o

உயிரோட விடக்கூடாது!

ஜெ. வெறித்தன உத்தரவு!

பாதி பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் வெளியே போறதுக்குள்ள மறுபடியும் பொறுக்கிங்க அடிக்க ஆரம்பிக்க... மிச்ச பேர் உயிர் பயத்துல பெரிய பெரிய மாடி ஏறிக் குதிச்சு ஓடுனது இன்னைக்கும் கண்ணுக்குள்ளயே நிக்குது. (பார்க்க: அடுத்த பக்க படங்கள்) ஏறிக் குதிச்சதுல நிறைய பேருக்கு அடிபட்டுருச்சுன்னு நம்ம போட்டோகிராபர்ஸ் ஸ்டாலினும், எஸ்.பி.சுந்தரும், அசோக்கும் சொல்லி வருத்தப்பட்டாங்க. "அரச பயங்கரவாதம் நாசமா போக'ன்னு மனசுக்குள்ள சபிச்சுக்கிட்டேன்.

Advertisment

இப்ப ஷாட்டை கட் பண்ணி எம்.எல்.ஏ. கலைராஜன்ட்ட வருவோம்...

அவருடைய உதவியாளரிடம், நம்ம நிருபர் அரவிந்த் போன்ல பேசியதும், அவருக்கு மலரும் நினைவு வந்துடுச்சு. அதாவது, நம்ம அலுவலகம் தாக்கப்பட்ட நேரத்துல எம்.எல்.ஏ. கலைராஜனுக்கு, ஜெயலலிதா கொடுத்த அசைன் மெண்ட் அவருக்கு ஞாபகத்துக்கு வந்துடுச்சு. அவர் அதுபத்தி சொன்னதக் கேட்டு நான் மிரண்டே போயிட்டேன். அவருக்கு மலரும் நினைவு... நமக்கு மகா டேஞ்சரஸ் நினைவு.

Advertisment

நான் கேட்டு மிரண்டுபோன ஆடியோவ நீங்க கேக்கணும்ல...

அரவிந்த் : செம கடுப்பாயிதான் சொல்லியிருக்காங்க.

எம்.எல்.ஏ. உதவியாளர் : மாட்டுக்கார மாமி இஷ்யூ... கலைராஜன், என்னென்னு தெரியாது கலைராஜன்... தரைமட்டமாக இருக்கணும் ஆபீஸு.

அரவிந்த் : அப்படியே சொன்னாங்க ளாண்ணே ஜெயலலிதா...

... உதவியாளர் : அப்படியே சொன்னுச்சு... அப்படியே சொன்னுச்சு...

அரவிந்த் : வளர்மதியால தப்பிச்சுது நக்கீரன்...

... உதவியாளர் : ஆ... ஆ... ஆ...

oo

அரவிந்த் : வளர்மதியால தப்பிச்சுது...

... உதவியாளர் : அதுபோயி இரண்டு கல்லடிச்சி மாட்டிக்கிச்சி...

அரவிந்த் : அத... திரும்ப போகச் சொன்னா போயிட்ருப்பாங்களே... சி.எம். ண்ய்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ண்ர்ய் கொடுத்தா போலீஸ் போயிடுவாங்களே...

... உதவியாளர் : அது கல்லடிக்கும்போது போலீஸ் வந்துட்டாங்க.

அரவிந்த் : ஆமா...

... உதவியாளர் : போலீஸ் எதிரிலேயே நம்ம கவர்மெண்ட் பண்ணக்கூடாதுல்ல...

அரவிந்த் : ம்... ம்... ம்...

... உதவியாளர் : சொல்றது புரியுதா...

அரவிந்த் : ஓ.கே... ஓ.கே...

... உதவியாளர் : கவர்மெண்ட்டுக்கு கெட்ட பெயராகிடுமுல்ல...

அரவிந்த் : ஓ.கே... ஓ.கே... ஓ.கே...

