கியான்வாபி விவகாரம் தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தித்தொடர் பாளர் நூபுர் ஷர்மா, முகம்மது நபி குறித்தும் இஸ்லாமியச் சின்னங்கள் குறித்தும் அத்துமீறிப் பேசிய விவகாரம் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, "இந்தியா இதற்கு உரிய பதிலளிக்கவேண்டுமென'த் தெரிவித்துள்ளன.

mm

அயோத்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலுள்ள மசூதிகளின் அடியிலெல்லாம் கோவிலைத் தேடிவரும் இந்துத்துவர்கள், காசி விஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக பிரச்சினை கிளப்ப, விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து "டைம்ஸ் நவ்' ஊடகத்தில் விவாதம் நடக்க... அதில் பா.ஜ.க. சார்பில் பேசிய நூபுர் ஷர்மா, முகம்மது நபி குறித்தும், இஸ்லாமிய சின்னங்கள் குறித்தும் ஆட்சேபனைக் குரிய வகையில் பேசினார்.

அதேசமயம் நூபுரின் இந்தப் பேச்சின் எதிர்வினையாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத ரீதியிலான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உ.பி. அரசு 34 பேரை கைது செய்துள்ளதோடு, சிறப்பு விசாரணைக் குழுவொன்றையும் அமைத்து விசாரணை செய்துவருகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் டெல்லி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டாலின் ட்வீட்டுகள் கலவரங்களைத் தூண்டும்விதமாக இருப்பதாகக் கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலக்கியுள்ளது பா.ஜ.க.

நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலின் கருத்துகள் இஸ் லாமிய நாடுகளில் மெல்ல மெல்ல அனைத்துத் தரப்பினரையும் எட்டிய நிலையில் ரியாத், குவைத், கத்தார் நாடுகளிலிருந்து அதிருப்தியும் கண்டனமும் வெளிப்படத் தொடங்கின. வளைகுடா நாடுகள் மற்றும் 57 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு, அந்நாடுகளிலுள்ள இந்தியத் தூதரை அழைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கத்தாருக்கு வெளிநாட்டுப் பயணம் போயிருக்கும் நிலையில், இவ்விவகாரம் வெளிக் கிளம்பி அந்நாடுகளின் கோபம் வெளிப்பட்டிருப் பது, இந்திய அரசை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியுள் ளது. கத்தாரின் இந்தியத் தூதர் தீபக் மிட்டலிடம் இச்சம்பவத்துக்கு விளக்கம் கேட்கப்பட்டதும், கத்தாரின் துணை அதிபருடனான இந்திய துணை ஜனாதிபதியின் விருந்து ரத்து செய்யப்பட்ட தும் இந்தியத் தரப்பை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி யது.

Advertisment

uu

இதையடுத்து சுறுசுறுப்பான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “"சர்ச்சைக்குரிய வர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப் பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது. இவை கலகத்தை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளின் செயல் பாடு” என்றதோடு, “"இந்தக் கருத்துக்குக் காரணமான வர்'களின் மீது ஏற்கெனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக'வும் தெரிவித்தது.

கத்தார், ஓமன் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில், இந்தியப் பொருட்களைப் புறக்கணிப் பதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்தியப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய ஒருங்கி ணைப்பு கூட்டமைப்பு, இந்தியாவில் முஸ்லிம்கள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது, ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம்கள் பள்ளிக்குள் அனுமதிக் கப்படாதது போன்ற விவகாரங்களையும் கையிலெ டுத்து விமர்சித்தது.

இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “"குறுகிய மனப்பான்மையுடனான, தேவையற்ற கருத்துகள்'’என்று சொல்லி, "இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்து கிறது' என, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இது ஒருபுறமிருக்க, சர்ச்சைக்கு ஆளான இருவரில் நூபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட, நவீன் ஜிண்டாலோ அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். ஷர்மாவுக்கு ஆதரவாக "ஷேம் ஆன் மோடி' என ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட் டுள்ளது. ஷர்மா பிராமணர் என்பதால்தான் ஷர்மாவுக்கு ஒருவிதமான தண்டனையும், ஜிண்டாலுக்கு ஒருவிதமான தண்டனையும் வழங்கப் பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிர மணியசாமி, “"மோடியின் ஆட்சியில் பாரத மாதா அவமானத்தில் தலையைத் தொங்கப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிடம் லடாக்கிலும், அமெரிக்காவிடம் குவாட் மீட்டிங்கிலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யர்களிடமும் அடிபணிந்து விட்டோம். கத்தார் போன்ற சின்ன நாட்டிடம் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டோம். இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவு இது''’என சூடாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்பு தேஜஸ்வி சூர்யாவின், “"95 சதவிகித அரபுப் பெண்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக ஆர்கசமே அடைந்ததில்லை'’என்ற ட்வீட்டால், அரபு நாட்டில் கொந்தளிப்பு எழுந்தபோது, பிரதமர் மோடி, "நமது செயல்பாடு சகோதரத் துவத்தையும் ஒற்றுமையையும் நோக்கியதாக அமையவேண்டும்''’என சமாதானம் சொல்லும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்தியது.

வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடிக்கு நெருக்கமான இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களது சம்பாத்தியத்தின் மூலமாக வரும் பணத்தில் மட்டும் 5000 கோடி டாலருக்கு நெருக்கமான அந்நியச் செலாவணி கிடைக்கிறது. வளைகுடா நாடுகளுக்கும் இந்தியாவுக்குமிடையே மில்லியன் டாலர் கணக்கிலான வியாபாரம் நடைபெறுகிறது. இது பாதிக்கப்படுமெனில், இந்தியாவுக்குத்தான் பெரும்நட்ட மாக அமையும்.

Advertisment