அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மாற்றங் களில் பா.ஜ.க.வின் ரியாக்ஷன் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. அது எடப்பாடியை யும் ஓ.பி.எஸ்.ஸையும் மிகவும் அமைதியாக மாற்றிவிட்டது என்கிறார்கள் அ.தி. மு.க.வினர்.
டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.ஸை, பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஆனால் ஓ.பி.எஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிய மோடிக்கு நெருக்கமான ஒரு அதிகாரி, ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார்.
"ஒற்றைத் தலைமை விவகாரம் தற்பொழுது வெடிப்பதற்குக் காரணமே, காங்கிரஸ் தரப்பில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருக்கும் பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் சுனிலின் ஐடியாக்கள்தான். மேடை களில் சரியாகக் கூட பேசத் தெரி யாமல் இருந்த எடப்பாடிக்கு நன்றாக பேசக் கற்றுக்கொடுத்தவர் சுனில்தான். அந்த சுனில், சசி கலாவையும் என்னையும் எடப்பாடியின் எதிரிகளாகப் பார்க்கிறார்.
அமித்ஷா கேட்டுக்கொண்ட பிறகும் சசிகலாவை அ.தி.மு.க.விற்குள் எடப்பாடி அனுமதிக் காததற்கு சுனிலின் அட்வைஸ்தான் காரணம். அந்த சுனிலும் எடப்பாடி யின் மகன் மிதுனும் நெருக்கமாகிவிட்டார் கள். உட்கட்சித் தேர்தல்கள் நடக்கும் போதே சுனில் தனது வேலை யை ஆரம்பித்துவிட்டார். பல கட்டங்களாக நடந்த உட் கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களை எடப்பாடி திட்டமிட்டு உள்ளே கொண்டு வந்தார். கட்சியின் நிர்வாகி களாக ஏற்கனவே இருந்தவர்கள் வரவேண்டும், புதிதாக யாரையும் நியமிக்கக்கூடாது என்கிற கண்டிஷனோடுதான் உட்கட்சித் தேர்தல் நடை பெற்றது.
அதில் பொதுக்குழு உறுப்பினர்களாக வெளியில் தெரியாமல் எடப்பாடியின் ஆட்கள் திணிக்கப்பட்டார் கள். மிகவும் ரகசியமாக முதலில் நடைபெற்ற மூன்றுகட்டத் தேர்தல்களில் எடப்பாடியின் ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். நான்காம்கட்டத் தேர்தலில் இந்த விபரம் எனக்குத் தெரியவந்தது. அதில் நான் தலையிட்டேன். அன்று முதல் எடப்பாடி என்னுடன் மோதினார். அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க்கில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனை, சுனில் கொண்டுவந்தார்.
சுனில் சொன்னதன் அடிப்படையில், எடப்பாடியின் மகன் மிதுன், ராஜ்சத்யனை ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்புங்கள், அவர் டெல்லிக்கு வந்தால் நான் அவர்மூலம் அ.தி.மு.க.வின் வியூகங்களை அமைக்க வசதியாக இருக்கும் என சுனில் சொல்ல... எடப்பாடியின் மகன் மிதுன், ராஜ்சத்யனை எம்.பி.யாக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்க ஆரம்பித்தார்.
இந்த வியூகத்தைத் தெரிந்துகொண்ட நான், அதை எதிர்த்தேன். இது எடப்பாடியை மிகவும் கோபப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக உள்ள சுனில், பா.ஜ.க.வின் தேர்தல் வியூகங்களை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார். அதில் முக்கியமானது பா.ஜ.க.வின் தமிழக கூட்டாளியான அ.தி.மு.க.வை பா.ஜ.க. அணியிலிருந்து பிரிப்பது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் இழந்துவிட்டது. பா.ஜ.க. கூட் டணியை விட்டு அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என்பதுதான் சுனிலின் அட்வைஸ்.
பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியது, அ.தி.மு.க.வினரின் ரியாக் ஷன் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சுனில் கொடுத்த அட்வைஸ்படி எடப் பாடி மகன் மிதுன் வகுத்த வியூகம்தான். அதற்கு நான் உடனடியாக எதிர்ப்பு தெரி வித்தேன். பொன்னையனுக்கு எதிராக நான் உறுதியாகப் பேசினேன். பொன்னையனுக்கு எதிராகப் பேசிய பா.ஜ.க.வின் வி.பி.துரைசாமியைக் கடுமையாக எதிர்த்து எடப்பாடி பேசினார். பா.ஜ.க. மேலிடம் இந்த விவகாரத் தில் கடுமையாக எச்சரிக்கை செய்த பிறகு எடப்பாடி, பொன்னையனின் பா.ஜ.க. எதிர்ப்புக் கருத்து அவரது சொந்தக் கருத்து எனச் சொன்னார்.
உட்கட்சித் தேர்தல், ராஜ்சத்யன் விவகாரம், பொன்னையன் பேச்சுக்கு எதிர்ப்பு ஆகியவற்றோடு டி.டி.வி.தினகரனை இரட்டை இûலை வழக்கிலிருந்து பா.ஜ.க. அரசு விடுவித்த தும் சேர்ந்துகொண்டது. மத்திய பா.ஜ.க. அரசு சசிகலாவுக்கும், எனது நண்பரான டி.டி.வி. தினகரனுக்கும் சாதகமாக நடந்துகொள்கிறது. இனிமேல் என்னை அ.தி.மு.க.வில் வைத்திருக் கக்கூடாது என எடப்பாடி முடிவு செய்துதான் ஒற்றைத் தலைமை விவகாரத்தை கையிலெடுத்தார். ஏற்கனவே சுனில் திட்டமிட்டபடி பொதுக்குழுவில் என்னை அவமானப்படுத்தி, தொண்டர்கள் ஆதரவு எனக்கு இல்லை என்று தமிழகம் முழுக்க தொலைக்காட்சியில் லைவ்வாக காட்ட ஏற்பாடு செய்தார்.
பொதுவாக, கட்சி யின் பொதுக்குழுவை லைவ்வாக டி.வி.க்களில் காட்டமாட்டார்கள். எடப்பாடி நடத்திய பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப் பினர்களே அல்லாத எடப்பாடி ஏற்பாடு செய்த ரௌடிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் எடப் பாடியைப் புகழ்ந்து ஆரவாரமிட்டு ஓவென கத்திக் கூச்சலிடுவதை லைவ்வாக இதுவரை அ.தி.மு.க. வில் நடந்த எந்தப் பொதுக்குழு விலும் இல்லாத இந்த ஏற் பாட்டை எடப்பாடி செய்தார். இதைத் தெரிந்து கொண்ட நான், நேரடியாக பொதுக்குழு வுக்குச் சென்றேன். என்னை மிகவும் கேவலமாக நடத்தினார் எடப்பாடி. அ.தி.மு.க.வில் பா.ஜ.க. ஆதரவு நிலை எடுத்தால் இனி என்ன நடக்கும் என்பதற்கு சாட்சியாகவே என்னை அசிங்கப் படுத்தினார்கள்'' என பன்னீர், தன்னைச் சந்தித்த பிரதமருக்கு நெருக்கமானஅதிகாரியிடம் எடுத்துச் சொன்னார்.
அத்துடன் "காங்கிரஸ் கட்சிக்கு, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்றது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் சுனில் மூலம் அ.தி.மு.க.வை பா.ஜ.க. கூட்டணியிலிருந்து கழற்றி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸில் ஒரு தரப்பு முயற்சி செய்தது. அதற்கான பேச்சுவார்த்தை களில் எடப்பாடி மகன் மிதுன் பங்கெடுத்து வருகிறார். அதனால்தான் ஒற்றைத் தலைமை என்கிற கோஷத்துடன் பா.ஜ.க. விசுவாசியான என்னை வெளியேற்றப் பார்க்கிறார் எடப்பாடி'' என பன்னீர் எடுத்துச் சொல்ல...
