அ.தி.மு.க. தனது தேர்தல் வியூகத்துக்காக பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்துவதற்கு ஒப்பந்தம் போட தயாராகிவருகிறது. அ.தி.மு.க. வின் வியூக அமைப்பாளராக வரும் பிரசாந்த் கிஷோர் அதன் முழுப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத் தைக் கையிலெடுத்தார். அதில் திடீரென்று அ.தி.மு.க.வின் ஐ.டி. விங், எக்ஸ்பிரஸ் அவின்யூ மாலில் “"யார் அந்த சார்?'” எனக்கேட்டு சிறு தட்டிகள் பிடித்துப் போராட்டம் நடத்தியது. அ.தி.மு.க. சார்பில் பா.ஜ.க. மற்றும் சீமான் கட்சிகளிடம் பேசி, அவர்களும் "யார் அந்த சார்?'’என கேள்வி எழுப்பினார்கள்.

bb

2017ஆம் ஆண்டு காவேரி பிரச்சினைக்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தான் தி.மு.க. கூட்டணி உருவானது. அதேபோல தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகளை ஒரு பிரச்சினையில் இணைத்து ஒருங்கிணைக் கும் போராட்ட முறை அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் உருவானது. இதற்கான வியூகத்தை அமைத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோர்தான். ஆனால் இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி காமக்கொடூர நிகழ்வுகள் போல பின்னணியில் எந்த தி.மு.க. வி.ஐ.பி.யும் இல்லாததால் இவர்கள் எழுப்பிய “"யார் அந்த சார்?'’போராட்டம் பிசுபிசுத்தது.

Advertisment

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடனான தனது கூட் டணியை உறுதி செய்திருக்கிறது. ஆடுமலை அ.தி.மு.க. நடத்திய “"யார் அந்த சார்?'’போராட் டத்தை பாராட்டியிருக்கிறார். எடப்பாடியும், அ.தி.மு.க.வைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆடுமலையை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆடுமலைக்குப் பதில் தமிழிசையை கொண்டு வர வேண்டும் எனப் பேசிவருகிறார்கள். தமிழிசையும், விரைவில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் மாற்றப்படுவார் என வெளிப்படையாகவே அறி வித்துள்ளார். ஆனால், பா.ஜ.க. வட்டாரங்களில் இதுபற்றிக் கேட்டபோது அ.தி.மு.க. எதிர்பார்ப்பது போல் தமிழிசை பா.ஜ.க. தலைவராக வரமாட்டார். வானதி, பொன்னார், நயினார் போன்றவர்களும் பா.ஜ.க. மாநிலத் தலைவராக வரமாட்டார்கள். இந்தமுறை அ.தி.மு.க., -பா.ஜ.க. கூட்டணி விசயத்தை கையில் எடுத்திருப்பது பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும் மகாராஷ்டிராவின் கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன். அவர்தான் ஆடுமலை செய்த பிராடு வேலைகளைத் தலைமையிடம் பட்டியலிட்டு "தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காவிட்டால் பா.ம.க.வும் -பா.ஜ.க. கூட்டணியில் இருக் காது. ஏற்கெனவே வாங்கிய கவனிப்பின் அடிப்படையில் பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும். பலமுனைப் போட்டிகள் தமிழகத் தேர்தல் களத்தில் உருவாகும். அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தால் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வுக்கு உள்ள வலுவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடுமலை சொல்லும் தனித்துப் போட்டி என்கிற பார்முலா எதிர்காலத்தில் ஆடுமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதற்குதான் உதவும். பா.ம.க. கூட துணைக்கு இல்லாமல் பா.ஜ.க. இம்முறை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழே சென்றுவிடும்' என தேசியத் தலைமைக்கு அறிவுறுத்தி, அமித்ஷா விடம் டெல்லியில் ஒரு மீட்டிங்கில் கூடிய மாநில நிர்வாகிகளைப் பேச வைத்தார் சி.பி.ஆர்.

ss

அமித்ஷாவை எடப்பாடியுடன் பேச வைத்த சி.பி.ஆர்., ஓ.பி.எஸ்., தினகரன் பா.ஜ.க.வுடன் கூட்டணியிலிருப்பார்கள். பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி என யோசனையை முன்வைத்திருக்கிறார். போன சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளை டி.டி.வி.தினகரன் கட்சி பிரித்ததால் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இம்முறை அந்தத் தவறை அ.தி.மு.க. செய்யக் கூடாது என அமித்ஷா சொன்னதை எடப்பாடி ஏற்றுக்கொள்ள, கூட்டணி உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. மாநிலத் தலைவர் நியமன விவகாரத்தை நிர்மலா சீதாராமனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் ஏற்றுக்கொண்டார்கள். பழைய தலைவர்கள் இல்லாமல் ஒரு புதிய தலைவரை உத்தரப்பிரதேச பாணியில் தமிழகத்திற்கு கொண்டுவரலாம் என்றும் ஒரு ‘டாக்’ உள்ளது. ஆடுமலை ‘பேக்-அப்’ உறுதியானது. தை மாதத்தில் பா.ஜ.க.விற்கு புதிய மாநிலத் தலைவர் வருவார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

Advertisment

_____________

இறுதிச் சுற்று!

bb

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவத்தைக் கண்டித்து, சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டத்தை வியாழக்கிழமை (2-1-2025) முன் னெடுத்தது பா.ம.க. மகளிர் அணி. இந்த கண்டன போராட்டத்துக்கு காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசார் போராட் டத்திற்கு அனுமதி தராமல் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்திய சௌமியா உள்ளிட்ட பா.ம.க. மகளிர் அணியினரை அதிரடியாகக் கைது செய்தது போலீஸ். கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அப்பகுதியே பரபரப்பானது. இதற்கிடையே, போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 2-ந் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பா.ம.க.வின் போராட்டத்துக்கு அனுமதி தர மறுத்து உத்தரவிட்டதுடன்... "பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவதை விட்டுவிட்டு, பாலியல் சீண்டல்களை அரசியலாக்குவதா? விளம்பரத்திற் காக போராட்டம் நடத்தக்கூடாது" என்று பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

-இளையர்

படம்: எஸ்.பி.சுந்தர்