dd

(108) சோ கக்குன விஷம்!

சோ மேட்டருக்கு மறுபடியும் வர்றேன்.

Advertisment

2000-ல திரும்பவும் கம்பி கட்ற கதையச் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்னு நெனைச்சிறாதீங்க. எல்லாத்துக்கும் பின்னணியில ஒரு பெரிய பொ... அரிப்பு இருக்குன்னு மட்டும் தெரியுது.

சோ சார் எவ்வளவு பெரிய ஆளு. அவரு ஏன் உன்மேல பொ... அரிப்பு படுறாருன்னு உங்களுக்கெல்லாம் சந்தேகம் வரும். நானும் அப்படித்தான் நினைச்சேன்.

97-ஆம் வருஷத்துலயே வீரப்பன், வன இலாகா அதிகாரிகள கடத்துனப்ப, நக்கீரன் தூது போய் படாதபாடுபட்டு 9 பேர மீட்டுச்சு. அவரு அப்பவே கிண்டல், கேலி எல்லாம் பண்ணுனாரு. நானும் அத பெருசா எடுக்கல. பெரியமனுஷன் போறாருன்னு விட்டுட்டேன்.

Advertisment

சோ மாதிரி உள்ள ஆளுங்கள்லாம் அன்னிக்கு கோலோச்சுன பத்திரிகை உலகம். ஆப்ட்ரால் ஒரு கடைநிலை ஊழியரோட மகனா பொறந்த கோபால், அவனோட இருக்குற சின்னச் சின்னப் பொடிப்பசங்க... நம்ம கண்ணுல விரல விட்டு ஆட்டுறானுங்களேங்கிற எண்ணம் அவங்களுக்கு சுருக்... சுருக்குன்னு குத்துது.

நாங்க ஒண்ணும் அவங்க கண்ணுல விரல விட்டுல்லாம் ஆட்டல. நக்கீரனுக்கு ஒரு பாதையப் போட்டு... அது ஒத்தையடிப் பாதைதான்... அதுல பொடிநடையா போய்க்கிட்டிருந்தோம்.

நாமபாட்டுக்கு நம்ம வேலையுண்டு, சோலியுண்டுன்னு திரியுறோம். நாமளும் இவங்க திசைக்கு தலைவச்சுப் படுக்கறதே இல்ல. இவங்கள்லாம் எல்லா பலத்தோட... குறிப்பா சொல்லணும்னா... அது சாதி, சமூகம், பொருளாதாரம் எல்லாத்துலயும் மொரட்டு சப்போர்ட்டோட தெனாவெட்டா திரியுறவங்க. நாம அன்னாடங்காச்சிக. இத வச்சுத்தான் சோறு... இத வச்சுதான் எதிர்காலம்னு உழைச்சிக்கிட்டு வர்றோம்.

இப்பக்கூட பொருளாதாரத்துல பிரச்சன வந்து அது வங்கியில நம்மளோட வரவு செலவ பாதிச்சு, அதனால வங்கி நமக்கு எதிரா நடவடிக்கை எல்லாம் எடுத்துச்சு. இந்த நாய்ப்பசங்க கொஞ்சம்பேரு அத ஊதிப் பெருசாக்கிப் பாக்குறாய்ங்க. ஏண்டா பரதேசிகளா... தொழில்னா ஆயிரம் நஷ்டம், லாபம் எல்லாம்தான் இருக்கும். நீங்க வெறும்பயலுக... உங்களுக்கு இதப்பத்தி என்ன தெரியும்? இருக்கட்டும்... இருக்கட்டும்...! எல்லாருக்கும் ஒரு கேடு வராமலா போகும்... பரதேசி நாய்களா... நல்லாத்தான் வருது வாயில.

நாங்க என்ன உங்ககிட்ட கையேந்தியா நின்னோம்... மடப்பசங்களா. கோவிட்னு ஒரு எழவு வந்து இத்தன கஷ்டத்தயும் தாங்கி ஒரு பத்திரிகை நடத்திப் பாருங்கடா எடுவட்ட நாய்களா... அப்பத்தான் தெரியும், எங்களுக்கு இருக்கிற வ- என்னன்னு. தெருவுல கிடந்த நாயெல்லாம் கொடுக்கு முளைச்ச மாதிரி பேசுது. அவங்க வாயில புத்து முளைக்க... நாசமா போவீங்கடா...

ff

வம்புக்குன்னு நம்ம காலர புடிச்சு இழுத்து, "என்கூட கோதாவுக்கு வா... வா...'ன்னு சொல்ற மாதிரிதான்... அப்ப "சோ'வோட சேர்ந்தவங்கள் லாம் நடந்துக்கிட்டாங்க. வீரப்பன் காட்டுல அத்தன பாடுபட்டுப் போறோம். ஏதோ ஒண்ணு நடந்து உசுரு போயிருந்தா.... இவனுகளா குடுப்பாய்ங்க. நாம திரும்பி வரவே கூடாதுன்னு விரதம் இருந்தவய்ங்க ஏராளம். எவ்வளவோ பறிகொடுத்துட்டு, ஏதோ உசுரு மட்டும் ஒட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி காட்ட விட்டு வெளிய வந்தோம். அந்தக் கடுப்புதான் எனக்கும்... "என்னடா... நாம நமக்குக் குடுத்த வேலையத்தானே பாத்தோம். இவனுக ஏன் தலைய நுழைக்கி றாய்ங்க'ன்னு. நீங்களே சொல்லுங்க மக்களே...!

