hhh

""கோவை இக்கரை போளுவாம்பட்டியில் பழங்குடி மக்களுக்கான 44.3 ஏக்கர் நிலத்தை ஜக்கியின் ஈஷா யோகா மையம் ஆக்ரமிப்பு செய்திருந்தது. இதனைக் கண்டறிந்த முற்போக்கு மக்கள் நல அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தியதின் விளைவாக கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியர், நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனவும், வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார். மேற்படி நிலத்தில் குளம் ஒன்றை வெட்டி, அதில் மின் மயானக் கழிவுகளைக் கொட்டி வருகின்றது ஜக்கியின் ஈஷா மையம் என்கின்ற தகவல் வர, அதன் உண்மைத் தன்மை அறிய அங்கு சென்றபொழுது, ஈஷா யோக மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, சசிகலா, வெங்கட் ராஜா, நந்தகோபால் உள்ளிட்டோர் குண்டர்களுடன் நாங்கள் சென்ற வாகனத்தை, டிராக்டரை வைத்து மறித்து எங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம்'' என்றார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு.இராமகிருஷ்ணன்.

Advertisment

வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 4 மணியளவில், கோவை முட்டத்துவயல் பகுதியில் ஈஷா யோகா மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடை உள்ள பகுதியை ஆய்வு மேற்கொள்ள, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு.இராமகிருஷ்ணன் தலைமையில், திராவிட இயக்க தமிழர் பேரவை நாகராஜ், தமிழ் புலிகள் கட்சி இளவேனில், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் வாகனத்தில் சென்ற நிலையில், பேரி கார்டு, டிராக்டரை கொண்டு வழியை மறைத்திருக்கின்றனர் ஈஷா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா தலைமையிலான குண்டர்கள்.

""பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத்தான் ஈஷா மின் தகன மேடை என்கிறீர்கள். அப்புறம் ஏன் பொது வழியை மறைக்க வேண்டும்..?'' என்ற கேள்விகளை முற்போக்கு இயக்கங்கள் முன் வைக்க... அவர்களை அசிங்கமாக வசைபாடியதோடு தினேஷ்ராஜா, வெங்கட்ராஜா, நந்தகேபால் உள்ளிட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது போலீஸôரின் முன்னிலைலேயே நடந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

Advertisment

பேராசிரியர் காமராஜோ, ""சட்டவிரோதமாக அங்கு தங்குவது பல ஆண்டுகளாக நடக்கின்றது. பணக்காரர்கள் மட்டுமே அங்கே உயிரோடு இருக்கமுடியும். இல்லையெனில் பிணம்தான். அதுமாதிரி கேள்வி இல்லாத ஆதரவற்ற பிணங்களுக்காகத்தான் முறைகேடான இந்த மின் தகன மேடையே. இதுதவிர இங்குள்ள பணியாளர்கள் காணாமல் போய்விட்டார்கள் என அவர்களே புகார் அளிப்பதும் வாடிக்கையான ஒன்று. உண்மையில் காணாமல் போனார்களா? அல்லது ஈஷாவில் பிணமானார்களா? இதற்கு ஈஷா விளக்கமளிக்குமா..?'' என கேள்வி எழுப்புகின்றார்.