ss

கலைஞர் ஆட்சியை கலைக்க தேவாரம் போட்ட திட்டம்!

த்யம் டி.வி. அண்ணன் முக்தாருக்கு "கம்பளிமூட்டைன்னு நெனச்சு கரடிமூட்டைய அவுத்துப் பாத்த' கதையாகிப் போச்சு... அண்ணாத்தே தேவாரத்த பேட்டி எடுத்தது. இவரு ஒரு கேள்வி கேட்டா, அவரு ஒரு ரூட்ட போடுறாரு. இவரு குழம்பிப்போய் அவரு ரூட்டுக்கே போவார். அப்புறம் நம்ம பக்கம் திருப்பலாம்னு திருப்புனார்னா... மறுபடியும் ராங் ரூட்ல அடிச்சுக் கிளப்புவாரு தேவாரம்.

தன்னை நல்லவனா காட்ட யாரை வேணும்னாலும் கெட்டவனா காட்டுற கெட்டபுத்தி நம்மட்ட இருந்த இனத் துரோகிக்கும் இருக்கு. அது நம்ம தேவாரத்துக்கு கைவந்த கலை.

Advertisment

இப்ப மறுபடியும் முக்தார் கேள்வியப் போடுறாரு...

முக்தார்: சரி... நக்கீரன் கோபால் எப்படி உள்ள போனாரு?

தேவாரம்: அதுக்குப் பிறகு இந்த 3 பேர புடிச்சுட்டுப் போனமாதிரி கன்னட ஆக்டர் ராஜ்குமார புடிச்சுட்டுப் போயிர்றான். அப்போ சில கண்டிஷன்ஸ் போடுவான். எல்லாரையும் விடுதலை பண்ணணும், தமிழுக்கு அது பண்ண ணும், இது பண்ணணும்னு சொன்னான். அப்ப டி.எம்.கே. பவர்ல இருந் தது.

Advertisment

முக்தார்: ஏ.டி. எம்.கே. பீரியடுல நீங்க இருந்தீங்க. டி.எம்.கே. பீரியடு வந்தவுடனே உங்கள வெளியே எடுத்துட்டாங்க...

தேவாரம்: உடனே இல்ல. டி.எம்.கே. வர்றப்ப தான் ஆக்டர் ராஜ்குமார கடத்திட்டுப்போறான்.

முக்தார்: ஆனா, அப்ப நீங்க இல்ல.

தேவாரம்: எஸ்.டி. எஃப்.ல இல்ல.

"ஹலோ தேவாரம் சார்... நக்கீரன் கோபால் எப்படிப் போனாரு, எப்ப போனாரு'ன்னு முக்தாரும் கேட்டுக் கேட்டு தொண்ட வறண்டு போச்சு. அதச் சொல்லாம...

"ஏன்டா தென்ன மரத்துல ஏறுன''ன்னா...

"கன்னுக்குட்டிக்குப் புல்லு புடுங்க''ங்கிறான்

"தென்ன மரத்துல ஏதுடா புல்லு''ன்னா...

"அதான எறங்குறேங் கிறான்''ங்கிற கதையா...

பதில் ஏடாகூடமாவும் திருட்டுத்தனமாவும் இருக்கு பாருங்க.

டி.எம்.கே. பீரியடுல கடத்துனாராம். நீங்க எஸ்.டி.எஃப்.ல இருந்தீங்களான்னா... இல்ல! யோவ்... நீங்கதான் ரிடையர்டு ஆகி வீட்டுக்கு அனுப்பியாச்சுல்ல. ராஜ்குமார் கடத்தலப்ப இந்த ஆளு ரிடையர்டு. ஆனா, "எங்கப்பன் குதிருக்குள்ள'ன்னு அவரே வாயக் குடுக்குறாரு. ராஜ்குமார் கடத்தலப்ப, இவரும் ஏதோ ஃபீல்டுல இருந்த மாதிரி பேசுறாரு. அதத்தான் நாங்க ஆரம்பத்துல இருந்து வாயால அடிச்சுக்கிறோம்.

