்தலில் யோகி தோற்பார் என அகிலேஷ் பிரச்சாரம் செய்தபோது, அதற்குப் பதிலடி தந்த "புல்டோஸர் பாபா' என்றழைக்கப்பட்ட யோகி, "புல்டோஸர் பேசாது. ஆனால் சிறப்பாக வேலை செய்யும்' என்றார். மற்றொரு பிரச்சார மேடையில், “மார்ச் 10-க்குப் பிறகு, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக புல்டோஸர் செயல்படும்'’என்றார்.

தெலுங்கானாவிலிருந்து உத்திரப்பிரதேசத்துக்கு பிரச் சாரத்துக்கு வந்த பா.ஜ.க. எம். எல்.ஏ. ராஜாசிங், "ஆயிரக் கணக்கான புல்டோஸர் களுக்கும், ஜே.சி.பி.களுக் கும் யோகி ஆர்டர் கொடுத்திருக்கிறார். உங்களுக்கு இவற்றின் பயன்பாடு தெரியும். நீங்கள் உத்தரப்பிர தேசத்தில் வாழவேண்டுமென்றால் யோகி வாழ்க என வாழ்த்தவேண்டும். இல்லையெனில் உத்தரப் பிரதேசத்தை காலி செய்யவேண்டும்''’என வாக்காளர் களை மிரட்டினார். இந்த மிரட்டல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் அந்த எம்.எல்.ஏ.வுக்கு கொடுத்த எச்சரிக்கை, மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை... அவ்வளவுதான்.

Advertisment

ff

இந்தியாவில் மிகவும் அதிகமாக பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேச பா.ஜ.க. எம்.எல். ஏ.க்கள் மேலேயே பாலியல் வல்லுறவு வழக்குகள் உண்டு. உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவில் சிக்கி இறந்தபோது, குடும்பத்தினர் அந்த விவகாரத்தை மேலும் பிரச்சினையாக்கக் கூடாதென, காவல்துறையே சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலை தகனம் செய்தது பிரச்சினையானது. இந்த வழக்கைப் பதிவுசெய்யப் போனபோது கைதான பத்திரிகையாளர் சித்திக் கப்பன் இன்றுவரை சிறையில்தான் இருக்கிறார்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தின் ஷஹ்ரன்பூர் மாவட்டத்தில் கற்பழிப்புக் குற்றத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளி தலைமறைவாகியபோது, காவல்துறை அவனது வீட்டின் மூன்று படிகளை புல்டோஸரைக் கொண்டு இடித்துத் தள்ளியது. "அவர் நேரில் வந்து ஆஜராகவில்லையெனில் விளைவு இன்னும் மோச மாய் இருக்கும்' என எச்சரித்தார் காவல்துறை அதிகாரி. தவிர, "அந்தக் குற்றவாளிக்கு பொதுமக்கள் உதவி செய்ததாக அறியவந்தால் அவர்களுக்கு எதிராகவும் இதேபோல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இப்படி வெளிப்படையாகவே புல்டோஸரை வைத்தும், புல்டோஸரை குறியீடாக வைத்தும் மிரட்டல் அரசியல் தொடங்கி வைக்கப்பட்டது உத்தரப்பிரதேசத்தில்தான். இப்போது அது மற்ற மாநிலங்களை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 10-ஆம் தேதி ராமநவமியன்று, இந்துத் துவ அமைப்புகள் திட்டமிட்டு குஜராத், உத்தரப்பிர தேசம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், போன்ற பல்வேறு மாநிலங்களில் ஊர்வலத்தை நடத்தின. இந்த ஊர்வலங்களின் பாதை வேண்டு மென்றே சிறுபான்மையர் இருக்கும் பகுதிகளைத் தாண்டிச் சென்றன. அவர்களை எரிச்சலூட்டும்படி யான கோஷங்கள் முன்னடுக்கப்பட்டன. மத்தியப்பிர தேசம், குஜராத், மேற்குவங்கம் போன்ற இடங்களில் இதற்கு எதிர்வினையாக மோதல் வெடித்தது. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

Advertisment

dd

ராமநவமி ஊர்வலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் குறிவைத்து, அவர்களது வீடுகள், கடைகளை இடிக்க குஜராத், மத்தியப்பிரதேச அரசுகள் உத்தரவிட்டன. மத்தியப்பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்டோ ரைக் கைதுசெய்ய உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான். கலவரத்துக்குக் காரணமானவர்களின் வீடு, கடைகளை இடிக்க உத்தரவுகள் பறந்தன. இந்தக் கைது நடவடிக் கையில் ஊர்வலத்தினர் மீது கல் வீசியதாகக் கைது செய்யப்பட்ட 100 நபர்களில் ஒருவர் வாசிம்ஷேக். ஆச்சரியமென்னவென்றால், 2005-ல் நடந்த விபத்தொன்றில் 2 கைகளையும் இழந்தவர் இந்த வாசிம்ஷேக். வாசிமின் இரண்டு கைகளும் இல்லாத தோற்றம் ஒன்றே, அரசுத் தரப்பில் புனையப்பட்ட அத்தனை கட்டுக்கதைகளையும் முடிச்சவிழ்த்து விடுகிறது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் டெல்லி, ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி யன்று (ஏப்ரல் 16) இஸ்லாமியரின் வசிப்பிடங்களை இலக்காக வைத்து இந்துத்வாவினர் மூன்று ஊர்வ லங்களை நடத்தியிருக்கின்றனர். சீண்டுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த ஊர்வலத்தால் இரு தரப்புக்கும் மோதல் எழ, கல்வீச்சில் சென்று முடிந்தது.

