"அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்கள் எவருக்கும் ஆண்மையில்லை' என பா.ஜ. துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. அ.தி.மு.க. வின் முன்னணி நிர்வாகி கள் பலரும், நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலடி தந்துவரும் நிலை யில் பா.ஜ.க. தணிந்துபோக ஆரம்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா மரணமடைந்த விவகாரத்தின் பின்னணியில், தனியார் பள்ளியின் மதமாற்ற விவகாரம் இருக்கிறது என்று கூறி ஆரம்பம் முதலே பா.ஜ.க. பிரச்சினை செய்துவந்தது. இப்பிரச்சனையை விஸ்வஹிந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்புகள் கையிலெடுத்துக் கொண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்தன.
ஜனவரி 16-ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முகமது அலி பெற்ற வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி மாணவி லாவண்யா எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தும் பா.ஜ. தரப்பில், எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊட கங்களில் பரப்பப்பட்டது. மேலும், சிகிச்சையிலிருந்தபோது மாணவி கூறியதாக ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் முத்துவேல் என்பவர் பதிவிட, இவ்விஷயம் மேலும் பரபரப்பானது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை, மாணவியின் பெற்றோரின் வாக்குமூலத்தைப் பெற்றதோடு, முத்துவேல் பதிவிட்ட வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய அவரது செல்போனையும் கையகப்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் ஜனவரி 25-ஆம் தேதி சென்னை வள்ளு வர் கோட்டத்தில் மாணவி லாவண்யா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அதில் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் மக்கள் பிரச்சனை களை எதிர்க்கட்சி போன்று பா.ஜ.தான் பேசிவருகிறது. சட்டமன் றத்தில் எதிர்க்கட்சியாக ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அ.தி. மு.க. எம்.எல்.ஏ.வைக்கூட பார்க்க முடியவில்லை''’என்றார். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்ற நிலையில், அ.தி.மு.க.வில் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நபர்கள்மீது காலதாமதமாக கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனை விமர்சித்த குருமூர்த்தி, எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.ஸையும் ஆண்மையற்றவர்கள் என விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
நாகேந்திரனின் விமர்சனம், புண்ணில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்ததுபோல் அ.தி.மு.க. வட்டாரத்தில் கடும் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது. மதுரை மண்டல அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ்சத்யன், “"அ.தி.மு.க.வின் தோள்மீது தொற்றிக்கொண்டு பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தாங்களாக வெற்றிபெற்று உங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன். ஆண்மை என்பது சொல் அல்ல செயல்''” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அ.தி.மு.க.வை மோசமாக விமர்சிப்பதை, பா.ஜ.க. ஒரு பாணியாக வைத்திருப்பதையறிந்து அ.தி.மு.க.வின் கீழ்மட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும், கடும் கோபம் அடைந்திருக்கின்ற னர். "அ.தி.மு.க.வின் தயவில்லாமல் இந்தத் தேர்தலில் பா.ஜ.க. ஒரு சீட்டைக்கூட பிடித்திருக்க முடியாது என்பதோடு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்திருக்கும். தவறாகப் பேசிய பா.ஜ.க.வுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைக்கக்கூடாது'' என்று பல்வேறுவித கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
விஷயம் கைமீறிப்போவதை அறிந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. இரட்டைத் தலைமைகளான ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரையும் தொடர்புகொண்டு நிலவரத்தை விளக்க முயன்றார். ஆனால் ஓ.பி.எஸ். போனை எடுக்காத நிலையில் எடப்பாடியைத் தொடர்புகொண்டு சமாதானம் செய்துள்ளார். "நயினார் நாகேந்திரனின் நிலைப்பாடு பா.ஜ.க.வின் நிலைப்பாடு இல்லை. அவர் பேசிய வார்த்தைகள் தவறுதலாக வந்துவிட்டன. அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு''’என்று பேட்டியளித்து வெள்ளைக் கொடியையும் ஆட்டியுள்ளார்.
அண்ணாமலையின் சமாதானத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப அ.தி.மு.க.வை மட்டம்தட்டிப் பேசுவதும், பிரச்சனையானதும் விளக்கமளிப்பதும் அவரை அதிருப்தியடையச் செய்துள்ளது. அ.தி.மு.க.வின் தயவின்றி வார்டுகளில்கூட வெற்றிபெறமுடியாத பா.ஜ.க., அரசியல் செய்யும்போது மட்டும் அ.தி.மு.க.வின் குரல்வளையை நெரிப்பதை அவர் விரும்பவில்லை.
சவாரி செய்வதோடு மட்டு மல்லாமல் சாட்டையால் அடிக் கும் பா.ஜ.க.வின் அணுகுமுறை குறித்து பா.ஜ.க. தலைமையிடம் முறையிடவும், எதிர்காலத்தில் பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக விமர்சனம் செய்யும் போக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள அறி வுறுத்தவும் பிரதமர் மோடியிட மோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமோ சொல்லி லகான் போடவேண்டும் என அவர் நினைக்கிறார்.
ஆனால், இந்தியா முழு வதுமே பா.ஜ., முதல் சில தேர் தல்களுக்கு மாநில கட்சிகளை அண்டி தங்களுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்திக்கொண்டு, முதன்மைக் கட்சியாக நிலை நிறுத்திக்கொள்வதையே ஒரு வியூகமாக மேற்கொண்டுவரு கிறது. பா.ஜ.க.வின் பாட்சா பலிக்காத மாநிலங்களாக தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களே இருக்கின்றன.
தற்போதைக்கு வெள்ளைக் கொடி ஆட்டப்பட்டாலும், அ.தி. மு.க.வுக்கு எதிரான பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளின் கலகக் குரல் எப்போதைக்குமாக அடங்கிவிடாது என்பதே யதார்த்தம்!
-சூர்யன்