aa

(126) கோர்ட்டை மதிப்பதில் நக்கீரன் முதலாவதாக நிற்கும்!

"ராஜாமணி'ங்கிறவன் கருப்பா, சிவப்பான்னு நமக்குத் தெரியாது. அந்த ராஜாமணி இருந்த திசையும் தெரியாது. எப்படியோ அவன உள்ள அனுப்பி காலி பண்ணிட்டாய்ங்க. இவனுக (எஸ்.டி.எஃப்.) சுயநலத்துக்காக காவாலித்தனம் பண்ணிப்புட்டு... அதான், அப்பாவி மாணவன் பக்தவச்சலத்தையும், அடுத்து ராஜாமணி... இவன சிறையில வச்சு பிரெய்ன்வாஷ் பண்ணி, கண்ணு மண்ணு தெரியாம... எதிரின்னா சுட்டுக்கொல்லும் வீரப்பன்ட்ட அனுப்பலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தனம். அப்படி அனுப்பி, அதுவும் பொளந்துக்கிட்டதுனால நம்ம தலையப் போட்டு உடைக்கிறாய்ங்க படுபாவிங்க.

எல்லாருக்கும் ஒரு கேள்வி வரும்.

Advertisment

அப்புறம் உங்கள எப்படி இந்தக் கொலையில லிங்க் பண்ணுனாங்கன்னு?

மாணவன் பக்தவச்சலம் கொலை பத்தின செய்தி நம்ம நக்கீரனுக்கு எப்படி வந்துச்சோ...

அதே கடிதத்துல ஒரு 10 லைன் செய்தியா சொல்லியிருந்தாய்ங்க. அது நம்ம நக்கீரன்ல ஒரு பாக்ஸ் செய்தியா "மூன்றாவது பலி'ங்கிற தலைப்புல வெளியாகி இருந்துச்சு.

Advertisment

பக்தவச்சலம் கொலை தொடர்பா வந்த செய்தியப் பாத்த போலீஸ்காரய்ங்க, "போடுறா கொலை வழக்க! தூக்குடா நக்கீரன்கோபால!'ன்னு தூக்கிட்டானுவோ...

24.11.98-ல் வந்த நக்கீரனில் 7-ம் பக்கம் வெளியான இத்துனூண்டு பாக்ஸ் செய்தி...

ff

மூன்றாவது பலி!

வீரப்பன் அனுப்பியிருக்கும் கடிதத்தில் உள்ள தகவலின்படி கந்தவேலுவும் பக்தவச்சலமும் காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தாளவாடி பாட்சா பாயை வீரப்பனின் ஆட்கள் சரமாரியாக அடித்து உதைத்த பிறகு, அவரை மன்னித்து விரட்டிவிட்டார் வீரப்பன். அவரிடம் தண்டனைக்குள்ளான மற்றொரு நபர் பற்றியும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோவை ஜெயிலில் வீரப்பனின் அண்ணன் மாதையனுடன் ஒன்றாக இருந்ததாகச் சொல்லிக் கொண்டு ஒரு நபர் வீரப்பனிடம் வந்திருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே அவர் மீது வீரப்பனுக்கு சந்தேகம் எழ, தனது பாணியில் "ஈடு' கொடுத்தி ருக்கிறார். அடி வாங்கிய ஆசாமி, "அய்யா சாமி... மோகன்நிவாஸ்தான் என்னை அனுப்பி வச்சாரு"ன்னு சொல்ல... அந்த நபரையும் துப்பாக்கிக் குண்டுக்கு பலி கொடுத்திருக்கிறார் வீரப்பன். திம்மங்காட்டில் நடந்த இந்த சம்பவத்தில் பலியான நபரின் இடது கையில் "ராஜாமணி" என்று பச்சை குத்தப்பட்டிருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேப்படி பாக்ஸ் மேட்டர் மட்டும்தான் வெளியிட்டிருந்தோம்.

இதுக்கு ஒரு கொலை வழக்கு...!

