gg

(115) படி அளக்குற மகராசிக்கு பாத பூஜை!

டுத்து, எம்.ஜி.ஆர். 1984-ல மருத்துவச் சிகிச்சைக்காக அப்பல்லோ வுக்குப் போயிட்டு வந்த பிறகு, மோகன் தாஸுக்கும் இந்தம்மாவுக்கும் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கு. மோகன்தாஸ் அப்ப டி.ஜி.பி.யா இருந்தாரு. அவரு, ஜெயலலிதாவ வேவு பாக்குறதுக்காக, ஒரு சி.ஐ.டி. ஆபீஸர நியமிச்சிருக்காருபோல.

அந்த விஷயத்தப் பத்தி எம்.ஜி.ஆருக்கு ஜெ. எழுதின கடிதத்தப் பத்தி உங்களுக்குச் சொல்றேன்...

Advertisment

கடிதத்தில் வளவளன்னு இருப்பதை ஒதுக்கிவிட்டு நமக்கு தேவையானதை மட்டும் இங்கே சொல்கிறேன்.

நான் உங்களிடம் உள்ளதை உள்ளபடிச் சொன்னால், நீங்கள் என்னையே மீண்டும் சந்தேகப்படுகிறீர்கள். அத னால்தான் இந்தக் குழப்பங்கள் எதுவும் வேண்டாம், எனக்கு அரசியலே வேண்டாம் என்று சொன்னேன்.

நான் ஒதுங்கி எங்காவது போய்விடுகிறேன் என்றால், அதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. "நான் இருக்கிறேன். என் வடிவில் உன் தாய் இருப்பதாக நினைத்துக் கொள்'' என்று நேற்றுதான் சொன்னீர்கள். "மறுபடியும் நாளை சந்திப்போம்'' என்றீர்கள். சற்றே ஆறுதல் அடைந்து கொஞ்சம் மன நிம்மதியோடு நேற்று வீடு திரும்பினேன். இன்றைக்கு மீண்டும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்று காலையிலிருந்து ஆவலோடு காத்திருந்தேன். உங்களிடமிருந்து போன் வந்ததும் என்னை வரச்சொல்லி கூப்பிடத்தான் போன் செய்கிறீர்கள் என்று எவ்வளவோ ஆசையோடு எதிர்பார்த்தேன். ஆனால் எப்போதும் போல், வழக்கம் போல் ஏமாற்றம் அடைந்தேன். நிலைமை ஒன்றும் மாறவில்லை, அப்படியே இருக்கிறது என்று மறுபடியும் வேதனை யுடன் உணருகிறேன்.

Advertisment

ff

DGPமோகன்தாஸ் விஷயத்திலும் நேற்று ஒன்றைச் சொல்லி இன்று மாற்றவில்லை. நேற்று பேசுகையில், "உஏட மோகன்தாஸ் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லி அனுப்பினார்'' என்றுதான் உங்களிடம் சொன்னேன். அவரே நேரிடையாகச் சொன்னதாக நான் சொல்லவில்லையே?

உஏட மோகன்தாஸுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 11984-ல் அக்டோபர் மாதம் நீங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உங்களைப் பார்க்கவிடாமல் என்னை உங்கள் மனைவி தடுத்தபோது, தினமும் உங்களைப் பற்றிய தகவல் அறிய நான் மோகன்தாஸுக்கு போன் செய்வேன். அல்லது அவர் போன் செய்து உங்கள் உடல்நிலை பற்றி சொல்வார். அந்த நேரத்தில் அவரோடு போனில் பேசியதுதான். நேரில் ஒருமுறை கூட சந்திக்கவில்லை. இதுவரை சந்தித்ததும் இல்லை. சிகிச்சைக்காக உங்களை அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற பிறகு, மோகன்தாஸுடன் போனில் பேசுவதும் அத்துடன் நின்று விட்டது. நீங்கள் சென்னையில் மருத்துவ மனையில் இருக்கும் வரைதான் என்னுடன் போனில் பேசினார். என்னிடம் யாரோ ஒருவர் வந்து இங்கே, தான் ஒரு ஈ.ஒ.உ. ர்ச்ச்ண்ஸ்ரீங்ழ் என்றார். அது உண்மையில்லை என்று நான் எப்படி நினைக்க முடியும்? அவர், இந்த தகவலை டி.ஜி.பி. தெரிவிக்கச் சொன்னார் என்றார். நேற்று பேசும்போது, "DGP சொல்லி அனுப்பினார்'' என்று நான் சொன்னபோது, "யார் முலம் சொல்லி அனுப்பினார்?'' என்று நீங்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இதைச் சொல்லியிருப்பேன்.

