அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்மீது தி.மு.க உடனடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், குட்கா பாஸ்கர் என ஸ்டாலினால் விமர்சிக்கப்பட்ட, மெகா ஊழல் விஜயபாஸ்கரை கொரோனா ஆலோசனைக்கான அனைத்துக் கட்சிக் குழுவில் நியமித்துள்ளது தி.மு.க. அரசு.

m

இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருப்பத்தூர் மாவட்ட கழக துணைச் செயலாளரும், தொழிலாளர் நலத் துறையின் முன்னாள் அமைச்சருமான நிலோபர்கபில் மீது அவரது உதவியாளரே ஊழல் புகார் தெரிவிக்க, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்தும் நீக்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வாணியம்பாடி தாலுகா வெள்ளக் குட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய சுதா, "ஜுனியர் அசிஸ் டென்ட் வேலை வாங்கித் தருகிறேன் என அமைச்சர் நிலோபர் பெயரை சொல்லி 2017-ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கினார் அவரது உதவியாளர் பிரகாசம். வேலை தராததால், பணத்தை திருப்பிக் கேட்டபோது, 7 லட்ச ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். மீதிப் பணத்துக்கு காசோலை தந்தவர், பணத்தை தந்துவிட்டு காசோலை வாங்கிக்கொள் கிறேன் என்றார். பணத்தை இன்றுவரை தரவில்லை. அதனால் புகார் தர காவல் நிலையம் வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

m

இந்த தகவல் நிலோபர்கபிலுக்கு சென்றதும், அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரை அனுப்பி பணத்தை செட்டில் செய்வதாகக் கூறி, ஜெயசுதா புகார் தராதபடி திருப்பி அனுப்பினார். இதுபற்றி "சிக்குவாரா அமைச் சர்! குவியும் மோசடி புகார்கள்!' என்கிற தலைப்பில் 2021 ஏப்ரல் 17-20 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர்கபிலின் அரசியல் உதவியாளராக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் பிரகாசம் தந்த 11 பக்கங்கள் கொண்ட புகாரில், "நான் 2011 முதல் 2016-வரை கவுன் சிலாக இருந்தேன். அப்போது வாணியம்பாடி நகர சேர்மனாக நிலோபர் இருந்தார். 2016-ல் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைத்தபோது, தேர்தல் செலவுக்கு என்னிடம் பணம் கேட்டார். நானும் 80 லட்ச ரூபாய் நண்பர்கள், உறவினர்களிடம் கடனாக வாங்கித் தந்தேன். அவர் தொழிலாளர் நலத்துறை மற்றும் வக்போர்டு வாரிய பொறுப்புகளை ஏற்றதால், என்னை தனது அரசியல் உதவியாளராக இருக்கும்படி சொன்னார். அமைச்சரிடம் காரியம் சாதிக்கவரும் சிலர் பணம் தருவார்கள், அதை என்னிடம் தரச்சொல்வார் அமைச்சர். நானும் அதனை வாங்குவேன். பலர் என் வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வார்கள். அதனை நான் அமைச்சரின் நண்பர் கோவை ஜாபர், டாக்டர் சையத் இத்ரிஸ்கபீல் (மகன்), முகமதுகாசிப் (மருமகன்), வாகித் (சம்மந்தி) பெயரில் அல்லது அவர்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு மாற்றிவிடுவேன்.

Advertisment

m

அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக, அமைச்சர் பலரிடம் பணம் பெற்றார். அந்தப் பணத்தை என் வழியாக வாங்கினார். பணம் தந்தவர்கள் வேலை கிடைக்கவில்லை என்றதும் "ஒன்று பணத்தை தாருங்கள், இல்லை வேலை வாங்கித் தாருங்கள்' என சண்டை போட்டார்கள். அமைச்சர் அவர்களிடம், "கொரோனா காலமாக இருப்பதால் இப்போது வேலை போடவில்லை. தேர்தலில் ஜெயித்து மீண்டும் அமைச்சரானவுடன் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்திற்கு பிரகாசம் வங்கி காசோலை தருவார்' எனச் சொன்னார். நானும் அமைச்சர் மீதிருந்த நம்பிக்கையில் என் பெயரிலும், என் மனைவி பெயரிலும் காசோலை தந்தேன்.

வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா, செல்வமணி இருவரும் 8 லட்ச ரூபாய் தந்தார்கள். பணம் வரவில்லையென்றதும் புகார் தரப்போனதும், அவர்களிடம் லிங்கநாதன் என்கிற கட்சிக்காரனை அனுப்பி சமாதானம் செய்து கோவைக்கு அழைத்துச் சென்று ஜாபர் மூலமாக 4 லட்ச ரூபாய் தந்து செட்டில் செய்தார்கள். ஏப்ரல் 19-ஆம் தேதி ஆம்பூர்பேட்டை ஜெகதீசன், வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அமைச்சர் நிலோபர்கபில் மீதும், என் மீதும் புகார் தந்தார்.