ராஜ்குமார உசுரோட காப்பாத்தி வந்துரக்கூடாதுன்னு பாடுபட்டதுல தேவாரத்துக்கு பெரிய பங்கு. இவரு தூண்டுதல்ல ராஜ்குமார் விடுதலைக்கு எதிரா, சுப்ரீம் கோர்ட் வரைக்கும் வழக்கு போச்சு.

அதெல்லாம் முறியடிச்சுதான் ராஜ்குமார் கடத்தல் விஷயம் சுமூகமாச்சு. அது பெரிய கதை... அப்புறம் பாத்துக்கலாம்!

ss

முன்ன ஒரு இடத்துலயும் சொல்-யிருப்பேன் பாருங்க. இந்த மோகன் நிவாஸுன்னு ஒரு தேவாரம் எடுபுடி எஸ்.டி.எஃப். எஸ்.ஐ., ராஜ்குமார் கடத்தல் விஷயத்துல விஷமத்தனமா திட்டம் போட்டு... மூக்க நுழைச்சு, "வீரப்பனுக்கு இன்னொரு பொண்டாட்டி'ன்னு ஒரு லேடிய பத்திரிகைல பேட்டி குடுக்க வச்சு, அதனால வீரப்பன் கோபமாகி... ராஜ்குமார் உசுருக்கு ஆபத்து வரவழைச்சு, எப்படியாவது ராஜ்குமார் மீட்புங்கிறது தடைப்பட்டா... ஜெயல-தா நோகாம ஆட்சிக்கு வந்துடலாம்னு ஒரு பெரிய கணக்க தேவாரம்தான் போட்டுக் குடுத்து... அத செயல்படுத்துன டவுசர்தான் அந்த மோகன் நிவாஸ். உள்ளுக்குள்ளயே என்னப் போட்டுத் தள்ளிறணும்னு பெரிய கணக்கு வேற போட்டாய்ங்க. அதுவும் இதே தேவாரம் போட்ட ரூட்ட செயல்படுத்த பாடுபட்டது இந்த மோகன் நிவாஸ்தான்.

இந்த மேப்படி துரோகிக்குத்தான், இந்த நடப்பு ஸ்டா-ன் அண்ணன் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில பெரிய பதவியில இருந்த தேவாரத்தோட இன் னொரு சிஷ்யகோடி சைலேந்திரபாபு, எஸ்.பி. அந்தஸ்து குடுத்து பகுமானமா வழியனுப்பி வச்சாரு. இத யாரும் கண்டுக்கல. அந்த லட்சணத்துல நம்ம போலீஸ் தலைமை இருந்துச்சு. இன்னைக்கு வரைக்கும் கண்டுக்கல. ஒருத்தன், கலைஞர் ஆட்சிய காவு வாங்க போட்ட திட்டம், அப்ப பொறுப்புல இருந்த எல்லா பெருசுகளுக்கும் தெரியும். தெரிஞ்சும்... அவனுக்கு (தேவாரத்தோட பக்கா அடிமை) பதவி உயர்வு. கேவலம்... என்னத்தச் சொல்ல! இந்த படவா மோகன் நிவாஸ பத்திதான் தேவாரம் அடிக்கடி சொல்- மெச்சிக்குவாப்டி. அதுக்காகத் தான், இந்த ஆளு விஷயத்த திரும்பத் திரும்ப சொல்றேன்... வரலாற்றுல பதிவு இருக்கணும்னு.

சரி... "அண்ணே டிராக் கொஞ்சம் மாறிருச்சு. இப்ப தேவாரம் பேட்டிக்கு வர்றேன்...''

தேவாரம் ரிடையர்டு ஆனாலும் "நான்... நான்...'னு பேட்டி குடுக்குறத பாருங்க.

காரணம், "கூச முனிசாமி வீரப்பன்' வெப் சீரிஸ் ழஊஊ 5-ல வெளிவந்து சக்கப் போடு போடுது. எதிரா இருந்த பயலுக துண்டக் காணோம், துணியக் காணோம்னு கடைய கா-பண்ணி டாஸ்மாக் பக்கம் போயிட்டானுக.