இன்றைக்கு DGP மோகன்தாஸ் 1 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போன் செய்தார். "அப்படி எந்த தகவலையும் நான் சொல்லி அனுப்பவில்லையே'' என்றார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அப்போது யாரோ ஒருவர், தான் ஒரு C.I.D. officer என்று சொல்லிக்கொண்டு இப்படி DGP சொல்லச் சொன்னார் என்றபோது, உண் மையாக இருக்கும் என்று நம்பி அத்தோடு விட்டுவிட்டேன். நிஜமாக அவர்தான் சொல்லி அனுப்பினாரா என்று நான் அவருக்குப் போன் செய்து கேட்கவில்லை. check செய்யவில்லை. verify செய்யவில்லை. இன்று அவர் "இல்லை'' என்கிறார்.

ff

எது உண்மை என்று எனக்கு எப்படித் தெரியும்?

இங்கே எத்தனையோ பேர் வரு கிறார்கள். ஒருவர் C.I.D. officer என்று சொல்லிக் கொண்டு வருகிறபோது, அவர் உண்மையான officerதானா இல்லையா என்று நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

நிஜமாகவே ஒருவேளை மோகன்தாஸ் சொல்லி அனுப்பியிருந்து இன்றைக்கு "இல்லை'' என்று சொன்னால், அதற்கும் நான் என்ன செய்ய முடியும்?

எது உண்மை என்று எனக்கு எப்படித் தெரியும்? இதில் என் தவறு என்ன இருக்கிறது?

இப்படிப்பட்ட குழப்பங்களே வேண்டாம், வீணான சந்தேகங்களே வேண்டாம், எந்தப் பிரச்சினையிலும் இனிமேல் நான் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதித்தான் "எனக்கு எதுவுமே வேண்டாம், எங்கேயாவது போய்விடுகிறேன்'' என்று கூறுகிறேன்.

நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் உங்களுக்கு சந்தேகமாகவே இருந்தால், நான் என்னதான் செய்வது? நீங்களே சொல்லுங்கள்.

இனிமேல் எந்த சந்தேகத்திற்கும் இடந்தராமல் என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும், கவலையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் அரசியலையே விட்டு விலகி, எல்லாவற்றையும் விட்டுப் போய்விடுகிறேன் என்று நேற்று சொன்னேன்.

"போகவேண்டாம். நான் இருக் கிறேன். இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்'' என்றீர்கள்.

ff

அதற்குள் இன்றைக்கே ஒரு பிரச்னை வந்துவிட்டதே? வீணாக என்னை சந்தேகப் படாதீர்கள்.

நேற்று சொன்னதுபோல் -இத்தனை காலம் எப்படியெல்லாமோ உறவாடி, பழகி, கடைசியில் உங்களுடைய நல்லாசியை, அன்பை, ஆசீர்வாதத்தை இழக்க நான் விரும்பவில்லை.

உண்மையாகச் சொல்கிறேன். நேற்று சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். கடைசியாக நான் உங்களிடம் வேண்டுவது, உங்கள் ஆசீர்வாதம் மட்டும்தான். வேறு எதுவுமே வேண்டாம்.

-உங்கள் அம்மு.

மேல சொன்ன இரண்டும் ஒரு சாம்பிள்தான்...

பொதுவா ஜெயலலிதாவிடம் உள்ள நல்ல குணங்கள்ல ஒண்ணுதான் இந்த பிளாக்மெயில் தந்திரம். யாரை புடிக்கலியோ இவன் ஒரு "பிளாக் மெயிலர்'னு வாய் புளிச்சதா மாங்கா புளிச்சதாங்கற மாதிரி போற போக்குல விதைச்சுட்டு போயிரும். அதையொட்டி தலைவி எவ்வழியோ அதே வழிதான் நம்ம அண்ணன் மரியாதைக்குரிய A.G.நவநீதகிருஷ்ணனும். இவரு மட்டுமா...?

