(111) வாசந்தி -வாந்தி -வதந்தி!
"Besides, rumours abound that Rajkumar's family has agreed to pay Gopal Rs.1 crore if he can secure the actor's release"
-என்று தாம் கேள்விப்பட்ட வதந்தியை வாய்மைச் செல்வி வாசந்தி, "இந்தியா டுடே' செப்டம்பர் 18-ந் தேதி யிட்ட ஆங்கிலப் பதிப்பில் எழுதி யிருக்கிறார்.
நாங்கபாட்டுக்கு செவனேன்னு எங்க வேலையுண்டு, சோலியுண்டுன்னு, ரெண்டு அரசாங்கமும் எங்கள நம்பி குடுத்த தூது போற வேலையை உசுரப் பணயம் வச்சு, தலையை அடமானம் வச்சாவது ராஜ்குமார் சார காப்பாத்தி கொண்டு வந்துரணும்னு மெனக்கெடுறோம். தின்னு... தின்னு... ஏதோ ஏறுற மாதிரி நெறைய வக்கத்தவனுங்க, நமக்கு எதிரா என்னென்னமொ எழுதி நம்மள நோண்டிக்கிட்டே இருந்தாய்ங்க. அதுல சும்மா இல்லாம இந்த அம்மா... வாசந்தியம்மா வேற பேனாவ வச்சுக்கிட்டு கம்முன்னு இருக்காம... என்ன என்னத்தையோ கிறுக்குது. வேற யாருக்குன்னு நெனைச்சீங்க... ஜெயலலிதா மேல நாம நற்ஹஹ் ர்ழ்க்ங்ழ் வாங்கிட்டோமாம்... அதனால வரிஞ்சுக்கிட்டு நம்மள பிறாண்டுதுக...
நம்ம ஐயா சின்ன குத்தூசி சும்மா இருப்பாரா? வெளுத்துட்டாரு...
அது அப்படியே உங்களுக்கு....
"இந்தியா டுடே' தமிழ்ப் பதிப்பிற்கு ஒரு பாட்டி ஆசிரியையாக இருக்கிறார். வாசந்தி என்பது பெயர். அந்தப் பாட்டியிடம் "இந்தியா டுடே' ஆசிரியர், அவர் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிய பிறகும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியபடியே இருக்கிறார்.
வாசந்தி -சோ -ஜெயலலிதா ஆகியோர் "ராஜ்குமார் எப்படியோ போகட்டும் -இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கலைஞர் மீது சேறு வாரி இறைப்பது, அதன்மூலம் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உதவும்படியான சூழ் நிலையை உருவாக்குவது' என்று திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்துவருகிறார்கள்.
வீரப்பன் மீட்புப் பணியில், இரு அரசுகளின் தூதராகச் செயல்படும் நக்கீரன் ஆசிரியரையும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி -ஏதாவது ஒரு அவதூறு பட்டம் கட்டி ஓரம்கட்டிவிட வேண்டும் என்று இந்தக் கெட்டிக்காரர்கள் துடிக்கிறார்கள்.
நக்கீரன் கோபால் கிரிமினல் பேர்வழி என்றால் கிரிமினல் குற்றத்திற்காக தனி கோர்ட்டுகளே அமைக்க வேண்டிய அளவுக்கு கிரிமினல் குற்றங் களைச் செய்த ஜெயலலிதா...
"வீரப்பனின் தூதராக கோபால் செயல் படுகிறார்'' என்கிறார், ஜெயலலிதாவிடம் மீண்டும் நட்பை வளர்த்துக்கொண்டு -ஆலோசகர்களில் ஒருவராகச் செயல்படும் சோ.
இவர்கள் இரண்டு பேரை யும் மிஞ்சும் வகையில் "இந்தியா டுடே' பாட்டி வாசந்தி யம்மாள்...
"ராஜ்குமாரை மீட்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் தரு கிறோம் என்று கோபாலுக்கு -ராஜ்குமார் குடும்பம் வாக் குறுதி அளித் திருக்கிறது'' என்கிறார்.