ஆனா நம்ம ஏ.ஜி. துண்ட போட்டுத் தாண்டாத குறையா... "நாங்க பழி வாங்கல... பழி வாங்கல. அதுவும் நாங்க வேணும்னே மின் இணைப்பை துண்டிக்கவில்லை. தனி நபரை மட்டுமில்ல... ஒட்டுமொத்த மக்களையும் செய்தி வெளியிட்டுக் காயப்படுத்தியவரை பழிவாங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நக்கீரன் அலுவலகத்திற்கு 100 சதவீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது''

எது... எது...!

எவ்வளவு பெரிய பொய் பாருங்க.

ஒரு பழமொழி சொல்லுவாங்க.

"எருதுக்கு நோவு காக்கைக்கு தெரியாம இருக்கலாம் மாட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுருக் கணும்ல'ன்னு.

"ஏண்ணே... ஏ.ஜி. அண்ணே... என்னதான்

அந்தம்மாகூட இருந்தாலும்... மனசாட்சின்னு ஒண்ணு இருக்கும்ல. அந்தம்மாவுக்குத்தான் நம்ம நோவு தெரியாது. ஏன்னா, அது படுத்திருந்ததால எழுப்ப முடியாம... நாலுநாள் கழிச்சும் வெள்ள அபாயத்த சொல்ல முடியாம செம்பரம்பாக்கம் ஏரிய திறந்துவிட நாளாகிப் போய்... கடைசியில, சென்னைங் கிற ஊரையே... பாதிய தண்ணி அடிச்சுட்டுப் போச்சு. அதுக்கு ஒரே காரணம்... ஜெயலலிதாவோட தூக்கத்த கலைக்க யாருக்கும் திராணியில்லாம போனது.

அந்தம்மாவுக்கு மக்கள் படுற அவஸ்த தெரியாது. ஆனா உங்களுக்கு எப்படி தெரியாமப் போகும்?

நீங்களே சொல்லுங்க... அந்த 48 மணி நேரம் நக்கீரனுக்கு பாதுகாப்பு கொடுத்தீங்களா...?

ஏண்ணே... பொய்ய பேசிக்கிட்டு... அட போங்கண்ணே!''

இதுல வேற... "செய்தி போட்டு தமிழ்நாட்டு மக்கள காயப்படுத்திட்டோமாம்'ல... நல்ல கூத்து. அவன்... அவன்... உங்க நொம்மாட்ட பேர் எழவ எடுக்கணும், போட்டோவுல... வீடியோவுல மூஞ்சி வரணும்னு வந்து அடிச்சுப்புட்டு... வந்தவன்ல ஒருத்தரையாவது மக்கள்னு காமிக்க முடியுமா? எல்லாரும் உங்க கட்சிக்காரய்ங்கதான். இது உலகத்துக்கே தெரியும்.

இந்தக் கூத்துல "ஒரு செய்தியால ஒட்டுமொத்த மக்களையும் காயப்படுத்தி னேனாம்...'

சரி... சரி... இங்க நீங்க பொய் சொல்ல லேன்னா... ஒங்க சீட்டும் டர்ர்ர்ர்.... அதுக்காக இம்புட்டு அநியாயமா பொய் பேசக்கூடாது.

100 சதவீதம் பாதுகாப்பு, உடனே கரண்ட் தாமதமில்லாம குடுக்கணும்னு சொல்லி வழக்கை 18-ந் தேதி... அதாவது 18.1.2012 அன்னிக்கு தள்ளி வச்சாரு தலைமை நீதிபதி.

துக்கிடையில நமக்கு ஏற்பட்ட கொடுமைகளையும், ஆளும்கட்சியைச் சேர்ந்த குண்டர்கள், சமூகவிரோதிகள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாரும் நக்கீரன கரம்வச்சு தாக்குனதையும், எங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற செயல்கள்ல ஈடுபட்டதையும் பாத்த, கவனிச்ச... நம்ம வளர்ச்சியில அக்கறையுள்ள பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள்னு எல்லாரோட வேண்டுகோளையும் ஏத்துக்கிட்டு, சம்பந்தப்பட்ட செய்தி வந்த அடுத்த இதழ் நக்கீரன்ல "வருத்தம்' வைத்தோம்.

அந்த வருத்த செய்தி...

ffoo

வருத்தம்!

