poorkalam

(114) எம்.ஜி.ஆரை பிளாக்மெயில் பண்ணிய அம்மு!

ம்பவம் நடந்த 7-1-2012 சனிக்கிழமையன்னிக்கு மாலையில... நம்ம சீனியர் அட்வகேட் பெருமாள் சார், நடந்ததையெல்லாம் பெட்டிஷனாக்கி... தலைமை நீதிபதி வீட்டுக்கே போய் குறிப்பிட்டுச் சொல்-, அதன் ஒரு நகலை அட்வகேட் ஜெனரல்ட்ட கொடுத்துட்டுத்தான் தலைமை நீதிபதியிடமே கொண்டுபோனாரு.

ஆனா... இப்ப முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறார் ஏ.ஜி.

Advertisment

உடனே சீஃப், "இந்தப் பிரச்சினைக்கு முன்பு இப்படி ஒரு நடவடிக்கை... (அதாவது... கரண்ட் கட், வாட்டர் கட், கழிவுநீர் போக்குவரத்து கட்) எடுக்கப்படவில்லை. மேற்படி செய்தி இந்த பத்திரிகையில் வந்த பிறகுதான் அந்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டிருக்கு. அது நல்லாவே தெரியுது. எல்லா ருமே செய்தி பண்ணியிருக்காங்களே?''ன்னு கேட்ட உடனே...

அதுக்கு ஏ.ஜி. "இல்ல... இல்ல...''ன்னு சொல்-க்கிட்டு, "அந்தக் குடிநீர் இணைப்பில் மாசு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்ததால் அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டது'' அப்படின்னு பல்டி அடிச்சுருக்கார்.

உடனே தலைமை நீதிபதி, "இந்தப் பிரச்சினைய பத்தி இப்பதான் எனக்குத் தெரியவந்துச்சுன்னு சொன்னீங்க. ஆனா நான் கேட்டதுக்கு பதில ரெடியா வச்சிருக்கீங்க. ஆக... உங்களுக்குத் தெரிஞ்சு திட்டமிட்டே காலங்கடத்தி, தள்ளி எடுத்துட்டுப் போறீங்க''ன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னதோட...

Advertisment

"Mr. ஏ.ஜி. சார், எங்கதான் மாசு இல்ல... எல்லா இடத்துலயும்தான் மாசு இருக்குது. ஆறு, குளம், நீர்நிலைன்னு எல்லா எடமுமே மாசாகிப் போச்சு. அத தடுக்கிறதுக்கு அரசு உடனடியா நடவடிக்கை எடுத்துச்சா? இல்-யா? அதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்க அப்படிங்கிறத முதல்ல சொல் லுங்க. அதுக்கான ரிப்போர்ட்ட தயார் பண்ணுங்க. இல்லாம, நீங்க இன்னும் இந்தப் பிரச்சினைய வளத்துக்கிட்டே போனீங் கன்னா... அது பாராளுமன்றம் வரைக்கும் போகும்... ஜாக்கிரதை'' அப்படின்னு எச்சரிக்கை பண்ணி, "கேஸை 11-1-2012-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்''னு சொல்-ட்டாரு.

கோர்ட்ல நடந்தத பெருமாள் சார், அட்வகேட் எட்விக்கிட்ட சொல்-, எட்விக் என்கிட்ட போன்ல விலா வாரியா சொன்னாங்க. AG, எடுத்த உடனே உங்களப்பத்தி இந்த மாதிரி இந்த மாதிரி... "பிளாக்மெயிலர்னு ஆரம்பிச்சாரு' அப்படின்னு சொன்னாரு எட்விக். தலைமை நீதிபதி அத என்கரேஜ் பண்ணல. ஆனா, அதப்பத்தி நம்ம கிட்ட அட்வகேட் சொன்னவுடனே... நமக்கு "சுருக்'னு தச்சிது.

ff

பிளாக்மெயில் பண்றதுக்கு ஒரு மன்றம் வச்சு, இல்ல இல்ல தனியா ஒரு சங்கம் வச்சு... அதுக்கு ஒருத்தர தலைவியா வைக்கணும்னா, அதுக்கு முதல்ல ஜெயல-தாவத்தான் வைக்கணும்.