... உதவியாளர் : வர்றத்துக்கு முன்னேயே அடிக்கணும்... அதுக்கப்புறம் போலீஸ் வந்ததுன்னா வேற விஷயம்.

அரவிந்த் : ம்... ம்... ம்...

... உதவியாளர் : போலீஸ வச்சிக்கின்னே அடிச்சா என்னாகும்...

அரவிந்த் : ஓ.கே... ஓ.கே...

... உதவியாளர் : இவுங்கதான் சொன்னாங்கன்னு வந்திருமுல்ல...

அரவிந்த் : ஓ.கே... ஆ... ஆ...

... உதவியாளர் : நாங்க வந்து அறிக்கை எப்படி கொடுப்போம்... அதுமாதிரி விஷயத்துல ஈடுபட்டோர் மீது, சமூக விரோதிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்... அப்படி, இப்படின்னு அறிக்கை வெளியிட்டிருப்போம். என்னது...

அரவிந்த் : அய்யய்யோ...

... உதவியாளர் : என்னது...

அரவிந்த் : நான் உள்ளதான் இருந்தேன். வெளியே கரெக்டா அடிச்சிருந்தா என் மேலதான் விழுந்திருக்கும் பாமெல்லாம்...

... உதவியாளர் : ஆமா...

அரவிந்த் : அந்த கேட்டாண்டயே இருந்தோம், நாங்களெல்லாம்...

... உதவியாளர் : எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க... எல்லாம் நாலு கொலை, மூணு கொலை பண்ணுனவங்க... பெரிய டீமு. எல்லாம் டீம் ஒர்க்கெல்லாம் செட் பண்ணி, அப்ப காக்காதோப்பு பாலாஜி வந்திருந்தான், இவன் வந்திருந்தான், அப்புறம் ஜெர்மன் வந்திருந்தது, இவர் வந்திருந்தாரு, எல்லாத்தியுமே செட் பண்ணிருந்தோம்...

pp

அரவிந்த் : அய்யய்யோ... ஜஸ்ட் மிஸ் போல பாவம்...

... உதவியாளர் : ஆமா...

அரவிந்த் : அம்மாடி... வெறி அண்ணா அந்த பொம்பளைக்கு நக்கீரன் மேல...

... உதவியாளர் : ஆமா... ஆமா...

அரவிந்த் : அப்பா...

... உதவியாளர் : அது பயங்கரமானவ...

அரவிந்த் : அப்புறம் என்ன சொன்னாங்கண்ணே... திட்டுனாங்களா...

... உதவியாளர் : என்ன கலைராஜன் இப்படி பண்ணிட்டீங்கன்னு சொன் னாங்க. நான் பண்ணுலம்மா... எல்லாம் வளர்மதி பண்ணிட்டாங்கம்மா அப்படின்னு சொன்னார். அப்புறம் அந்த பொம்பளைய கூப்புடுன்னு சொல்லி ஏறு ஏறுன்னு ஏறுனாங்க.

அரவிந்த் : ம்... பர்ஸ்ட் அதான் எல்லாத்தையும் கூப்பிட்டு வந்து இது பண்ணுச்சி... ஆ... அப்ப ஜஸ்ட் மிஸ்ஸுதான்... அந்த இதுல... அந்த இன்ஸ்டெண்டுல...

... உதவியாளர் : அவ்வுளவு தான்... அவ்வளவுதான்...

அரவிந்த் : தரைமட்டமா ஆவுணுமுன்னு சொன்னுச்சோ ஆபீஸு...

... உதவியாளர் : ஆமா... ஆமா...

அரவிந்த் : அம்மாடி...

... உதவியாளர் : பயங்கர வெறியோட பேசுச்சி...

அரவிந்த் : ஆ... ஆ... நேரா பாத்தீங்க ளாண்ணே...

... உதவியாளர் : ஒன்பது மணிக்கு கூப்பிட்டாங்க. உள்ள கூப்புடுறாங்க, அம்மா கூப்புடுறாங்க வாங்கன்னு... வாடான்னு என்னேயும் கூப்பிட்டு போனாங்க. உள்ளே போனோம்... உள்ள போனவுடனேயே வெறி... அதுமாதிரி வெறியோட பேசுனத நான் பாத்ததேயில்ல...

