(93) ஜெ.வின் பிளாக்மெயில் கடிதம்!
இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயத்தத்தான் இப்ப சொல்லிக் கிட்டிருக்கேன். ஜெயலலிதாவ மீட் பண்றதுக்கு நாலஞ்சு தடவ அவங்க வீட்டுக்கு நான் போயிருந்தேன்கிறத இப்பதான் பதிவு பண்றேன். "நெறைய பேரு கேக்கலாம்... ஏன் இத இவ்வளவு நாள் சொல்லலன்னு?' இது ஒரு பெரிய தேசியப் பிரச்சினையா... இத விளக்கமா சொல்றதுக்கு. எத்தனையோ பேர சந்திக்கிறதுக்கு முயற்சி எடுத்திருப்போம். நான் தராசுல இருக்கும்போது ஷ்யாம் சார், ஜெயலலிதா தொடருக்காக... "கோபால் நீங்க ட்ரை பண்ணுங்களேன்''னு சொன்னாரு. அதனால தான், நானும் நமக்கு கூடுதலா ஒரு வேல குடுத்துருக்காங்களேன்னு அந்த முயற்சியில இறங்குனேன்.
நாம வேலை செய்ற இடத்துல நம்மோட வெயிட்ட காமிக்கணும்னு சில விஷயம் பண்ணுவோம்ல... அதுமாதிரிதான்... எப்படியாவது ஜெயலலிதாட்ட தொடர் வாங்கிரலாம்னு இறங்குனேன். கடைசில தொடரே கொடுக்கல. நமக்கு அல்வாதான் கொடுத்துச்சு.
ரொம்ப நாளைக்கு அப்புறம் க.சுப்பு சார் ஆபீஸ்ல வச்சு சேலம் கண்ணன் அண்ணன், அந்த லெட்டர்ஸ் எல்லாத்தையும் கொண்டுவந்து எங்கிட்ட குடுத்தாரு.
சேலம் கண்ணன். திடீர்னு இவரு எப்படி உள்ள வந்தாரு. யார் இவரு? அப்படிங்கிற கேள்வி வரும்.
எம்.ஜி.ஆர்., தனியாக கட்சி ஆரம்பிச்சப்ப, அவரோட இருந்து மளமளன்னு அரசியல்ல உச்சம் தொட்டு, அடுத்த பத்து, பன்னிரெண்டு வருஷத்துல வீழ்ச்சிய சந்திச்சவங்கள்ல ஒருத்தர்தான் சேலம் கண்ணன்.
1977-ல நடந்த எம்.பி. தேர்தல்ல சேலம் தொகுதியில போட்டியிட சேலம் கண்ணனுக்கு வாய்ப்புக் குடுத்தாரு எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவங்கள்ல ஒருத்தரா இருந்த சேலம் கண்ணன். அ.தி.மு.க.வுல ஒருங்கிணைந்த சேலம், நாமக்கல் மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர்னு பதவிகள்ல இருந்தவரு.
சோலை அண்ணனுக்கு முன்னாடி, அம்முவுக்கு (ஜெய லலிதா) அரசியல் நுணுக்கங்களக் கற்றுக்கொடுக்க எம்.ஜி.ஆர். சேலம் கண்ணனத்தான் நியமிச் சாரு. எம்.ஜி.ஆர். ரெண்டு கட்டளைகள சேலம் கண்ண னுக்கு பிறப்பிச்சாரு. ஒண்ணு, அம்முவின் நடவடிக்கைகளைக் கண்காணிச்சு தனக்கு தகவல் சொல்லணும். இரண்டாவது, அம்முவுக்கு பழைய கால அர சியல் விஷயம் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும்...னு. எம்.ஜி.ஆர். சொன்னாருங்கிறதுக்காக இரண்டையும் செஞ்சு குடுத்தவரு, ஒருகட்டத்துல... எம்.ஜி.ஆருக்கு எதிரா ஜெயலலிதாவுக்கு விசுவாசியா மாறிட்டாரு.
(இந்த காலகட்டத்துலதான் ஜெயலலிதா என்னப் பத்தியும், எம்.ஜி.ஆர். பத்தியும், சேலம் கண்ணனுக்கு கடிதம் எழுதுனது. அந்தக் கடிதத்தின் பகுதிகளத்தான் உங்களுக்குச் சுட்டிக்காட்டுனேன்.)
