(253) நக்கீரனின் பலம்!
போன இதழ் போர்க்களத்துல நம்ம மேல போட்ட எஃப்.ஐ.ஆர்., அந்த -ஸ்ட் எல்லாத்தையும் விரிவா சொல்-யிருந்தோம்.
நக்கீரனப் பொறுத்தவரையில எத்தனை யோ ஆதாரங்கள நாம வெளியிட்டிருக்கோம். ஆனா கடந்த இதழ்ல நாம வெளியிட்ட அந்த எஃப்.ஐ.ஆர். லிஸ்ட் ஆதாரம் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருச்சு. ஏன்னா... உண்மை யிலேயே இவ்வளவு எஃப்.ஐ.ஆர இவங்க மேல போட்டுருக்காங்க... அவங்க பொய் சொல்லல அப்படிங்கிறதையும், நக்கீரனோட நம்பகத் தன்மையை பல மடங்கு கூடியிருக்குதுங் கிறதையும், நெறையபேரு என்கிட்ட தொலைபேசியில சொன்னப்ப என்னால உணர முடிஞ்சது.
உண்மை வெளிவரும்போது எப்பவுமே அதுக்கு ஒரு சக்தி உண்டுல்ல... அதுதான்.
இது ஒண்ணும் பெருமையான விஷயமே இல்ல. ஆனா எல்லாரும் நெனைக்கிறது என்னன்னா...? இது எல்லாத்தையும் தாங்கிக் கிட்டு நக்கீரன் எப்படி இன்னும் உயிர் வாழுது? அப்படீங்கிறதத்தான்.
எனக்கு ஒண்ணும் புரியல. ஏன்னா.. எல்லாத்தையும் விட்டுட்டு ஓடவா முடியும்? விட்டுட்டு ஓடுனா என்னாகும்? எதிர்காலத்துக்கு நக்கீரன் என்ன சொல்லுது அப்படின்னா...? ஒரு அளவுக்கு மேல அடி மேல அடியா அடிச்சா... நக்கீரன் மாதிரி பத்திரிகை அரண்டுபோய் பத்திரிகைய குளோஸ் பண்ணிட்டு ஊர விட்டே ஓடிப்போயிருவான்னு சொல்ற மாதிரி ஒரு உதாரணத்துக்கு ஆளாயிறக்கூடாதுன்னுதான் இத்தன எஃப்.ஐ.ஆர், இத்தன கொலை வழக்கு, இத்தன கடத்தல் வழக்கு, இத்தன அடிதடி எல்லாமே. எத்தனையோ முறை நக்கீரன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு. எத்தனையோ முறை நக்கீரன விக்கக்கூடாதுன்னு கடைகளுக்கு உத்தரவு போடப்பட்டிருக்கு. நக்கீரன படிக்கக் கூடாதுன்னு நெறையபேரு மிரட்டப்பட்டிருக் காங்க. எத்தனையோ முறை நக்கீரன அச்சடிக்கக்கூடாதுன்னு மிரட்டல்கள் விட்டுருக்காங்க. நக்கீரன நமக்காக அச்சடிச்சுக் குடுத்தவங்களும் மிரட்டப்பட்டுருக்காங்க. எத்தனையோ முறை நக்கீரன் வெளிவராம தடைபண்ணப்பட்டிருக்கு.
எல்லாத்தையும் மீறி ஒவ்வொரு கட்டத்துலயும் கீழ விழுந்து எந்திரிச்சு... விழுந்து எந்திரிச்சு... எந்திரிச்சு... எந்திரிச்சு... உங்க முன்னாடி இப்படி பவனி வர்றதுக்கு முக்கியமான காரணமே எங்க நக்கீரன் குடும்பத்தோட பலம்... + வாசகர்கள் பலம் + சப்ளையர்களோட பலம் + முகவர்களுடைய பலம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு நக்கீரனுக்கு சேவைய குடுத்தவங்க அவங்க. இது எல்லாமே நமக்கு ஒரு கொடுப் பினைதான்.
சென்ற இதழ்ல நான் சொன்னது மாதிரி... அத்தன எஃப்.ஐ.ஆரு. அத்தனையை யும் பதிவு பண்ணுனா இன் னும் 50 அத்தியாயம் தாங்கும். அப்படி ஒரு கஷ்டத்த ஒங்க ளுக்கு குடுத்துறக்கூடாது, ஏன்னா... "உனக்கு வேற வேலையே இல்லியா'ன்னு நீங்க நெனச்சிரவும்கூடாது.
அதனால குறிப்பா ஒரு 5 பகுதிகள்ல பதிவான அந்த எஃப்.ஐ.ஆர உங்களுக்கு நாங்க குடுக்குறோம்.
