தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் சதீஷ் (31). தி.மு.க. பிரமுக ரான இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி எனும் எஸ்தர் பெண் தாதா டாஸ்மாக்கி-ருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ளச் சந்தையில் விற்பனைசெய்து வந்துள்ளார். கூடுதலாக கஞ்சாவும் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டா-ன் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், சதீஷின் வீட்டின் அருகேயுள்ள லோகேஸ்வரியிடம் சரக்கு மற்றும் கஞ்சா வாங்க வெளியாட்கள் அதிகமாக வந்துசெல்வதும் சில சமயம் போதையில் சிலர் ரகளையில் ஈடுபடுவதும் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, தொடர்ந்து எஸ்தரிடம் "இந்தப் பகுதியில் சரக்கு விற்கவேண்டாம்' என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் லோகேஸ்வரியின் வருமானம் பாதித்துள்ளது. சமீபத்தில் சோமங்கலம் காவல்நிலைய போலீசார் முன் இருவரும் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். சதீஷ், இந்த சமரசப் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
தவிரவும், இப்பகுதியில் மது, கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில், தனது வீட்டுப் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சதீஷ் முயன்றுள்ளார். இதுகுறித்து அவரது வீட்டருகே உள்ள பெண்ணுக்கும், சதீஷுக்கும் தகராறு இருந்துள்ளது. சி.சி.டி.வி. கேமரா வைப்பதை விரும்பாத அந்தப் பெண், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்தான் தனது போதைப் பொருள் வியா பாரத்துக்கு இடைஞ்சலாக வந்த சதீஷை எஸ்தர் தீர்த்துக்கட்ட முடிவுசெய்து, இந்த விவ காரத்தை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், என நைச்சிய மாகப் பேசி செப்டம்பர் 19-ஆம் தேதி, சதீஷை வீட்டிற்கு அழைத்துள்ளார். சதீஷ் சமரசத்துக்கு வராத பட்சத்தில் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு, முன்கூட்டியே கூ-ப்படையைச் சேர்ந்த நான்கு பேரையும் வரவழைத்து தன் வீட்டில் மறைந்திருக்கச் சொல்-யுள்ளார். எதிர்பார்த்தது போலவே சதீஷ், லோகேஸ்வரியின் திட்டத்துக்கு உடன்படாமல் போகவே, சரமாரியாக தலையில் வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்துவந்த சோமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலைசெய்த லோகேஸ்வரி, ஏற்கனவே தனது கணவரைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்றுவந்தவர் என்பதும், விபச்சாரத் தொழில் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. கொலை செய்வதற்கு முன் தனது மொபைல் போனில் பட்டாக்கத்தியுடன் டிக் டாக் வீடியோவில், "நான் கத்திய வைப்பேன் கழுத்துல தவுலத்தா. என் கதைக்கு வந்த உன் கதை அவ்வளவுதான்''’என்று மிரட்டல் விடுத்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த ஸ்டேட்டஸ் வைத்த சற்றுநேரத்தில் சதீஷ் கொலை அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்டாக்கில் போஸ் கொடுத்த அதே கத்தியால்தான் சதீஷை கொடூரமாகக் கொலைசெய்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தேடல் வேட்டையை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், யோகேஸ்வரி என்கின்ற எஸ்தரும், இந்தக் கொலையில் ஈடுபட்ட மேலும் நான்கு பேரும் கடந்த 20-ஆம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்டர் ஆகியுள்ளனர்.
போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்றார்கள் என போலீசாருக்குத் தகவல் கொடுத்தால், போலீசாரே சம்பந்தப்பட்டவரிடம் யார் புகார் கொடுத்தார்கள் என்பதைத் தெரிவிப்பதால்தான் இந்த விபரீத கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதேபோல சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாரிடம் தகவல் கூறினார் மோசஸ் என்ற பத்திரிகையாளர். ஆனால் பின்னாலேயே, கஞ்சா விற்கும் நபர்களுக்கு போலீசார் தகவல் கூறியதால் மூன்று வருடங்களுக்கு முன்பு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது அதேபாணியில் சதீஷ் கொலையும் நடந்துள்ளது.
லோகேஸ்வரி மது விற்பதைக் குறித்து தகவலளித்தபோதே, அவரை கைது செய்து சிறையிலடைத்திருந்தால் சதீஷுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்குமா? போலீஸ் மக்களின் நண்பனா?… சமூகவிரோதக் கும்ப-ன் நண்பனா? என அப்பகுதி மக்களும் சதீஷின் உறவினர்களும் கேள்விகேட்கும் நிலைதான் நிலவுகிறது.