டந்த அக்டோபர் 25-ஆம் தேதி பகலில், அண்ணா நகர் வி.ஆர்.மால் உணவகத்தில், 55 வயது மதிக்கத்தக்க பெண்மணியை, திடீரென அங்குவந்த ஒரு ஆண் உள்பட இரண்டு பெண்கள் சரமாரியாகத் தாக்கியதில் நிலை குலைந்து மயக்கமடைந்து சரிந்தார் அந்தப் பெண்மணி. இதைக்கண்ட சிலர், அப்பெண்மணியை மீட்டு, அருகிலுள்ள பீ வெல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது தொடர்பாக சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியோடு விசாரணை செய்ததில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், முன்னாள் பெண் டி.ஜி.பி. திலகவதியின் மருமகள் ஸ்ருதிதிலக் மற்றும் அவரின் பெற்றோர் கண்ணுசாமி, உஷா ஆகியோர் என்பது தெரியவந்தது. தாக்கப்பட்ட பெண், சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் என்பதும் தெரியவந்தது.

ddg

தாக்குதல் குறித்து அப்பெண்மணியிடம் கேட்டபோது, "முன்னாள் டி.ஜி.பி. திலகவதி எனது குடும்ப நண்பர். அவரது மகன் டாக்டர் பிரபுதிலக் எனது மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அவரது மனைவி ஸ்ருதி திலக், தனது தந்தை கண்ணுசாமியின் தனிப்பட்ட தேவைக்காக என்னிடம் கடனாக பணம் கேட்டார். குடும்ப நண்பர் என்பதாலும், முன்னாள் டி.ஜி.பி. திலகவதி அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் பெய ரிலும், கடந்த 2021 செப்டம்பர் மாதம் எனது மருத்துவமனையில் வைத்தே ஐந்து லட்சம் ரூபாயை ஸ்ருதியின் தந்தை கண்ணுசாமி யிடம் கொடுத்தேன். (அதுகுறித்த வீடியோ ஆதாரத்தையும் நம்மிடம் காட்டினார்). சென்னை கொளத்தூரில் நாங்கள் புதிதாகக் கட்டிவரும் மருத்துவமனைக்கு பிரபுதிலக் தான் பொறுப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோதுதான், அவர்களின் சுயரூபம் தெரியவந்தது. ஸ்ருதி யும், அவரின் தந்தையும், மருத் துவமனையே இல்லாமல் ஆக்கி விடுவோம் என்றும்; கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். மேலும், பிரபுதிலக்கை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினர். பிரபுதிலக்கிடம் இதுகுறித்து கேட்டபோதுதான் அவருக்கும் அவரது மனைவிக்குமிடையே கருத்துவேறுபாடு இருப்பது தெரிய வந்தது. எனக்கும் பிரபு திலக்குக் கும் தகாத உறவு இருப்பதாக ஸ்ருதி அவதூறு பரப்பியதால் அதுகுறித்து போலீசில் புகாரளித் தேன். புதிய மருத்துவமனை தொடர்பாக பொறி யாளருடனும், பிரபுதிலக்குடனும் வி.ஆர்.மாலில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது தான் என் மீது கொலைவெறியுடன் தாக்கினார்கள்" என்றார்.

Advertisment

dgp

இது தொடர்பாக பிரபுதிலக்கிடம் கேட்ட போது, "எனக்கு முதல் திருமணம் முறிந்ததால், ஸ்ருதியை இரண்டாவது திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என வாழ்க்கை நன்றாகவே சென்றது. ஸ்ருதி எம்.சி.ஏ. முடித்திருப்ப தாகக் கூறினார், ஆனால் பி.பி.ஏ. மட்டுமே படித் திருப்பது பின்னர்தான் தெரியவந்தது. ஸ்ருதி, பெங்களூரு லா காலேஜில் சேர்த்து எல்.எல்.பி. படித்தார். எனக்கு திரைப்பட ஆர்வமிருந்ததால், "அடுத்த சாட்டை' என்ற படத்தை இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இணைந்து தயாரித்தேன். பின்னர், ஸ்ருதியை தயாரிப்பாளராக்கி 'வால்டர்' படத்தை எடுத்தேன். இந்நிலையில், ஸ்ருதிக்கு, மகேஷ் என்பவரோடு ஜிம்மில் வைத்து பழக்கமானது. இருவருக்கு மிடையே ஏற்பட்ட தகாத உறவு, எங்கள் வீட்டு படுக்கையறை வரை தொடர்ந்ததில், கையும்களவுமாக வீடியோ பதிவாகவே சிக்கினார்கள். வயதுக்கு வந்த பெண் குழந்தை உள்ளதால் நான் ஸ்ருதி குடும்பத்தினரை அழைத்து, அவருக்கு புத்தி சொல்லி மன்னித்து அவரோடு வாழத் தொடங்கினேன். இந்த நிலையில், சுருதி வழக்கறிஞராக பதிவு செய்து விட்டு தினமும் ஹைகோர்ட் டுக்கு சென்று வந்தார்.