2000-ல ராஜ்குமார் கடத்தல். தூதுவனா என்ன ஜெயல-தா அனுப்பக்கூடாதுன்னு சொன்ன பிறகும், நான் கோர்ட்ல போய் அந்தம்மா வுக்கு எதிரா தடை வாங்கி, அதுக்கு அப்புறமா ராஜ்குமார் மீட்புக்காக நாங்க உள்ள போறோம்.

நாலஞ்சு ஆங்கிலப் பத்திரிகைக்காரங்க, பெரிய ஹோட்டல்ல தனியா ரூம் எடுத்து கம்ப்யூட்டர் சகிதம் உக்காந்து, என்னப் பத்தி இந்தியா பூரா வந்த செய்திகள் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி, அதுக்கு ஒரு ரேட் போட்டு, "இவ்வளவு ரூபாய் செலவழிச்சா... அதுக்கு விளம்பரம் மூலமா 40 கோடி ரூபாய் வரும்' அப்படின்னு கட்டம் கட்டியிருந்தாங்க.. செய்தியாவே! (இத முன்னாடியும் நான் சொல்-யிருப்பேன்) எதுக்கு இதச் சொல்றேன்னா... எவ்வளவு பொ... அரிப்பு இருந்தா இவ்வளவையும் பண்ணியிருப்பாங்க அவங்க.

அதுக்கு அடுத்த கட்டமாத்தான் 2000-ல "டைம்ஸ் ஆப் இந்தியா' சார்பா சோ கிட்ட ஒரு பேட்டி எடுக்குறாங்க. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பெரிய பத்திரிகையாளர்ல.

ff

இரண்டு மாநில அரசும் வேலயயெல்லாம் விட்டுட்டு... வீரப்பன் -ராஜ்குமார் கடத்தல்... அதச் சுத்தி நடக்கிற போராட்டம்.... கர்நாடகாவுல பெரிய அளவுல பந்த். எப்ப, எந்த தலை உருளுமோ? தகதகன்னு கொதிப்பு அடங்காம எல்லாரும், "நக்கீரன் வருவானா? இல்ல அவனையும் சேர்த்து வீரப்பன் உக்கார வச்சுட் டானா?'ன்னு பதக்... பதக்...னு டெய்- வர்ற பேப்பர்களயும், டி.வி. நியூஸ்களயும் பாத்துப் பாத்து கண்ணு பூத்துப்போய் அப்படியே வாய்மேல கைவச்சு உக்காந்து கிடக் கிறப்ப....

பொல்லாப்பும், பொ... அரிப்பும்... உடம்பெல்லாம் ஏறிப்போய்க் கிடக்குற சோ மாதிரி கொஞ்சம் பெருசுக "என்னடா இவன் ஒரு சின்னப் பையன். அதுவும் எங்க இருந்தோ வந்த ஒரு படவா. இன்னைக்கு இவனச் சுத்தி தமிழ்நாடும், கர் நாடகமும் இருக்கேங்கிற பொறாமையில... "டைம்ஸ் ஆப் இண்டியா' ஆங்கிலப் பத்திரிகையில, அதுவும் கர்நாடகால இருந்து வர்ற பத்திரிகைக்கு பேட்டி குடுக்கிறாரு.

நாம பேட்டி குடுக்க வேண்டாம்னு சொல்லல... ரொம்ப பெரிய ஆளு, பழம் தின்னு கொட்ட போட்ட வரு... அதெல்லாம் வேற. சனியன் புடிச்ச மாதிரி நம்மள வம்புக்கு இழுக்கு றதுதான் கடுப்பாயிருச்சு.

அப்பவே சொன் னேன்... "உங்களுக்குத் தைரியம் இருந்தா நீங்களே நேரா போய் ராஜ்குமார மீட்டுட்டு வாங்க''ன்னு. அதுக்கு திராணி இல்ல... வக்கு இல்ல. உக்காந்த இடத்துல இருந்தே நம்மளக் சீண்டுறாரு பாருங்க.

dd

நாம வீரப்பன் காடு, மேடுன்னு அலஞ்சு... அலஞ்சு திரிஞ்சு, இதுகள இப்பத்தான் தெரியுது கூடவே ஒரு எட்டப்ப நாயி ஒண்ண வேற கூட்டிட்டு அலைஞ்சிருக்கோம்னு... அத விடுங்க. அந்தப் பொறம்போக்க பல தடவ நரகல்ல விளக்கமாத்த புரட்டி எடுத்து நாலு வப்பு வச்சாக்கூட நமக்கு மனசு ஆறாது. அத்தன துரோகம்... இப்ப ஒவ்வொண்ணா நினைக்க... நினைக்க பத்திக்கிட்டு வருது.