அரவிந்த் : ஓ... ஓ...

... உதவியாளர் : என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ, எக்ஸ்ட்ரீமா நீங்க என்ன செய்யணுமுன்னு நினைக்கிறீங்களோ செய்யுங்க... அப்படியே சொல்லுச்சு...

அரவிந்த் : அப்பா...

... உதவியாளர் : என்ன பண்ணமுடியுமோ பண்ணுங்கன்னுச்சு. சரிம்மா... சரிம்மா... அடி நவுத்தலாம் விடுங்க...

அரவிந்த் : அப்படின்னா போலீஸ கண்ட்ரோல் பண்ணிருப்பாங்கல்ல... லேட்டா போங்க, போர்ஸ் வேண்டான்னுட்டு...

... உதவியாளர் : வேணா வேணா... அது என்னைக்கா இருந்தாலும் லீக் ஆயிடும் மெசேஜ். சொல்றது புரியுதா... கட்சிக்குள்ள எங்களுக்குள்ள சொல்ற விஷயம் வெளியே போகக்கூடாது.

அரவிந்த் : ஓ.கே... ஓ.கே...

... உதவியாளர் : சொல்றது புரியுதா...

அரவிந்த் : ஓ.கே... ஓ.கே... புரியுது...

... உதவியாளர் : இது அவுங்க செய்யறதா வெளியே தெரியக்கூடாது.

அரவிந்த் : ம்... ம்...

... உதவியாளர் : அப்படியெல்லாம் பண்ணு னோம். அந்தக் காலம் வேற அரசியல். இவுங்க (இ.பி.எஸ்.) ஏதோ ஃபிலிம் காமிச்சுக்கிட்டிருக் காங்க. எல்லா இடத்துலயும் மீடியா இருக்கு.

ஜெயலலிதாவின் அழைப்பு கிடைச்ச தும், கலைல 9 மணிக்கு நம்ம அண்ணன் கலைராஜன் போயஸ் கார்டனுக்குப் போறாரு. கூடவே, அவரின் மேற்படி உதவியாளரும் போறார். அப்ப வெறிபிடிச்ச மாதிரி ஜெய லலிதா கோபத்தில் இருந்தாராம். அப்ப கலைராஜனிடம் அவர்,’"என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. அவன்... நக்கீரன் கோபால் உயிரோடு இருக்கக் கூடாது. நக்கீரன் அலுவலகத்தையும் தரைமட்ட மாக்கிடணும். அதுக்கு யாரைக் கூப்பிட்டுக்கு வீங்களோ... எவரைக் கூப்பிட்டுக்குவீங்களோ தெரியாது... கோபால் இருக்கக் கூடாது''ன்னு வெறிகொண்டு கத்தியிருக்கிறார்.

இதெல்லாம் மேலே ஆடியோவுல நம்ம நிருபர்ட்ட அண்ணன் கலைராஜனோட உதவியாளர் பேசுனது. இதற்காக சென்னையில் இருக்கிற காக்காத்தோப்பு பாலாஜி, சி.டி.மணி, ஜெர்மன் ரவின்னு பெரிய பெரிய டேஞ்சரஸ் ஆளுங்கள வரச் சொல்லியிருக்காங்க. இவுங்க எல்லாம் யாருன்னு பின்னாடி சொல்றேன். அவங்க மூலம் வெடிகுண்டு வீசி எல்லாத்தையும் முடிச்சிடணும்னு திட்டம் போட்டுருக்காங்க.

அப்படியே ஒருகணம் பழைய ஜெய்சங்கர் படத்துல வர்ற மாதிரி ப்ளாஷ்பேக் பண்ணிப் பாருங்க.... நக்கீரனுக்கு அப்பவே பெரிய மாலையா போட்டிருப்பாய்ங்க...

(புழுதி பறக்கும்)