(257) ஜெ.வுக்கு தண்டனை! வழிகாட்டிய நக்கீரன் கட்டுரைகள்!
இவ்வளவு பெரிய மனுஷி... உலகத்துல இருக்கிற ஆம்பளைக எல்லாரையும் ஆட்டிப் படைக்க நினைச்ச பெண் புள்ளி... கூண்டுல இருந்து இறங்கிப்போய் மறுபடியும் அதே கட்டாந்தரை, லொட லொடா ஃபேன்...
ரெண்டு தடவ ஓங்கி ஒக்காந்தா உடைஞ்சுப் போற பிளாஸ்டிக் சேர்... இதுலதான் இருந்தார். பணம், அதிகாரம் நம்ம காப்பாத்தும்னு நெனைச் சார். வேதனையைத்தான் கண் முன்னால நீதிபதி குன்ஹா மூலமா பார்த்தார். இத்தனப் பெரிய சொத்துக் குவிப்பு வழக்கு... இதுல பெரும்பகுதி வெளிவரக் காரணம் நக்கீரன்.
நக்கீரன் பங்கு பற்றி தம்பி தலைமை நிருபர் பிரகாஷ் சொல்றாரு கேளுங்க...
"சொத்துக் குவிப்பு வழக்கில் அதன் தொடக்கம் முதல் இறுதி வரை நக்கீரனின் பயணம் மிக முக்கியமானதாக இருந்தது. 91-96 ல் ஜெ எப்படி சொத்துக்களை வாங்கிக் குவித்தார் என நக்கீரன் பதிவு செய்தது. நக்கீரன் நிருபர்களான பாஸ்கர், உதயன், கதிரை, துரை, தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் பதிவு செய்தனர். ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு பங்களா, சிறுதாவூர் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகள் என எங்கெங்கு சொத்துக்கள் வாங்கினாரோ அதையெல்லாம் நக்கீரன் பதிவு செய்தது. பல இடங்களில் சென்ட் ஆயிரம் ரூபாய் என சசிகலா வாங்கியிருக்கிறார்.
இப்படி நீங்கள் சொத்துக்களை வாங்கினால் ஊழல் பணத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே வாங்கிவிட முடியும் என நீதியரசர் குன்ஹா தனது தீர்ப்பில் குறிப்பிடும் அளவிற்கு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. இதை அடிப்படையாக வைத்துதான் சு.சாமி முதலில் சொத்துக்குவிப்பு வழக்கு என ஒரு கான்செப்டை கையில் எடுத்தார்.
சொத்துக் குவிப்பு மட்டுமல்ல, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தை நக்கீரன் விரிவாகவே பதிவு செய்திருந்தது. அத்துடன் ஜெ. வெளிநாட்டில் வாங்கிக் குவித்த சொத்துக்கள், சசிகலாவின் அந்நியச் செலாவணி மோசடி ஆகியவற்றை நக்கீரன் விரிவாகப் பதிவு செய்தது.
தமிழக சொத்துக் குவிப்பு, வளர்ப்பு மகன் திருமணம், வெளிநாடுகளில் நடந்த அந்நியச் செலாவணி மோசடி ஆகிய மூன்றும் இணைந்து தான் சொத்துக்குவிப்பு வழக்காகியது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த எஸ்.பி.துக்கையாண்டி, டி.எஸ்.பி. நல்லமநாயுடு ஆகியோர் நக்கீரன் செய்திகளின் அடிப்படையி லேயே தங்களது விசாரணைகளை மேற் கொண்டார்கள் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் சாட்சியம் என பதிவு செய்யப்பட்ட நல்லம நாயுடுவின் சாட்சியத் தில் அவர் பதிவு செய்துள்ளார்.
பத்திரிகை செய்தி கள் அடிப்படையில் என நல்லமநாயுடு பதிவு செய்த செய்திகள் அனைத்துமே நக்கீரன் செய்திகள்தான் என நாம் பெருமையாகவே சொல்லலாம். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டபோது ஜெ.வும், சசியும் நகைகளை அணிந்து ஒரே மாதிரி தோற்றமளித்த புகைப்படத்தை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியது. உலகமே பார்த்திராத அந்தப் படத்தை முதன்முதலாக வெளியிட்டது நக்கீரன்.
