ஹிட்லர் + முசோலினி + இடிஅமீன் = ஜெ.
பி.ஜே.பி., ஆர்.எஸ். எஸ்.ல உள்ளவங்க சேர்ந்து "டுவிட்டர் ஸ்பேஸ்'ல ஒரு குரூப் ஆரம்பிச்சிருக் காய்ங்க. அதுல ஒரு பரதேசி போதையில பேசியிருக்கான். "லெட் யு டெல் ஒன் திங்' அப்படின்னு அவன் ஆரம்பிக்கிறான்.
இந்த மாதிரி விஷயத்தயெல்லாம் நாம கண்டுக்கமாட்டோம். இந்த நாய் குரைக்கிறதையெல்லாம் நாம காதுலயே போட்டுக்கிறதில்ல. ஆனா அவிய்ங்க உள்ளுக்குள்ள எவ்வளவு வெறியா வன்மமா இருந்திருந்தாங்கங் கிறதுக்கு இது ஒரு சாம்பிள். இதுக்குப் பேருதான் இனவெறி.
வீடியோவுல அந்த படவா ராஸ்கல் சொல் றான்... "நம்ம பெரியவாள அரெஸ்ட் பண்ணுனப் போ அந்த டைம்ல நக்கீரனோட ரெண்டு கையை யும் வெட்டிப்போடணும்'னு எல்லா ஆர்.எஸ். எஸ்.காரங்களும் சேர்ந்து முடிவெடுத்தாங்களாம்.
ஆமா, இவிய்ங்க வந்து நம்ம கைய வெட்டு வாய்ங்க, நாம விரல் சூப்பிக்கிட்டு நிப்போம். இல்ல நம்ம கை ரெண்டும் புளியங்கா பறிச்சிட்டிருக்கும்... மூதேவி, நல்லாத்தான் வாயில வரப்போகுது.
அதுக்கப்புறமா அவன் பேசுறான்... அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு நம்ம பெரியம்மா தான்... (யாரு, இவங்க ஆத்தா ளுக்கு கூடப்பொறந்த நொம்மா) நம்ம ஜெ. அம்மாதான் சொன்னாங் கன்னு சொல்றான்.
இங்க நமக்கு இடிக்கிற ஒரு விஷயம் என்ன தெரியுமா? அதாவது, நக்கீரன் புலனாய்வு செய்து சங்கரராமன் கொலை யில, மகா பெரியவர் சந்திர சேகர சுவாமிகளோட ஒரே குளத்துல சேர்ந்து குளிக்கிற அளவுக்கு நெருக்கமா பழகுன நம்பிக்கைக்குரிய சிஷ்யரா இருந்த ஒருத்தரு, (பார்க்க: படம்) மகா பெரியவர் மிகுந்த அன்பு வச்சிருந்தவர், ஒரே குலத் தைச் சேர்ந்தவர், அந்த சங்கரராமனை 3-9-2004 அன்னைக்கி துள்ளத் துடிக்க கோயில்லயே பலபேர் முன்னாடி வெட்டி சாய்க்கிறானுங்க. அதுக்குப் பின்னணியில ஜெயேந்திரர் இருக்காரு அப்படிங் கிறத சொல்றோம்.
அவர நாம இட்டுக்கட்டியெல்லாம் இந்த கொலை வழக்குல நுழைக்கல. இவ்வளவு பெரிய ஆள கொலை வழக்குல இணைச்சு யாராவது எழுத முடியுமா? அதுக்கான ஆதாரம் கெடைச்சது. அவரு பாஷையில சொன்னா... அவா வாயாலேயே அவா ஒத்துண்டுட்டா. அது நம்மள்ட்ட ஆடியோ வா இருக்கு. அதுவே முக்கிய சாட்சியாச்சு. அப்ப மேப்படி செய்தியை புலனாய்வு செய்து வெளிக் கொண்டு வந்த தம்பி, தலைமை நிருபர் பிரகாஷ். இவரும் ஒரு சாட்சியம் கோர்ட்ல குடுத்திருந்தாரு. அப்போ பிரேம் குமார்ங்கிற ஒரு நேர்மையான எஸ்.பி. இருந்தாரு. அவருதான் இந்த வழக்கை கையாண் டது. அவரு நக்கீர னுடைய புலனாய்வ அப்படியே நூல்புடிச்சு, (புரிஞ்சவங்க புரிஞ்சுக் கங்க) அத ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு போறாரு. நான் ஏற்கனவே சொன்னேன் பாருங்க.... நக்கீரன் எது பண்ணுனா லும் ஜெயலலிதா காலுல போட்டு மிதிக்கும்னு. ஆனா இத மட்டும் கையில எடுத்து ஜெயேந்திரர அரெஸ்ட் பண்ணுச்சு.
