துரை மத்திய சிறை உற்பத்திப் பிரிவில் மெகா ஊழல் நடந்துள்ள தாகவும், உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டதாக வும், விரிவான புகார் ஒன் றை நம்மிடம் அளித்தார் ஓய்வுபெற்ற முதல் தலைமைக் காவலர் சேகர்.

madurai-jail

அதில், "அரசு அலுவலகங்களுக்குத் தேவையான கோப்பு அட்டைகள், தபால் கவர்கள், புக்-பைண்டிங், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான பேண்டேஜ் துணி மற்றும் இதர சிறை செய்பொருட்கள் போன்றவற்றை ஒவ்வொரு மத்திய சிறையும் தயார் செய்து இலவசமாக வழங்கு கிறது. இதற்கான நிதியை ஒவ்வொரு மத்திய சிறை யின் உற்பத்தித் திறனுக்கேற்ப ஒதுக்கவேண்டும். இதற்காக 2019-2022 காலகட்டத்தில் மதுரை மத்திய சிறைக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.17 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரத்து 600 ஆகும். இதில் கொடுமை என்னவென்றால், ஒதுக்கப்பட்ட நிதியின் அளவுக்கு மதுரை மத்திய சிறையில் உற்பத்தித் திறன் கிடையாது. சிறைத்துறையின் தலைமையிடத்து மேலதிகாரியிலிருந்து மதுரை மத்திய சிறையின் உயரதிகாரிகள் வரை ஆதாயம் அடைந்திருக்கின்றனர். ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவீதம்கூட உற்பத்தி செய்யவில்லை. 60 சதவீதத் தொகைக்கு ஊழல் நடந்துள்ளது.

அப்போதைய டி.ஜி.பி. சுனில்குமார்சிங் மத்திய சிறைக்கு அனுப்பிய சிறப்பு தணிக்கைக்குழு வும், மத்திய அரசின் தணிக்கைக்குழுவும் (ஈஆஏ) நடந்த ஊழலை உறுதி செய்தது. மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கீழ்நிலைப் பணியாளர்கள் 8 பேர் மீது குற்றம் சுமத்தி இடமாற்றம் செய்தனர். புதிதாக ஆவ ணங்கள் தயார் செய்யப்பட்டும், பல ஆவணங்கள் மாற்றம் செய்யப்பட்டும் உயரதிகாரிகள் தப்பிப்பதற்கான முயற்சி நடக்கிறது.

Advertisment

ஓய்வுபெறும் நிலையிலிருந்த மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆவணங்களை மாற்றுவதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வசந்தகண்ணனை மதுரை மத்திய சிறை பொறுப்பு கண்காணிப்பாள ராக்கி, ஆவணங்களைப் புதிதாக உருவாக்கியுள்ள னர். இந்த ஊழல் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தாலும், தற்போதைய ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர்.

dd

இன்னொரு விவகாரம், 22-4-2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் நடந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முத்து மனோ படுகொலை. இக்கொலையில் முக்கிய குற்றவாளியான ஜேக்கப் என்ற பிளாக் ஜாகுவார், 8-2-2022 அன்று சிறை கைபேசி மூலம் தனது நண்பருடன் பேசியபோது, ‘கண்ணபிரானோ அல்லது அவனது கோஷ்டியைச் சேர்ந்த யார் பாளையங்கோட்டை சிறைக்கு வந்தாலும், சிறையில் வைத்தே கொன்றுவிடுவேன்’ என்று கூறியதைப் பதிவு செய்த சிறை உளவுப்பிரிவினர் விஜயராகவனும் ஹரிகரனும் 6-3-2022 அன்று டி.ஜி.பி. அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சிறை அலுவலர், கண்காணிப்பாளர், மதுரை சரக டி.ஐ.ஜி. மற்றும் சிறைத்துறை தலைவர் ஆகியோர்தான் சிறைவாசியான முத்து மனோவை சிறை மாற்றம் செய்வதற்கும், தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலேயே, ஜேக்கப் ஏற்கனவே சொல்லியபடி முத்து மனோவைக் கொலை செய்துவிட்டார். இக்கொலை நடப்பதற்கு முக்கிய காரணமானவர்களாக இருந்தவர்களில் ஒருவர், அப்போது சிறை அலுவலராகப் பணியில் இருந்த பரசுராமன். குற்றவாளியான இவர் காப்பாற்றப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரை சரக டி.ஐ.ஜி. பழனியும் இக்கொலைக்கு முக்கிய பொறுப்பாளர். ஆனால், இவரை விசாரணை அலுவலராக நியமனம் செய்துவிட்டனர். குற்றவாளியே நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லும் ஒரே துறை சிறைத்துறையாகும். டி.ஐ.ஜி. பழனி அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அப்போது டி.ஜி.பி.யாக இருந்த சுனில்குமார் சிங் குறிப்பாணை கொடுத்தார். சிறைத்துறை தலைவரான டி.ஜி.பி. சுனில்குமார் சிங், சிறைவாசி முத்துமனோவை இடமாற்றம் செய்யாததே, இக்கொலை நடப்பதற்கு மூலகாரணமாகும்'’என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