இதுபற்றி நான் அவரிடம் சொல்லி, "வாங்கியவர்களிடம் எல்லாம் பணத்தை திருப்பி தந்துவிடலாம்' என்றபோது, "நாம் வாங்கியது 6 கோடிதான். மகள் நர்ஜீஸ் பெயரில் இங்கிலாந்தில் வாங்கி வைத்துள்ள சொத்தை விற்றோ அல்லது வாணியம்பாடியில் உள்ள சொத்தை விற்றோ தந்துவிடலாம்' எனச் சொன்னார். ஆனால் பணம் தராமல் ஏமாற்றுகிறார். பணம் தந்தவர்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கிறார்கள். அதனால் முன்னாள் அமைச்சர் மீதும், அவருக்கு துணையாக அனைத்தையும் அறிந்தவர்களாக உள்ள 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவித்திருந்தார். அவரிடம் கருத்து கேட்க நாம் பல முறை முயன்றபோதும் நமது லைனை எடுக்கவில்லை.

mm

இதுபற்றி திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நம்மிடம் பேசும்போது, "வாணியம்பாடியில் பிரபல அரசியல்வாதியாக இருந்த கமர்கௌரி என்கிற இஸ்லாமிய பெண்மணியைப் பார்த்து அரசியல் ஆசை வந்தது நிலோபருக்கு. 2001-ல் ஜமாத் ஆதரவுடன் நகரமன்ற சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற நிலோபருக்கு, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த செ.ம.வேலுச்சாமியின் ஆதரவு கிடைத்தது. வேலுச்சாமியின் அரசியல் உதவியாளராக இருந்தவ தான் கோவை ஜாபர். மதரீதியாக அவருடன் நட்பு பாராட்டி ஜாபர் கிழிக்கும் கோட்டை தாண்டாத அளவுக்கு மாறினார். அவர் வழியாக 2016-ல் எம்.எல்.ஏ சீட் வாங்கினார், அமைச்சரானார். அமைச்சரை ஆட்டிவைத்தவர் ஜாபர்தான்.

உதவியாளர் பிரகாசம் தந்த புகாரில், பணம் தந்த 108 நபர்களின் பெயர், முகவரியோடு, அவர்கள் தந்துள்ள தொகை எவ்வளவு என தந்ததுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. (பட்டியல் இணைப்பு) அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் மோசடி வழக்கில் நிலோபர்கபில் சிறைக்கு செல்வது நிச்சயம். புகார் குறித்து அறிந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்ச ரும், திருப்பத்தூர் மா.செ.வுமான வீரமணியிடம் ஆலோசித்தார். அதன்பின் நிலோபரிடம் விசாரணை நடத்தினார். ஓ.பி.எஸ். ஆதரவாளராக நிலோபர் இருந்த தால் ஓ.பி.எஸ்சிடம் விவரத்தை எடுத்துச்சொல்லி நீக்க அனுமதி பெற்று அறிக்கை வெளியானது'' என்கிறார்கள்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் கருத்தறிய பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது லைனை அட்டன் செய்யவில்லை. அவரது மகன் நம்பரை தொடர்புகொண்டபோதும் எடுக்கவில்லை.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், காவல்துறை தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது அ.தி.மு.க. பிரமுகர்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் வெளியாக, பிரகாசம் என்னை பிளாக்மெயில் செய்கிறார். இந்த விவகாரத்தில் நான் தப்பு செய்யாதவள்'' என விளக்கம் தந்துள்ளார் முன்னாள் அமைச்சர்.

"நிலோபர்கபில் வஃக்ப் வாரிய சேர்மனாக இருந்தார். அப்போது, வாரியத்தில் சர்ச்சைக்குரிய சொத்துக்களில் பிரச்சனையை கிளறிவிட்டு தனது பினாமிகள் மூலம் அதனை தனதாக்க முயற்சித்தார். இதுகுறித்து வேலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் உள்ளது. இதேபோல் வேறு சில புகார்களும் உள்ளன. இவற்றை விசாரித்தால் பல கோடி மோசடி, ஊழல் விவகாரங்கள் வெளிவரும்'' என்கிறார்கள் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்.

"10 ஆண்டு தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது அ.தி.மு.க. ஜெ இறந்தபின், அதிகாரத் திலிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆட்டம் அதிகமாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை என பல துறைகளில் வேலைவாங்கித் தருவதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செக்கள் வேலை தேடிய இளைய சமுதாயத்தினரிடம், உதவியாளர்கள் மூலமாக 5 லட்சம், 10 லட்சம் பணம் வாங்கினர்.

பணம் தந்து ஏமாந்தவர்கள் மீடியேட்டராக இருந்த உதவியாளர்களை, கீழ்மட்ட கட்சி நிர்வாகிகளை நெருக்குகிறார்கள். நெருக்கடி தாங்க முடியாமல்தான் நிலோபர் உதவியாளர் புகார் தந்துள்ளார். மற்ற மாஜிக்கள் மீதான புகார்களும் கிளம்பும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்திலேயே.

மே 23-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த நிலோஃபர் கபில், “"என் தாய் இறந்தபோது சொந்தக் கட்சிக்காரர்கள் யாரும் துக்கம் விசாரிக்க வரவில்லை. தி.மு.க. மா.செ. நேரில் வந்து விசாரித்தார். அதனால் அவர் வெற்றி பெற்றபோது மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தேன்.

பிரகாசம் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றி கடந்த ஏப்ரல் மாதமே எஸ்.பி.யிடம் புகார் கொடுத்து விட்டேன். ஊழல் குற்றச்சாட்டுக்காகத்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்றால், பல மடங்கு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள் பலரையும் ஏன் நீக்கவில்லை? நானே கட்சியிலிருந்து விலகுகிறேன் என ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டேன். என்னை நீக்கியதில் சந்தோஷம்தான். வேறு கட்சிக்கு போவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை''’என்றார்.

நிலோஃபர் விவகாரத்தால் ஊழலில் திளைத்த அ.தி.மு.க. மாஜிகள் பலரும் பயத்தில் உறைந்துள்ளனர்.