நக்கீரன் 24 நெ.76, 2012 ஜனவரி 7-10 தேதியிட்ட இதழின் அட்டைப் படக் கட்டுரையாக வெளியான செய்தி, எந்தவித உள்நோக்கமும் இன்றி வெளியிடப்பட்டதாகும். எந்த வகையிலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழுக்கோ, இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கோ களங்கம் கற்பிக்கும் எண்ணம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. இச்செய்தி வெளியான பின், நக்கீரன் எதிர்கொண்டவைகள் அனைத்தையும் வாசகர்களும், பொதுமக்களும் அறிவார்கள். எப்போதும் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் நீதிமன்றங் களையும் நீதியையுமே நம்பும் நக்கீரன், இப்போதும் அவற்றின் மீது நம்பிக்கை வைத்தே செயல்பட்டு வருகிறது. நக்கீரனின் அட்டைப்படச் செய்தியைத் தவிர்த் திருக்கலாம் என நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள மூத்த பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கத்தினரும், நலன்விரும்பிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எந்தவித உள்நோக்கமுமின்றி வெளியிடப்பட்ட அந்த அட்டைப்படச் செய்தியால் தமிழக முதல்வர் ஜெயலலிதா -அவரைச் சார்ந்தவர்கள் -ஆளுங்கட்சி உறுப்பினர்கள் -மற்றும் எவர் ஒருவரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நக்கீரன் தனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

-ஆசிரியர்

மேப்படி வருத்தம் செய்திய நக்கீரன் வெளி யிட்ட "மாட்டுக்கறி தின்னும் மாமி' செய்தி வெளியான பிறகு வந்த ஜன 14-17 இதழ்லயே வெளியிட்டோம். அதையும் சம்பந்தப் பட்ட தலைமை நீதியரசர் விசாரிக்கும் நீதிமன்றத்தின் முன் காண்பிச்சோம்... மனுவாகவும் தாக்கல் செஞ்சோம்.

இதைக் கவனித்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஷா அவர்கள், Yes Matter is Solved-னு சொன்னதுதான் தாமதம்... A.G. Side-ல இருந்து ஒரே குதியோ குதின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.

f

அதெப்படி இவ்வளவு ஈஸியா முடிச்சிட்டா எங்கம்மாட்ட நாங்க பெயர் வாங்கணும்ல... இதவச்சு கொஞ்சநாள் நாங்க வண்டி ஓட்டணும்னு நெனைச் சுக்கிட்டு... "நோ... நோ... சார் எங்களுக்கு மறுப்பு, மன்னிப்பு, வருத்தம்... இப்படி புத்தகம் பூராம் போடணும். இல்லைன்னா...

அவரப் புடிச்சு உள்ள போடணும்''னு கோரஸா கத்துறாய்ங்க.

நம்ம சைடுல சீனியர் பெருமாள் சார் நீதியரசரை Convince செய்து பேசுனாரு.

அவரும் ஒத்துக்கிட்டு, இவர்கள் கேட்பது போல் அட்டையில் போட வேண்டாம், put the news in the 2nd page or 3rd pag-ன்னு சொன்னாரு.

உடனே நம்ம பெருமாள் சார், வங்ள்... Yes... obliged-ன்னு சொல்லியும், "ஜெ.' சைடு வக்கீல் ஒத்துக்கல.

ஆனால் நீதியரசர் This is my order, court is adjourned-ன்னு சொல்லிட்டு எழுந்துட்டாரு.

நீதியரசர் சொன்னதுபோல, அதே வருத்தச் செய்திய அடுத்து வந்த இதழ் (ஜனவரி 18, 2012) அட்டையில லீடு எடுத்து... முதல் பக்கத்துலயும் எல்லாருக்கும் பளீர்னு தெரியுற மாதிரி வெளியிட்டோம்.

என்னதான் வேகம் இருந்தாலும், நக்கீரனைப் பொறுத்தவரை கோர்ட்டை மதிப்பது என்பதில் முதலாவதாக நிற்கும்.

ஆங்... A.G. இந்த கோர்ட்ல சொன்னாருல்ல... "நாங்க தனிநபர பழி வாங்கல''ன்னு.

வங்க தனிநபர மட்டும் இல்ல... மக்கள் பிரதிநிதிய எப்படி அன்பா கவனிச்சாங்கன்னு சொல்றேன்...

(புழுதி பறக்கும்)