மதுரை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் பழனியைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், அத்துறை வட்டாரத்திலிருந்து சில விளக்கங்களைப் பெறமுடிந்தது.

ss

"மதுரை மத்திய சிறைக்கு உற்பத்தித் திறன் இருந்ததால்தான், அதன் தகுதிக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டது. தகுதியில்லாத சிறைக்கு எவ்வாறு நிதி ஒதுக்கமுடியும்? 2019-2022 காலகட்டத்தில் ஒதுக்கப் பட்ட நிதியில் 40 சதவீதம் பொருட்கள்கூட உற்பத்தி செய்யாமல் மீதி 60 சதவீதத்துக்கு ஊழல் நடந்துள்ளது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். சிறை அலுவலராகவும் கூடுதல் கண்காணிப் பாளராகவும் தமிழ்ச்செல்வன் இருந்த அந்த காலகட்டத்தில்தான் மதுரை மத்திய சிறையில் அதிக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான், மதுரை மத்திய சிறையில் உள்ள தொழில்நுட்பக் கூடம் குறித்து இரண்டு வெவ்வேறு துறையைச் சார்ந்த தணிக்கை ஆய்வுகள் நடந்து முடிந்தது. தமிழ்ச்செல்வன் கண்காணிப்பாளராக இருந்தபோதே அனைத்து ஆவணங்களின் நகல்களும் இரண்டு தணிக்கைக் குழுக்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. அதன்பிறகு வந்த வசந்த கண்ணனை வைத்து எப்படி ஆவணங்களில் மாற்றம் செய்யமுடியும்? இது புனையப்பட்ட கட்டுக்கதையாகும்.

மத்திய சிறையில் உள்ள உளவுப்பிரிவானது சிறைத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். டி.ஐ.ஜி.க்கு அறிக்கை தரவேண்டிய பணி உளவுப் பிரிவுக்குக் கிடையாது. பாளையங்கோட்டை சிறைவாசி முத்து மனோ தொடர்பான எந்தவிதமான உளவுப்பிரிவுத் தகவல்களும் மதுரை டி.ஐ.ஜி.க்கு அனுப்பப்படவில்லை. சிறை கண்காணிப்பாளர் தான் சிறைக்குள் வரும் சிறைவாசிக்கு முழுமுதல் பொறுப் பாகும். பாளையங்கோட்டை மத்திய சிறையில் கண்காணிப் பாளரே, கிளைச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறைகளுக்குக் கட்டுப்பாட்டு அலுவலராகச் செயல்பட்டு வருகிறார். கிளைச் சிறையிலிருந்து முத்து மனோ மாற்றப்படுவதற்கு முன் கிளைச்சிறை கண்காணிப்பாளர், கட்டுப்பாட்டு அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற்றுதான் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் மதுரை சரக டி.ஐ.ஜி. பழனியை, முத்துமனோ கொலைக்கு முக்கிய பொறுப்பாளர் என்று கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்''” என்கிறார்கள்.

மேலும் அத்தரப்பினர், "அரசு ஆவணங்களை முன் தேதியிட்டு திருத்துவது இயலாத காரியம் என்பது அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அரசாங்கத்துக்கு முறையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. சிறைப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் உள் நோக்கத்தோடும் சாதிய வன்மத்தோடும் செயல்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் உயர் பதவிக்கு வந்ததை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில தவறான நட வடிக்கைகளில் ஈடுபட்ட காவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருக் கிறார்கள். பணியில் இருக்கும்போதே சிறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தூண்டிவிட்டு தற்போதைய அரசாங்கத்துக்கும் களங்கம் கற்பிக்கிறார்கள்''’என்றனர்.

ss

முதலில், மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தள்ளுபடியானது. அதேநேரத்தில், சிறைத்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து மதுரை மத்திய சிறைக்கு சிறப்புத் தணிக்கைக்குழு அனுப்பப்பட்டது. சிறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், ஜெயிலர், காகித மேற்பார்வையாளர், பதிவு எழுத்தர், அலுவலக கண்காணிப்பாளர், அலுவலக மேலாளர், உதவியாளர் (ஸ்டோர்-கீப்பர்), பேக்கர் கிளார்க் ஆகிய 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை மத்திய சிறையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த ஜெயிலர் இளங்கோ கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ஓய்வுபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை பாயவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.