ஏன்னா, அந்தம்மா... எத்தனை முறை யார், யாரையெல்லாம் பிளாக்மெயில் பண்ணியிருந்துச்சுன்னு முன்னாடி ஒருமுறை நான் எழுதியிருந்தேன்.

இதோ ஆதாரப்பூர்வமான பிளாக் மெயில்...

1985-86. எம்.ஜி.ஆர். முதலமைச்சர்.

அந்த நேரத்துல... இந்தம்மா எப்படி பிளாக்மெயில் பண்ணுச்சு அப்படிங்கிறதுக்கு... பல உதாரணங்கள சொல்லலாம். அதுக்கு ஆதாரமா, நம்மகிட்ட கடிதங்களே நெறைய இருக்கு. இந்தம்மாவ கொள்கைப் பரப்புச் செயலாளரா அ.தி.மு.க.வுல நியமிச்சாரு எம்.ஜி.ஆர். அந்த நேரத்துல "மன்ற முரசு'ன்னு அ.தி.மு.க. சார்பு நாளிதழை முசிறிப்புத்தன் நடத்திக்கிட்டிருந்தாரு.

"அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10-ஆவது ஆண்டு. அந்த தொடக்க விழாவக் கொண்டாடுறதுக்காக தமிழ்நாடுபூராவும் பொதுக்கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், அன்ன தானம்னு நடத்தி கொண்டாடணும். ஜூலை 12, 13 தேதியில மாநாடு நடத்தணும்னும்... அந்த மாநாட்டுக்கு பிரச்சாரமும் செய்யணும்னு சொல்- முசிறிப்புத்தனே, யார்கிட்டயும் கேக்காம தன்னிச்சையா ஒரு அறிக்கை வெளியிட்டாரு.

கொள்கைபரப்பு செயலாளர கலந்துக்காம முசிறிப்புத்தனே அறிக்கை குடுத்ததுனால . இந்தம்மாவுக்கு மூக்கு மேல கோபமாகி... பேப்பர்... பேனா எல்லாம் எடுத்து படபட...ன்னு கடிதம் எழுத ஆரம்பிச்சிருச்சு.

ஒண்ணு தெரியுமா... ஆ... ஊ....ன்னா இந்தம்மா, எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிருவாங்க. அப்படி ஜெயல-தா எம்.ஜி.ஆருக்கு எழுதுன அந்தக் கடிதத்தத்தான் இப்ப நீங்க கீழே பார்க்குறீங்க...

என் இதய தெய்வத்திற்கு உங்கள் அம்மு எழுதிக்கொள்வது.

"மன்ற முரசு'' ஏட்டில் முசிறிப்புத்தன் ஒரு பெரிய அறிக்கை விட்டிருக்கிறார். ஜூன் மாதம் 30-ம் தேதி நீங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 10-வது ஆண்டு தொடக்க விழவை நாடெங்கும் பொதுக்கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், அன்னதானம் போன்றவை நடத்திக் கொண்டாட வேண்டுமென்றும், ஜூலை 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ள மன்ற மாநாடு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், -நிகழ்ச்சிகளை கழக உறுப்பினர்களும் மன்ற மறவர்களும் ஏற்பாடு செய்து, விபரங்களை முசிறிப் புத்தனுக்கு, "மன்ற முரசு'' ஏட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். உங்களைக் கேட்டுவிட்டுத்தான் இப்படி அறிக்கை விட்டாரா? -இல்லை தன்னிச்சையாக இப்படிச் செய்தாரா என்பது தெரிய வில்லை.

பொதுக்கூட்டங்கள், பட்டிமன்றங் கள் இத்யாதிகளை நடத்த -கழகத்திற் கும், மன்றத்திற்கும் சேர்த்து முசிறிப் புத்தனே அறிக்கை விடுகிறார் என்றால் -இவரே கழகத்திற் கும் பொதுச்செய லாளரா -இவரே கழகத்திற்கும் கொள்கை பரப்புச் செயலாளரா?

