"ஹலோ தலைவரே, பா.ஜ.க. கூடாரத்துக்குள் புழுதிப்புயல் பலமாக அடிக்குது.''”
"புகார்களின் அடிப்படையிலான அக்கப்போரா?''”
"ஆமாங்க தலைவரே, நேராகவே விசயத்துக்கு வர்றேன். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியப்புள்ளிகளின் ஏடாகூடங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக, ஆடியோ வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை பிளாக்மெயில் செய்து வருகிறார்னு பரபரப்பான புகார் அங்கே விஸ்வரூபம் எடுத்திருக்கு. இதை அண்ணாமலையுடன் மிக நெருக்கமாக இருந்தவரும், சமீபத்தில் கட்சியைவிட்டு விலகியவருமான திருச்சி சூர்யாசிவா... அலிஷா அப்துல்லா, டெய்சி இவர்களைப் பற்றி பகிரங்கமாகச் சொல்லத் தொடங்கிவிட்டார். அண்ணாமலை பா.ஜ.க.வுக்கு வந்த பிறகே அங்கே ’வீடியோ கலாச்சாரம் வந்துவிட்டதுன்னு பா.ஜ.க.வால் ஓரம்கட்டப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறார். அதோடு, கட்சியின் மற்றொரு பிரமுகரான அமர்பிரசாத்துடன் சேர்ந்துகொண்டு,’"கோவையில் தாமரை சூரியனைத் தொட்டது'’ என்று ஒரு பத்திரிகை யாளர் மூலம் சமூக ஊடகத்தில் ஒரு சங்கேதக் குறிப்பையும் அவர் வெளியிட வைத்தாராம்.''”
"புரியலையேப்பா?''”
"அதாவது, கோவையில் தாமரை தரப்பைச் சேர்ந்த ஒரு பெண் பிரமுகர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு பவர்ஃபுல் புள்ளியோடு ’நெருக்கமாக’ இருக்கிறார் என்று இந்த சங்கேதக் குறிப்பு மூலம், இந்த ஆடியோ வீடியோ டீம், கட்சியின் ஒரு முக்கியப் பிரமுகருக்கு எதிராக தீ மூட்டிக் குளிர்காய நினைக்கிறதாம். இது கோவை பா.ஜ.க.வினர் மத்தியில் சங்கட மான பரபரப்பை இப்போது ஏற்படுத்திவருகிறது. இதற் கிடையே மோடி பெயரில் கபடி போட்டியை நடத்துகிறேன் என்று 32 கோடியை அமர்பிர சாத் வசூலித்தார் என்றும், அதில் 8 கோடியை மட்டும்தான் செலவிட்டார் என்றும், இது போல், வீடுகட்டும் திட்டம், விவசாயக் கடன் என்றெல்லாம் கட்சியில் இருக்கும் ஒரு டீமே பெரும் வசூலை நடத்திவருகிறது என்றும் பா.ஜ.க. கூடாரத்துக்குள் ளேயே புழுதி பறக்கிறது. இது போன்ற பிரச்சினை களில் அண் ணாமலையின் தலை பகிரங்க மாகவே உருள்கிறது.''”
"அதனால்தான் கட்சித் தலைமையை டைவர்ட் செய்ய, தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் புகார் குண்டுகளை வீசத் திட்டமிடுகிறாரா?''
"சரியா சொன்னீங்க தலைவரே, கட்சித் தலைமை வரை அவர் இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகி இருப்பதால், ஏதாவது செய்து தனது இமேஜை பில்டப் செய்யத் துடிக்கும் அண்ணாமலை, ஒரு அதிரடித் திட்டத்தோடு தி.மு.க. அரசைக் குறிவைத்து இருக்கிறார். அதா வது, இந்த அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரமாகப் பார்த்து, தி.மு.க. அமைச்சர்கள் 10 பேரின் ஊழல்களை அதிரடியாக அம் பலப்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க அவர் திட்ட மிட்டிருக்கிறாராம். இதற்கான களப்பணியில் அவருக்காக ஒரு பெரிய டீமே களமிறங்கி இருக்கு. அதோடு மத்திய-மாநில உளவுத் துறையினரையும் அவர் இதற்காக அணுகியிருக்கிறாராம். கூடவே தன்னுடைய பயிற்சிக் காலத்தில், சக பயிற்சியாளர்களாக இருந்த ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உதவி யையும் அவர் நட்புணர்வோடு கேட்டிருக்கிறாராம். அவர்களில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுள்ள சில அதிகாரிகள், அண்ணாமலைக்கு உதவ முன்வந்ததாகவும் சொல்லப் படுகிறது.''”
"காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் பா.ஜ.க. வலை விரித்திருப்பதாகவும் செய்தி வருதே?''”
"ஆமாங்க தலைவரே, இப்படியொரு செய்தி பா.ஜ.க. தரப்பில் இருந்தே வருது. தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை, பா.ஜ.க.வில் இணைக்கும் முயற்சி யில் அண்ணாமலை இறங்கி இருக்கிறாராம். இதற்காக ’50 சி’வரை டீலிங் பேசப்பட்டு இருக்கிறதாம். விரைவில் குமரியில் இருந்து சென்னை நோக்கிப் பாதயாத்திரை நடத்த இருக்கும் அண்ணா மலை, அந்த எம்.எல்.ஏ.வைக் கொண்டே தன் பாதயாத்திரை யைத் தொடங்கிவைத்துப் பரபரப்பூட்டும் வியூகத்தில் இருக்கிறாராம். இதையறிந்த காங்கிரஸ் தரப்பு கடும் கோபக் கொந்தளிப்பில் இருக்கிறதாம்.''”
"அரசியலில் எதுவும் நடக்கலாம். சேகர்ரெட்டி சம்பந்தியான தர்மாரெட்டி, தன் மகன் மரண விவகாரத்தில் மர்மம் இருப்பதாகச் சொல் கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும், திருப்பதி தேவஸ் தான செயல் தலைவரான இந்த தர்மா ரெட்டியின் மகனான சந்திரமௌலிக்கும் நிச்சயதார்த் தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் சென்னையில் சந்திரமௌலி திடீர்னு மரண மடைந்து விட்டார். அது தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் பற்றி போனமுறையே நாம் உரையாடினோமே. அவர் அட் டாக்கில் மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்டாலும், மரணம் குறித்து பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழாத நிலையில் இருப்பதாக நாம் அழுத்தமாகப் பதிவு செய்தோம். அதைத்தான் இப்ப தர்மாரெட்டியே சொல்ல ஆரம்பிச்சிருக்கார். இந்த விவகாரத்தை அவர் சும்மா விடறதா இல்லையாம்.''”
"அப்படியா?''”
"ஆமாங்க தலைவரே, துக்கம் விசாரிக்க தன் வீட்டிற்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கண்ணீ ரோடு பேசிய தர்மாரெட்டி, என் மகன் சந்திரமௌலிதான் எனக்கு இருந்த ஒரே பலம். ரொம்பவும் ஆரோக்கியமாக இருந்தவன். உடல் நலத்திலும் அக்கறை கொண்டவன். சென்னைக்கு கிளம்பிச் செல்லும்போது கூட அவன் நன்றாகத்தான் இருந் தான். திடீர்னு, மருத்துவமனை யில் அவன் அட்மிட் செய்யப் பட்டதாக சென்னையில் இருந்து தகவல் சொன்னாங்க. அதைக் கேட்டு ஆடிப்போயிட்டோம். இங்கே ஓடிவந்து பார்த்தா.... அவனைக் காப்பாத்த முடி யாதுன்னு கை விரிச்சிட்டாங்க. நல்லா இருந்த அவனுக்கு சென்னையில் ஏதோ நடந்திருக்கு. அது தொடர்பாக எனக்குச் சில தகவல்களும் கிடைச்சிருக்குன்னு சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட ஜெகன்மோகனோ, "கவலைப்படா தீங்க... தமிழக அரசிட மிருந்து ஏதேனும் உதவி உங்களுக்குத் தேவைப்பட் டால் சொல் லுங்க, தமிழக முதல்வர் ஸ்டா லினிடம் நான் பேசு றேன்'னு தைரியமூட்டி னாராம்.''”
"அரசு கேபிள் டி.வி. யில் கோல்மால்களை நடந்திய உயர் அதிகாரி கள், இப்ப வசமா சிக்கி யிருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே... தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம், செட்-டாப் பாக்ஸ் களை வாங்க முடிவு செய்தது. இதற்கான கொள்முதல் டெண் டர் மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்பட்டிருந்தன. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜனும், செட்-டாப் பாக்ஸ் களை டெண்டர் விதிகளின்படி சப்ளை செய்துவந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஏற்பட்ட கொடுக்கல் -வாங்கல் பிரச்சினையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான நீரஜ் மிட்டல், ஜெயசீலன் மற்றும் டெக்னிக்கல் அட்வைஸர் ரவி ராபர்ட் ஆகி யோருக்கும் -டெண்டர் எடுத் திருந்த மந்த்ரா நிறுவன உரிமை யாளர் ராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் செட்-டாப் பாக்ஸ் கொள்முத லில் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே அரசு கேபிள் டி.வி.யின் ஒளி பரப்பிலும் சிக்கல் ஏற்பட்டது.''”