அதுல முதல்கட்டமா நம்ம பழைய அலுவலகம் இருந்த ஜானி ஜான்கான் சாலைக்கு பக்கத்து முனையிலதான் இருக்கு ஜாம் பஜார் போலீஸ் ஸ்டேஷன். அந்த ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்லதான் விழுது முதல் எஃப்.ஐ.ஆரு. அப்போ... மந்திரியா இருந்த கோகுல இந்திரா, மதுசூதனன், இன்னும் நாலஞ்சுபேரு, எம்.எல்.ஏ.க்கள் இவங்க எல்லாரும் அங்க உக்காந்துக்கிட்டு, போலீஸ்காரங்கள எல்லாம் வெளிய போகச்சொல்லிட்டு அந்த ஸ்டேஷனையே வழிநடத்துனாங்க அன்னிக்கு. அன்புங்கிற ஒருத்தருதான் நம்மமேல ஜாம்பஜார் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தவரு.
அதுதான் நீங்க முதல்ல பார்க்கிற எஃப்.ஐ.ஆர்.
இன்று 07-01-2012ஆம் தேதி நான் நிலைய அலுவல் இருக்கும்போது காலை 10.45 மணிக்கு திரு.ஃ.அன்பு, ஆ/வ 35 ந/ர்.கிருஷ்ணசாமி என்பவர் நிலையத்தில் கொடுத்த புகாரின் விபரம் பின்வருவாறு. விடுநர்
கே.அன்பு/வயது 35, த/பெ. கிருஷ்ணசாமி, நெ.45, பிரசன்ன விநாயகர் கோயில் 3வது தெரு, புதுப்பேட்டை, இராயப்பேட்டை, சென்னை-14. பெறுநர்: உயர்திரு காவல் துறை ஆய்வாளர் அவர்கள், உ4 ஜாம்பஜார் காவல்நிலையம், சென்னை-600 014. ஐயா, தங்களின் உயர்மேலான நிலைக்கு மிகவும் பணிவுடனும், தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்ளும் புகார் மனு. இன்று காலை (7.1.2012) 10.00 மணியளவில் நான் பீட்டர்ஸ் சாலை, மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகே எனது சொந்த வேலையாக சென்றி ருந்தேன். அங்கு ஒரு தினப்பத்திரிகை விற் கும் கடையில் "நக்கீரன்' வாரம் இருமுறை பத்திரிகையின் வால்போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் தமிழ்நாடு முத லமைச்சரைப் பற்றி "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' விவரிக்கும் ஜெயலலிதா என்று இருக்கவே, அந்த பத்திரிகையை விலை கொடுத்து வாங்கி முழுவதுமாக படித்தேன். அதன் முதல் பக்கத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி, அவரது புகழுக்கு களங்கம் பிறப்பிக்கும் வகையில் மிகக் கேவலமாக விமர்சனக் கட்டுரை எழுதப்பட்டி ருந்தது. நான் அந்த பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டு இராயப்பேட்டை, ஜானி ஜான்கான் சாலையிலுள்ள நக்கீரன் அலு வலகத்திற்கு சென்று வாசலில் இருந்த செக்யூ ரிட்டியிடம் "நக்கீரன் கோபாலை' பார்க்க வேண் டும் என்று சொன்னேன். எதற்கு என்று கேட்டபோது மேற்கண்ட தகவலைச் சொன் னேன். அவர் உள்ளே தகவலைச் சொல்ல உள்ளே இருந்து 20-க்கும் மேற்பட்ட ஆட் கள் பெரிய வீச்சரிவாளுடன், வந்திருப்பவ னை "கோபாலண்ணன்' வெட்டச் சொன்னார் என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்த னர். அப்போது நான் உயிருக்கு பயந்து ஓட முற்பட்டபோது, செக்யூரிட்டியின் அருகில் இருந்த ஆட்கள் என்னை அடிக்க, நான் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவந்துவிட் டேன். நக்கீரன் கோபாலின் தூண்டுதலின் பேரில், அவரால் அவரது அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ரௌடிக்கும்பல் வீச்சரி வாளுடன் என்னைக் கொலை செய்ய முற் பட்டதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காகவும், நக்கீரன் கோபால்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பணிவுள்ள (sd) K..அன்பு Received a Complaint and Received a case i D4.{.s. Cr.No.19\12 u/s 147, 148, 323, 504, 505,506 (II) IPC on:07.01.2012 at 10.45 Hrs.