2001ல் ஜெயலலிதா மறுபடியும் ஆட்சிக்கு வந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கை எப்படியாவது கபளீகரம் செய்வதற்கு முயன்றார். அந்த வழக்கு பெங்களூருவிற்கு மாற்றப்பட்டது. அங்கும் வழக்கை முடித்துவிட ஜெயலலிதா நினைத்தார். ஒன்பது நீதிபதிகள், மூன்று அரசு வழக்குரைஞர்கள் சந்தித்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவை தேர்ந்தெடுக்க தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கும், கர்நாடக முதலவராக இருந்த சித்தராமையாவுக்கும், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் நக்கீரனின் புலனாய்வுக் கட்டுரைகள்தான் வழி காட்டியது.
18 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் நக்கீரன் தொடர்ந்து பதிவுசெய்து வந்தது.
"ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்காது என அதிகாரிகளும் அ.தி.மு.க.வினரும் தெரிவித்துவந்த சூழ்நிலையில்... தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதாவை சிறையில் அடைக்கும் வாரண்டுகளை நீதிபதி டைப் செய்ய உத்தரவிட்டார்' என செய்தி வெளியிட்டதே நக்கீரன் புலனாய்வின் துல்லியத்தைக் காட்டும்...''
அப்படின்னு ஒரே மூச்சுல, நக்கீரன் செய்த சாதனைய தம்பி பிரகாஷ் சொல்லி முடிச்சாரு. அப்படி ஒரே மூச்சுல சொல்லியிருந்தாலும் அதுக்காக அவரு மெனக்கெட்டது ரொம்பவே ஜாஸ்தி. அதுக்கான பலன்தான் ஜெயலலிதா அண்ட் கோவுக்கு கிடைச்ச தண்டனை.
"ஜெயலலிதா வேதனை... நக்கீரனின் சாதனை...'ன்னு போன இதழ்ல முடிச்சிருப்பேன். "ஏன்யா... ஒரு பெரிய மனுஷி, 3 தடவ முதலமைச்சரா இருந்துச்சு. அந்தம்மாவ ஜெயில்ல போடுறாங்க. இரக்கமே இல்லாம, "ஜெயலலிதா வேதனை... நக்கீரன் சாதனை'ன்னு போடுறியே... உனக்கு மனசாட்சியே இல்லியா?' அப்படின்னுல்லாம் எல்லாரும் நெனைப்பாங்க, கேப்பாங்க.
"ஒரு மனுஷின்னா முதல்ல மனுஷியா இருக்கணும்...., இல்ல ஒரு தலைவின்னா, தலைவியா இருக் கணும், இல்ல... ஒரு முதல்வர், முதல்வரா இருக்கணும்! அத விட்டுட்டு வன்மத் தோட, தன்ன எவன்லாம் எதுத்து எழுதுறானோ... அவனயெல்லாம் தனக்கு எதிரியா பாவிச்சு, அவன காயடிச்சிரணும்... அவன மண்ணோட மண்ணா ஆக்கீரணும்னு நினைக்கிற ஒரு கொடூர பெண்மணிதான் ஜெயலலிதா.
அதுக்காக நாம சும்மா ரோட்டுல இருந்த பொம்பளையவோ, இல்ல... வீட்டுல இருந்த பொம்பளையவோ, இல்ல அதுபாட்டுக்கு செவனேன்னு இருந்த ஒரு பொம்பளையவோ அரெஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லலியே.
எத்தன சொத்துங்க... எவ்வளவு நகைங்க...? எவ்வளவு அநியாயம்?
"சரி... அந்தம்மா யோக்கியமா...' அப்படின்னுப் பாக்கணும்ல.
ஞாபகம் இருக்கா உங்க ளுக்கு...!
அது....?''
(புழுதி பறக்கும்)