எம்.ஜி.ஆர். உயிரோட இருக்கும்போதே, "ஜெய லலிதா பேரவை'யை அதிரடியாக துவக்கினவரு சேலம் பி.கண்ணன்.
தன்னை யார் துதி பாடினாலும் அத ரசிக்கிற மனநிலையில இருந்த ஜெயலலிதா, தன் பேருல பேரவைய தொடங்குனதால, கண்ணன ரொம்பவே பிடிச்சுப்போய்... தன்னோட "குட்புக்'குல சேர்த்துக்கிட்டாரு.
இந்த நிலையிலதான் 1987-ல உடல்நலக் குறைவால எம்.ஜி.ஆர். மரணமடைஞ்சாரு.
அந்த சமயத்துல சேலம் கண்ணன் எம்.பி. பதவியில இருந்தாரு. ஆனாலும், எம்.எல்.ஏ.வாகி அமைச்சராகணும்ங்கிற எண்ணம் அவருக்கு இருந்துது. அதனால, 1989-ல நடந்த சட்டசபைத் தேர்தல்ல எம்.எல்.ஏ. சீட் கேட்டிருந்தார் கண்ணன். அதோட, சேலம், நாமக்கல் மாவட்டத்துல "நான் பரிந்துரை பண்றவங்களுக்குத்தான் சீட் வழங்கணும்'னு ஜெயலலிதாகிட்ட டிமாண்ட் பண்ணவும் செய்தாரு.
யாராவது தனக்கு அட்வைஸ் செஞ்சாலோ, இல்ல... தன்னை மீறிச் செயல்பட்டாலோ அத கொஞ்சமும் ஜெயலலிதா ரசிக்கமாட்டாரே... அப்படிப்பட்டவர்கிட்ட கண்ணனோட பாச்சா பலிக்குமா? அவர் ரெகமண்ட் பண்ணுன ஒருத்தருக்குக் கூட சீட் தரல ஜெய லலிதா. கண்ணனுக் கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக் கல.. அதனால் முழு நேர அரசியலில் இருந்து அவராவே விலகிட்டாரு.
கடந்த 2016, செப் டம்பர் 16 அன்னிக்கு அவரு இறந்துட்டாரு.
பொதுவா ஊர், உலகத்துல இருக்கிற எல்லாரையுமே ஜெயலலிதா ப்ளாக்மெயில்னு சொல் லும். ஆனா அந்தம்மா எப்படி... எப்படி ப்ளாக் மெயில் பண்ணும், கடிதம் மூலமாவும் எப்படில்லாம் பண்ணும்ங்கிறது, அவங்க கூட பழகுனவங்களுக்கு ரொம்பவே வெட்ட வெளிச்சம்.
எம்.ஜி.ஆர்.கிட்ட டைரக்ட்டா பேசுறத விட, இந்த மாதிரிதான் திரெட் எல்லாம், யார் மூலமாவது வைக்கும்.
கடிதத்துல ஒரு இடத்துல... அதாவது அந்தம்மாவ கொ.ப. செ.யா அறிவிச்சாச்சு. எல்லா ஊருக்கும் சுற்றுப் பயணம் போயிட்டிருக் காங்க. அப்போ இந்தம்மா ஏதோ ஒரு டிமாண்ட் வச்சிருக்கும் போல, என்ன டிமாண்ட்னு எனக்குத் தெரியாது.... "I am not going to participate in tomorrow procession nor in the forthcoming election campaign' அப்படின்னு, அந்த லெட்டர்ல இடையில இருந்ததத்தான்So it is better I say I am away at... அதுல இருந்து நான் தள்ளி நிக்கிறேன்.
அதாவது... நாளைக்கு நடக்குற ஊர்வலத்திலும், அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தும் விலகி நிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு, ஹைதராபாத்துக்கு என்னோட ப்ராப்பர்ட்டிக்காக போறேன்னு சொல்லுது.
"ஹைதராபாத்...'னா எல்லாருக்குமே தெரியுமே... பெரிய மொரட்டுத் திராட்சைத் தோட்டம் உண்டு. அது இப்ப யாரு கையில இருக்கு?
