(318) ஜெ. எனும் அபாயம்!
மதுரை முத்தண்ணன், ஆர்.எம்.வீ.க்கு போன்ல பேசுறாரு...
ஆர்.எம்.வீ., "என்ன.. ஜெயலலிதா, தலைவரோட வருதா?''ன்னு கேட்க...
அதற்கு முத்து அவர்கள், "இல்லை ஆர்.எம்.வீ., நல்லவேளையாக நான் தப்பினேன். இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன்புதான் எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. ஜெயலலிதா அவர்கள் வரவில்லை, ஆகவே ஏற்பாடுகள் எதுவும் செய்யவேண்டாம் என்று சொன்னார். "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி' என்பதைப் போல நான் ஒருபக்கம் எம்.ஜி.ஆர்., மற்றொரு பக்கம் மற்ற தலைவர்கள் என்று மாட்டிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக ஒரு நல்ல முடிவு ஏற்பட்டுவிட்டது'' என்று நிம்மதியோடு சொன்னார்.
எனக்கும் அதற்குப் பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது. ஒரு மாபெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்திவிட்டேன் என்ற மகிழ்ச்சியோடு பகல் உணவருந்தினேன். அப்படிப்பட்ட ஒரு அபாயம் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.
மதுரை முத்து... மதுரை முத்துன்னு ஆர்.எம்.வீ. அடிக்கடி சொல்றாருல்ல. அந்த முத்து யாருன்னு இப்ப இருக்கிற தலைமுறைக்குத் தெரியாது. அந்த மதுரை முத்துவ பத்தி சின்ன குறிப்பு உங்களுக்காக...
அறிஞர் அண்ணா, கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர்களில் மதுரை எஸ்.முத்துவும் முக்கியமானவர். மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்; கடுமையான களப்பணியாளர். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தவர். மதுரை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் என்கிற சிறப்பு இவருக்கு உண்டு. "திண்டுக்கல் (1973) நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாஸிட்டை பறிகொடுத்த தோல்விக்கு... வேட்பாளர் தேர்வில் மதுரை கட்சித் தலைமையின் தவறான கணிப்பு தான் காரணம்' என கலைஞர் குறிப்பிடவே... அந்த அதிருப்தியில் இருந்த மதுரை முத்து, சிவகங்கை வந்திருந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி யின் முதல் அ.தி.மு.க. மேயர் என்கிற சிறப்பும் இவருக்கு கிடைத்தது.
ஆனால் மூத்த நிர்வாகியான மதுரை முத்து "மதுரை மேலமாசி வீதியில் இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பழ.நெடு மாறன் ஏற்பாடு செய்த கூட்டத்தில்; எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில்... அன்றைய மத்திய இந்திராகாந்தி அரசையும், மாநில எம்.ஜி.ஆர் அரசையும் விமர்சித்தார். ஆனால் கட்சியின் சீனியர்களைக் கேட்காமலே... புதிதாய் கட்சிக்கு வந்த கொ.ப.செ. -ஜெயலலிதா "ஷோ-காஸ்' நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார் மதுரை முத்துவுக்கு.
அவரின் அரசியல் அனுபவம், வயது போன்ற எதையும் பொருட்படுத்தாமல் -விளக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால்... அவரின் கடைசிகால அரசியல் வாழ்க்கை அத்தனை திருப்திகரமாக இல்லை. இதில் நொந்து போனார் முத்து.
இன்னொருபுறம் "முத்தண்ணன்' என பயம் கலந்த மரியாதையுடன் அழைக்கப் பட்டவர் முத்து. அரிவாள் வெட்டுகள் அவருக்கு சாதாரணம். மதுரை சண்டியர் என்கிற பெயரும் அவருக்கு உண்டு. எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி தொடங்கிய பின் 1973-ல் "உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானது. "இந்தப்படம் மதுரையில் வெளியாயிருச்சுன்னா... நான் சேலை கட்டிக்கிறேன்' என பகிரங்க சவால்விட்டார் முத்து. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியானது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் முத்துவுக்கு சேலைகள், மஞ்சள் கிழங்கு மற்றும் வளையல்கள் பார்சல் அனுப்பினர். (இது... திராவிட அரசியலின் சீனியர்கள் மூலம் நமக்குக் கிடைத்த தகவல்.)
எம்.ஜி.ஆரை விட்டு ஜெ. எனும் அபாயம் விலகியது; என்றாலும்.... அது தற்காலிக விலகல் தான்; எட்டு வரு ஷம் கழிச்சு எம்.ஜி.ஆரை சுத்துப் போட்டுச்சு...
இது பத்தி ஆர்.எம்.வீ., "எம்.ஜி.ஆர். யார்?' நூலில் சொன்னத பாக்கலாமா?
"எம்.ஜி.ஆர். யார்?' என்ற தனது நூலில் ஆர்.எம்.வீ., அடுத்தடுத்த சம்பவங்களைத் தொடுத்திருக் கிறார்...
"1972 அக்டோபர் திங்கள் அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் தொடங்கியதற்குப் பிறகு (ஜெ. எனும் அபாயம்) முழுமையாக விலகி யேவிட்டது. ஆனால், அந்த அபாயம் அப் பொழுது விலகியதே தவிர எட்டு ஆண்டுகள் கழித்து எப்படியோ மீண்டும் வந்து புரட்சித் தலைவரைச் சூழ்ந்துகொண்டது... விடாமல் தொற்றிக்கொண்டது'
-என ஜெ.வின் என்ட்ரி குறித்து ஆர்.எம்.வீ. குறிப்பிட்ட நிகழ்வை, ஏற்கனவே ஆர்.எம்.வீ.யின் வார்த்தைகள்ல, வாசகர்கள் படித்திருப்பார்கள். இருப்பினும் சுருக்க மாகச் சொல்வதானால்...
