(206) கண்டனக் கூட்டத்தில் கர்ஜித்த கலைஞர்!
கலைஞரின் பேச்சு தொடர்கிறது...
"நான் கர்நாடகத்திற்கு ராஜ்குமார் பிரச்சினைக் காக கிருஷ்ணாவை சந்திக்க இரண்டு முறை சென் றிருந்தேன். அதைப்போல கிருஷ்ணாவும் தமிழகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். நான் அங்கே சென்றிருந்த போது, அங்குள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள், மூத்த தமிழர்கள், வணிகப் பெருமக்களாக அங்கு தொழில் நடத்திக்கொண்டிருப்பவர்கள், என்னைச் சந்தித்துச் சொன்னார்கள். எப்படியாவது நீங்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டுத் தராவிட்டால் கர்நாடகத்திலே உள்ள ஆயிரம் தமிழர்களின் பிணங்கள் விழும். அதைத் தடுத்து நிறுத்துகின்ற பணியிலே ஈடுபடுங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக என்னிடத்திலே வேண்டு கோள் விடுத்த அந்தத் தமிழ்ப் பெரியோர்களை, சான்றோர்களை, அறிஞர்களையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
தவறு ஏதாவது நடந்திருந்தால் -அதற்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியை நீங்கள் ஞாபகத்திலே வைத்துக் கொண்டு பார்க்கவேண்டும். முன்னாள் அமைச்சர் நாகப்பாவை கடத்திச் சென்ற வீரப்பன் கடைசி வரை யிலே விடுவிக்காத காரணத்தால் ஏற்பட்ட நிலை, நாகப்பாவிற்கு நடந்த அவல நிலை, ராஜ்குமாருக்கு ஏற்பட்டிருக்குமேயானால் கர்நாடகமும் பற்றி எரிந்திருக்கும். தமிழ்நாடும் பற்றி எரிந்திருக்கும்.
அந்த நெருப்பிலே தமிழர்களின் பிணங்கள் ஆயிரக்கணக்கிலே வேக நேரிட்டிருக்கும் என்பதை யெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் அன்றைக்கு நண் பர் கிருஷ்ணாவும், நானும் எவ்வளவு தந்திரமாக இந்தச் செயலிலே ஈடுபட வேண்டுமென்பதை எண்ணிப் பார்த்து, நம்முடைய நக்கீரன் கோபால் துணையோடும், நண்பர் நெடுமாறனின் துணையோடும், மற்றும் பல தூதர்களின் துணையோடும் அன்றைக்கு கன்னட நடிகர் ராஜ்குமாரை காப்பாற்ற முடிந்தது.
ஒன்று நடந்து முடிந்த பிறகு சாதாரணமாகத் தோன்றும். அப்படி நடக்காமல் அதனால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணிப் பார்த்தால்தான், ஏ அப்பா எவ்வளவு பெரிய பயங்கரத்திலிருந்து மீண்டிருக்கிறோம் என்கிற உண்மை நமக்குப் புரியும்.
ஆனால் இதை சர்வசாதாரணமாக இன்றைக்கு எண்ணிக்கொண்டிருப்பவர்கள் என்ன சட்டம் போட்டா லும், அந்தச் சட்டத்தை போட்டவர் சாதாரணமானவ ரல்ல, இந்தச் சட்டம் மத்தியிலே இருந்து வெளியிடப் பட்ட சட்டம் என்றாலும்கூட, அதை வெளியிடப்பட்ட நேரத்திலே எழுந்த சந்தேகங்களை தி.மு.கழகத்தின் சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் சுட்டிக்காட்ட நாங்கள் தவறவில்லை. ஆனால் பயங் கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் அடக்க இது தேவை என்று சொன்ன நேரத்தில், வேறு வழியில் லாமல் ஒத்துக்கொள்ள நேரிட்டது. ஆனால் இன்றைக்கு இதைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அந்த முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். நம்முடைய பா.ம.க. தலைவர் ஏற்கிறாரோ என்னமோ எனக்குத் தெரியாது. நம்முடைய தம்பி எல்.ஜி. ஏற்கிறாரோ என்ன வோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொடா சட்டத்தை ஆதரிக் கும்போது என்ன உரிமை பெற்று இருந்தேனோ அதே உரிமை அதை வாபஸ் பெறவேண்டும் என்பதிலும் எனக்கு உண்டு என்பதை இங்கே எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
வாஜ்பாய் தந்த உத்தரவாதத்திற்கு மாறாக, பாராளுமன்றத்திலேயே உள் துறை அமைச்சர், துணை பிரதமர் அத்வானி தந்த உத்தரவாதத்திற்கு மாறாக இன்றைக்கு இந்த முதலமைச்சர் இந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றால், இவரிடமிருந்து இந்தச் சட்டத்தைப் பிடுங்குவது இயலாத காரியம். காரணம், மாநிலங்களுக்கு அந்த அதிகாரங்கள் உண்டு என்பதால். ஆகவே சட்டத்தை இந்த அம்மையாரிடமிருந்து பறிப்பதை விட, அந்த சட்டத்தையே புதைத்துவிடுங்கள். இந்தச் சட்டமே வேண்டாம். இங்கே அமர்ந்திருக்கின்ற கட்சித் தலைவர்களுக்கு பல்வேறு கொள்கைகளிலே, அரசியல் கொள்கைகளிலே, பொருளாதாரக் கொள்கைகளிலே மாறுபாடு உண்டு.
