poorkalam

(90) ஜேம்ஸ்பாண்ட் பட ரேஞ்ச்சுக்கு ப்ளான்!

போலீஸ் அடிச்சுப் புடிச்சு என்னப் புடிக்க ஓடுச்சு. அது ஒருவகையில கொஞ்சம் கேப் குடுத்ததாத்தான் நாம நெனைச்சோம். கெடைக்கிற அந்த கேப்ப நாம பயன்படுத்தணும்ல. மய்க்கா நாளு திங்கள்கிழம. நடந்த எல்லா நாசத்தையும் கோர்ட்டுக்கு எடுத்துட்டுப் போகணும். அதுக்கான வேலைக நெறைய இருக்கு. அதுமட்டுமில்லாம, எல்லா கடைகளுக்கும் நக்கீரன் புக் போட்டாகணும், அதுக்கான வேலைகள முடுக்கி விடணும். இப்படி, தலைக்கு மேல அவ்வளவு வேலைக கிடக்கு... "எப்படா இந்த சனியனுங்க போவானுக'ன்னுட்டு உக்காந்திருக்கோம். நல்லவேளையா குசுகுசுன்னு பேசிக்கிட்டே வெளிய கௌம்பிப் போனாய்ங்க.

Advertisment

இப்ப... பிரஸ்ல மெஷின் ஓடுறது நின்னு போச்சு. ரெண்டாவது மாடியில உள்ள நக்கீரன் ஆபீஸ குளோஸ் பண்ணிட்டோம். மத்த வேலைகளயெல்லாம் ஆரம்பிக்கணும்னா போலீஸ் ஆபீஸ விட்டு வெளிய போனாத்தான் நடக்கும். அதோட முன்ஜாமீன் வாங்குறதுக்கும், ஐகோர்ட்ல ரிட் ஃபைல் பண்ணுறதுக்கும் தேவையான ஏற்பாடுகள செய்யணும். அந்தப் பதட்டம் வேற. ஆனா போலீஸ், உளவு பாக்குற ஐ.எஸ். இப்படி எல்லாருமே ஆபீஸ சுத்தி நோட்டம் போட்டுக்கிட்டே இருந்தாய்ங்க.

முன்ஜாமீனுக்கும் ரிட்டுக்கும், முக்கியமா என்னோட கையெழுத்து வேணும். அதுக்கான வேலைகள சீனியர் அட்வகேட் பெருமாள் சார், சிவகுமார், எட்விக், வர்கீஸ்...னு வழக்கறிஞர்கள் குழு பாத்துக்கிட்டாங்க. அவங்க சொல்றத பொறுப்பா கேட்டு கம்ப்யூட்டர் செக்ஷன்ல இருந்த தம்பிங்க ராஜேந்திரனும், தாணுவும் ரெடிபண்ணிக்கிட்டிருந்தாங்க. இதெல்லாமே ஆபீசுக்குள்ள நடந்துக்கிட்டிருந்துச்சு. அதுக்குள்ள ரெய்டு... கிய்டுன்னு வந்ததும் எல்லாரும் கப்சிப். எப்படா இவிய்ங்க வெளிய நகருவாய்ங்கன்னு பாத்துக்கிட்டே இருந்தோம். மாட்டிக்கிச்சு... சடசடன்னு ஆரம்பிச்சிட்டோம்.

ரேப்பர உடனே ஓட்ட ஆரம்பிச்சாய்ங்க. அதுல நாம செஞ்ச புத்திசா-த்தனம் என்னன்னா, ரெண்டு மூணு இடங்கள்ல ஓடுற மாதிரி பிரிச்சுக் குடுத்ததுதான். எப்பவுமே மெர்குரி ஆப்செட்டுக்குத்தான் நக்கீரன்காரய்ங்க போவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும், அதனால மாத்திட்டோம். கோபாலபுரத்துல சக்தி கிராஃபிக்ஸ் இருக்கு, அங்கேயும், வேளச்சேரியில இருக்கிற ஒரு ஆப்செட்டுக்கும் பேப்பர இறக்குனோம். மேப்படி வேலைய கௌரி பாத்துக்கிட்டாரு. அவரோட சேர்ந்து நம்ம மோகனும், டிரைவர் கண்ணனும் பாத்துக்கிட்டாங்க.