"ஆமாம்பா, இந்த பிரச்சினையில், தொழிலதிபர் ராஜன் கைது செய்யப்பட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, அது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகா ரத்தில் தொழில் நுட்ப அடிப் படையில் விசா ரிக்க நீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த நிலையில், ராஜனுக்குக் கொடுத்திருந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு புதிய டெண்டரை அறிவித்து, தங்களுக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றிற்கு டெண்டரை நீரஜ் மிட்டலும், ரவி ராபர்ட்டும் தாரைவார்த்தனர். அந்த நிறுவனம், டெண்ட ருக்கு அப்ளை செய்கிறபோது, கோஸ்பெல் என்ற புகழ்பெற்ற சீன நிறுவனத்துடன் செட்-டாப் பாக்ஸ் இயங்குவதற்குத் தேவை யான தொழில்நுட்ப மென்பொருளை வாங்க ஒப்பந்தம் செய் திருக்கிறோம்னு ஒரு டாகுமெண்டையும் இணைத்திருந்தது.''”
"சரி...''”
"ஆனால், இதனை அறிந்த கோஸ்பெல் என்கிற சீன நிறுவனம், எங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக இணைக்கப்பட்டிருக்கும் டாகுமெண்ட் போர்ஜரியானது. அப்படி எந்த ஒப்பந்தத்தையும் எங்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் போட்டுக்கொள்ளவில்லை. அதனால் அந்த மோசடி நிறுவனத்தின் மீது தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் நாங்கள் வழக்கு தொடர்வோம்னு எச்சரிக்கை விடுத்துவிட்டது. ஆனால் இந்த எச்சரிக்கையை நீரஜ் மிட்டலும் ரவி ராபர்ட்டும் அலட்சியப்படுத்திவிட்டனர். இவர்கள் செய்த இந்தத் தவறால் அந்த சீன நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக கிரிமினல் வழக்கைப் போட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, மேலும் பல ஊழல் விவகாரங்கள் அம்பலமாவதுடன் தி.மு.க. அரசுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.''
"இந்த விவகாரத்தில் நாடார் சமூக அமைப்புகள் தொழிலதிபர் ராஜனுக்கு ஆதரவாகக் குதித்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கோர்ட்டுக்கு வந்த தொழில் அதிபர் ராஜனை, கோர்ட்டுக்கு வெளியே வைத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீரஜ்மிட்டல், "செட்-டாப் பாக்ஸ் தொடர்பான அனைத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு ஓடிடு. இல்லைன்னா, தமிழகத்தில் நீ நுழையவே முடியாது'’என்று மிரட்டினாராம். அதேபோல், தொழில்நுட்பம் குறித்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களையும், அரசு கேபிள் டி.வி.யில் நடந்துள்ள தவறுகளைப் பற்றி உங்கள் ரிப்போர்ட்டில் நீங்கள் குறிப்பிடவே கூடாது. ரிப்போர்ட் ராஜனுக்கு எதிராகத்தான் இருக்க வேண்டும் என்றும் நீரஜ் மிட்டலும் ரவி ராபர்ட்டும் அழுத்தம் கொடுத்தார்களாம். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ராஜனுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டார்ச்சர் தருவதை அறிந்து கொதித்துப் போன, அவரது நாடார் சமூக அமைப்புகள், ராஜனுக்கு ஆதர வாகக் களத்தில் குதித்திருப்பதோடு, அவருக்கு மிரட்டல் விடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றும் போராட்டத்தில் குதிக்க இருக்கிறார்களாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை தி.நகர் காவல் மாவட் டத்திற்கு வழக்கமாக சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரையே டெபுடி கமிஷனராக நியமிப்பது வழக்கம். ஆனால், முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு போலீஸ் அதிகாரியின் தம்பி சிபாரிசில் தி.நகர் டி.சி.யாக வந்து விட்டார் ஜூனியர் அதிகாரியான ஆதர்ஸ் பச்சோரி. இது சீனியர் களிடையே ஆதங்கப் புலம்பலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இப்போது இவர் லிமிட்டில் போதைப் பொருள், சூதாட் டம், ரெட்லைட் தொழில் என சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதாக ஆளும் கட்சியினரே குமுறுகின்றனர். முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான இவர் குறித்த புகார்களையும், பா.ஜ.க. தரப்பு திரட்டி வருகிறதாம்.''