சோ -வாசந்தி போன்றவர்கள் தர்மம் -நீதி -நாகரிகம் -கலாச் சாரம் -பண்பாடு பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள்; எழுதினால் ராமாயணம் பற்றியும் மகா பாரதம் பற்றி யும்தான் எழுது வார்கள். ஆனால் கோபாலுக்கு ஒரு கோடி தர வாக் குறுதி என்று கை கூசாமல் எழுது வார்கள் இந்த உத்தமோத்தமர் கள். இதே பாணியில்... "கோபாலை -தூதர் பணியிலிருந்து நீக்கும் வகையில் "இந்தியா டுடே'யில் எழுதுங்கள்; நான் இரண்டு கோடி தருகிறேன்'' என்று ஊழல் கோடீஸ்வரி ஜெயலலிதா -வாசந்திக்கு வாக்குறுதி அளித்திருக் கிறார் என்று யாராவது எழுதிவிடட்டும்.
"ஆ... அது எப்படி உத்தமி வாசந்தி யைப் பற்றி இப்படிச் சொல்லப்போச்சு; என்ன ஆதாரம் இருக்கிறது... எங்கள் வாசந்தி என்ன அவ்வளவு ஈட்ங்ஹல்-ஆ? இரண்டு கோடிதான் பெறுவாரா?'' என்ற பத்திரிகை தர்மத்தையும் -பத்திரிகையாளர் மானத்தையும் காக்க, துள்ளிக் குதித்து வந்துவிடுவார்கள்.
வாசந்திக்கு -ஜெயலலிதா இரண்டு கோடி லஞ்சம் தரப்போகிறார் என்று யாராவது எழுதினால் அதை நூற்றுக்கு நூறு நம்புவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கின்றன.
ஜெயலலிதா -கோபால் மீது இப் படிப்பட்ட அவதூறுகளை பரப்பிய போது -நக்கீரன் ஆசிரியர் நீதிமன் றத்தை அணுகினார். நீதிமன்றம் -ஜெய லலிதா, கோபால் பற்றி எதுவும் கூறக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது.
ஆகவே ஜெயலலிதா, "நான்தானே இப்படிப்பட்ட அவதூறுகளை -கோபால் பற்றி எழுதக்கூடாது -இதோ எனது அரசியல் ஆலோசகர் சோ இருக்கிறார்; இதோ "இந்தியா டுடே'யி லிருந்து ஓய்வு பெற்றதும் -ஜெயா டி.வி.க்கு தாவலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் என் இனிய நண்பி வாசந்தி இருக்கிறார்; அவர்கள் இருவரும் என்னைவிட பிரமாதமாக இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்பும் அபார திறமைசாலிகள்; அவர் களை விட்டு நான் விரும்பும்வண்ணம் -கோபால் மீது அவதூறு பரப்பினால்... ஏ கோர்ட்டே உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று சவால் விடுவதுபோல சோவையும் -வாசந்தியையும் தூண்டி விட்டிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கின்றதல்லவா?
ஜெயலலிதா தூண்டுதல் பேரில் -ஜெயலலிதாவால் சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக எழுத முடியாத அவதூறுகளை இரண்டு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் வாசந்தி எழுதுகிறார் -என்று வதந்திகள் பரப்பப்படுமானால் -அந்த வதந்தியை உண்மையென்றே எல்லோரும் நம்பும்படியாக -வாசந்தியின் எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன.
"Besides, rumours abound that Rajkumars family has agreed to pay Gopal Rs.1 crore if he can secure the actor's release"
-என்று தாம் கேள்விப்பட்ட வதந்தியை வாய்மைச் செல்வி வாசந்தி, "இந்தியா டுடே' செப்டம்பர் 18-ந் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பில் எழுதியிருக்கிறார்.