Advertisment

ff

பெருமாள் சார் திடீர்னு என் போனுக்கு வந்தாரு. "அண்ணாச்சி ஒங்கள்ட்ட ஒரு விஷயம் சொல்லணும். வெளியில மஃப்டில போலீஸ்காரங்க அஞ்சு... ஆறு பேரு நிக்கிறாங்களாம். அவங்க ஆளுக்கொரு பைக்ல உக்காந்திருக்காங்க. இப்ப நம்ம ஆபீஸ்ல இருந்து யாரு வெளிய போனாலுமே பின்னாடியே போறது... அவன் எங்க போறான்? அதாவது வெளிய வர்றவங்க யாராவது, நீங்க எங்க இருக்கீங்கங்கிறத தெரிஞ்சுக்கிறதுக்காக வந்தா, அவங்க பின்னாடியே போய் உங்கள தேடிப் பிடிக்கிறதுக்காக ப்ளான் பண்ணிருக்கிறதா தெரியுதுன்னு இப்பதான் வந்த போலீஸ்ல ஒருத்தரு காதக் கடிச்சாரு''ன்னாரு.

தீவிரவாதிய பிடிக்கிறதுக்கு எப்படி பின்தொடர்ந்து போவாங்களோ அதுமாதிரி ஆபீஸ்ல இருந்து எந்த வண்டி போனாலும், சைக்கிள் போனா லும் கூட அவங்க சூ... க்குப் பின்னாடி யே தொரத்திக்கிட்டுப் போக ரெடியா இருக்கு போலீஸ். இது போலீஸோட இயல்பான புத்திதான். ஆனாலும் என்ன கண்டுபிடிக்கிறதுக்காக விதவித மான ஐடியாக்கள கையில எடுத்துருக் காய்ங்க. எல்லாம் ஜேம்ஸ் பாண்ட் பட ரேஞ்சுக்குத்தான் ப்ளான் பண்ணியிருக்காய்ங்க. போங்கடா... நீங்களும் உங்க சீ புடிச்ச நொம்மாவும்.

ஒரு அரசு தன்னோட முழு பலத்தையும் எந்தெந்த வகையில எல்லாம் காட்டுது பாருங்க மக்களே! போலீஸ் எப்படி எப்படியெல்லாம் நக்கீரனுக்கு எதிரா வேல பாத்திருக்குங் கிறத நெனைச்சா... "இப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க'ன்னு ரொம்ப ஆச்சரியமா இருக்குதுல்ல உங்களுக்கு. குறிப்பா, போலீஸுக்கும் நமக்கும் எந்த வாய்க்கா, வரப்புத் தகராறும் கிடையாது. ஆனா... இப்படித்தான் பண்ணுவாங்க. ஒருவேள இப்படி பண்ணலேன்னாதான் ஆச்சரியமா இருக்கும். ஏன்னா நடக்குறது ஜெ.ஜெ. ஹிட்லர் ஆட்சில்ல. இந்தப் பொம்பள ஆட்சிக்கு வந்த பெறகுதான் போலீஸ ரெண்டா பிரிச்சாய்ங்க.

ff

அதாவது... ஜெயல-தா போலீஸ், கலைஞர் போலீஸ்னு. பாத்தீங்கன்னா... ஜெயல-தா போலீஸ், அடியாட் களாவே இருப்பாய்ங்க. அந்தம்மா கண் ஜாடை காட்டிச்சின்னா, உடனே போட்டுத் தள்ளீரணும், அது யாரா இருந்தாலும். மத்திய அமைச்சரா இருந்தாலும், அவுங்க ஆடிட்டரா இருந்தாலும், எதிரணி அட்வகேட்டா இருந்தாலும்... ஏன்? சுப்பிரமணிய சாமியா இருந்தாலும் இதே கதிதான். ஆங்... சுப்பிரமணிய சாமின்னதும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது.... அடுத்த இதழ்ல அத சொல்றேன். ரீ-கலெக்ட் பண்ணிப் பாத்தீங்கன்னா... அந்தம்மாவுக்கு கூடவே எஸ்கார்டா சஃபாரி டிரஸ்ல நாலு பேர் இருப்பாய்ங்க. ஒவ்வொருத்தரும் எமகாதகனா இருப்பாய்ங்க. அவங்க வேலையே அம்மா கண்ண காட்டிச்சின்னா... சோ- முடிக்கிறதுதான். அவங்களும் போலீஸ்தான்... ஆனா எடுபுடியா, அடியாளா அப்படி ஆக்கி வச்சிருந்தாய்ங்க.