சரி... சரி... டிராக் மாறிடக்கூடாதுல்ல...

நாங்க இந்தப் பிரச்சினையில தலையிட்டு முடிச்சது 2000 வருஷத்துல. இப்ப என்ன? 2022-ஆம் வருஷம். கிட்டத்தட்ட 22 வருஷமா ஒரு விஷயம் நிக்குதுல்ல. அப்ப நாம சிந்துன ரத்தம் எவ்வளவு? வேர்வை எவ்வளவு? இழப்பு எவ்வளவு? யோசிங்க...! கூசாம வாய் புளிச்சதா... மாங்கா புளிச்சதான்னு இஷ்டத்துக்குப் பேசியிருப்பாரு.

அதுல சோ விஷத்த கக்குறாரு. அந்த விஷம் என்ன தெரியுங்களா?

dd

அவரு சொல்றாரு... ஒIt appears that Gopal is the defacto Chief Minister of Karnataka and Tamilnadu. The Two Chief Ministers Karunanidhi and Karnataka counterpart S.M.Krishna have became is P.A. is a Gopal comes from the forest and handover the demands advising the two what to do?

அப்படின்னு பேட்டியில கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றாரு. அதுக்கு என்ன அர்த்தம்னா?

"கோபால்தான் இப்போது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உண்மையான முதலமைச்சர் என்பதுபோல செயல்படுகிறாராம். கலைஞரும், கிருஷ்ணாவும் கோபா-ன் செயலர்கள் போல் செயல் படுகிறார்களாம். கோபால் காட்டுக்குள் இருந்து வருகிறார், கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். இரண்டு மாநில முதல்வர்களும் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்...'' அப்படின்னு சோ அந்த பேட்டியில சொல்றாரு.

இது எவ்வளவு பெரிய வயித்தெரிச்சலோட உச்சம்...!

அவரு பேட்டி குடுத்தப்ப நான் காட்டுக்குள்ள இருந்ததுனால எனக்கு அப்போ தெரியாது. நான் சொல்றது 2000-ல நடந்தது. அப்போ ஒரு வேள்வியா நெனைச்சு பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு வாய்ப்புதான்... உயிரப் பணயம் வைக்கிற வாய்ப்புதான்... இருந்தாலும் அத கலைஞர் எங்களுக்கு குடுத்த மகுடமா நெனைச்சி ஏத்துக்கிட்டோம்.

அந்த மிஷன் ரொம்ப முக்கியம்ங்கிறதால மத்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுக்கல. அதனாலத்தான் "டைம்ஸ் ஆப் இந்தியா'ல வந்த அந்த பேட்டிய கண்டுக்கல. அதக் கண்டுக் கிட்டிருந்தோம்னா நம்ம போயிட்டிருக்கிற வழி மாறிரும்ல. அதனாலதான் அத நான் கேட்டுக்கல.

இதவிடல்லாம் பயங்கரமான செய்திகளையும் பண்ணியிருக்காங்க. அதாவது... "கோபால புடிச்சி வச்சிருக்கிறதா' சொல்றது, "கோபால கைதுபண்ணி ஜெயில்ல வச்சிட்டாங்க'ன்னுல்லாம் சொல்- செய்தி பரப்புனாங்க.

"டைம்ஸ் ஆப் இந்தியா'ல அந்தப் பேட்டி வந்த சமயம் சின்ன குத்தூசி ஐயா இருந்தாங்க. எங்களுக்கு எல்லாமுமா இருந்தவங்க அவங்க. நான் காட்டுக்குப் போயிருந்த சமயங்கள்ல... தினமும் எங்க வீட்டுக்குப் போய் அப்பா-அம்மா ஸ்தானத்துல இருந்து ஆறுதல் சொன்னவங்க. எங்க அப்பா-அம்மா அப்போ இருந்தாங்க... இருந்தாலும் குரு ஸ்தானத்துல இருந்து என் துணைவியாருக்கும், என் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்வாங்க. என் பிள்ளைகளுக்கு தஞ்சாவூர் பட்சணக் கடையில இருந்து பலகாரம் வாங்கிட்டுப்போய் வாஞ்சையோட குடுப் பாங்க. பிள்ளைங்கள்லாம் வீட்டுலயேதான் அடைஞ்சிருந்தாங்க. யாருமே வெளிய போகாம கவலையோட இருக்கும்போது, ஐயாதான் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்-ட்டு அதுக்கப்புறமாத்தான் முரசொ- ஆபீசுக்குப் போவாங்க.

"டைம்ஸ் ஆப் இந்தியா'ல சோ எழுதுனதுக்கு பதில் குடுக்குற விதமா ஐயா கடுமையான ஒரு கட்டுரை எழுதியிருப்பாங்க. அந்தக் கட்டுரை நக்கீரன்லயும் வந்தது, முரசொ-யிலயும் வெளிவந்தது.

அந்தக் கட்டுரையோட தலைப்பு...

ஆங்கில ஏட்டில் "சோ' வின் விஷமப் பிரச்சாரம்!

(புழுதி பறக்கும்)