இப்போ இங்க மேப்படி படவா என்ன சொல்றான்... "நம்ம பெரியம்மாதான் சொன்னாங் களாம்... நக்கீரன் கைய வெட்ட வேணாம்'னு. நாங்க புலனாய்வு செய்து செய்தியாக்குனது மட்டும்தான். அவர கைது பண்ணுனது யாரு? வெளிநாட்டுல இருந்து வந்தா கைது பண்ணுனாங்க? லண்டன்லயோ, ஸ்காட்லாந்துலயோ இருந்து வந்தா கைது பண்ணுனாங்க? பண்ணுனது தமிழ்நாடு போலீஸ். தமிழ்நாடு போலீஸ் யாரு சொல்லி பண்ணும்? ஜெயலலிதா சொல்லிதான் பண்ணும். அதுவும், இந்துக்களுடைய நம்பிக்கை யான பண்டிகையான தீபாவளிய கொண்டாடு றாங்கள்ல... முதல்நாள் 11-11-2004 அன்னிக்கு நைட்டு, 10:00 மணிக்கு ஜெயேந்திரர கதறவிட்டு கைது பண்ணுறாங்க. கைது அன்னிக்கு காலைல ஜெயா டி.வி.யில அப்ப புதுசா சேர்ந்த வீடியோ கேமராமேன கூப்பிட்டு "நீ ஏர்போர்ட் போ''ன்னு அவசரமா அனுப்புறாங்க. ஜெயேந்திரர அங்க கைது பண்ண ரெடியா இருந்த போலீஸ் டீமோட இந்த கேமராமேனும் ஏர்போர்ட்ல தயார் நிலையில் இருந்த ஸ்பெஷல் ஹெலிகாப்டர்ல ஹைதராபாத் போறாங்க. அங்க நடந்த கைதை அப்படியே படம் புடிக்கிறார் அந்த கேமராமேன். அதுவும் ஜெயேந்திரர கைது பண்ணும்போது அவர் கதறிய கதறல்... அப்படியே ரெகார்ட் பண்ணி நேர போயஸ் கார்டனுக்குத்தான் முதல்ல போகுது. அத ஜெயலலிதா பார்த்த பிறகு, ஜெயா டி.வி.யில் எக்ஸ்க்ளூஸிவ்வா ஒளிபரப்புனாங்க. அதுக்கப்புறம் தான் மத்த டி.வி., மீடி யாக்களுக்கு கொடுத்தாங்க.
இப்ப... அரெஸ்ட் பண்ணு னது ஜெயலலிதா. இந்த வெங்காயம் என்ன சொல்லுது பாருங்க, அதாவது பெரியம்மா சொல்லிச்சாம்... நக்கீரனுடைய கைய வெட்ட வேணாம்னு. அந்தம்மாதான கைது பண்ணச் சொல்லிச்சு. அந்தம்மாதான ஜெயில்ல போட்டுச்சு. அந்தம்மா கைக்கு சந்தனம் பூசுவாய்ங் களாம்... நம்ம கையை வெட்டுவாய்ங்களாம்...?
இத்தனைக்கும் பார்த்தீங்கன்னா சங்கர மடத்துக்கு முக்கிய பதவியில இருக்குற நெறைய பேர் போயிருக்காங்க. அவாளா இல்லா தவங்களுக்கு ஒரு மரியாதை... அவாளுக்கு ஒரு மரியாதை. குறிப்பா ஜெயலலிதாவுக்கு மேப்படி ஜெயேந்திரர் பெரிய மரியாதை கொடுப்பார். ஜெயலலிதாவுக்கு உயரமான சேர். அதற்கும் தாழ்வாதான் ஜெயேந்திரர் உட்காந்திருப்பார். (படத்தைப் பார்த்தீங்கன்னா தெரியும்) இவ்வளவு பவ்யமா அந்தம்மா முன்னாடி உட்கார்ந்த ஜெயேந்திரருக்கே இந்த கதி. இத்தனை மரியாதை குடுத்த ஜெயேந்திரரை கதறவிட்டு கைது பண்ணுன ஜெயலலிதா மேல இவங்களுக்கு கோபமே வராது.