கவுண்டமணி அண்ணன் "கரகாட்டக்காரன்' படத்துல... "சொப்பன சுந்தரி வச்சிருந்த கார அவரு வச்சிருக்காரு... அந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா?ன்னு என்ன பாத்து ஏண்டா கேட்ட''ன்னு செந்தில அடிக்கப் போவாருல்ல, அது மாதிரிதான். ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் இப்ப யார்கிட்ட இருக்குன்னு யாருக்குமே தெரியாது. இப்ப நாம அதுக்குள்ள போனா, அதனால வேற பூதாகரமான செய்திகள் நெறைய வெளிலவரும்... அதுக்குள்ள போகல. (அதப்பத்தி இன்னொரு அத்தியாயத்துல சொல்றேன்)
அந்த லெட்டர்லயே ரெண்டாவது பாராவுல ஒண்ணு சொல்லியிருக்கும். I am also do not think their is any point in my meeting the Tharasu Weekly Chief Reporter Mr.Gopal as scheduled earlier for 2:00 P.M.
அதாவது ஒருநாள் 2 மணிக்கு சந்திக்கலாம்னு சொல்லி என்ன வரவச்சிட்டாங்க. நான் ஜெயராமன் அண்ணன்ட்ட பேசிட்டு, உள்ள போய் உக்காந்திருக்கேன். காத்திருக்கேன்... காத்திருக்கேன்... என்ன கூப்பிடவே காணோம். ரொம்ப நேரமா காத்திருந்து... நான் ரொம்பவே நொந்துபோயிட்டேன். ஏன்னா நமக்கு அது புது அனுபவம்.
அந்தம்மா லெட்டர்ல சொல்லுது, So for whatever they have been writing they have done it without meeting me...
அதாவது என்னப் பத்தி நெறைய எழுதுறாங்க... ஆனா என்ன மீட் பண்ணாமலே, குண்டக்க மண்டக்க எழுதுறாங்கன்னு சொல்லுது. If you indicated time... அதாவது கண்ணன் அண்ணன்ட்ட சொல்லுது, "நீங்க ஒரு டைம் சொன்னீங்கன்னா... I will sent a message to Mr.Gopal to meet you.
நான் கோபாலுக்கு மெஸேஜ் குடுத்து, உங்கள மீட்பண்ணச் சொல்றேன். நீங்க அவருக்கு க்ஷழ்ண்ங்ச் பண்ணுங்க, அது உங்களுக்குப் பிடிச்சிருந்தா... If you wish if there is any useful purpose tobe served I will meeting later...
அதாவது கண்ணன்ட்ட சொல்லுது, கோபால நீங்க மொதல்ல பாருங்க... பாத்துப் பேசிட்டு, இந்த தொடர அவங்க எப்படி கொண்டுபோகப் போறாங்க... அதுக்காக என்னன்ன பண்ணியிருக்காங்கன்றத கேட்டுத் தெரிஞ்சு என்கிட்ட சொன்ன பிறகு, நீங்க ஓ.கே.ன்னு சொன்னா நான் அவர மீட் பண்றேன்''னு அந்த லெட்டர்ல எழுதியிருக்கும்.
இப்ப நான் சொன்னதுதான் நக்கீரனுக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள முதல் தொடர்பு.
இதுக்கப்புறமும் தொடர்ந்து பல விஷயங்கள ஓபனா அந்தம்மா கண்ணன்ட்ட பேசுது. அதுக் குள்ள நெறைய திரெட்டன் பண்றதும் இருக்கு...
அந்தக் கடிதத்துல இருக்கும் முக்கியமான "மிரட்டல்' பகுதிகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.
1. இத்தனைக்குமிடையில் பிரதமருக்கு ஒரு முக்கியமான தகவல் சென்றடைந்துவிட்டதா என வியப்படைகிறேன். (எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் பிரதமருக்கு கடிதம் எழுதியது பற்றி) நீங்கள் ரங்கராஜனுடனோ, அல்லது தகவலை பிரதமரிடம் சேர்க்கும் ஒருவருடன் பேசும்போதோ அந்தத் தகவலை ஒரு எளிய வாக்கியத்தில் வெளிப்படுத்த வேண்டும். அது: “இங்கே நடந்து கொண்டிருக்கும் அனைத்துக்கு மான மூலகாரணம், எனது வளர்ச்சியில் முதல்வர் (எம்.ஜி. ஆர்.) பெரிதும் பொறாமைகொண் டிருப்பதே.”நான் இத்தனை பிரபலமடைவதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே என்னை பொது வாழ்க் கையிலிருந்தும் அரசியலிலிருந் தும் அகற்றிவிட சாத்தியமான அனைத்தையும் மேற்கொள்கிறார்.
