பா.ஜ.க.வின் மாநில பொரு ளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபல அன்னை பாத்திமா கல்லூரி நிறுவனர். இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியின் தந்தை, தன் மகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ss

அந்தப் புகாரில், தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து ஆபாசமான உரை யாடல்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளைக் கேட்டபோது, பா.ஜ.க. பிரமுகர் தனியார் சொகுசு விடுதிகளுக்கு அவளை அழைத்துச்சென்று தனியாக இருந்து வந்துள்ளதும், அதற்கு அவளது தாயும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் ஸ்கூட்டர் வாங்கித்தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். வேறு மாநிலங் களுக்கும் அழைத்துச்சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கி பாலியல் பலாத்காரம் செய்து அதற்குப் பதிலாக புதிய ஆடைகள், பல்வேறு பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சிறப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து பா.ஜ.க.வின் மாநில பொறுப்பாளர் எம்.எஸ். ஷாவை கைதுசெய்ய தேடிவருகின்றனர். ஒரு சோர்ஸ் மூலம் ஷாவைத் தொடர்புகொண்டபோது வாட்ஸப் காலில் வந்த அவர், "வேண்டுமென்றே எதிர்க்கட்சியினரும், பா.ஜ.க.வினரும் அந்த மாணவியின் தந்தையைத் தூண்டிவிட்டு என்மேல் வீண்பழி போடுகிறார்கள்' எனக்கூறி போனை கட் செய்துவிட்டார்.

இதுகுறித்து அந்தக் கல்லூரியில் வேலை செய்தவரிடம் மெதுவாக விசாரித்தோம். “"சார், பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட் டான். அடிப்படை யில் கேர ளாவை பூர் வீகமாக கொண்டவர். ராஜன்செல்லப் பா மேயராக இருந்தபோது அ.தி.மு.க.வில் கவுன் சிலராகி, பின்பு பா.ஜ. க.வின் இராம.சீனி வாசனின் ஆதரவாள ராகி பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவு தலைவராக இருந்தவர். சிறுபான்மை கல்வி வளர்ச்சிப் பிரிவில் முக்கிய நபராக இருந்து, தன் கல்லூரியையும் பொருளாதாரத்தையும் வளர்த்தவர்.

பணமும் அதிகாரமும் வந்தவுடன் இதுபோன்ற சேட்டைகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்த கல் லூரியில் இவருகென்று தனியான ஹெஸ்ட்ஹவுஸ் உள்ளது. ஏற்கனவே பலமுறை பாலியல்ரீதியான பிரச்சனை இந்த கல்லூரியில் நடந்து, பெற்றோர்கள் போலீஸ் புகார்வரை செய்துள்ளனர். எல்லாவற்றை யும் பணத்தால், அரசியல் செல்வாக்கால் மறைத்துவிடு வார். சிறுமியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்து ஒரு மாதம் ஒன்றும் செய்யாததால், நீதிமன்றத்தை நாட வேறுவழியில்லாமல் வழக்கு பதிந்துள்ளார்கள் போலீசார்''’என்றார். இந்தப் விவகாரம் தனது வெற்றியைப் பாதிக்குமோ என மதுரை வேட்பாளர் இராம. சீனிவாசன் கவலையடைந்துள்ளார்.