ந்தியா எவாஞ்சலிகல் லுத்தரன் சபை (ஐ.இ.எல்.சி) நாகர்கோவிலை தலைமை யிடமாகக்கொண்டு செயல்படுகிறது. அதன் கிளைகளாக திருவனந்தபுரம், ஆம்பூர் சினாட் என இரண்டு சபை சங்கங்கள் உள்ளன. இதில் ஆம்பூர் சபையின் தற்போதைய நிர்வாகக்குழு, சங்க விதிகளை மதிக்காமல் செயல்படுவதோடு, பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்கள் என குற்றம்சாட்டு கிறார்கள்.

ஆம்பூர் சபை சங்கத்தின் துணைச்செயலாளர் ஜோன்ஸ் பிரசன்னதாஸ், செயற்குழு உறுப்பினர் கள் சிலர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவள்ளியிடம் புகார் மனு தந்துள்ளனர். அதுகுறித்து ஆம்பூர் சர்க்கிள் முன்னாள் செயலாளர் ஜெயக்குமார் நம்மிடம், "ஐ.இ.எல்.சி.க்கு சொந்தமான பள்ளிகளில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர் கள் பணியாற்றுகின்றனர். அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், பணியாளர்களை, சினாட் சபை நிர்வாகமே தேர்வுசெய்து நியமித்து அரசின் அனுமதி பெற்றுக்கொள்ளும். சங்க விதி களின்படி ஆசிரியர்களுக்கு, பணி யாளர்களுக்கு பதவி உயர்வு தரும்போது தகுதியானவர்கள் குறித்த முன்னறிவிப்பு பட்டியலை தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். அதன்பேரில் ஆட்சேபனை வந்தால் அதுகுறித்து விசாரித்தபின் இறுதிப் பட்டியலை தயாரித்து சபையின் கல்விக்குழுவின் கூட்டத்தில் வைத்து ஒப்புதல்பெற்று தீர்மானமியற்றி அரசின் கல்வித்துறைக்கு அனுப்பி பதவி உயர்வு வழங்கவேண்டும், புதிய நியமனங்களும் அப்படியே. ஆனால் இங்கு விதிப்படி எதுவும் நடைபெற வில்லை.

ss

சபை சங்கத்தின் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் என கடிதம் அனுப்பினார்கள். வாய்மொழியாகக் கூட்டம் தள்ளிவைக்கப் படுகிறது எனச்சொல்லிவிட்டு தலைவர், செய லாளர் இருவரும் தங்களுக்கு வேண்டப்பட்ட செயற்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று அஜன்டாவில் இல்லாத ஆம்பூர் கன்கார்டியா பள்ளியில் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து தீர்மானம் போட்டு கையெழுத்து பெற்று மலர்ராணி, ஜான்சன்சௌந்தர் பிரபாகரன், கிருபாகரன், வசந்தி போன்றோரை நியமனம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என்றே புகார் தரப்பட்டுள்ளது''’என்றார்.

ஆம்பூர் துத்திப்பட்டு கிரேட் லுத்ரன் திருச்சபை தலைவர் வழக் கறிஞர் சுரேந்திரகுமார் நம்மிடம், “"ஆம்பூரில் அமெரிக்கன் மருத்துவ மனையை சபை நடத்திவந்தது. அந்த மருத்துவமனை மூடப்பட்டது. நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சபை நிர்வாகி முன்னாள் நீதியரசர் அரிபரந் தாமன், ஊழியர்களுக்கு செட்டில் மெண்ட் தந்தார். அதில் மலர்ராணி என்பவர் செட்டில்மெண்ட் பெற்றார். சமீபத்தில் ஆம்பூர் கன்கார்ட்டியா மேல்நிலைப்பள்ளியில் புதியதாக 4 பேர் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள், அதில் மலர்ராணியும் ஒருவர். அந்த மலர்ராணி 2017 முதல் இப்போதுவரை ஆம்பூர் கன்கார்டியா பள்ளியில் சம்பளமில்லாமல், சபை அங்கீகாரம் இல்லாமல் பணியாற்றிவந்ததாகச் சொல்லி இப்போது அவர் நியமனத்துக்கு ஒப்புதல்தருகிறார்கள். அதோடு 2017-ல் இருந்து இப்போது வரை அவர் பணியாற்றியதற்கு சம்பளம் கேட்கிறார். இவர் பெத்தஸ்டா மருத்துவமனையில் மைக்ரோ பயாலஜிஸ்டாக பணியாற்றிக்கொண்டு இருந்த ஆண்டுகளில் முழுநேரமாக ஆலங்காயத்தில் செயல்பட்ட ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் படித்ததாகச் சான்றிதழ் தந்துள்ளார். முழுநேரமாக ஒரு இடத்தில் வேலை செய்துகொண்டே, கல்லூரியில் முழுநேரமாக எப்படி ஒருவரால் படித்திருக்கமுடியும் என புகார் தந்தேன்.

Advertisment

காவல்துறை விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார், அந்த விவகாரமே முடிவுக்கு வரவில்லை. இந்த மலர்ராணியின் கணவர்தான் இப்போது ஆம்பூர் சினாட்டின் செயலாளராக உள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விதிகளை மீறியும் தகுதியில்லாத ஒருவருக்கு, தன் மனைவி என்பதால் வேலை நிரந்தரம் செய்கிறார். இதற்கு சபை சங்க தலைவர் இமானுவேல் சபாபதியும் உடந்தை. அதுமட்டுமல்ல, மலர்ராணிக்கு பணி தருவதற்காக அதேபள்ளியில் நீண்டகாலமாக பணியாற்றும் மாருதி என்கிற ஆசிரியரை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி பள்ளிக்கு பதவி உயர்வு என்கிற பெயரில் அனுப்புகிறார்கள்''’என குற்றம் சாட்டினார்.

ax

குற்றச்சாட்டுகள் குறித்து ஆம்பூர் சபை சங்கச் செயலாளர் இமானுவேல்ராஜசேகரன், பொருளாளர் சாந்தகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, “"சங்க விதிகளின்படி நாங்கள் முறையாகவே செயல்படுகிறோம். புதிய நியமனங்களை சி.இ.ஓ. ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வாங்கிவந்ததன் அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. பணி நியமனத்துக்கான தீர்மானம் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமை சங்கமும் விதிகளின்படி நடந்துள்ளீர்கள் என கடிதம் தந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க.- அ.தி.மு.க. என இரண்டு அரசியல் கட்சிகள் இருப்பதுபோல் சபையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. நாங்கள் மெஜாரிட்டியாக இருக்கிறோம், விதிப்படி செயல்படுகிறோம். மெஜாரிட்டிதானே வெற்றிபெறும். அந்த குரூப் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறது. இவர்களால் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பமுடியவில்லை, மலர்ராணி மீதான புகார் உண்மையில்லை எனத் தெரியவந்தது. மாருதி ஆசிரியர் பதவி உயர்வு கேட்டு கடிதம் தந்தார், அதன்படியே தந்தோம்''’ என்றார்கள்.

Advertisment

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்புகொண்டபோது, அவர் நமது லைனை எடுக்கவில்லை. துறைசார்பிலான கல்வித்துறையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சபைச் சண்டையில் அரசு அதிகாரிகளும் நீதிமன்றப் படிக்கட்டு ஏறும் நிலை உருவாகியுள்ளது.