(177) ஓட... ஓட... திரும்பிய பக்கமெல்லாம் பள்ளம்!
"வேறு, வேறு காலங்களில், வேறு, வேறு நாடுகளில் வாழ்ந்த பெருமக்களிடம் கூட சில வேளைகளில் ஒரே மாதிரியான எண்ணங்களும், கருத்துகளும் வெளிப்படும்.
ஷேக்ஸ்பியர் "மேக்பத்' எனும் தன் நாடகத்தில் ஒரு காட்சியை அமைத்திருப்பார். பதவி ஆசை, பேராசை காரணமாக மன்னனைக் கொன்றுவிட்ட மேக்பத், பிறகு காலம் முழுவதும் உறக்கம் இல்லாமல், நிம்மதி இல்லாமல், அல்லல்படுகிறான். பிறகுதான் தெரிகிறது, தான் கொன்றது மன்னனை அல்ல... தன் உறக்கத்தை.
ஙஹஸ்ரீக்ஷஹற்ட் ட்ஹள் ம்ன்ழ்க்ங்ழ் ள்ப்ங்ங்ல் என்று ஷேக்ஸ்பியர் எழுதுவார். அவன் தன் உறக்கத்தைக் கொன்றுவிட்டான். அதற்குப் பிறகு வாழ்க்கை அவனுக்கு விரக்தியாக இருக்கிறது''
-இந்தச் செய்தி அண்ணன் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அனுதினமும் அதிகாலை சொல்லும் ஒருநிமிட செய்தியில் வந்தது.
இந்த வரிகள்... யாருக்குப் பொருந்துதோ இல்லியோ, ஜெயலலிதாவுக்கு நல்லாவே பொருந்தும்.
நாம போட்ட, "மாட்டுக்கறி தின்னும் மாமி'ங்கிற சனியன் புடிச்ச மேட்டருக்கு நாளெல்லாம் போட்டு அடிச்சாய்ங்கள்ல... அந்த எழவுக்காக, ஊருபூராவும் எஃப்.ஐ.ஆர் போட்டாங்க. கொஞ்சம் எஃப்.ஐ.ஆர பபரபரப்பா கோர்ட்டுக்கு எடுத்துட்டுப் போய் வழக்குப் பதிவு செஞ்சு சார்ஜ்ஷீட்டும் ஃபைல் பண்ணிட்டாங்க.
மேப்படி எஃப்.ஐ.ஆர்.+சார்ஜ்ஷீட் காப்பி எல்லாத்தையும் அரும்பாடு பட்டு, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற நல்ல போலீஸ்காரங்கள புடிச்சுக் கிடிச்சு இங்க சென்னையில இருக்குற நிருபர் தம்பிகளும், அதே மாதிரி வெளியூர்கள்ல நம்ம நக்கீரன் நிருபர் தம்பிகள் எல்லாரையும் கூப்புட்டு அவங்கள்ட்ட பேசினோம். சும்மா சொல்லக்கூடாது... அப்ப இருந்த நம்ம வெளியூர் நக்கீரன் நிருபர் தம்பிகள் காப்பி எடுக்க, விடாம மெனக்கெட்டாங்க. அதுக்காக ரொம்பவும் சிரத்த எடுத்து, அரும்பாடுபட்டு ஃபாலோபண்ணி நம்ம சிவகுமார்தான் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுனாரு. அதுக்கு மிகுந்த அக்கறையும்கூட தேவைப்பட்டது. ஏன்னா... வாழ்க்கையில இது ஒரு கின்னஸ் ரெக்கார்டு. அந்த நேரம் நாம கேடயத்த மாத்திரம்தான் வச்சுக்கிட்டோம். எதுத்து அடிக்கிற வேலைய நாம பண்ணவே இல்ல.
எங்க சீனியர் பெருமாள் சார்கிட்ட நான் சில நேரம் வருத்தப்படுவேன். "ஏன் சார்... நாம கேடயத்த மட்டும்தான வச்சிருக்கோம் சார்... எதுத்து நாம அடிக்கவே இல்லியே சார்''ம்பேன்.
அதுக்கு அவரு, "முதல்ல இதுல இருந்து வெளில வந்துருவோம், அதுக்கப்புறமா பாத்துக்கலாம் அண்ணாச்சி...''ன்னு சொல்லு வாரு. இப்படியே காலம் கடந்துருச்சு. எவ்வளவு பெரிய பெரிய கோரமான சம்பவங்கள்லாம் நக்கீரன் வாழ்க்கையில நடந்துச்சுங்கிறீங்க!