அரசியலிலே சில சூழ்நிலைகள் உங்களையும் எங்களையும் பிரித்து வைத்திருக்கலாம். அதைப் போன்ற சூழ்நிலைகள் காரணமாக சில காலங்களில் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்திருக்க நேரிட்டிருக்கலாம்.
மக்கள் மக்களாக வாழ, இன்று மாக்களாக நடத்தப்படுகின்ற கொடுமைகளிலிருந்து மீள நாம் இந்த ஒரு பிரச்சினையிலே இந்த அரசை வீழ்த்துகின்ற ஒன்றாக இருப்போம், வெல்வோம்.''
-இவ்வாறு கலைஞர் பேசினார்.
சமீபத்துல "போர்க்களம்' படிச்சுட்டு "ஏண்ணே... இந்த சின்னப் பயலுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லலாமா...? அவன ஏன் பெரியாளாக்குறீங்க.... அவனும் நீங்க பதில் சொல்லணுங்கிறதுக்காகவே பொய் பொய்யா சொல்லிக்கிட்டும், பேசிக்கிட்டும் திரியுறான். விட்டுத் தொலைங்க அந்த பொய்க்கோழியன்னு நம்ம ஆபீஸ்ல இருக்கிற தம்பிகளும், நண்பர்களும் சொன்னாங்க. நாமளும் ஏதோ ஒண்ணு எதுத்து வந்தா விலகிப் போவோமே... அது மாதிரிதான் விலகி, விலகிப் போறோம். பொய் மேல பொய் சொல்றான் படவா. ..
அதுக்குச் சரியான சூடுதான் கலைஞர், பொடாவில் கைது செய்யப்பட்ட என்னை விடுவிக்க கூட்டிய கண்டனக் கூட்டத்துல பேசிய பேச்சு. அதுல...
அன்றைக்கு நண்பர் கிருஷ்ணாவும், நானும் எவ்வளவு தந்திரமா இந்தச் செயலிலே ஈடுட வேண்டுமென்பதை எண்ணிப் பார்த்து நம்முடைய நக்கீரன் கோபால் துணையோடு'' "நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர்...'னு சொல்ற மாதிரி...
ரெண்டு மாநிலத்திற்கும் எதிரான பெரிய ஆபத்த தந்திரமா எதிர்கொள்ள தேர்ந்தெடுத்தது யாரை? நக்கீரன் கோபால் என்கிற என்னை... புரியுதா மிஸ்டர் பொய்யரே!
மேப்படி செய்தி, படத்துடன் 14-5-2003 தேதியிட்ட "தினத்தந்தி' நாளிதழில் இடம் பெற்றது. அந்த ஆதாரத்த உங்க பார்வைக்கு பிரசுரித்துள்ளோம்.
"நான்தான்... நான்தான்'னு சர்க்கஸ்ல பபூன் எம்பி... எம்பி குதிப்பாய்ங்கள்ல, அதுமாதிரி "நான்தான் தூது... நான்தான் தூது'ன்னு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்கிட்டுத் திரியுற மூதேவி ஒரு பெரிய அறிவு ஆசான்.
நாட்டை 5 முறை ஆண்ட மக்கள் தலைவர், அவரு பேசுற இடத் துல எல்லாம் நக்கீரன் கோபால்னு என் பேரத்தான சொல்றாரு. எங்கயாவது... ஒரு இடத்துலயாவது புளுகினி உன் பேரச் சொல்லி யாராவது பாத்திருக் காங்களா?... வாய்ப்பே இல்ல...!
ஹலோ பொய்யன்... ஏன் மறுபடி யும், மறுபடியும் பொய் சொல்ற. உனக்கு இன்னொண்ணும் சொல்றேன்...
பொடாவுல அரெஸ்ட் ஆன என்னை விடுதலை செய்ய கலைஞர் போட்ட அதிரடி உத்தரவு என்ன தெரியுமா?
(புழுதி பறக்கும்)