கடந்த 2021 டிசம்பர் 30ஆம் தேதி, 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத் தின் வினியோகஸ்தராக இருந்த நான், ரிலீஸ் வேலை களில் கவனமாக இருந்த போது, திடீரென 16 லட்சம் ரூபாயுடன் ஸ்ருதி எஸ்கேப்பானார். ரிலீசுக்கு பணமில்லாமல் மிகவும் சிக்கலை அனுபவித்தேன். அவருடைய செல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்படி, தவறான பழக்கவழக்கங்களால் எதாவது பிரச்சனை செய்து அவ்வப்போது வீட்டிலிருந்து காணாமல் போவது ஸ்ருதியின் வழக்கமானது. அடுத்து, ஒரு வழக்கறிஞருடன் பழக்கமாகி, தகாத உறவிலிருந்தது குறித்து ஆதாரத்துடன் ஸ்ருதியை கேள்வி கேட்டதற்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி காணாமல் போனார். கடந்த 2022 மே 12ஆம் தேதி ஸ்ருதியின் பிறந்தநாளன்று வெளியே சென்று இரவு நீண்ட நேரம் கழித்து வந்தார். அப்போதும் ஓர் ஆண் நண்பனுடன் இருந்ததாகத் தகவல் கிடைத்தது. நான் அபோதும் அவர்மீதான நம்பிக்கையில் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

ff

Advertisment

முன்னாள் டி.ஜி.பி.யான என் அம்மாவின் 70-வது பிறந்தநாள் விழா, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், செப்டம்பர் 28-ஆம் தேதி சேலம் போலீசில் என் மீது அவதூறு புகாரளித்தார். இதைத் தட்டிக் கேட்டதால், என்னைவிட 15 வயது மூத்த பெண் டாக்டரோடு இணைத்து அவதூறு பேசியவர், அக்டோபர் 25-ஆம் தேதி அந்த டாக்டரை, அவரது பெற்றோருடன் சேர்ந்து கொலை வெறியுடன் தாக்கினார். அந்த சம்பவம் குறித்து சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் கைது செய்யப்பட்டு... நீதிமன்ற காவ லில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். தன் குடும் பத்தை மறந்து இப்படி தவறான பாதையில் அவர் செல்வது வருத்தமளிக் கிறது'' என்றார்.

ஸ்ருதிதிலக்கிடம் கேட்ட போது, "இருவருக்குமே நீண்ட காலமாக சண்டை தான். இவருக்கும் சரண்யான்னு ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு. அதைக் கேட்டா, என் மீதே பொய்ப் புகார் சொல்றாரு. ஜிம்முல மகேஷ்னு ஒரு நெருங் கிய நண்பரோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு காசு கொடுத்தேன். உடனே அவரை போலீசை வைத்து கடத்திட்டு வந்து, பெட்ரூம்ல என்னோட இருந்ததா சொல்லச் சொல்லி மிரட்டி வீடியோ எடுத்து அபாண்டமா பழி போடுறாரு'' என்றவ ரிடம், ஏன் போலீஸில் கம்ப்ளைண்ட் செய்ய வில்லைன்னு கேட்டதும், "அவர் முன்னாள் டி.ஜி.பி. மகனென்பதால் போலீஸ் அவர் பேச்சைத்தான் கேட்குது'' என்றார். உங்களுக்கும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒரு வருக்கும் தொடர்புன்னு குற்றம் சாட்டுறாங்களே என்று கேட்ட தற்கு, "அவரோட பழகச் சொன்னதே என்னோட கணவர் பிரபுதிலக்தான்'' என்றார். "திலக் சேலத்தில் நிலம் தொடர்பாக ஒரு வருக்கு தரவேண்டிய பணத்துக் காகத்தான் அந்த சேலம் டாக்ட ரிடம் பணம் வாங்கினேன். அந்த டாக்டரே, திலக் படம் எடுக்குறதுக் காக ஒரு கோடி பணம் வாங்கிட்டு திருப்பித் தரலைன்னு சொன் னாங்க'' என்றவரிடம், பிறகெப்படி திலக்கை இப்பவும் வேலையில் வைத்திருக்கிறார்களென்று கேட்ட தற்கு, "கணவருக்குத் தெரியாமல் கொடுத்திருப்பாங்க'' என்று சளைக்காமல் பதிலளித்தார்.

தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, முதல் பெண் டி.ஜி.பி. என்றெல்லாம் பெய ரெடுத்தவரின் குடும்ப விவகாரம், பொதுவெளிக்கு வந்திருப்பது வேதனைக்குரியது.