திரும்பவும் 8 வருஷம் கழிச்சு ஜெயலலிதாங்கிற அந்த அபாயம் எம்.ஜி.ஆரை சூழ்ந்துகொண்டதாக ஆர்.எம்.வீ. குறிப்பிட்டுச் சொன் னது... 1980ல ஆடிட்டர் கோபி வீட்டுப் பெண்ணோட பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு ஆர்.எம்.வீ. தலைமை தாங்க போயிருந்தப்ப, அங்க ஜெயலலிதாவ பாத்து, ஒரு மரியாதைக் காக மேடையில அவ ரப் பத்தி சில வார்த் தைகள் ஆர்.எம்.வீ. பேசுனதும், அத ஜெ. எம்.ஜி.ஆர்.கிட்ட சொன்னதையும், "அம்முவ பாராட்டுனீங் களாமே'ன்னு எம்.ஜி.ஆர். ஆர்.எம்.வீ.கிட்ட கேட்ட தையும்... இதுல இருந்து மறுபடியும் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா உறவு நெருக்க மானதையும் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள ஆர்.எம்.வீ. தொடர்ந்து எழுதியிருக் கிறதப் படிங்க...
"அந்த அதிர்ச்சியின் விளைவை சில நாட்களி லேயே நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒருநாள் புரட்சித் தலைவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளில், பெரும்பாலான நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடத்துகிற பணியிலே நான் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் தொலைபேசியில், "மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டில் அம்முவினுடைய நாட்டிய நாடகம் ஒன்றையும் சேர்த்துவிடுங்கள்' என்று சொன்னார். இல்லை... ஆணையிட்டார். நான் முன்னாலே சொன்னதைப் போல, ஜெயலலிதா, எனக்குத் தனிப்பட்ட முறையில் விரோதி அல்ல. அவருடைய வளர்ச்சியின் குறுக்கே நான் நின்றதும் இல்லை. ஆனால், புரட்சித் தலைவருடைய புகழுக்குக் கறை ஏற்படுத்தி அவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற துணிச்சலோடு அவர் நடந்துகொள்கிற போதுதான் அவரை நான் எதிர்த்திருக் கிறேன். தடுத்து நிறுத்தியிருக்கிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு 5 ஆண்டுகளிலேயே ஆட்சி அமைத்து, இரண்டாவது முறையும் 1980-ல் தேர்தலிலே வெற்றி பெற்று நிகரற்ற செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குகிற புரட்சித் தலைவரிடத்தில், இனிமேல் ஜெயலலிதா ஆதிக்கம் செலுத்த முடியாது என்று நம்பினேன். புரட்சித் தலைவரை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது என்றும் நம்பினேன்.
அதனால்தான் இதற்கு முன்னாலே "உலகம் கற்றும் வாலிபன்' படத்திற்காகப் பேசியதைப் போல, "ரிக்ஷாக்காரன்' படத்திற்காக நான் மறுத்துப் பேசியதைப் போல, திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று வற்புறுத்தியதைப் போல, எந்தவொரு விவாதத்தையும் செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனால், கலைத்துறையிலே புகழ்பெற்ற ஒரு நடிகையின் நாட்டிய நாடகம் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நானும் அதை ஏற்றுக் கொண்டு, அதற்காக ஆயத்தப் பணிகளிலே ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். ஆனால், நீண்ட காலத்திற்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டிலே இந்த அம்மையாரைப் பார்த்தவர்கள்; அம்மையாருடைய நாடகத்தைப் பார்த்தவர்கள், "அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மீண்டும் எம்.ஜி.ஆரிடத்திலே கொண்டு வந்து இந்த அம்மையாரை ஆர்.எம்.வீ.தான் சேர்த்து விட்டார்' என்று பேசத் தொடங்கிவிட் டார்கள்.
சரி... எப்படியோ ஆபத்து வந்து சேர்ந்துவிட்டது. இந்த ஆபத்தினால் புரட்சித் தலைவருடைய புகழுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்கிற கவலைதான் அப்போதும் எனக்கு ஏற்பட்டது.
ஆனால், ஜெயலலிதா அவர்களின் திட்டம் தீவிரமாக வேலைசெய்யத் தொடங்கியது...
8-9 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஏற்படும் இவருடைய தொடர்பு ஒரு பெரிய அபாயத்தை உருவாக்குமா, என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. நான் முன் னாலே கடுமையாக வாதிட்டு சிலவற்றைத் தடுத்து நிறுத்தியதுபோல, இப்போது அப்படி வாதிடுகிற வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மரியாதைக் குரிய சில நாகரிக மரபுகள்தான் காரணம். மேலும், அதை விளக்க விரும்பவில்லை.
இயற்கையான ஒரு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவேண்டும்; அல்லது தவிர்க்க வேண்டும் என்று முயற்சித்தால் அதிலே வெற்றி பெற முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் இயற்கையின் போக்குக்கே விட்டுவிட்டேன்.
எதிர்பார்த்தபடி... புரட்சித் தலைவ ருடன் ஜெயலலிதா உறவை பலப்படுத்திக் கொண்டு வந்தார்.
ஆனால், ஆபத்து எப்படி வந்தது என்றால்...
(புழுதி பறக்கும்)