ஒரு சிறு பொறி நெருப்புதான், பெரும் தீ விபத்துக்குக் காரண மாகும். அதேபோல நாம் அலட்சியமாகக் கருதும் ஒரு வதந்தி, தவறான தகவல், ஒரு மாநிலத்தின் பதற்றத்துக்கே காரணமாகிவிடும். வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோக்களும் பதிவுகளும் இதை நிரூபித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ், அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக 12 பேர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக பதிவிடுகிறார். பி.ஜே.பி. பார்பீகார் எனும் ட்விட்டர் கணக்கு 2 வடமாநிலத் தமிழர்களால் பீகாரிகள் கொலைசெய்யப்பட்டதாக வீடியோக்களைப் பதிவிட்டு வைரலாக்கியது. இப்படி சகல திக்கிலுமிருந்து சமூக ஊடகங்களில் செய்தி பரவ, உண்மையை அறிய வழியில்லாத வட இந்தியர்கள் பதற்றமானார்கள்.
இந்தப் பதிவுகள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கவனத்துக்குப் போய், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, தேசிய அளவில் பரபரப்பான செய்தியாக உருவெடுத்தது இவ்விவகாரம்.
இந்திய அளவில் கவனிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருவதும், தமிழக ஆட்சியை விமர்சிக்க விஷயம் எதுவும் இல்லையென்பதையும், எதிர்க்கட்சிகள்... அதிலும் பா.ஜ.க. கவலையுடன் கவனித்துவந்தது. இந்த வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தை அது கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது.
2014-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்கும், இப்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் நிற்பதற்கும் அதன் வலுவான ஐ.டி.விங்கும் ஒரு காரணம். ஐ.டி. விங் என்பது சொந்தக் கட்சியின் பெருமையை மட்டும் எடுத்துரைப் பது அல்ல. எதிர்க்கட்சியினரின் சிறுமையையும், ஊழல்களையும் விளம்பரப்படுத்துவதும், இல்லாத பொல்லாத பழிகளைப் போடுவதற்கும் ஆகும். இதற்காக கட்சி ஆர்வலர்கள், அனுதாபிகள் படையே செயல்பட்டு வருகிறது.
இத்தகைய படைகள் போலி செய்திகளையும், வீடியோக்களையும், பிற மாநிலங்களில் வட இந்தியர்கள் மீது நடந்த தாக்குதல்களையும் தமிழ்நாட்டில் நடந்ததுபோல பரப்பியுள்ளார்கள். இந்த வீடியோக்களை சரிபார்க்காமல் பல்வேறு வடஇந்திய ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது நிலவரத்தை இன்னும் மோசமாக்கியது.
முக்கியமாக மோனுகுமார், பவன்குமார் ஆகியோர் தமிழர்களால் கொலை செய்யப்பட்ட தாக பரப்பப்பட்ட வீடியோக்கள் பதற்றத்தை ஏற்படுத்தின. திருப்பூரில் பணிபுரியும் பவன் யாதவ் என்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது உறவினரான உபேந்திரதாரி என்பவரால் கொல்லப்பட்டார். தற்போது இந்தக் கொலைக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பதை பவன்குமார் யாதவின் சகோதரரே உறுதிப்படுத்தி யுள்ளார். மற்றொருவரான மோனுகுமார் தற்கொலை செய்துகொண்டார் என்பதை காவல்துறை விசாரணை உறுதிசெய்துள்ளது.
அத்தோடு, ஹோலி பண்டிகைக்காக வட மாநிலங்களுக்கு கூட்டமாகக் கிளம்பும் வடஇந்தியத் தொழிலாளர்களை, உயிர் பயத்தில் தமிழ்நாட்டை விட்டு கிளம்புவதாக விஷமிகள் திட்டுமிட்டு சித்தரிக்க முயன்றுள்ளனர். இதனை சங்கிகளின் அதிகாரப்பூர்வ பி.ஜேபி. ஃபார் பீகார் பக்கத்தில் பரப்ப, தமிழ்நாட்டு சங்கிகளும் இந்த பொய் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர்.
விஷயம் விபரீதத் திருப்பமெடுத்ததைக் கவனித்த தமிழக முதல்வர், உடனடியாக காவல்துறை மூலம் நிகழ்வுகளின் பின்னணியை விளக்கியதோடு, சம்பந்தப்பட்ட மாநில முதல்வ ருக்கு விளக்கமளித்து நிலைமையைத் தெளிவு படுத்தினார். மட்டுமின்றி, இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபடுபவர்கள், வதந்தி பரப்புபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்த நினைக் கிறவர்கள் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க நினைப்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்று கடுமையாகத் தெரிவித் துள்ளார்.
தமிழக போலீஸ், அந்த வீடியோக்களை ஆய்வுசெய்து, அவை போலி என்பதனை உறுதிசெய்ததுடன், தமிழக காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியிலே அந்த வீடியோக்கள் போலி என பதிவு செய்தது. தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு ஆபத்தில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தது.
பீகார் அரசு அதிகாரிகள் இடம்பெற்ற ஒரு குழுவை தமிழகத்துக்கு வரவழைத்து திருப்பூர் உள்ளிட்ட வட இந்தியத் தொழி லாளர்கள் அதிகம் காணப்படும் இடங்களுக்கு அவர்களை பயணிக்க வைத்து, தொழிலாளர்களை நேரில் சந்திக்கச் செய்தது தமிழ்நாடு. இந்த ஆய்வுக்குப் பின், அந்த அதிகாரி கள் குழு "பொய் வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம். வட இந்திய தொழிலாளர்கள் குறிப் பாக பீகார் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்பதனை தெளிவுபடுத்தி யுள்ளது.
இத்தனைக்கும் நடுவில் வாய்ச்சவடால் வீரர் பா.ஜ.க. அண்ணாமலையின் அறிக்கை, புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு எதிராக அவதூறு பரப் பும்வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து மண்ணடி குமரன் என்பவர் அளித்த புகாரில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல், மதரீதியான பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவு களின்கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. வடஇந்தியத் தொழிலாளர்களிடையே பீதியைக் கிளப்பிய ட்விட்டர் கணக்கான பி.ஜே.பி. ஃபார் பீகார், டெய்னிக் பாஸ்கர், தமிழக விஷமிகள் மீதும் வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உமராவ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஒரு கட்சியை மட்டம் தட்டுவதற்காக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாநிலத்தையே அவமானப் படுத்த முனைந்த, இரு மாநிலங் களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்த முனைந்த நிகழ்வு முன்னுதாரணம் இல்லாதது. அதனை திறம்பட சமாளித்த முதல்வர், எதிர்காலத்தில் இத்தகைய முயற்சியில் இறங்க நினைக்கும் நபர்களுக்கும், ஜனநாயக விரோத சக்திகளுக்கும் அச்சம் எழும்வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, இத்தகைய தேசவிரோத சக்தி களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
மேலும் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவை வலுப் படுத்தி, தேசநலனுக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலான இத்தகைய பிரச்சாரங்களை முளையிலேயே கிள்ளியெறி வதற்கும் கட்டுப்படுத்துவதற்கு மான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான வியூகங்களை முதல்வர் வகுக்கவேண்டும். இதுவே இப்போதைய உடனடித் தேவை.