குறிப்பா, எங்க மாமா ஆர்.எஸ்.பாண்டியன் அவங்களோட சாவு. அதுக்கே இவங்க எல்லாரை யும் தெருவுக்கு இழுத்துருக்கணும். ஒரு பெரிய உசுரு போச்சு. அந்த துயரத்துல இருந்து என் துணைவியார காப்பாத்துறதே எனக்கு பெரிய வேலையாப் போச்சு. அந்த நேரம் நான் சிறையில இருக்கேன். அவங்களோட பரிதவிப்ப நான் பாத்து, ரொம்ப சங்கடமாயிருச்சு. "என்னடா இது... நம்மளால நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்கு இவ்வளவு கஷ்டத்த குடுத்துட்டோமே... அதுவும் நமக்கு துணையா இருக்கிறவங்களுக்கு... அவங்க என்ன பாவம் செஞ்சாங்க? நம்மளால ஒரு பெரிய இழப்பு வந்துருச்சே'ன்னு ரொம்ப பெரிய பாதிப்பு மனசுக்குள்ள. ஜெயலலிதா மேல கோபமா கோபம்.
ஆனா... அந்த இழப்புக்குப் பதிலா... ஜெயலலிதாவ எதுத்து நாம எந்த ஆயுதத்தயும் எடுக்கல. பேனாவ மட்டும் வச்சுக்கிட்டு, கையக் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டே இருந்தோம். அவனுகளும் பயந்துட்டோம்னு ஓட... ஓட விரட்டுனாய்ங்க. திரும்புன பக்கம்லாம் பள்ளம் தோண்டி வச்சிருந்தாய்ங்க. பள்ளத்தப் பாத்து, பாத்து ஓடுறதுக்குள்ள காலம் கடந்துருச்சு.
இது மாதிரி ஒவ்வொண்ணும்.
1991-ல "இங்கே ஒரு ஹிட்லர்' தொடர். ஊர் பூராவும் அடிச்சி... எரிச்சி... குதிர வண்டியில வச்சு புக் வித்தவனோட காலையும் ஒடைச்சி, இப்படில்லாம் நெறைய அராஜகம் பண்ணுனாய்ங்க. முன்ன சொன்னதுதான்.
நாங்க ஓட... ஓட... ஓட... ஓடுறவரைக்கும் வெரட்டி, இதுக்காக எங்க 3 பேர அரெஸ்ட் பண்ணி...
அதுக்கடுத்து, ஐயா கணேசன அரெஸ்ட்பண்ணி, அவரு சிறையில இருந்து வெளிய வர்றப்ப வாசல்லயே செத்து விழுகுறாரு...
இப்ப... இவ்வளவு சங்கடங்களுக்கும் நாம எதுத்து ஒண்ணுமே செய்யல. ஏன்னா, சட்டம் சரியா இருக்கு. அது அவங்கள பாத்துக்கும்னு நினைச்சோம். எங்க... சட்டத்துல இருக்குற ஓட்டய பயன்படுத்தி நம்மள சாகடிச்சாய்ங்க. ஆனா நாமதான் வெறும் கேடயத்த மட்டுமே வச்சு "அப்பாடா... தப்பிச்சா போதும் சாமி!' அப்படின்னு ஓடிக்கிட்டே இருந்தோம்.
ஒரு பெரிய ஃபைல கத்தையா தூக்கிட்டு தம்பி சிவா என்னோட அறைக்கு வர்றாரு.
"என்ன தம்பி?''ன்னேன்.
"எல்லாமே நம்ம மேல போட்டுருக்கிற எஃப்.ஐ.ஆர்.ணே''ன்னு சொன்னாரு.
"ஆத்தாடி...?''
அத பாத்தவுடனேயே மலைச்சுப்போயி "ஆ'ன்னு வாயப் பொளந்துட்டுப் பாத்தேன்.
ஆங்... சொல்ல மறந்துட்டேன். கடுமையா போராடி, பெயில் கிடைச்சு நான் வெளிய வந்து ஆபீஸ் வேலைய ஆரம்பிச்சுட்டேன். சிவா தூக்கிட்டு வந்த எஃப்.ஐ.ஆர் பண்டல் எல்லாத்தையும் பாத்து நான் மலைச்சுப்போய் இருக்கிறப்ப... ஷாட் கட்!
கலைஞர் நக்கீரன் ஆபீஸ அடிச்சது பத்தி "முரசொலி' கேள்வி-பதில்ல சொல்லியிருந்தாரு. அண்ணன் கலைஞர் எப்பவுமே கேள்வி -பதில்ல சொல்ல வேண்டிய விஷயங் களையெல்லாம் நல்லா அழகா, நச்சுன்னு அவர் பதில் சொல்வார். அவரோட கேள்வி- பதில் பகுதிய படிச் சிருந்தீங்கன்னா, உங்களுக்குத் தெரி யும்.