முன்னமே சொன்னேன் பாருங்க சி.பி.சி.ஐ.டி.காரய்ங்க என்ன 10 நாள் கஸ்டடியில விசாரணை செஞ்சாங்கன்னு. அப்ப விசாரிச்ச அந்த நாய் நாகராஜன் D.S.P.யும் இதே மாதிரிதான் "பிளாக்மெயில் செய்து பணம் பறித் தீர்களா?''ன்னு கேட்டான். அதோட விடல... "விடுதலைப் புலிகளின் துணைப்படை ஆதரவாளரா...?''ன்னு வேற கேட்டான். இவனுகளுக்கு ஒருத்தன காவு வாங்கணும்னா இருக்கவே இருக்கு புலி, சிங்கம், கரடின்னு கரடி விட்டுருவாய்ங்க படவா. ஏன் இவனுகள இப்படி திட்டுறேன்னா என்ன அந்த பத்து நாளும் பாடாப்படுத்தி கொன்னு எடுத்துட்டாய்ங்க. நம்மள சித்ரவதைப்ப டுத்துனவய்ங்கள கொஞ்சவா முடியும்... அதான் வாய்க்கு வந்தபடி திட்டுறேன். நீங்க கோவிச்சுக்காதீங்க மக்களே.

அந்த செய்தியையும் "மக்கள் குரல்'ங்கற நாசமா போற ஒரு பத்திரிகையில, அந்தம்மாவ திருப்தி படுத்துறதுக்கு எவ்வளவு கீழ்த்தரமா என்னை சித்தரிக்கணுமோ... அவ்வளவு கீழ்த்தரமா எழுதுனாய்ங்க. ஏன்னா... படி அளக்குற மகராசிக்கு பாதபூஜை செய்யணுமே. இல்லைன்னா வாய்க்கரிசி கிடைக்காதே! இந்த விளங்காத "மக்கள் குரல்' பத்திரிகை நம்மள பத்தி என்னல் லாம் எழுதுனாய்ங்கன்னு பார்த்தீங்கன்னா.... உங்களுக்கே கோவம் வரும்.

ஜெயலலிதாவோட கட்சிப் பத்திரிகை "நமது எம்.ஜி.ஆர்.'ல கூட இப்படி தரம் தாழ்ந்து எழுதியிருக்கமாட்டாய்ங்க. ரொம்ப கீழபோய் ஜெயலலிதா கால நக்கி பிழைக்கிறதால அவனுக போட்ட ஆட்டம் அப்பப்பா...

அவிய்ங்க போட்ட தலைப்ப கீழே பாருங்க...!

கருணாநிதி ஆட்சியில் நடந்த மோசடி:

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் வீரப்பனுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் "பிணைப்பணம்' வசூல் நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபால் "சரண்' அடைய போலீஸ் கட்டளை

ந்த வழியிலயும் ராஜ்குமார் உசுரோட வந்துறக்கூடாதுன்னு இந்த பத்திரிகைக்கு படியளக்குற நரகாசூரிக்கு நல்லது செய்யணும்னுட்டு என்னல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தாய்ங்க பாருங்க. இவிய்ங்கள எதால அடிக்குறது?

வீரப்பன் -ராஜ்குமார் விஷயத்துல உசுர பணயம் வச்சு நாம இப்ப செத்துரு வோம்... அப்ப செத்துருவோம்னு பயந்து, பயந்து ராஜ்குமார காப்பாத்த நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும். இந்த எழவெடுத்த "மக்கள் குரல்'காரய்ங்க இன் னும் நெறைய அபத்தமா எழுதுனாய்ங்க. அதுல ஒண்ணு, ரெண்டதான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்.

இவனுக நினைச்சிருக்கமாட்டாய்ங்க... "இத்தன வருஷம் கழிச்சு நாம எழுதுனத இப்ப ஞாபகம் வச்சு நம்மள கழுத்தறுப் பான் இந்த கோவாலு'ன்னு...

(புழுதி பறக்கும்)