இதற்குப் பதிலடியாக, அப்பகுதி இஸ்லாமியர்களைக் குறிவைத்து டெல்லி மாநக ராட்சி ஆக்கிரமிப்பு அகற்றலில் இறங்கியது. டெல்லியில் லட்சக் கணக்கான ஆக்கிரமிப்புக் குடி யிருப்புகள் இருக்க, குறிப்பாக அனுமன் ஜெயந்தி ஊர்வலத் துக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து, அவர்களது வீடுகளைத் தகர்க்க ஆரம் பித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தில் வீடுகளை இடிப்பதற்கு தற்காலிகத் தடை வாங்கப்பட்டது. அந்த உத்தரவை அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் அதிகாரிகள் அந்த உத்தரவு தங்கள் கைக்கு வர வில்லையெனக் கூறி வீடுகளைத் தொடர்ந்து இடிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் அங்குவந்து புல்டோஸருக்கு முன்னால்நின்று தைரியமாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதன்பின்னேதான் அதி காரிகள் வீடுகளை இடிப்பதைக் கைவிட்டனர். இப் போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிகழ்வைக் கண்டித்த டெல்லி உயர்நீதிமன் றம், "இந்த ஊர்வலத்துக்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை. ஊர்வலத்தைத் தடைசெய்ய வேண்டிய காவல்துறை, ஊர்வலம் முழுவதும் பாது காப்பாகச் சென்றிருக்கிறது. அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டரும் பிற அதிகாரிகளும் இந்த சட்ட விரோதமான ஊர்வலத்துக்கு முழுக்கத் துணையா கப் போயிருக்கின்றனர். "தொடக்கத்திலேயே அந்த ஊர்வலத்தைத் தடுத்துநிறுத்தி கூட்டத்தினரைக் கலைந்துபோகச் செய்திருந்தால் அந்த ஊர்வலம் நடக்காமலே போயிருந்திருக்கும். அசம்பாவிதங் களும் தவிர்க்கப்பட்டிருக்கும்'’என கூறியுள்ளது.

"ஜஹாங்கீர்புரி வன்முறையில் கைதுசெய்யப் பட்ட முக்கியக் குற்றவாளி அன்சார், பா.ஜ.க. பிரமுகர்' என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

"நவமிகளுக்கும் ஜெயந்திகளுக்கும் மட்டு மல்லாது… சிறிய உள்ளூர் அளவிலான பிரச்சினை களுக்கும் புல்டோஸர் அரசியலைக் கையாளலாம்' என அஸ்ஸாம் வழிகாட்டியுள்ளது.

மே 20-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம், சலோனாபுரி கிராமத்தினர், படத்ரவா காவல் நிலையத்துக்கு வந்து காவல் அதிகாரிகளைத் தாக்கியதுடன், போலீஸ் நிலையத்துக்கும் தீ வைத்தனர்.

இந்த தீவைப்பு சம்பவத்துக்குக் காரணம், முந்தைய தினம் உள்ளூர் மீன் வியாபாரியான இஸ்லாம் என்பவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. விசாரணைக்குப் போனவர் பிணமாகத்தான் திரும்பினார். போலீஸ் கஸ்டடியில் இறந்த இஸ்லாமின் உறவினர்கள்தான் காவல் நிலையத்துக்குத் தீவைத்தது.

"காவல்நிலையத்துக்குத் தீவைத்தால் என்ன ஆகும்' என காட்டவிரும்பிய போலீசார் புல்டோசருடன் வந்து அவர் களின் வீடுகளைத் தரையோடு தரையாக நிரவிவிட்டுப் போய்விட்டனர். இந்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி. ஜி.பி.சிங்கின் விளக்கம் இப்படியிருக்கிறது: “"முந்தைய தினம் காவல்நிலையத்தை சேதப் படுத்தியவர்கள் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள். அவர்களிடம் ஆவணங்கள் ஏதாவது இருந்தாலும் அவை போலியான ஆதாரங்கள்'’என்கிறார். ஆவணங்கள் போலியா,… இல்லையா என்பதில் கருத்துச் சொல்லவேண்டியவர்கள் காவல்துறை யினரா? நில அளவைத் துறையினரா?

கோடு போட்டால் ரோடு போடத்தெரிந்த வர்கள் பா.ஜ.க.வினர், இன்னும் மிச்சமிருக்கும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், இந்த புல்டோஸர் அரசியலைக் கைக்கொள்ள வெகுநாளாகாது. இந்த முரட்டு புல்டோஸர் அரசியலின்கீழ் நசுங்குவது நீதி, நியாயம், ஜனநாயகம் மட்டுமல்ல… சிறுபான்மையினரும் குரலற்றவர்களும் கூடத்தான்.