ஒருமுறை... வீணாப்போன பத்திரிகை ஒண்ணுல அண்ணனப் பத்துன ம்னிக்கோண்டு செய்தி வந்திருந்தது. அதப்பத்தி அடுத்து வெளிவந்த முரசொலி கேள்வி-பதில்ல சொல்லியிருந்தாங்க.
அப்ப அவர நேர்ல சந்திச்சு கேட்டேன்... "ஏண்ணே... அது ஒரு சின்ன பத்திரிகை. அந்தப் பத்திரிகைல எவனோ ஒருத்தன் எழுதிட்டாண்ட்டு, அதுக்கு நீங்க ஒரு பதில் சொல்லியிருக்கீங் களேண்ணே. இன்னிக்கு முரசொலில பாத்தேன்''னு
அன்னிக்கு காலைல 6 மணிக்கு போன் பண்ணி சொன்னேன். உடனே, வாங்களேன் இன்னிக்குன்னாங்க. நான் உடனே முரசொலிக்குப் போனேன்.
அப்போ... "இல்ல கோபால்! நீங்க இந்தப் பத்திரிகைய இன்னொரு 10 வருஷம் கழிச்சு மாணவர் யாராவது ஒருத்தரு ஆய்வு பண்ணுவாரு. அப்படிப் பண்ணும்போது நம்மளப் பத்துன ஒரு செய்தி இருக்கும். இப்படி ஒரு தவறான செய்திய குடுத்ததுக்கு, எதாவது பதில் இருக்கான்னு நம்ம நடத்துற பத்திரிகை, இல்ல நமக்கு வேண்டிய பத்திரிகை, நேர்மையா எழுதுற பத்திரிகைகளப் பாப்பாங்க. அந்தப் பத் திரிகைகள்ல இதுக்கான விடை இல்லண்டா... "ஓஹோ அதுதான் உண் மை'ன்னு பதிவு பண் ணிட்டுப் போயிரு வாங்க. ஆக... தவறான ஒரு செய்தி அது காலத்துக்கும் பதிவாகிக் கிடக்கும். அதனால இதுக்கான பதில நாம இப்ப பதிவு பண்ணு னாத்தான்... இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகும், ஒருத்தரு இத ஆய்வு பண்ணும்போது இதுக்கான பதில் அதுல இருக்குன்னு எடுத்துச் சொல்லுவாரு. இது நம்ம காலத்துக்கு இல்ல... பிற்காலத்துலயும் இது பயன் உள்ளதா இருக்கும். நம்ம தரப்பு நியாயத்த நாம சொல்லியிருக்கோம்னு அவங்களுக்குத் தெரியும்'' அப்படின்னாரு.
அவரு சொன்னது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க. ஆணி அடிச்சது மாதிரி இருந்துச்சு. இதே பதில சின்ன குத்தூசி ஐயாவும் எனக்குச் சொல்லுவாங்க. குத்தூசி ஐயாவோட கட்டுரை கள்ல பாத்தீங்கன்னா... எடக்கு மடக்கா மற்ற பத்திரிகை பொய்யா எழுதியிருந்தா, அதுக்கான பதில கட்டுரையா நம்ம புக்ல எழுதியிருப்பாங்க. ஐயாவும் இதே மாதிரிதான் பதில் சொல்லுவாங்க. "இல்ல சார்... நாம கட்டாயம் பதில் சொல்லியிருக்கணும்''னு சொல்லுவாங்க. அவங்க அளவுக்கெல்லாம் நாம பெரிய அறிவுசார் மனுஷன் கிடையாது... ஆனா அந்த விஷயத்த நாம கையில எடுத்துக்குறோம்.. எப்பவுமே!
கலைஞரும் அதே மாதிரிதான்... நம்ம நக்கீரன் ஆபீஸ அ.தி.மு.க.காரங்க அடிச்சப்போ... ஒரு கேள்வி-பதில்ல "தினமலர்'ல அதப்பத்தி எட்டு காலச் செய்தியா போட்டுருந்தாங்க...
அதுல... "நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது ஆறு பிரிவுகளில் அ.தி.மு.க. அரசு வழக்கு' அப்படின்னு அவங்க எட்டு கால செய்தி பண்ணியிருந்தாங்க. அத கேள்வியா போட்டு, அதுக்கு முரசொலியில கலைஞர் பதில் எழுதியிருந்தாங்க.
ஏன்னா... "போர்க்கள'த்தோட முடிவு நெருங்குற நேரம்...
(புழுதி பறக்கும்)