அதனாலதான், பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க... "பிளட் இஸ் திக்கர் தென் வாட்டர்'. அதாவது அந்தம்மா பண்ணிச்சின்னா அது கொலையா இருந்தாலும், கடத்தலா இருந் தாலும், கைதா இருந்தாலும், ஊழலா இருந்தா லும் அவாளுக்கு அது கோமியம் சாப்பிடுறது மாதிரி. ஆனா நாம கஷ்டப்பட்டு புலனாய்வு செஞ்சு செய்தி போட்டா நம்ம கைய வெட்டு வாய்ங்களாம். நல்லா இருக்குடா உங்க நியாயம்.
கடைசில அந்த வென்று... "அன்னிக்கு மட்டும் கைய வெட்டிப் போட்டிருந்தா இன்னிக்கு இந்த அளவுக்கு அவங்க வளர்ந்திருக்கமாட் டாங்க'னு. ஆமா இவிய்ங்கதான் உரம்போட்டு நம்மள வளத்தாய்ங்க. எங்களுக்கு பேனா மட்டும்தான் புடிக்கத் தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க முட்டாப் பசங்க...
ஜெயேந்திரர கைது பண்ணுன ஜெயலலிதா யோக்கியமாம்... இந்தம்மா துணைப்பிரதமரா ஆகணும்னுதான சங்கராச்சாரியார கைது பண்ணுச்சு அது. நேஷனல் லெவல்ல பேசப்பட ணும்... இல்லன்னா ஏன் இந்த விஷயத்த கையில எடுக்கப்போகுது? தான் ஒரு இந்துவா இருந்தாலும், இந்து மதத்துல பெரிய ஆளா இருக்குற ஒருத்தர தைரியமா கைது பண்ணியிருக்குன்னு மற்ற மதத்துல உள்ளவங்களும் ஆ...ன்னு வாயப் பொளந்து ஓட்டுப் போடுவாங்கன்னு கூட்டிக் கழிச்சி பார்த்துதான் இத பண்ணியிருக்கு.
2004-ல நடந்தது அந்த சம்பவம். ஆனா இத்தன வருஷத்துக்குப் பிறகு... கிட்டத்தட்ட 17 வருஷத்துக்கு அப்புறமாவும் அவங்க பேசிக்கிறாய்ங் கன்னா... எவ்வளவு நெஞ்சழுத்தம்!
நம்ம சிவகாசி தலைமை நிருபர் தம்பி ராம்கி கை பேசியில பேசுனாரு. "போர்க்களம்' தொடர படிச்சிட்டு நம்ம தம்பிங்க எல்லாருமே என்கிட்ட போன்ல அடிக்கொருதரம் பேசுவாங்க. மேப்படி மாட்டுக்கறி செய்தியால தமிழ்நாடு பூரா நம்ம கூட இருக்கிறவங்க நிறைய பாதிக்கப்பட்டிருக்காங்க இல்லியா... அதனால அந்தந்த ஏரியாவுல என் னென்ன சம்பவங்கள் நடந்துச்சுங்கிறத நான் அவங் கள்ட்ட அப்பப்ப கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். போர்க்களத்துல போராடுனது நான் மட்டுமில்ல, நம்ம நக்கீரன் குடும்பமும்தான். இந்த போர்க் களத்துலயிருந்து எப்படி நாம ஜெயிச்சு வெளியே வந்தோம்ங்கிறததான் சொல்ல வர்றேன். நாம எப்படில்லாம் போராடுனோம், காயப்பட்டோம், கீழே விழுந்தோம், எந்திருச்சோம், துரோகிகளால எப்படி ஏமாந்தோம்... எல்லாத்தையும் முறியடிச்சு நின்னதுதான் இந்த பேனா வாழ்க்கை!
தம்பி ராம்கி என்கிட்ட சொன்னாரு... "அ.தி.மு.க.காரரு ஒருத்தரு போன் பண்ணுனா ருண்ணே. எங்கம்மாதான் (ஜெயலலிதா) இறந்துபோயிட்டாங்கள்ல. செத்த பாம்ப ஏன் திரும்பத் திரும்ப அடிக்கிறீங்க அப்படிங்கிற மாதிரி கேட்டாருண்ணே''னு என்கிட்ட சொல்றாரு.