(Sd) ந.விஜயலஷ்மி உதவிஆய்வாளர், DAPS
கோவிந்தராமு, வயது 40,
ந/ர்.மௌனம் மாதவன், பொதிகுளம், கடலாடி வட்டம், இளஞ்செம்பூர் காவல் சரகம், இராமநாதபுரம் மாவட்டம்... என்ற முகவரியைச் சேர்ந்த மேற்படி மனுதாரர்/குற்ற முறையிடுவோர் தரப்பில் கு.வி.ந.மு.ச. பிரிவு 200-ன் கீழ் பணிவுடன் சமர்ப்பிக்கப்படும் மனு:
1. மேற்கண்ட மனுதாரரான நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வரு கிறேன். நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.வில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராகவும், அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினராகவும் உள்ளேன். நான் புரட்சித்தலைவி அம்மா அவரின் தலைமை யை ஏற்று கட்சி உறுப்பினராக உள்ளேன். நான் இராமநாதபுர மாவட்ட நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞராக உள்ளேன். நான் முதுகுளத்தூர் வங்கியில் பணம் எடுப்பதற் காக முதுகுளத்தூர் வந்தேன். முதுகுளத்தூர் வந்த நான், பேருந்து நிலையம் சென்று நான் கடந்த 07.01.2012-ம் தேதி முதுகுளத்தூர் பஜார் தெருவில் உள்ள வார இதழ் விற்பனை கடையில் நக்கீரன் வார இதழ் வாங்கிக் கொண்டு கழுத்துவலியின் காரணமாக நான் என்னுடைய காரில் செல்லும்போது நக்கீரன் வார இதழை படிக்காமல் எனது சொந்த ஊரான பொதிகுளம் சென்றேன். அங்குபோய் 07.01.2012-ம் தேதியிட்ட நக்கீரன் வார இதழை இளஞ்செம்பூர் காவல் சரகத்திற்குட் பட்ட பொதிகுளத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வைத்து படித்துப் பார்த்தேன். நான் படித்துப் பார்த்ததில் அதில் நான் சார்ந்திருக் கும் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி அவருடைய புகழுக்கும், எங்கள் கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி' விவரிக்கும் ஜெயலலிதா என்று அவதூறான செய்தி வெளியிட்டு அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு என்னுடைய கட்சியின் தலை மைக்கும், அவர் சார்ந்திருக்கும் மதத்தையும் இழிவுபடுத்தும் எண்ணத்தோடு அவதூறான செய்தி வெளியிட்டு, அதன்மூலம் ஏற்படும் அமைதியின்மையை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு நக்கீரன் வார இதழில் 07.01.2012-ம் தேதி செய்தி வெளி யிட்டுள்ளனர். இதனால் நான் சார்ந்திருக்கும் கட்சியின் நன்மதிப்புக்கும் எங்கள் தலைவியினுடைய புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதால் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்ற முறையிலும், தமிழக மக்களில் நானும் ஒருவன் என்ற முறையிலும் மிகவும் மன உளைச்சலாகி உள்ளேன். ஆகையால் நக்கீரன் வார இதழில் 07.01.2012-ம் தேதி வெளிவந்த கட்டுரையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நக்கீரன் ஆசிரியர், இணை ஆசிரியர், கட்டுரையாளர் மீது சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றும், சட்டத்தின் பார்வையில் எதிரிகளை தண்டிக்க வேண்டுமென்றும் எண்ணம் கொண்டு இச்செயலில் ஈடுபட்ட எதிரிகள் மீது நான் இளஞ்செம்பூர் காவல்நிலையத்தில் கடித அட்டையில் (லெட்டர்பேடு) 07.01.2012-ம் தேதி மாலை 4.00 மணிக்கு புகார் கொடுத் தேன். அந்த புகாரை இளஞ்செம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் வாங்க மறுத்துவிட்டார். நான் கொடுத்த புகாரை வாங்க மறுத்து மனு ரசீதும் எனக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் நான் இளஞ்செம்பூர் காவல்நிலையத்தின் மேலதி காரிக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் மறுநாள் 08.01.2012-ம் தேதி இது சம்பந்தமாக முது குளத்தூர் காவல்துறை துணை கண்காணிப் பாளர் அவர்களிடம் சென்று புகார் மனு கொடுத்தேன். அவரும் அதை வாங்க மறுத்துவிட்டார். பின்பு இது சம்பந்தமாக இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு 18.01.2012-ஆம் தேதி கூரியர் தபால்மூலம் புகார் மனு அனுப்பினேன். நான் அனுப்பிய புகார் மனுமீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் தனிநபர் புகார் முது குளத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நக்கீரன் வாரஇதழின் ஆசிரியர், இணை ஆசிரியர், கட்டுரையாளர் ஆகிய மூன்று பேர் மீதும் இ.த.ச. பிரிவு 153 (ஆ) 295 (ஆ) 298, 501, 502, 504 உடன் இணைந்த 133 கு.வி.ந. சட்டத்தின் கீழ் சமூகம் கோர்ட்டார் அவர்கள் வழக்கை கோப்புக்கு எடுத்து நீதி வழங்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(sd) மனுதாரர்/குற்ற முறையிடுவோர்