"கோபாலுக்கு ஒரு கோடி தர ராஜ்குமார் குடும் பம் வாக்குறுதி'' -என்பது வாசந்தி வாந்தி எடுத்த முதல் வாந்தி என்றால் -அதே கட்டுரையில் இன்னொரு வதந்தி யையும் அவர் ரொம்ப திறமையாக பரப்பியிருக்கிறார்.
அது என்ன?
"அரசு தூதராக கோபாலை அனுப்புவதை வீரப்பன் ஒருபோதும் விரும்பவில்லை'' -என்பதுதான் வாசந்தியம்மாளின் அடுத்த வதந்தி!
வீரப்பனின் விருப்பம் -விருப்பமின்மை பற்றியெல்லாம் இந்த அம்மாளுக்கு இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறதே -எப்படி என்று யாரும் கேட்க முடியுமா?
""It is now reliably learnt that Veerappan never wanted Gopal as an emissary" என்று இந்த "வதந்தி'யை "வதந்தியல்ல, நம்பத்தகுந்த வதந்தி' என்பதாக எழுதியிருக்கிறார் அவர்.
வாசந்தியின் கட்டுரை முழுவதும் அவருக்கே உரிய மேல்தட்டு கெட்டிக்காரத் தனம் விரவிக் கிடக்கிறது. ஒவ்வொன்றையும் எழுதும்போது 'ஊஷ்ல்ங்ழ்ற்ள்' (நிபுணர்கள்) கருதுகிறார்கள். 'ஆய்ஹப்ஹ்ள்ற்ள்' கூறுகிறார்கள் என்று நாவல் மாதிரியே கற்பனை நிபுணர்களையும், கற்பனை வியாக்கியான கர்த்தாக்களையும் உருவாக்க அந்தக் கற்பனைப் பாத்திரங்கள் பேராலேயே -ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்... "கருத் துக் கூறுகிறார்கள்'' என்று எழுதியிருக்கிறார்.
வாசந்தியின் நாவலுக்கும் -கட்டுரைக்கும் என்ன வித்தியாசம்?
நாவலில் -அவர் படைக்கும் கற்பனைப் பாத்திரங்களுக்கு ஜெயா -ராமசாமி என்று பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டுரையில் -அவர் படைத்துள்ள கற்பனைப் பாத்திரங்களுக்குப் பெயர் எதுவும் இல்லை. எக்ஸ்பர்ட்டுகள் -அனலிஸ்ட்கள் என்று முகமூடிகள் மட்டுமே போட்டுவிட்டிருக்கிறார் -தனது கற்பனைப் பாத்திரங்களுக்கு!
கோபால் மீது இந்த அம்மையாருக்கு, "சோ'வைப் போலவே எவ்வளவு பொச்சரிப்பு -பொறாமை -எரிச்சல் இருக்கிறது என்பதை -கட்டுரையில் இவர் வைத்துள்ள ஒரு புகைப்படமே நிரூபிப்பதாக இருக்கிறது.
வீரப்பனும் -ராஜ்மாரும் -கோபாலும் காட்டுக்குள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி அடங்கிய புகைப்படம் அது. அதிலே-
கோபாலின் முகத்தைச் சுற்றி வளையம் போட்டு -வாசகர்களுக்கு "இவர்தான் கோபால்'என்று இந்த இன்டர்நேஷனல் புகழ் அம்மையார் -அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
வாசந்தி என்றால் -ஐ.நா. சபையில், கோபிஅன்னான் வரையிலே பிரபலம்! கோபாலை, "இந்தியா டுடே' வாசகர்களுக்குத் தெரியாது. ஆகவே அம்மையார் சிரமப்பட்டு "இவர்தான் கோபால்' என்று வட்டம் போட்டு அடையாளம் காட்டியிருக்கிறார்.
நக்கீரன் அலுவலகம் தந்த படத்தில் -நக்கீரன் ஆசிரியர் முகத்தைச் சுற்றி வட்டம் போட்டு -தனது தனித்தன்மையையும் -பெருந்தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
கட்டுரை முழுவதிலும் நக்கீரன் ஆசிரியர் மீது கை கொண்ட மட்டும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.
(புழுதி பறக்கும்)