ஒருபக்கம் ஜேப்பியார் தன்னிச்சையாகக் கூட்டம் கூட்டி, ஜூன் 29-ம் தேதி சைக்கிள் பேரணி என்று அறிவிக்கிறார். உங்களைக் கேட்காமல் உங்களுக்கே தெரிவிக்கா மல் ரகசியமாக கூட்டம் கூட்டினார். ஓட்ட-ல் கூட்டம் நடத்தி, தலைமைக் கழகத்தில் நடத்தியதாக உங்களை ஏமாற்றப் பார்த்தார்.

இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் ராகவானந்தம் தன் இஷ்டப்படி என்னைப் பற்றி மறுப்பு அறிக்கைகளும், பேட்டிகளும் வெளியிடுகிறார்.

இப்போது முசிறிப்புத்தன் ஜூன் 30-ம் தேதி பெரிய திருவிழா நடத்த வேண்டுமென்று, கழகத் திற்கும் மன்றத்திற்கும் சேர்த்தே அறிக்கை விடுகிறார்.

அப்படியானால் நான் எதற்காக இருக்கிறேன்? தினமும் தலைமைக் கழகம் சென்று வா என்று நீங்கள்தானே கூறினீர்கள்? இந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் இருந்தால் -என்னிடம் சொல்- அறிவிக்கச் சொன்னால் நான் அறிவிக்க மாட்டேனா? நீங்கள் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே?

ஒவ்வொருவரும் தன்னிச்சையாக ஏதேதோ அறிக்கைகள் விடுகிறார்கள். நான் ஒருத்திதான் எதையும் உங்களைக் கேட்டுவிட்டு செய்ய வேண்டும் என்று அடங்கிக் கிடக்கிறேன்.

அதற்காக நீங்களே இப்படி என்னை உதாசீனப்படுத்தினால், இனியும் நான் எப்படி கொ.ப.செயலாளராக இருந்து, எந்த முகத்துடன் தலைமைக் கழகத்திற்குப் போவது?

நீங்களே முசிறிப்புத்தனிடம் இப்படி அறிக்கை விடச் சொல்-யிருந்தால்... -இனி எனக்கு என்ன வேலை? பொதுக்கூட்டங்களை அறிவிக்கும் வேலை கூட இல்லை என்றால் -கொ.ப.செ. எதற்கு?

உங்களைக் கேட்காமல் தன்னிச்சையாக செய்திருக்கிறார்கள் என்றால் -அதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

என் நிலைமை என்ன? எனக்கு என்ன வேலை? நான் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக இனியும் நீங்கள் தெரிவிக்காவிட்டால், என்னவென்று நான் செயல்படுவது? இந்த ஜூன் 30 நிகழ்ச்சிகள் உங்கள் சம்மதம் பெற்று அறிவிக்கப்பட்டவைகளா? ஆம் என்றால் அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றால், இனியும் நான் கொ.ப. செயலாளராக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

உங்களைக் கேட்காமல் செய்தார்கள் என்றால் -உடனடியாக நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்தால் தானே? நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால்தானே?

எதைப் பற்றியுமே என்னிடம் சொல்வதில்லை என்றால் -நான் என்ன நினைப்பது, எப்படி செயல்படுவது?

நான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் என் நிலைமை என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்.

வேண்டாம் என்றால் சொல்லுங்கள், போய்விடு கிறேன். ஆனால் இப்படியே இங்கேயே வைத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

-உங்கள் அம்மு

நான் சொன்னேன்ல, பிளாக்மெயில் பண்ணுற சங்கத்துக்கு தலைவி போஸ்ட்டுக்கு ஜெயல-தா மிகச்சரியானவர்னு. அவர் பண்ணுற பிளாக்மெயில்... ரகம், ரகமா இருக்கும். அதுல ஒண்ணுதான் மேல நீங்க படிச்சது..

(புழுதி பறக்கும்)