இன்று 10-01-12ம் தேதி இரவு 19.30 மணிக்கு சூலக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஆகிய நான் நிலையப் பொறுப் பில் இருக்கும்போது, சென்ற 09-01-12ம் தேதி விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைச்செயலாளர் ஜெ.பத்மா வதி, M.S.W.BL @ ஜெ.கே. பத்மாகண்ணன் என்பவர் கொடுத்த புகார் மனுவிற்கு நிலைய CB.R.No.05/12 கொடுத்தும், பின் இது சம்பந்தமாக அரசு வழக்கறிஞர் மற்றும் மேலதிகாரிகள் அறிவுரை பெற்றும், நிலை குற்ற எண்: 15/12, U/s 153 (A) 501, 502, 505 (II) IPC-யாக வழக்குப் பதிவு செய்தேன். புகார் பின்வருமாறு: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் திருமதி.ஜெ.பத்மாவதி M.S.W, BL., @ ஜெ.கே. பத்மாகண்ணன் விருதுநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர், சர்.3 சுதர்சன் கார்டன், K.R.நகர், இராஜபாளையம் - 626 108. விருதுநகர் மாவட்டம் 98421 57355, 93602 57355 தேதி: 9-01-2012, To The Superintendent of police Virudhunagar, Virudhunagar. district, Sir, Sub: Publication of malicious news in Nakkheeran Tamil Weekly Magazine dt:07 to 10 January 2012 -action -regarding. I am the AIADMK District Women's wing Deputy Secretary, Virudhunagar District for the past several years. I am an ordent follower of AIADMK principles and working for the welfare of the local community irrespect of caste, religion, creed and community, without any blemish record whatsoever. I state that the people of Tamilnadu have elected our General Secretary of AIADMK and the Hon'ble Chief Minister of Tamilnadu Selvi.J.Jayalalitha amma, in the recent State Assembly elections with thumping majority, with the faith, trust and goodwill that she will provide clean and efficient government for the welfare of the common people. Our AIADMK Party does not believe in caste, creed or religion and the members are from all walks of life and from all sects irrespective of economical status. The state of Tamilnadu is known for its peace and harmonious living. I was shocked to find the turmoil amongst our District Cadres, who having found an article published in Nakkheeran Tamil Weekly Magazine dt.07, January 2012 under the Heading "maattu kari saapidum maami Naan" vivarikkum Jayalalitha with a caricature of our Hon'ble Amma at page-3 and the malicious article at page 5 of the a foresaid magazine. Immediately, I tried to buy a copy of the magazine, which was sold out and after much effort I was able to buy the magazine and was shocked to find the above article and the caricature pointing to the above title. The malicious news under the Sub-caption Mylapore mafia within apostropheas if stated by our Hon'ble Amma; "Naan Arasiyalukku ....Mafiainnu Solraanga" (copy of the Article is attached herewith for reference). I state that our District AIADMK Unit consists of people belongs to various castes, religious, status etc. The cow is a holy symbol.
(Sd/-) L.Selvaraj, S.I., Soolakkarai P.S.