நான் சொன்னேன்... "இல்ல தம்பி, அப்படியெல்லாம் விட்ற முடியாதுல்ல. உதாரணத் துக்கு சொல்லணும்னா, காந்தியும்தான் செத்துப் போயிட்டாரு, கோட்ஸேவும் செத்துப்போயிட் டாரு. காந்தியக்கூட மறந்திருக்கலாம் (ஒரு பேச்சுக்கு...) ஆனா அதவிட மறக்கவே கூடாத ஆளு யாருன்னா... கோட்ஸே! எப்படி... ஹிட்லர நாம மறந்துட்டோமா? இன்னிக்கு வரைக்கும் ஹிட்லர பத்தி பேசிக்கிட்டிருக்காங்கள்ல. முசோலினிய மறந்துட்டாங்களா? கொடுங்கோலன் இடிஅமீன மறந்துட்டாங்களா? இப்போ வரைக்கும் அவங்க பண்ணுன அநியாயங்கள மக்கள் பேசிக்கிட்டுத்தான இருக்காய்ங்க.
அதாவது... ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் இவங்க வழியில வந்தவங்கதான் நம்ம மேடம் ஜெயலலிதா. ஏன்னா... அந்தம்மா தன்ன ஒரு ஆளுமையா நிலைநிறுத்துறதுக்கு முன்னாடி அவங்கள்ட்ட பழி வாங்குற வெறித்தனம் இருந்தது. அதாவது, தன்னோட காலுக்கு கீழதான் எல்லாம் இருக்கணும். எத்தன பேரு அதோட பழி வெறிக்கு பலியாக்கியிருக்காங்க தெரியுமா? நமக்கு நடந்தத நான் சொல்றேன்... மத்தவங்க சொல்லல.
இப்போ ஏ.டி.எம்.கே. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரு, முன்னாள் முதல்வர் எடப்பாடி யெல்லாம் சொல்றாங்க, என்னன்னு... "அம்மாவின் ஆசியுடன், அம்மாவின் வழிகாட்டுதல்படி நாங்கள் நடக்கிறோம்'னு. அந்தம்மா ஒரு மொரட்டு ரோடு போட்டு வச்சிருக்கு. இவங்கள்லாம் கார்ல போறாய்ங்க. அப்போ இவங்க சொல்ற அளவுக்கு ஒரு பெரிய கட்சி தமிழ்நாட்டுல இருக்குல்ல. இவ்வ ளவு பெரிய கட்சிய தலைமையேத்து நடத்துன ஜெயலலிதா எப்படியெல்லாம் நம்மள பழிவாங் குச்சு. ஒரே ஒரு நக்கீரன் பத்திரிகைய நடத்தவிடாம எவ்வளவு தூரம் ஓட ஓட வெரட்டுச்சு. அதுலயிருந்து நாம பொழச்சு வந்து, முன்னாடி நடந்தத சொல்றதால அவங்களால ஏத்துக்க முடியல. நம்மளும் அன்னிக்கே மண்ணோடு மண்ணா போயிருந்தா, "வரலாற்றுல இப்படி ஒருத்தன் இருந்தான்... ஜெயலலிதா கால்ல போட்டு மிதிச்சி பொதைச்சிடுச்சி அப்படின்னு பல்ல இளிச்சுக்கிட்டு எழுதிருவாய்ங்க. இதை யெல்லாம் மீறி நாம இன்னிக்கு நிக்குறோம்னா அது பெரியவங்களோட ஆசி, நல்லவங்களோட ஆசி. நம்ம நக்கீரன் தம்பிகளோட குடும்பமா இருக்கட்டும், எங்க குடும்பமா இருக்கட்டும், முகவர்களா இருக்கட்டும், வாசகர்களா இருக்கட்டும், நம்ம நலன்விரும்பிகளாகட்டும்... இவங்கள்லாம் நமக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு நமக்காக விஷ் பண்ணுறாங்கள்ல அதுதான்... உங்க முன்னாடி "போர்க்களம்'ங்கிற தொடர நான் எழுதுறதுக்கு சக்திய கொடுத்திருக்கு தம்பி''ன்னு ராம்கிட்ட சொன்னேன்.
இன்னும் ஒண்ணமட்டும் சொல்லிட்டு ஆபீசுக்குள்ள போயிருவோம்.
அது 2009 பாராளுமன்றத் தேர்தல்...
(புழுதி பறக்கும்)