பெருமாள் சார் என்கிட்ட முக்கியமா சொல்லவந்த ஒரு விஷயம் என்னன்னா... ரெய்டுக்கு வந்திருந்தவங்கள்ல ஒரு முக்கிய பொறுப்புல இருந்த இன்ஸ்பெக்டர் ஒருத்தரு, (முன்னாடி ஒரு போலீஸ்காரன்... இப்ப ஒரு இன்ஸ்...) தனியா கூட்டிட்டுப் போய் மெதுவா காதுல சொன்னாராம். "நக்கீரன் சாருக்கும் அம்மாவுக்கும் பகை எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியுமா உங்களுக்கு?''ன்னு கேட்டிருக்காரு.

எப்பவும் இந்த மாதிரி பெரிய காரியமா பழி வாங்குற அரெஸ்ட், ரெய்டுன்னு மொள்ளமாரித் தனம் நடக்கும்போது, வந்திருக்கிற போலீஸ் குரூப்புல இருந்து ஒருத்தன் நமக்கு சாதகமா நடக்கிற மாதிரி இருப்பான். அவன் ஏதோ நம்மாளு மாதிரியும், அவன் இந்தக் கூட்டத்துல வந்ததே உங்களுக்காகத்தான்னு கைய... கைய நோண்டுவான், கண்ண காமிப்பான், ஜாடை காட்டுவான், தெரியாம சைகை செய்வான். எனக்கும் பொடா அரெஸ்ட், கஸ்டடி, காடு, ஆயுதம்னு கொடுமப் படுத்தும்போது ஒரு படவா போலீஸ்... அது அந்த நாய் நாகராஜன் டி.எஸ்.பி. ஏற்பாட்டுல என்கிட்ட நல்லபேரு எடுக்கணும்னு எனக்கு பக்கத்து சீட்டுல உக்காந்து, என் உள்ளங்கையில நைசா எழுதுவான். சத்தியமங்கலம், பவானிசாகர்னு தூக்கிட்டுப் போனாய்ங்க. அந்த ஊர ஒவ்வொரு எழுத்தா அவனோட ஒத்த வெரல வச்சு உள்ளங்கையில எழுதிக் காமிச்சான். இதெல்லாம், அவன நான் நல்லவன்னு நம்பணும்னுதான்.

கடைசியில செட்டப் செஞ்ச ஆயுதப் புதை யல எடுக்கிற மாதிரி போட்டோவுக்கு போஸ் குடுக் கச் சொல்லி சரியா அந்த மோட்டுக்கு கீழ நான் வர்ற மாதிரி பண்ணுனதுக்கு அவன்தான் ஏற்பாடு. படத்துல பாத்தீங்கன்னா நான், ஆயுதம் தூக்குற ஒருத்தன், கூடவே அந்த ஆள்காட்டி போலீஸ் சுரேஷ்.

இதே செட்டப்தான் நம்ம பெருமாள் சார்ட்டயும் நடந்துச்சு. சாருக்கும் இதெல்லாம் தெரியும். அவரும், அவனோட சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாரு. அதனாலதான்... "சொல்லுங்க''ன்னு பெருமாள் சார் கேட்டதும், அந்த இன்ஸ்பெக்டர்...