1993. முதல்ல வீரப்பன் படம். என் தம்பிக போய் எடுத்து வந்து நக்கீரன்ல வெளியிட்டதும்... நக்கீரனப் பாத்து, வீரப்பன் படத்த போலீஸ் கேட்டுவிட்டுச்சு. நானும் 10 செட் படம் குடுத்தேன். அதப் பாத்துட்டு, "ஃப்ரெண்ட் லைன்' இங்கிலீஷ் பத்திரிகைக்கு தேவாரம் வெக்கம் இல்லாம "வீரப்பன் எப்படி இருப்பான்னு நக்கீரனப் பாத்த பிறகுதான் தெரியும்'னு பேட்டி கொடுத்தாப்டி.

அதுக்கப்புறம் 1994, 95, 1996 -இப்படி தொடர்ந்து வீரப்பன் பேட்டி, படத்தோட நக்கீரன்ல வந்துச்சு.

1996-ல வீரப்பன் காட்டுக்கு நானே நேர்ல போய் சரண்டர் பத்திப் பேசுறேன் அப்ப அது எல்லா டி.வி.லயும் வருது. 1997-ல 9 பேர கடத்துறாப்டி வீரப்பன். அதுக்கு நான் தூது போறேன். வீரப்பன் சரண்டர் ஆக எல்லா வேலையும் ஏற்பாடாகி நடக்குது. எங்க சரண்டரா யிடப் போறானோன்னு நெனைச்சு அவசர, அவசரமா தேவாரம் ஒரு அறிக்கை விடுறாப்டி.

"வீரப்பன் சரண்டராக வந்தால் சுடுவேன்'னு...

அந்த அறிக்கையப் பாத்து, அப்ப முதல்வரா இருந்த கலைஞர் கடுப்பாகி சத்தம் போடுறாரு. இந்த ஆளு ரிடையர்டு ஆகுறாரு.

அடுத்து 2000 வரு ஷத்துலதான் ராஜ்குமார் கடத்தல்.

இதுக்கு முன்னாடி எல்லாம் வீரப்பன நான் பாக் காத மாதிரியும், எதுவுமே நடக்காத மாதிரி, ராஜ்குமார் கடத்தல்லதான் நக்கீரன் கோபால் போன மாதிரி, "அடேங்கப்பா... உலக மகா நடிப்புடா சாமீய்''னு கவுண்டமணி சொல்லுவாருல்ல அது ஞாபகம் வந்துச்சு.

மீண்டும் பேட்டிக்குள்ள போவோம்...

முக்தார்: அப்ப என்ன பண்றாங்க?

தேவாரம்: அவன் அப்ப கண்டிஷன் போடுறான், இவ்வளவு குடுக்கணும்னு... எப்பவுமே 1000 கோடின்னுதான் சொல்லுவான். அத குடுக்கணும், இத குடுக்கணும்னு சொன்னான். அதுக்கு நம்ம போலீஸ அனுப்ப முடியாது. அப்போ ரெண்டு கவர்மெண்டும் சேர்ந்து, நாம ஒரு என்.ஒய். அதாவது "நம்ம ரெப்ரசென்டேட்டிவ்'னு சொல்- நக்கீரன் கோபால அனுப்புறாங்க...

நெறியாளர்: அது ஏன் நக்கீரன் கோபால டிசைட் பண்ணுனீங்க? வேற யாரும் இல்-யா?

தேவாரம்: அவர் "எனக்கு வீரப்பன தெரியும், தெரியும்னா காண்டாக்ட் இருக்கு... நான் போய் விடுதலை வாங்கிட்டு வர்ந்துர்றேன், ராஜ்குமார விடுதலை பண்ணிட்டு வந்துருவேன்'ன் னாரு...

ஹலோ Mr.தேவாரம்... நான் இப்படிச் சொன்னேன்னு யார் சொன்னா?

(புழுதி பறக்கும்)