13-01-12 தேதி, 11.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய ஆய்வா ளர் ந.அன்னராஜ் ஆகிய நான் நிலையத் தில் இருந்தபோது தபாலில் கிடைத்த 03/00/590/0047/12, N Ref 21/GOP/ASPB/12, படியான புகார் மனுவின்படி குற்ற எண் 24/12, ம/ள்/53 ஒடஈபடி வழக்கு பதிவு செய்தேன். புகார் மனு பின்வருமாறு:- அனுப்புனர் (1) க.சசிகலா புஸ்பா, மாநகர மேயர், (2) ட.த.மனோகரன், மாநில துணை செயலா ளர்கள் அ.இ.அ.தி.மு.க. கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, 51-இ/68 மடத்தூர் ரோடு மெயின்ரோடு, ட&ப காலனி, தூத்துக்குடி 628 008. உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி. ஐயா, நாங்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் மாநில துணை செய லாளராக இருந்துவருகிறோம். கடந்த 07.01.2021 அன்று தூத்துக்குடி நகர் முழு வதும் பொதுமக்கள் பார்வையில் படும்படி தமிழக முதலமைச்சரும் எங்கள் கட்சி யின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயல-தா அவர்களை பற்றியும், நாங்கள் சார்ந்து இருக்கும் கட்சியைப் பற்றியும் அடிப்படை ஆதாரமற்ற முறையில் அவ தூறான செய்திகளை மக்கள் மத்தியில் எங்கள் கட்சியினரை இழிவுபடுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் வாரம் இருமுறை வரும் யர்ப் 24, சர்.76, 2012 ஜனவரி 7-10 என்ற "நக்கீரன்' வார இதழின் அட்டைப் படத்திலும், முதல் பக்கத் திலும் "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் -விவரிக்கும் ஜெயல-தா' என்று பத்திரிகை யின் ஆசிரியர் கோபால் தங்களுடைய சுய லாபத்திற்காக அச்சிட்டு அதனை பொதுமக் கள் மத்தியில் சுவரொட்டிகளாக வெளியிட் டும், இதழ்களாக விற்பனைசெய்தும் வரு கின்றனர். இதன்மூலம் அவர்கள் ஜாதி, இன வேறுபாடுகளை உண்டுபடுத்தி ஜாதி துவே சத்தை ஏற்படுத்தி ஊறு விளைவிக்கும் வகையில், மேற்சொன்ன எதிரிகளின் செயல் கள் அமைந்துள்ளது. ஆகவே இந்தப் புகாரை விசாரணை செய்து எதிரிகளின் சட்டவிரோத செயல்களை தடுத்து உடனடி யாக குற்றவியல் நடவடிக்கை எடுத்து எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் நீதி வழங்குமாறு வேண்டுகின்றேன்.
(sd/-) க.சசிகலா புஸ்பா, ட.த.மனோகரன்
(sd/-) ந.அன்னராஜ், ஒய்ள்ல்ங்ஸ்ரீற்ர்ழ், தூத்துக்குடி தெற்கு ட.ந., தூத்துக்குடி.
இன்று 10-01-2012ஆம் தேதி 20:00 மணிக்கு நாச்சியார்கோவில் ஆய்வாளர் ந.சௌந்தர்ராஜன் ஆகிய நான் நாச்சியார் கோவில் காவல்நிலைய பொறுப்பில் இருக் கும்போது திருவிடைமருதூர் ஒன்றிய பெருந் தலைவர் ஆ.ய.ஃ.அசோக்குமார் நிலையம் வந்து கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்த விபரம் பின்வருமாறு: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் அ.இ.அ.தி.மு.க.வில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் அம்மாவின் ஆசியோடு ஒன்றிய குழு உறுப் பினராக போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்சம யம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்து வருகிறேன். கடந்த 7.01.2012 அன்று காலை நக்கீரன் வார இதழ் படித்தபோது அ.இ.அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும் தமி ழக முதல்வரான டாக்டர் புரட்சித் தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களைப் பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் ஒரு பிராமண சமுதாயத்திற்கு வெறுப்பும் கெட்ட உணர்வுகளை தூண்டுகிற அளவிற்கு மற் றும் மதத்தை புண்படுத்தும்பொருட்டும் வேண் டும் என்றே குரோதமான உட்கருத்துடன் மதத் தை நிந்திக்கின்ற அளவுக்கு ஒரு முதல்வரின் சித்திரத்தை வெளியிட்டு காமகுரோதத்தை தூண்டும் வகையில் விமர்சனம் செய்யப் பட்டிருந்தது. மேலும் தமிழக முதல்வரைப் பார்த்து மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்று விமர்சனம் செய்து பசுவதை தடுப்புச் சட்டத் தின் கீழ் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற விசத்தன்மை செய்திகளை பிரசுரம் செய்து, கட்சித் தொண்டர்களின் இடையே கொந் தளிப்பு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளதால் மேற்படி நக்கீரன் கோபாலையும், இணை ஆசிரியர் காமராசு ஆகியோர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(sd/-) ஆ.ய.ஃ.அசோக்குமார், ஒன்றிய கழக செயலாளர், 10.1.2012
சார்... சாம்பிளுக்கு 5 எ.ஒ.த. காப்பிகள பாத்திட்டீங்களா... இன்னும் இதுமாதிரி ஏகப் பட்ட ஐட்டம் இருக்கு...! அடேங்கப்பா...
எத்தனை நெருக்கடி... எவ்வளவு ரத்தம்... ஏகப்பட்ட மன உளைச்சல்... ஜெ.வின் ஆணவம்...
(புழுதி பறக்கும்)