2. முதல்வர் அவரது கேபினட் மினிஸ்டர்களை மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். அனைத்து அமைச்சர்களிடமிருந்தும் பெரிதும் சிரமமின்றி பதவி விலகல் கடிதத்தைப் பெற்று வைத்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே எனக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து கேபினெட்டில் சேர்க்க விரும்பாமல் இருப்பது எம்.ஜி.ஆரே. இங்குள்ள வேறெவரும் உண்மையில் அவரை எதிர்க்கத் துணியமாட் டார்கள். அவரின்றி அவர்கள் ஜீரோக்கள்.
எனவே எம்.ஜி.ஆரின் புத்திசாலித்தனத்தால் தான் கேபினெட்டில் என்னைச் சேர்க்க அமைச்சர்கள் விரும்பவில்லை. அப்படிச் சேர்த்தால் கட்சியில் பெரும் பிளவு ஏற்படும் எனும் மனப் பதிவை மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
மேலும், தற்போது நான் அவரை எதிர்ப்ப தாக ஒரு மனப்பதிவை ஏற்படுத்த தன்னாலான மட்டும் முயற்சிசெய்கிறார். அதனால்தான் மன்றங்களைப் பற்றி அந்த அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். இப்போது நான் செய்யும் அல்லது சொல்லும் எதனையும் திரித்து, நான் அவருக்கு எதி ராகச் செயல்படுவதாக தோன்றச் செய்துவிடுவார். அதனாலேயே நான் மௌனமாக இருக்கிறேன்.
3. டாக்டர் பிரதாப் ரெட்டியின் அறிக்கை அனைத்து பிரதான பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது. மேலும் அவர் முதல்வரின் உடல்நிலை குறித்து ஆளுநருக்கும் தனது அறிக்கையைத் தந்திருக்கிறார்.
டாக்டர் பி.சி. ரெட்டி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு அளித்த சிகிச்சைகளுக்காக கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அவருக்கு ரூ 88 லட்சம் அளித்துவிட்டது. இன்னும் 25 லட்சமோ, கூடுதலாகவோ அவர் பெறக்கூடும். எனவே காபந்து அரசு குறித்து அவர் தரும் சான்றிதழ் சந்தேகத்துக்குரியது.
4. 1985, ஜனவரி 19-ல் மருத் துவர் பி.சி. ரெட்டி நியூயார்க்கில் முதல்வரை சந்தித்ததாகக் கூறு கிறார். அவர் தனது அறிக்கையில், "முதல்வரால் எழுத இயலும். ஆனால் அவரது கையெழுத்து தெளிவற்று புரியாத வகையில் இருக்கிறது. முதல்வரால் பேச முடியும், ஆனால் அதனை யாராலும் புரிந்துகொள்ள முடியாது' என்கிறார்.
5. காளிமுத்து, முசிறிப் புத்தன், பட்டுராஜன், சாம்பசிவம், டாக்டர் ஹண்டே உள்ளிட்ட பிறர் அறிக்கைகளை விட்டுக்கொண்டே இருக்கின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிப் பத்திரிகையான “"அண்ணா'’கூட, எனக்கு எதிரான, புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் அறிக்கைகளைப் பதிப்பித்துக்கொண்டேயிருக்கிறது
மேலே கண்ட பகுதிகளின் ஆங்கில யங்ழ்ள்ண்ர்ய்-ஐ பக்கத்தில் பிரசுரித்துள்ளோம்.
"நான் ரொம்ப கஷ்டப்படுறேன்... எம்.ஜி.ஆர். என் புகழை விரும்பவில்லை... அப்படிங்கிற மாதிரியான வேற நெறைய விஷயங்களும் அதுக்குள்ள இருக்கு
"எதுக்குயா இதையெல்லாம் இப்ப சொல்லிட்டு... நீ அந்த வீட்டுல காத்துக் கெடந்தது, தொடருக்காக அந்தம்மாட்ட நின்னுட்டிருந்தது எல்லாம் இப்ப எதுக்கு?' அப்படின்னு எல்லாரும் கேக்கலாம்.
(புழுதி பறக்கும்)