ப்ரல் 26, இரவு நேரம். கிடைத்த பக்கா தகவலின் அடிப்படையில் தென்காசி மாவட்ட தனிப்படையினர், மாவட்டத்தின் வட கோடியான சிவகிரி லிமிட்டின் விருதுநகர் மாவட்ட எல்லைச்சாவடியில் தீவிரமாகக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் விரைவாக வந்த காரை மடக்கிய தனிப்படையினர், அதனைச் சோதனையிட் டபோது அதில் 440 கிலோ எடை கொண்ட குட்கா, பான்மசாலா மூட்டைகளைக் கைப்பற்றினர்.

gg

குட்கா மூட்டைகளோடு காரில் வந்த நபரையும், டிரைவரையும் தனிப்படையினர் விசாரித்ததில், கடத்தி வந்தவர் தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பதும், லாசர் அவரின் டிரைவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து குட்கா, பான்மாசலா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து கடத்தி வந்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் விநியோகித்து வருவதாகத் தெரிவித்த போஸ், பிடிபட்டவற்றை விருதுநகர் மாவட்டத்திலிருந்து கடத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சுமார் நாலரை லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள், கார் மற்றும் கடத்திய இருவரையும் சிவகிரி காவல் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்திருக் கிறார்கள். அங்கு நடந்த மறு விசாரணையில், சுபாஷ் சந்திர போஸ் ஆலங்குளம் யூனியன் ரெட்டியார்பட்டி வெங்கடேஸ்வர புரத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆலங்குளம் யூனியன் தி.மு.க. கவுன்சிலர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்டவர் பெரிய இடம் என்பதையறிந்த காவல் துறையினர், பிடிபட்டவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்தி ருந்தால் ஊடகங்களுக்கு வியர்த்து விடும் என்பதால், அவரின் ஆடைகளை மாற்றச் செய்து, விடியும்வரை அவரை வெளி யிடத்தில் வைத்திருந்தவர்கள், விடிந்த பின்பு இருவரையும் சிவ கிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.

gg

Advertisment

தி.மு.க.வின் யூனியன் கவுன்சிலரான சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டது தி.மு.க. வட்டாரத்தில் அதிர்வு களை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து அவர் பற்றிய தகவல்கள் தி.மு.க. தலைமை வரை போனதில், தாமதிக்காமல் நடவடிக்கையை மேற்கொண்ட தி.மு.க.வின் தலைமை, யூனியன் கவுன்சிலரை கட்சியிலிருந்து நிரந் தரமாக நீக்குவதாக அறிவித்தது. நீக்கப்பட்ட தி.மு.க. யூனியன் கவுன்சிலரின் மனைவி தமிழ் செல்வி, தி.மு.க.வின் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்களின் தலைவி பொறுப்பிலிருப்பவர். இது குறித்து விளக்கமறியும் வகையில் நாம் அவரை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது அழைப்பினை ஏற்கவில்லை.

-ப.இராம்குமார்