பன்னீர் சொல்வது உண்மையா? என பா.ஜ.க. வட்டாரங்களில் க்ராஸ்செக் செய்யும் வேலைகள் தொடங்கின. அதற்காக கோவை வந்த பியூஷ்கோயல், முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்தார். வேலுமணி, எடப்பாடியின் மகன் மிதுன், கட்சி விவகாரங்களில் சுனிலுடன் சேர்ந்து தலையிடுவதை உறுதி செய்தார். அதன்பின் டெல்லியின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. பொதுக்குழுவில் பன்னீர் அவமானப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்றை அவர் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். ஐந்து நிமிட வீடியோவை பிரதமர் பார்த்தார்.
டெல்லியிலிருந்து உத்தரவுகள் பாய்ந்து வந்தன. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தபோது சி.வி.சண்முகம் தனது ஆள் மூலம் ஓ.பி.எஸ். படத்தைக் கிழிக்க ஏற்பாடு செய்தார். முன்பு சசிகலா, தினகரன் படம் இதுபோல கிழிக்கப்பட்டது. அது பா.ஜ.க. சொல்லி நடந்த செயல். இம்முறை பன்னீரின் படம் கிழிக்கப் பட்டதை பா.ஜ.க. விரும்பவில்லை. கூட் டத்தின்போதே பன்னீர், இந்த அவமானத்தை டெல்லிக்கு கொண்டுசென்றார். அங்கிருந்து கட்டளைகள் பாய்ந்து எடப்பாடிக்கு வந்தது. கூட்டத்தில் இதைப்பற்றி எடப்பாடி பேச வில்லையென்றாலும், பன்னீரின் படம் தலைமைக் கழகத்தில் கிழிக்கப்பட்டதை எதிர்த்துப் பேசுமாறு கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரும் ஆதிராஜாராமும் அது தவறுதலாக நடந்த செயல் என வருத்தம் தெரிவித்ததோடு, தலைமைக் கழகம் சார்பில் பன்னீரின் படம் அடங்கிய பேனர், கிழிக்கப்பட்ட பேனருக்குப் பதிலாக வைக்கப்பட்டது.
அத்துடன் அந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். வகித்த பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தலைமை நிலையச் செயலாள ராக ஜெயக்குமார் ஆகிய நியமனங்கள், ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு, "ஏன் உங்களை கட்சியில் இருந்து நீக்கக்கூடாது' என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
"டெல்லியிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் அவை பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பது தள்ளிப் போடப் பட்டது' என்கிறார்கள் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த வர்கள். டெல்லியில் எடப்பாடியை எக்ஸ்போஸ் செய்து பன்னீர் செய்த முயற்சிக்கு சசிகலா தரப்பு ஆதரவு தெரிவித்தது. தங்களது தொடர்புகள் மூலம் பன்னீரின் முயற்சிகள் எந்த அளவு வெற்றிபெறுகிறதென பார்த்து உறுதி செய்தது.
தன் மனைவிக்கு கொரோனா வந்ததால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட எடப்பாடி, தேர்தல் கமிஷனிலும் சுப்ரீம்கோர்ட்டிலும் பன்னீர் எடுத்த முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
டெல்லி பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, எடப்பாடியை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் எடப்பாடி கொடும்பாவி எரிப்பில் பன்னீர் ஆதரவாளர்கள் இறங்க... எடப்பாடி தரப்பினர், பன்னீர் துரோகி என லாவணி பாடிவர... சசிகலா தொண்டர்கள் சந்திப்பில் மும்முரமாக இறங்க... அ.தி.மு.க. களைகட்டி வருகிறது.