கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை தலைவராக இல்லாத அ.தி.மு.க. பிரமுகர் முறைகேடு செய்துள்ளதும், இதனைக் கேள்வி கேட்ட தற்போதைய தலைவருக்கு கொலை மிரட் டல் விடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே அத்திப்பட்டு ஊராட்சி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகிறார்கள். தற்போதைய தலைவ ராக சுகந்தி சரவணன் உள்ளார். “ஊராட்சி வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1 லட்சத்தை சிலர் முறைகேடாக எடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி நக்கீரனில் வந்தால் அரசின் கவனத்திற்கு சென்று நடவடிக்கை துரிதமாக இருக்கும்’’ என்றார்.
“""அலுவலகத்தில் கடந்த மாதம் தணிக்கை செய்தபோது ஊராட்சி நிதியில் ரூ.1 லட்சம் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியில் புகாரளிக்கப்பட்டது. அப்போது அத்திப்பட்டு ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் அக். 3-ஆம் தேதி பணத்தை அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார் என கூறினார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவரிடம் "எப்படி அரசுக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தீர்கள்? நாங்கள் எடுக்கவேண்டும் என்றாலே ஓ.டி.பி. என பல கட்டுப்பாடுகள் உள்ளதே?' என கேட்ட போது, "என் அக்கவுண்டிலிருந்து பணத்தை எடுத் துள்ளேன். ஓங்கிட்ட பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை' என தரக்குறைவாகப் பேசினார். இதனால் மனவேதனையடைந்த நான், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு புகாரளித்தேன். இதனையறிந்த அவர் எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்''’’ என்றார்.
சம்பந்தப்பட்ட ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “அவரது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துள்ளதாகவும் இதற்கு ஆதாரம் உள்ளது. தங்களை நேரில் சந்தித்து வழங்கு கிறேன்’’ என்றார். ஆனால் ஆதாரம் கேட்டு தொடர்ந்து போன் செய்தும் அவர் போனை எடுக்க மறுத்துவிட்டார்.
சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மேலா ளர் ஹரிகரனிடம் பேசினோம். அவரோ, ""ஜெயக்குமார் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபோது அவரது செல்போன் நம்பரை ஊராட்சி வங்கிக் கணக்கிற்கு பயன்படுத்தியுள் ளார். அந்த வங்கிக் கணக்கிலிருந்து செல்போன் நம்பரை மாற்றாததால் இவர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். புகார் வந்தவுடன் அவரிடம் தெரிவிக்கப்பட்டது . உட னடியாக பணத்தைக் கட்டிவிட்டார்''’என்றார்.
குமராட்சி காவல் நிலைய ஆய்வாளர் அமுதாவோ, "இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகாரளித்துள்ளனர். விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம்'' எனக் கூறினார்.
-காளிதாஸ்