"எங்க சீஃப் தேவாரம் சாரயும், அம்மாவை யும் இரிட்டேட் பண்ணி டெல்லி பிரஸ் கவுன்சில்ல 1996-லேயே கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு உங்க கோபால். டெல்லி பிரஸ் கவுன்சில் அத உடனே சீரியஸா எடுத்து மேடத்துக்கே லெட்டர் அனுப்பியிருக்காங்க. அதோட தமிழ்நாடு -கர்நாடகான்னு ரெண்டு மாநில ஹோம் செகரட்டரி, சீஃப் செகரட்டரிகளுக்கும் லெட்டர் அனுப்பியிருக்காங்க. அந்த விஷயத்த மேடம் பெரிய ஈகோவா எடுத்துட்டாங்க. என்ன ஈகோன்னா... அந்த அம்மா அந்த நேரத்துல ஒரு சர்வாதிகார மனப்பான்மையில தன் காலுக்கு கீழதான் தமிழ்நாடுன்னு நினைச்சுச்சு. அந்தக் காலத்துல பேரரசர்கள் ஆட்சி செய்யும்போது ஒவ்வொருத்தருக்கும் எல்லை பிரிச்சு குடுப்பாங்கள்ல... அதுமாதிரி. நான் அந்தம்மாவோட விசுவாசிதான், ஆனாலும் தமிழ்நாட்டையே அந்தம்மாவுக்கு பட்டா போட்டு குடுத்தது மாதிரி பவர்ஃபுல்லா ஆணவத்தோட, அதிகார ஆட்டத்தத்தான் ஆடிக்கிட்டிருந்துச்சு. என்னை எதுக்கிறதுக்கு யாருமே கிடையாது இந்த உலகத்துலன்னும் சொல்லுச்சாம் அந்தம்மா''ன்னு நல்லபிள்ளை மாதிரி ஜெயலலிதாவுக்கு எதிரா வார்த்தைகளக் கொட்டியிருக்காரு.

ff

இதச் சொன்ன பெருமாள் சார்ட்ட நான் குறுக்கிட்டு சொன்னேன். "ஆமா சார்... முறைப்படி அந்தம்மா ஜெயிச்சே வரல்லியா சார். 91-ல தேர்தல சந்திச்சு, முறைப்படி பிரச்சாரம் பண்ணி மக்கள்ட்ட ஓட்டு கேட்டு வாங்கல. ராஜீவ்காந்தி செத்தாரு. அந்தப் பழிய அப்படியே தூக்கிக் கொண்டுபோய் தி.மு.க. மேல டமார்னு போட்டுச்சு. அந்த நேரம் காங்கிரஸ் கட்சியும் அந்தம்மாவோட கைகோர்த்தாங்க. வாழப்பாடிலயிருந்து கூழப்பாடி வரைக்கும் "கால்.... கால்... கால்...'னு கத்துனாய்ங்க. மக்கள சந்திச்சி ஓட்டு வாங்குறது எவ்வளவு ரிஸ்க்னு அந்தம்மாவுக்கே தெரியும். அதுக்கு பாருங்க நேரம்... ராஜீவ்காந்தி கொலை... அநியாயச் சாவு... ஒத்த பைசாகூட செலவு பண்ணாம அடுத்த நிமிஷமே அந்தம்மா சி.எம்.'' அப்படின்னேன்.

"ஆமா அண்ணாச்சி''ன்னாரு பெருமாள் சார்.

"அப்போ அந்த மமதை இருக்கத்தான சார் செய்யும்''ன்னேன்.

"அதத்தான் அந்த இன்ஸ்பெக்டர், "சார் மேல அந்தம்மாவுக்கு இருந்த பழைய பகைதான் நடந்த இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்'னு சொன்னாரு''ன்னாரு.

"ஆமா சார். எதுவுமே செய் யாம, வேலையே பாக்காம, எலெக் ஷன் நேரத்துல கட்சிக்காக உழைக் காம கெடைச்ச வெற்றிங்கிறதால... அது மமதையோட உச்சத்துல போயி நின்னுச்சு சார்''ன்னு சொன்னேன்.

"அந்த அம்மாவோட கோவத் துக்கு காரணமே, நீங்க டெல்லி பிரஸ் கவுன்சில்ல குடுத்த கம்ப்ளைண்டு தான்''னு அந்த இன்ஸ்பெக்டர் அழுத்தமா சொன்னாரு அண்ணாச்சி'''ன்னாரு பெருமாள் சார்.

அப்ப.... அந்த பொம்பளைக் கும் + போலீசுக்கும், நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு இருக்கு போலயே...!

(புழுதி பறக்கும்)